info@thehandofjesus.com

கட்டுரை

கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தின் முக்கியத்துவம்.

இந்த வார தியானம் கிறிஸ்மஸ் பற்றிய கண்ணோட்டம் மற்றும் இது ஏன் கிறிஸ்தவர்களுக்கு முக்கியத்துவமென்பதை தியானிக்கப்போகிறோம்.
தேவகுமாரன் மனுஷகுமாரனாக பூமிக்கு வந்ததையே இயேசுவின் பிறப்பென உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுகிறது. பெற்றோர்களான யோசேப்பு மேரியுடன் கூட தேவதூதர்கள், மேய்ப்பர்கள், சாஸ்திரிகள் உள்ளடக்கிய ஒரு தொகுப்பாகும். 

கிறிஸ்மஸின் முக்கிய அளவுகோல் இயேசு கிறிஸ்து இந்த பூமிக்கு வந்ததன் நோக்கம் மனுக்குலத்தை மீட்பதாகும். லூக்கா 19:10ல் இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்தாரென வாசிக்கிறோம். இயசுக்கிறிஸ்து எங்கள் பாவங்களுக்காக மரித்து உயிர்த்தாரென்பதை விசுவாசிக்கும்பொழுது நாம் இரட்சிப்படைகிறோம். ஆதாம் மூலம் இழந்த தேவ உறவை, இயேசுக்கிறிஸ்துவை விசுவாசித்து ஏற்பதன் மூலம் மீண்டும் உறவை புதுப்பித்துக்கொள்ளுகிறோம்.

கிறிஸ்மஸ்ஸின்போது தீர்க்கதரிசனம் நிறைவேறியது.

உலகத்திற்கு இரட்சிப்பையும் சமாதானத்தையும் கொண்டுவரும் மேசியாவின் வருகையைப் பற்றிய பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றமாக இயேசு மாறினார். ஏசாயா 7:14ல் “ஆகையால் கர்த்தர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார்; கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு மகனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று அழைப்பாள்” இந்த தீர்க்கதரிசனம் பல ஆண்டுகளுக்குப் பிறகு உண்மையாக நிறைவேறியது. இயேசுவானவர் ஒரு கன்னியில் பிறந்தார்.

கிறிஸ்மஸ் நம்பிக்கை மற்றும் அமைதியின் சின்னம்.

இயேசுவின் பிறப்பானது, நெருக்கம் பாடுகளோடு வாழும் உலக மக்கள் நம்பிக்கை வைப்பதற்கான ஒரு சின்னமாக (நினைவு நாளாக) உள்ளது-கிறிஸ்மஸ் செய்தி அனைத்து மக்களுக்கும் அமைதி, அன்பு மற்றும் நல்லெண்ணத்தை உண்டாக்குகிறது. கிறிஸ்தவர்களாகிய நாம் கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்துவின் மூலமே சமாதானம் சாத்தியமாகும் என்றும், இந்த சமாதானம் உலகமக்கள் யாவருக்கும் நீட்டிக்கப்படுகிறதெனவும் நம்புகிறோம்.

அவருடைய நாமத்தின்மேல் புறஜாதியார் நம்பிக்கையாயிருப்பார்கள். மத்தேயு 12:21.

கிறிஸ்மஸ் என்பது இயேசுக்கிறிஸ்துவை பின்பற்றுவதற்கான அழைப்பாகும்.

இயேசுவானவர் வெளிப்படுத்திய நற்பண்புகள் – பணிவு, இரக்கம், தியாகம், அன்பு மற்றும் பெருந்தன்மை ஆகியவற்றை உள்ளடக்கியதாக கிறிஸ்தவர்களுக்கு கிறிஸ்மஸ் நினைவூட்டுகிறது. கிறிஸ்து பிறந்தார், கிறிஸ்தவர்கள் எவ்வாறு வாழ வேண்டும், குறிப்பாக கிறிஸ்மஸ் காலத்தில், மற்றவர்களுக்கு சேவை செய்வதிலும் அன்பைக் காட்டுவதற்கும் முன்மாதியாகக் காட்டப்பட வேண்டும். கிறிஸ்துவின் பிறப்பானது பிறைரை நேசித்து உதவி, இரக்கம், மற்றும் தன்னலமற்ற செயல்களைச் செய்ய வலியுறுத்துகிறது.

கிறிஸ்துமஸ் என்பது மகிழ்ச்சியான கொண்டாட்டமாகும்.

கிறிமஸ் என்பது இயேசுவின் பிறப்பை நினைவுகூர்ந்து மகிழ்ச்சியாக கொண்டாடும் பண்டிகையாகும். இதன் மூலம் கிறிஸ்துவின் பிறப்பின் நோக்கம், நற்செய்தியானது உலகத்தாருக்கு பரவுகிறது. நம்முடைய விசுவாச ஜீவியத்திற்கும் கிறிஸ்துவின் பிறப்பானது முதல்படியாக உள்ளது.

எழுதியவர். பி. அபி.