info@thehandofjesus.com

கட்டுரை

ஊக்கமளிக்கும் வார்த்தைகள்.



கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன். உங்கள் சாந்தகுணம் எல்லா மனுஷருக்கும் தெரிந்திருப்பதாக. கர்த்தர் சமீபமாயிருக்கிறார். நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும். கடைசியாக, சகோதரரே, உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக்கொண்டிருங்கள். நீங்கள் என்னிடத்தில் கற்றும் அடைந்தும் கேட்டும் கண்டும் இருக்கிறவைகளெவைகளோ, அவைகளையே செய்யுங்கள்; அப்பொழுது சமாதானத்தின் தேவன் உங்களோடிருப்பார். பிலிப்பியர் 4:4-9.

கர்த்தருக்கு ஸ்தோத்திரம். புதிய ஆண்டின் முதல் இரண்டு வாரங்களைக் கடந்து வந்துவிட்டோம். நீங்கள் அனைவரும் பல ஆசீர்வாதங்களுடன் புதிய ஆண்டை தொடங்கியிருப்பீர்களென நம்புகிறேன்.  இந்த வாரம் “ஊக்கமளுக்கும் வார்த்தைகள்” என்ற தலைப்பில் தியானிக்கப்போகிறோம். தேவனுடைய வார்த்தைக்கூடாக நமது குடும்பத்தினர், உறவினர், நண்பர்களை உற்சாகப்படுத்த வேண்டும். கிறிஸ்தவர்களாகிய நாம் எப்படி வாழ வேண்டுமென அப்போஸ்தலன் பவுலவர்கள் ஆலோசனை சொல்லியுள்ளார். அதையே பிலிப்பியர் 4:4-9ல் வாசித்தோம். மகிழ்ச்சியுடன் வாழ்வதையும், அதை அமைதியாக அனுபவிப்பது மற்றும் மிக முக்கியமான விஷயங்களில் நம் மனதை எவ்வாறு நிலைநிறுத்துவது.

 

கர்த்தருக்குள் சந்தோஷப்படுங்கள்.

“எப்பொழுதும் கர்த்தருக்குள் சந்தோஷப்படுங்கள்” அகராதியில் சந்தோஷப்படுங்களென்ற வார்த்தைக்கு, நம்பமுடியாத அளவிற்கு மகிழ்ச்சியாக இருப்பது அல்லது நம்பமுடியாத மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதென பொருள் தரப்பட்டுள்ளது. இது சில சந்தர்ப்பங்களில் மகிழ்ச்சியை உணர்ந்து கொண்டாடுவதென்ற அர்த்தமல்ல. இது கர்த்தரோடு மகிழ்ச்சியாக வாழ்வது பற்றியது. நமது மகிழ்ச்சி சூழ்நிலைகளில் வேரூன்றவில்லை மாறாக கர்த்தரின் மாறாத அன்பில் வேரூன்றியுள்ளது.

எதைப்பற்றியும் கவலைப்படாது ஜெபிக்க வேண்டும்.

வேதாகமத்தில் கவலைப்பட வேண்டாமென பல முறை சொல்லப்பட்டுள்ளது. ஆனால் நாம் அதை விசுவாசிக்காது, நெருக்கடியான சந்தர்ப்பங்களின்போது கவலைப்படுகிறோம். மனிதர்களாகிய நாம் அதிகமாக யோசித்து, கவலையோடு போராடுகிறோம். கர்த்தர் வெறுமனே எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாமென கூறுகிறார். அடுத்து எல்லாவற்றுக்காகவும் ஜெபிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார். ஜெபிக்கும்பொழுது கர்த்தர் அந்த தேவைக்கு மட்டுமில்லாது, இயற்கைக்கு அப்பாற்பட்ட சமாதானத்தையும் தருகிறார்.

இப்பூமியில் மகிழ்ச்சியாக வாழ்வது எளிதான காரியமல்ல. உங்கள் விசுவாசம் எப்போதும் பல வழிகளில் சோதிக்கப்படும். ஆனால் தேவச் சார்ந்து, ஜெபத்தின் மூலம் விசுவாசத்தில் உறுதியாக இருப்பதன் மூலம் மகிழ்ச்சியாக வாழலாம்.  

ஜெபம்.
கர்த்தாவே நீங்கள் எனக்கு தந்த மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு நன்றியப்பா.
நாம் ஒருவரிலொருவர் அன்பாகவும், ஒற்றுமையாக வாழவும், எப்போதும் உம்மில் மகிழ்ச்சியாகவும் வாழ உதவி செய்யுங்கப்பா. 

 

எழுதியவர்: பி. அபி.