info@thehandofjesus.com

கட்டுரைகள்

                           நோவாவின் வம்ச வரலாறு

நோவா தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனுமாய் இருந்தான். நோவா தேவனோடு சஞ்சரித்துக் கொண்டிருந்தான். நோவா சேம் காம் யாப்பேத் என்னும் குமாரர்களை பெற்றான். தேவன் தாம் படைத்த உயிரினங்கள் அழிந்து போகக் கூடாது என்பதில் கனமாயிருந்தார். அதனால் நோவாவிற்கு பேழை கட்டும்படி கட்டளையிட்டார். நோவா தேவனுடைய வார்த்தைக்கு முழுமையாக கீழ்படிந்தான். நீ கொப்பேர் மரத்தால் உனக்கு ஒரு பேழையை உண்டாக்கு அந்தப் பேழையிலே அறைகளை உண்டு பண்ணி அதை உள்ளும் புறமுமாகக் கீல்பூசு என்று தேவன் சொன்ன வார்த்தைக்கு கீழ்படிந்தான். 
நோவாவோடே அவன் குமாரர்களும் அவைகளின் மனைவிகளும் அந்த பேழைக்குள்ளே பிரவேசித்தார்கள். அவர்களுடன் கிட்டத்தட்ட 45000 உயிரினங்களும் சேர்க்கப்பட்டிருந்தது. தேவன் நோவாவையும் பேழையையும் நினைத்தார். நம்முடைய தேவன் யாரையும் மறக்கின்ற தேவன் அல்ல. நோவா தேவன் கட்டளையிட்டபடியெல்லாம் அவன் செய்து முடித்தான். நோவா அறுநூறு வயதினில் ஜலப்பிரளயத்துக்குத் தப்பும்படி
நோவாவையும் அவன் குடும்பத்தையும் தேவன் பாதுகாத்தார். தேவன் நோவாவுக்கு கட்டளையிட்டபடியே சுத்தமான மிருகங்களிலும் சுத்தமல்லாத மிருகங்களிலும் பூமியின் மேல் ஊரும் பிராணிகள் எல்லாவற்றிலும் ஆணும், பெண்ணும் ஜோடு ஜோடாக நோவாவிடத்தில் பேழைக்குட்பட்டன. ஏழாம் நாள் சென்ற பின்பு பூமியின் மேல் ஜலப்பிரளாயம் உண்டாயிற்று.

நோவாவிற்கு அறுநூறாம் வயதாகும் வருஷம் இரண்டம் மாதம் பதினேழாம் தேதியாகிய அந்நாளிலே மாக அழத்தின் ஊற்றுக்கண்களெல்லாம் பிளந்தன.
வானத்தின் மதகுகளும் திறவுண்டன நாற்பது நாள் இரவும் பகலும் பூமியின் மேல் மிகவும் பெருகிற்று. பேழையானது ஜலத்தின் மேல் மிதந்து கொண்டிருந்தது. ஜலம் பூமியின் மேல் மிகவும் அதிகமாய் பெருகினதினால் வானத்தின் கீழ் எங்குமுள்ள உயரமான மலைகளெல்லாம் மூடப்பட்டன.
மூடப்பட்ட மலைகளுக்கு மேலாய்ப் பதினைந்து முழ உயரத்திற்கு ஜலம் பெருகிற்று அப்போது மாம்ச ஜந்துக்களாகிய பறவைகளும், நாட்டு மிருகங்களும், காட்டு மிருகங்களும் பூமியின் மேல் ஊரும் பிராணிகள் யாவும் எல்லா நரஜீவங்களும் பூமியின் மேல் சஞ்சரிக்கிறவைகள் யாவும் மாண்டன. மனுஷர் முதல் மிருகங்கள், ஊரும்பிராணிகள், ஆகாயத்துப் பறவைகள் பரியந்தமும் பூமியின் மேல் இருந்த உயிருள்ள வஸ்துக்கள் யாவும் அழிந்து அவைகள் பூமியில் இராதபடிக்கு நிர்க்கிரகமாயின. 
நோவாவும் அவனோடே பேழயிலிருந்த உயிரினங்கள் மாத்திரம் காக்கப்பட்டன. ஜலம் பூமியின் மேல் நூற்றைம்பது நாள் மிகவும் பிரவாகித்துக் கொண்டிருந்தது. இப்படியாக நோவாவின் காலத்தில் தேவன் நோவாவோடே இருந்து நோவாவை பாதுகாத்தார். மழையை வெள்ளத்தை
காணாத நாட்களிலும் நோவா கர்த்தரின் கட்டளைக்கு கீழ்படிந்ததால் அவன் காக்கப்பட்டு. நாமும் கர்த்தரின் கட்டளைக்கு கீழ்படிவோமாக.

பெயர்:- ச.றெபேக்கா
சபை:- சீயோன் சுவிஷேச ஜெப வீடு
இடம்:- கைவேலி