info@thehandofjesus.com

கட்டுரை

எஸ்தர்.

இந்தவாரம் எஸ்தரின் குணநலன் மற்றும் அவள் ராணியாக இருந்ததற்கான காரணம், நோக்கம், தைரியம் குறித்து சுருக்கமாக தியானிக்கலாம்.
எஸ்தருடைய வாழ்க்கையைப் பற்றிய சிறு விளக்கம்: எஸ்தர் ஒரு இளம் யூதப் பெண், அவள் “அழகுப் பெட்டகம்” என அழைக்கப்படுகிறாள். பல பெண்கள் ராணியாக வர ஆசைப்பட்ட பெழுதும், கடவுள் கிருபையால் எஸ்தருக்கு ராணியாக வாய்ப்புக்கிடைத்தது. இந்துதேசம்முதல் எத்தியோப்பியா தேசம்வரைக்குமுள்ள நூற்றிருபத்தேழு நாடுகை ஆளு ராஜாவுக்கு ராணியானாள். இத்தேர்வானது கர்த்தரின் மறைக்கப்பட்ட திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

நான் எஸ்தரின் புத்தகத்தை தியானித்தபொழுது, 10 அதிகாரங்களில் எஸ்தர் மற்றும் அவரது வாழ்க்கையைப் பற்றி நிறையக் கற்றுக்கொண்டதோடு மட்டுமல்லாது, அவளுடைய மக்களுக்காக, எஸ்தர் உறுதியாக துணிச்சலாக செயலாற்றியதை காணமுடிந்தது. மொர்தெகாயால் எச்சரிக்கப்பட்டு, அறிவுரை கூறி வழிநடத்தப்படபோதும், எஸ்தர் விசுவாசத்தில் தளம்பலாயிருந்தும், கர்த்தரின் முன்னேற்பாடு வழிநடத்தல்களை நம்புகிறாள். நாம் எதற்காக அழைக்கப்பட்டிருக்கிறோமோ அதற்காக தியாகமாக ஒப்புக்கொடுக்க வேண்டும்.

எஸ்தரின் ரகசியம் என்னவென்றால், அவளொரு யூத இனத்தை சேர்ந்தவளாகும். அவளது உறவினர் மொர்தெகாய் யூதரென யாரிடமும் சொல்ல வேண்டாமென கட்டளையிடுகிறார். தன்னின மக்களை அழிக்க சதி நடப்பதை அறிந்தது அவளொரு முடிவுக்கு வருகிறாள். யூத மக்களைக் காப்பாற்று ஆசைப்படுகிறாள். ஆனால் அனுமதியின்றி ராஜாவை பார்த்து தண்டனை பெறவேண்டிய ஆபத்துமிருந்தது. அப்பொழுது மொர்தெகாய் தைரியமூட்டி யூத மக்களைக் காப்பாற்ற ராணியெனும் பதவியையும் செல்வாக்கையும் பயன்படுத்தும்படி எஸ்தரை ஊக்குவிக்கிறார். இந்த நேரத்தில், கடவுளின் வேலையைச் செய்யவே. அவரின் திட்டத்தை நிறைவேற்றவே ராணியாக ஏற்படுத்தியிருக்கலாமென நினைவூட்டுகிறார். நீங்கள் இந்த நிலையில் இருந்தால், எப்படி நடந்துகொள்வீர்கள்.

எஸ்தர் மற்ற யூதர்களுடன் சேர்ந்து ஜெபித்து உபவாசமிருந்தாள், உயிரை பணயம் வைத்து ராஜாவை அணுக தீர்மானித்தாள்! இந்த பயம் முடிவில் அதிசயமாக மாறியது. ராஜா தனது செங்கோலை எஸ்தரிடம் நீட்டி, அவளுடைய கோரிக்கையை நிறைவேற்ற முன்வந்ததோடு, அவளுடைய உயிரையும் காப்பாற்றினார். எஸ்தர் தன் மக்களுக்கு எதிரான சதியை வெளிப்படுத்தி மக்களின் விடுதலைக்காக கெஞ்சினாள்.  எஸ்தரின் தைரியத்தின் மூலம், பொல்லாத ஆமான் அம்பலப்படுத்தப்பட்டு நீதியின்முன் நிறுத்தப்படுகிறான்.

இந்தக் கதையின் மூலம் நாம் மூன்று முக்கிய காரியங்களைக் கற்றுக்கொள்ளுகிறோம். கர்த்தர் எப்பொழுதும் திரைக்குப் பின்னாலிருந்து வேலை செய்கிறார். நம்மை சுற்றியுள்ள மக்களின் வாழ்வு, பாதுகாப்பு முக்கியமாகும், அவர்களை பாதுகாத்து, வளமுடன் வாழவைக்கும் நோக்கத்துடனே நம்மை உண்டாக்கி வைத்துள்ளார்.
 
நம்மைச் சுற்றியுள்ளவர்கள் முக்கியம்- கிறிஸ்துவின் சிந்தைகொண்ட மக்களின் ஐக்கியம் முக்கியமாகும், எஸ்தரை ஞானத்துடன் மொர்தெகாய் வழிநடத்தவில்லையென்றால், ராஜாவை சந்திக்கும் முடிவை எடுத்திருக்கமாட்டாள்.

கர்த்தர் எப்போதும் திரைக்குப் பின்னாலிருந்து வேலை செய்கிறார்- எஸ்தர் புத்தகத்தில் கர்த்தரின் பெயர் குறிப்பிடப்படவில்லை, இருப்பினும் முழுப் புத்தகத்திலும் கர்த்தரின் கிரியைகளை உணரலாம்.

கர்த்தர் ஒரு நோக்கத்தோடே பதவிகளை தருகிறார்- கர்த்தர் எஸ்தரை பெர்சியாவின் ராணியாக ஏற்படுத்தி யூதர்களுக்கு ஆசிர்வாதமாக மாற்றினார். கர்த்தர் அவளை நிலைநிறுத்தினார், அதனால் அவள் தீமைக்கு எதிராக கடவுளின் பக்கம் நிற்க முடியும்!
எஸ்தரைப் பற்றி தியானித்துக்கொண்டு, அவள் எவ்வளவு தைரியமானவளாக இருந்தாள், சரியானதைச் செய்வதற்கு நம்மை நாம் எப்படி அனுமதிக்க வேண்டும் என்பதை நாம் திரும்பிப் பார்ப்போமாக. நாம் எங்கிருந்தாலும், என்ன செய்தாலும், அது ஒரு காரணத்திற்காகவும் நமது நம்பிக்கையை வெளிக்கொண்டுவரும் நோக்கத்திற்காகவுமே.

எழுதியவர்: பி. அபி.