info@thehandofjesus.com

கட்டுரைகள்

                                              பரிசுத்த வேதாகமம்


தேவன் தம்மை வெளிப்படுத்தும் விதமாய் ஒவ்வொரு நபருக்கும் தேவன் அனுப்பும் அன்புக் கடிதமே பரிசுத்த வேதாகமமாகும்.
உலகிலேயே முதன் முதலில் அச்சிட்ட புத்தகம் இதுவேயாகும். யோவான் 1.1 ல் சொல்லப்படுவது “ஆதியிலே வார்த்தை இருந்தது அந்த வார்த்தை தேவனிடத்தில் இருந்தது அந்த வார்த்தை தேவனாய் இருந்தது”. மற்றும் 2தீமேத்தேயு 3.16 வேதவாக்கியங்கள் எல்லாம் தேவ ஆவியானவரால் ஏவப்பட்டு 40 தேவதாசர்களைக் கொண்டு எழுதப்பட்டதே இவ் வேதாகமம் ஆகும். பரிசுத்த வேதாகமத்தில் இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் குறித்து பேசப்படுகிறது. அத்தோடு எல்லா உபதேசங்களும், தத்துவங்களும், நீதிகளும், உண்மைகளும், அடங்கிய வார்த்தைகளே இவ் பரிசுத்த வேதாகமத்தில் உள்ளடங்கியுள்ளது. வேதாகமமானது இரண்டு பிரிவுகளை கொண்டது. அவை பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு என அழைக்கப்படும். பழைய ஏற்பாட்டில் முப்பத்தியோன்பது புத்தகங்களும், புதிய ஏற்பாட்டில் இருபத்தியேழு புத்தகங்களும் காணப்படுகிறது. பல சூழ்நிலையில் பலதரப்பட்ட மக்களால் சிங்காசனத்திலிருந்தும், சிறைச்சாலையிலிருந்தும், அரசர்களால், ஆடு மேய்ப்பவர்களால், ஆசாரியர்களாலும், ஆயக்காரர்களாலும், வைத்தியர்களாலும், மீன்பிடிப்பவர்களாலும் பல நூற்றாண்டுகாலமாக எழுதப்பட்ட நூல் பரிசுத்த வேதமாகும்.

ஒவ்வொரு மனிதனும் பாவம் செய்து வழிதப்பி திரிகின்ற போது இவ்பரிசுத்த வேதாகமம் சரியான வழியை காண்பிக்கிறது. இதில் சிறியோர் பெரியோர் யாவருக்கும் விளங்கக் கூடிய வகையில் தெளிவாகவும் ஒவ்வோரு வயதுக்கு ஏற்ப ஆளமும் விரிவும் கொண்டது பரிசுத்த வேதமாகும். 

பரிசுத்த வேதாகமத்தில் தேவனுடன் நேரடியாகப் பேசினவர்கள் குரலைக் கேட்டவர்கள் தரிசனத்தினூடாக, சொப்பனத்தினூடாக பேசிய அனேக தேவ தாசர்களுண்டு, 
இன்றைய நாட்களும் பரிசுத்த வேதாகமத்தை வாசிக்கும் போது ஒவ்வொரு நபரோடும் கர்த்தர் பேசுகிறார். அதுமாத்திரமல்ல தேவனுடைய வல்லமை அற்புத அடையாளங்கள், அன்று பரிசுத்த வேதாகமத்தில் நடந்தது போல இன்றும் அற்புதங்கள் நடக்கின்றது (பேய்கள் விரட்டப்படுகிறது, நோய்கள் குணமாகிறது) இப்பரிசுத்த வேதாகமமானது ஒளிவு மறைவு இன்றி யாவற்றையும் உண்மை என எடுத்துக் காட்டுகிறது. ( பாவம் செய்த தாவீது, காட்டிக்குடுத்த யூதாஸ், பேதுருவின் பின்மாற்றம், யேசேப்பின் சம்பவங்கள்) வரலாற்று உண்மையை எடுத்துக் காட்டுகிறது.
இப்பரிசுத்த வேதாகமத்தில் கதா நாயகர்கள் பிதா, இயேசு, பரிசுத்தாவியானவர் மூவருவரும் ஒருவரே தேவன். ஜனங்களின் பாவங்களுக்காக இயேசுக்கிறிஸ்த்து இப் பூமிக்கு வந்து தம்மையே பலியாக்கி சிலுவையில் மரித்து மூன்றாம் நாள் உயிரோடு கூட எழுந்து மீண்டும்  இப்பூமிக்கு வரவுள்ளார் என்பதை பரிசுத்த வேதாகமம் எடுத்துக்கூறுகிறது.
பரிசுத்த வேதாகமத்தில் ஒரு எழுத்துக்கூட அழிந்து போகாது. வானமும் பூமியும் அழிந்து போனாலும் தேவனுடைய வார்த்தையோ அழியாது. இயேசுக்கிறிஸ்து வரும் போது நானும்  நீங்களும் அவரோடு கூட போவதற்கு ஆயத்தமா? நம்மையே நாம் சரிபார்த்து  தேவனை கிட்டி சேர வேதாகமத்தை அனுதினமும் வாசிப்போம்.

எழுத்துருவாக்கம்:- விஜயகுமார் போல்ராஜ்
சபை:- இயேசு கிறிஸ்து பூரண சுவிஷேச ஊழியங்கள்
முகவரி:- முல்லைத்தீவு மாவட்டம்