info@thehandofjesus.com

கட்டுரை

நாளை என்பது நிச்சயமில்லை.

இந்த வாரம் நாம் நங்கு அறியப்பட்ட நீதிமொழியை தியானிக்கப்போகிறோம்.

நாளையத்தினத்தைக் குறித்துப் பெருமைபாராட்டாதே; ஒருநாள் பிறப்பிப்பதை அறியாதே. நீதிமொழிகள் 27:1.

நாளையென்பது நிச்சயமில்லை. எதிர்காலம் இப்படித்தானிருக்குமென உறுதியாக கூறமுடியாது. ஆனால் அடுத்தமாதம் விடுமுறை போவதற்காக முன்பதிவுகள் செய்திருக்கிறேனென பேசுவதைக் கேட்டிருக்கிறோம். எதிர்கால திட்டமிடல்களுடன் காரியங்களை செய்வது நலமானது. அதைவிட முக்கியமானது இன்று நீங்கள் கிறிஸ்துவுக்காக எப்படி வாழ்கிறீர்கள் என்பதே. நிகழ்காலத்தில் தேவனுக்கு பிரியமாக வாழ்ந்து அவர் நாம்த்தை மகிமைப்படுத்துவதே அவசியமானது.

நாளையைக் பற்றி பெருமை பேசாதே.

இந்த சொற்தொடரானது எதிர்காலத்தின்மீது அதிகப்படியான நம்பிக்கை வைப்பதை எச்சரிக்கிறது. பெருமை பேசுவது ஆணவத்தை குறிக்கிறது அல்லது நடக்கப்போவது குறித்து ஒருவருக்கு கட்டுப்பாடு இருப்பதாகக் கருதுகிறது. இப்படி நடக்குமென தைரியமாக பேசுவதை அல்லது எதிர்கால திட்டங்களுக்கு உத்தரவாதமளித்து அதிகமாக நம்புவதை தவிர்க்கும்படி எச்சரிக்கிறது. நாம் ஏன் பிறந்தோமென்பதை கர்த்தர் அறிவார். நமது நாளைய நகர்வை கர்த்தர் ஒருவரே அறிவார். கடவுள் நம்மை ஒரு நோக்கத்தோடு சிருஷ்டித்துள்ளார். ஏசாயா 49:1ல் தாயின் கர்ப்பத்திலிருந்ததுமுதல் கர்த்தர் என்னை அழைத்து, நான் என் தாயின் வயிற்றில் இருக்கையில் என் நாமத்தைப் பிரஸ்தாபப்படுத்தினாரென வாசிக்கிறோம்.

ஒருநாளில் என்ன நடக்குமென உங்களுக்கு தெரியாது.

இந்த வசனத்தின்படி எதிர்காலத்தை கணிப்பதில் மனிதனுக்கு வரம்புகள் இருப்பதை வலியுறுத்துகிறது. வாழ்க்கையை அனுமானிக்கமுடியும் இப்பதானிருக்க முடியுமென கணிக்கமுடியாது. சூழ்நிலைகள் ஒருநொடியில் மாறும். நாம் தாழ்மையோடு வாழ்ந்து, கர்த்தரின் கரத்தில் எதிர்காலத்தை ஒப்புக்கொடுக்க வேண்டும். நிகழ்காலத்தை கர்த்தர் பார்த்துக்கொள்வாரென்ற நம்பிக்கையோடு, கடந்தகாலத்தை சிந்திக்காது, எதிர்காலத்தில் என்ன இருக்கிறதென ஆராய வேண்டாம்.

இயேசுக்கிறிஸ்துவோடு வாழுங்கள், விசுவாசத்தில் வளருங்கள், நிகழ்காலத்தில் உண்மையாகவும் ஞானமாகவும் வாழ்வதில் கவனம் செலுத்துங்கள். பெருமை பேசுவதற்குப் பதிலாக நம் வாழ்க்கை மற்றும் எதிர்காலத்தின் மீது கடவுள் கொண்டிருக்கும் வல்லமை, அதிகாரத்தை நம்ப வேண்டும். ஒவ்வொரு நாளையும் கர்த்தரின் கிருபையால் கடந்துபோகிறோமென்ற தெளிவோடு நன்றியுணர்வோடு வாழுவோமாக.

எழுதியவர்: பி. அபி