info@thehandofjesus.com

கட்டுரைகள்

                                             நோவாவின் காலமும்
                                             டைசிக் காலமும்க

ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து மீட்பராகவும், நியயாதிபதியாகவும் 
வரப்போகிற இக்காலத்தையே கடைசிக் காலம் என குறிப்பிடப்படுகிறது. கிறிஸ்தவர்கள் இயேசு வருகிறார் என அறிவித்தாலும் பலர் ஏளனமும் பரிகாசமும் செய்கின்றனர். இதனைப் போலத்தான் வெள்ளத்தால் அழிவு வரப்போகிறது என நோவா அறிவித்து பேழை செய்த போதும் பலர் அதனை பரிகாசம் செய்தனர் மழை பெய்து வெள்ளம் வரும் வரை யாரும் அதனை ஏற்கவில்லை. நோவாவும் அவன் குடும்பத்தினரும் கடவுளின் கட்டளைக்கு கீழ்படிந்து பேழைக்குள் சென்றனர். தற்காலத்திலும் உலக மக்கள், உலக மாயை இன்பத்தால் கவரப்பட்டு சிற்றின்ப பிரியராக வாழ்ந்து வருகின்றனர்.

இயேசு வந்தவுடன் இவர்களின் நிலை எண்ணாகும் என்பதைக் குறித்து ஒவ்வொரு கிறிஸ்தவர்களும் உணரவேண்டிய காலம் இது விஷேசமாய் இயேசுவின் வருகையையும், கடைசிக்கால சம்பவங்களை குறித்து ஜனங்களுக்கு வெளிப்படுத்த வேண்டிய காலம் இதுவாகவுள்ளது.

உலக இரட்சகராம் இயேசுவை அறியாத, அறிந்து பின்மாற்றமாகவுள்ள ஜனங்கள் நரகம் செல்வதை தடுக்க நாம் பாடுபட வேண்டும். நற்சொய்தியின் காலம் இதுவாகவுள்ளது ஆகவே உலகத்தில் இயேசுவை அறியாத ஜனங்களுக்கு இயேசுக்கிறிஸ்து இரட்சகர் அவரை ஏற்றுக்கொள்ளுங்கள் என எடுத்துச் சொல்வது நமது கடமை.
அவர்கள் ஏற்க மறுத்தாலும் அவர்களுக்காக ஜெபிக்க வேண்டும்.
மறுபடி மறுபடி இயேசுவின் அன்பை எடுத்துச் சொல்ல வேண்டும்.
நோவா பாடுபட்டது போல அவர்களுடைய மீட்புக்காக பாடுபட வேண்டும். மற்றவர்களுக்கு வெளிப்படுத்த வேண்டியது கிறிஸ்தவனின் தலையாய கடமையும் தேவ சித்தமுமாகும்.


எழுத்துருவாக்கம்:- ஜக்சன்
சபை:- கல்வாரி தேவ அன்பின் சபை
முகவரி:- முல்லைத்தீவு மாவட்டம்