info@thehandofjesus.com

கட்டுரைகள்

                             உலகத்தின் ஆரம்பமும் முடிவும்


கல்தோன்றி மண்தோன்றா காலத்திலே முன்தோன்றியதே வேதாகமம். இதற்கு ஆதாரமாக “ஆதியிலே வார்த்தை இருந்தது அது தேவனிடத்திலிருந்தது அந்த வார்த்தை தேவனாயிருந்தது” இது உலகத்தின் ஆரம்ப கட்டம். இந்த உலகத்தில் கர்த்தரானவர் எல்லாவற்றையும் படைத்தார். இறுதி நாளன்று மனிதனென்ற ஜீவனை படைத்தார். இன்று படைப்புக்கள் எல்லாமே கர்த்தருக்கு வருத்தமளிப்பதாகவே இருக்கிறது. உலகத்தின் அதிபதியாக சாத்தான் இருக்கிறான். இவனின் மூர்க்கத்தனமான செயலும் இறுதியில் இவனை தேற்கடித்து தண்டிக்கப்படும் போது உலகத்தின் முடிவு இருக்கும்.

ஆதிப் பெற்றோரான ஆதாமும் ஏவாளும் தேவனின் கட்டளைக்கு கீழ்படியாமல் பாவம் செய்தார்கள். அவர்களின் பாவத்தினிமித்தம் பூமி சபிக்கப்பட்டது. பூமியில் மக்கள் பெருகும் போது பாவமும் பெருகிற்று, பாவம் நிறைந்த உலகமாக மாறிற்று. “பாவத்தின் சம்பளம் மரணம்” என்று தெரிந்தவர்கள் கூட பாவத்தின் வாழ்வை நோக்கிப் பயணித்தனர். 

ஆதாம் ஏவாளைத் தொடர்ந்து அவர்களின் பிள்ளைகளான காயின், ஆபேல் இவர்கள் செய்த பாவம் உலகத்திலேயே கிண்ணஸ் பதிவேட்டில் பதியப்பட வேண்டிய ஒரு சம்பவமாக மாறியது. அதுதான் முதற் கொலை என அழைக்கப்படுகிறது.

இப்படியாக உலக வாழ் மக்கள் நிறைய நண்மைகளை கர்த்தரிடமிருந்து பெற்றுக் கொண்டே வழிவிலகி போய்க்கொண்டிருக்கிறார்கள். உலகம் உண்டாக்கப்பட்டதிலிருந்தே மனிதன் ஆண்டவருக்கு விரோதமாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் மனம் திரும்ப வேண்டும் என்று கர்த்தர் காத்துக்கொண்டிருக்கிறார். சில வேளைகளில் இயற்கை அழிவுகளையும் அனுமதிக்கிறார். 

இன்றைய நூற்றாண்டில் செய்யப்படுகின்ற செயல்பாடுகள் உலகத்தின் முடிவின் ஒர் உச்சக்கட்டமாக காணப்படுகிறது. உலகத்தின் முடிவே ஆண்டவரின் வருகை, அவரின் வருகையானது ஒரு திருடன் வருவதைப் போலிருக்கும். ஆதாரமாக வெளிப்படுத்தின சுவிஷேசம் எனும் வேதப்பகுதியில் சொல்லப்பட்டுள்ளது.

இதில் கூறப்பட்டுள்ள அநேக விடயங்களில் உதாரணமாக ஒரு விடயம் “யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள் ஆனால் முடிவு உடனே வராது” இச் செயற்பாடு இலங்கை நாட்டுக்கு ஓர் எடுத்துக்காட்டாகும். என்னவெனில் தேவனின் கிருபையால் 35 வருட ஆயுதப் போராட்டத்தின் பின் இன்று அமைதி நிலவுகிறது.

மனிதனுடைய அக்கிரமத்தினிமித்தம் கர்த்தருடைய வருகையும் அதி சீக்கிரமாய் இருக்கிறது. “உலகத்தின் முடிவுபரியந்தம் நிலை நிற்பவனே பாக்கியவான்”. என வேதாகமம் கூறுகின்றது. எனவே நாமும் இறுதிவரை கர்த்தருக்கு பிரியமாக வாழ்வேம்.
பரிசுத்தமாக வாழ வைராக்கியம் கொள்வோம். தேவ இராஜ்ஜியத்தை சுதந்தரித்துக் கொள்வோம். 

எழுத்துருவாக்கம்:- மகேந்திரம் லிப்ஸிகா
சபை:- ஜெப ஆலய மிஷன்
முகவரி:- தருமபுரம் முல்லைத்தீவு மாவட்டம்.