info@thehandofjesus.com

கட்டுரை

ஜெபத்தில் உறுதியாயிருங்கள்.

நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள்; உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள்; ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருங்கள். ரோமர் 12:12.

- நெருக்கடியானவேளை நான் என்ன செய்வது?
- நான் முதலில் எதை நோக்கி செல்கிறேன்?

கஷ்டமான, நெருக்கடிகளைச் சந்திக்கும்பொழுது, அச்சூழலிருந்து மீளுவதற்கு கர்த்தரை நாம் அனுமதிப்பதில்லை. மூளை அறிவை, சுயபெலத்தைக் கொண்டு அச்சூழ்நிலையிலிருந்து மீள பாடுபடுவது மனித இயல்பாகும். 
இவ்வாறு நடந்துகொள்ளும்பொழுது நிரந்தரதீர்வு கிடையாது, நெருக்கடியான சூழ்நிலையின் கட்டுப்பாட்டின்கீழ் இருந்துவிடுகிறோம்.
மனிதர்களை நம்பியும், கண்ணால் பார்த்து, காதால் கேட்டு, முளையறிவால் சிந்தித்து அன்நெருக்கடியை சரி செய்துவிடுவோமென உறுதியாக இருக்கிறோம். உதாரணத்திற்கு; காரின் ரயர் காற்றுப்போய்விட்டதென வைத்துக்கொள்வோம்- மெக்கானிக்கிடம் அல்லது ரயட் திருத்தும் கடைக்கு எடுத்துச் சொன்று எளிதில் சரிபார்த்து விடுகிறோம். ஆனால் காரின் இஞ்ஜினில் ஒரு கோளாறுவந்து அதை சரி செய்ய ஒரு மெக்கானிக்கால் இயலாதபொழுது அல்லது காலதாமதமாகும்பொழுது, ஏன் சரி செய்யப்படவில்லையென கவலையடைகிறோம். சிலவிடயங்களை எளிதில் சரிசெய்துவிடுகிறோம், சில விடயங்களை கஷ்ரப்பட்டு சரி செய்ய முயற்சித்தும் இயலாதபொழுது, இருதயம் சோகமாகி, மனச்சோர்வு நிலைக்குச் சென்றுவிடுகிறோம். நாம் செய்யும் அனைத்துக்காரியங்களும் நம்முடைய விருப்பப்படி நடப்பதில்லை.   

நெருக்கடியான சுழ்நிலையில் சுயபெலத்தைக்கொண்டு போராடி சோந்துபோகும்பொழுது மேற்குறிப்பிடப்பட்ட வசனத்துக்கு திரும்புவீர்கள். வல்லமையான இந்த வார்த்தையின் அழகை வார்த்தையால் வர்ணிக்க முடியாது. 
நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள்; உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள்; ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருங்கள். ரோமர் 12:12. இந்த வசனத்தின் எளிமை, நாம் எந்த பிரச்சனையை சந்தித்தாலும் தொடர்ந்து ஜெபிக்க தூண்டுகிறது. நெருக்கடியான காலங்களில்-இயேசு கிறிஸ்துவின் விருப்பம் எதுவோ, அது அப்பொழுது நிறைவேறுகிறதென்ற நம்பிக்கையுடன் நாம் மகிழ்ச்சியடைய வேண்டும். 

அவருடைய திட்டத்தை உங்களால் நிறுத்த முடியாது – நீங்கள் எவ்வளவுதான் கஷ்ரப்பட்டு நெருக்கடியை கட்டுப்படுத்த விரும்பினாலும், பரலோகத்தில் உள்ள பிதா, அண்டசராசரங்களை உண்டாக்கி ஜீவராசிகளை சிருஷ்டித்தவர், நம் ஒவ்வொருவருக்கும் சிறந்ததை, ஏற்றவேளையில் நிச்சயம் செய்யமுடியும்.
நெருக்கடிகளின்போது நீங்கள் இயேசுவை நோக்கிப் பார்க்க வேண்டும். உங்கள் ஆத்துமாவை முழுமனதுடன் அவருக்கு கொடுங்கள், நம்முடைய நெருக்கடிகள் நமக்கு பாடமாக அல்லது இயேசு கிறிஸ்துவின் மூலம் நம் வாழ்வின் மூலம் நாம் பெறக்கூடிய ஒரு புரிதலை இயேசுவால் செய்ய முடியுமென நம்புங்கள்.

இந்த வசனத்தின் முடிவு ‘’ஜெபித்துக் கொண்டே இருங்கள்’’ என்பது எப்போதும் நெருக்கடிகளுக்கு தீர்வாகவும், மனமகிழ்ச்சியான வாழ்க்கைக்கு நல்ல தீர்மானமாகவும் திறவுகோலாகவும் உள்ளது. நீங்கள் கர்த்தருடன் எவ்வளவு நேரம் செலவிடுகிறீர்களோ, நீங்கள் கடவுளுடைய வார்த்தையுடன் சேர்ந்து வாழ்க்கையை வாழும்பொழுது, அவருடன் பேசும்பொழது, உங்களுக்கு சமாதானமும் நம்பிக்கையும் பிறக்கிறது. ஜெபம் வல்லமைமிக்கது! நீங்கள் எங்கு வேண்டுமானாலும், வேலைக்குச் செல்லும் வழியில், பள்ளிக்குச் செல்லும்போது, முழங்காலில் நின்று ஜெபிக்கலாம், ஜெபத்தை எங்கும் செய்யலாம் ஆனால் நீங்கள் நெருக்கடியை சந்திக்கும்பொழுது, கஷ்ரப்படும்பொழுது, இயேசுவானவர் சாத்தியமற்றதை சாத்தியமாக்குவாரென உறுதியாக உண்மையாக நம்புங்கள். இயேசுவே வழி, அவரைத்தவிர வேறு யாரும் நிபந்தனையற்ற அன்பையும், ஆதரவையும், பெலத்தையும் தர முடியாது. அவர் இல்லாமல் உங்கள் நெருக்கடியான சுழ்நிலையை கடப்பதற்கு வேறு ஒருவழியுமில்லை.

நான் ஒரு கேள்வியுடன் முடிக்கிறேன், உங்கள் நெருக்கடியான கஷ்ரமான சூழ்நிலைகளை உணர்ந்து, அதை எப்படி கர்த்தரின் கரத்தில் ஒப்படைப்பீர்கள்?

எழுதியவர்: பி. அபி.