info@thehandofjesus.com

கட்டுரைகள்

எழுந்திரும் நானும் ஒரு மனுசன் தான்.

பேதுரு, கொர்நேலியுவின் வீட்டுக்குள்ளே போகும்பொழுது கொர்நேலியு போதுருவின் பாதத்தில் விழுந்து பணிகிறான், கொர்நேலியூவை பேதுரு துக்கியேடுத்து, எழுந்திரும் நானும் ஒரு மனிதன் என்று சொல்லுவதை அப்போஸ்தலர் நடபடிக்கை புத்தகத்தில் 20: 24,25 வசனங்களில் வாசிக்கலாம். போதுரு தாழ்மையாக நான் ஒன்றும் விஷேசித்தவனல்ல உம்மைப்போல சராசரி மனிதன்தான் என்ற பொருள்பட தாழ்மையாக உண்மையைக் கூறினார். 
இவ்வாறு கூறுமளவுக்கு போதுருவின் மனப்பக்குவம் இருந்தமைக்கான காரணத்தை அறிந்துகொள்ள வேண்டுமாயின் அவரின் கடந்தகால வாழ்க்கையை ஆராயவேண்டும்.

பேதுரு இயேசுக்கிறிஸ்துவை சந்திக்கமுன் மீன்பிடித் தொழில் செய்யும் சாதாரண குடும்பஸ்த்தனாகும். இயேசுக்கிறிஸ்த்து ஊழியத்துக்கு அழைத்து அவர்கூட இருந்த நாட்களில் பேதுருவே சீனியர் சீஷனாக இருந்தார். இயேசுக்கிறிஸ்துக்கும் பேதுருவுக்குமிடையில் அநேக சம்பாஷனைகள் நடந்திருப்பதை நான்கு சுவிஷேச புத்தகத்திலும் வாசிக்கிறோம். அவர்களுக்கிடையில் நெருக்கமான உறவிருந்ததை வாசித்தறிகிறோம். இயேசுக்கிறிஸ்துவின் இறுதி நாட்களில் நடந்த சம்பவங்களை, சம்பாஷனைகளை பார்ப்போமானால். லூக்கா 22:31-34வரையான வேதப்பகுதியில் பேதுரு சோதனைக்குட்படுத்தப்படப் போவதையும், விசுவாசத்தில் உறுதியாக இருந்து, மற்றவர்களையும் திடப்படுத்தென இயேசுக்கிறிஸ்த்து கேட்டுக் கொள்ளுகிறார். இதற்கு மறுமொழியாக ஆண்டவரே காவலிலும் சாவிலும் உம்மை பின்பற்றி வருவேனென தன் விசுவாசத்தை வெளிப்படுத்திக் கூறுகிறார்.
யோவான் 13:6-9 வேதப்பகுதியில் சீஷர்களின் கால்களை கழுவிக் கொண்டு போதுருவினிடம் வரும்பொழுது பேதுரு ஆண்டவரே நீர் என் கால்களை கழுவலாமா என மனவருத்தமாக கேட்டதோடு, நீர் ஒருக்காலும் என்கால்களைக் கழுவக்கூடாதென தடைபண்ணினார். அப்பொழுது இயேசுக்கிறிஸ்த்து நான் உன்னைக் கழுவாவிட்டால் என்னிடத்தில் உனக்குப்பங்கில்லையென சொல்லுகிறார். உடனே பேதுரு கால் மாத்திரமல்ல கைகளையும் தலையையும் கழுவும், உம்மிடத்தில் எனக்கு அதிக பங்கு (உரிமை) வேண்டும் என்ற வாஞ்சையுடன் கேட்டுக் கொள்ளுகிறார்.
மத்தேயு 26:37 ல் கெத்செமனே தோட்டத்திற்கு ஜெபிப்பதற்காக இயேசுக்கிறிஸ்த்து போகும்பொழுது பேதுருவையும் கூட்டிப் போகிறார்.
மாற்கு 14:54 ல் இயேசுக்கிறிஸ்த்துவை காவலாளிகள் பிடித்துக் கொண்டு போகும் பொழுது பேதுருவுக்கு அவரை விட்டுப்பிரிய மனமில்லாமல் அவரை பின் தொடர்ந்து அரண்மனைக்குப் போனார்.

யோவான் 21: 15-17 வேதப்பகுதிகளில் இயேசுக்கிறிஸ்த்து மரித்து உயித்தெழுந்த பின்பு பேதுருவைப் பார்த்து நீ என்னில் அன்பாயிருகிறாயா? என் ஆடுகளை மேய்ப்பாயா? எனக் கேட்கிறார். மறுமொழியாக பேதுரு நான் அன்பாயிருப்பேன் என்பதோடு உமக்கு பணிசெய்வேனெனக் கூறினார். 
இவ்வளவு நெருக்கமாக தேவனோடு நெருங்கி உறவாடிய பேதுருவுக்கு பெருமையோ தலைக்கனமோ இல்லை. தாழ்மைதான் அதிகமாயிருந்தது.
இன்றைய நாட்களில் நாங்கள் பார்க்கும் போதகர்மார் அல்லது அவருக்கு உதவியாக இருப்பவர்கள் அல்லது ஒரு தலைவர் அவருக்கு உதவியாக இருப்பவர்களின் மன மேட்டிமையோடு பேதுரு இயேசு உறவை ஒப்பிட்டுப்பார்த்து மனந்திரும்புங்கள்.

பெந்தெகொஸ்தே நாளிலிருந்து கொர்நேலியு வீடு போகும்வரையான காலப்பகுதியில் போதுருவின் ஊழியங்களில் அநேக அற்புதங்கள் நடந்தன. 
1) அப்போஸ்தலர் 2ம் அதிகராத்தில் போதுருவின் பிரசங்கத்தைக் கேட்டு 3000 பேர் மனந்திரும்பினார்கள்.
2) அப்போஸ்தலர் 3ம் அதிகாரத்தில் பிறவிச் சப்பாணி எழுந்து நடக்கிறான்.
3) அப்போஸ்தலர் 4ம் அதிகாரத்தில் பேதுருவின் பிசங்கம் கேட்டு 5000 பேர் விசுவாசிகளாகிறார்கள்.
4) அப்போஸ்தலர் 5ம் அதிகாரத்தில் பேதுருவின் நிழல்பட்டால் சுகமாவார்களென நம்புமளவுக்கு அற்புதங்கள் நடைபெறுகின்றன.
இவை எல்லாம் நடைபெற்றதால் பேதுரு பெருமைகொள்ளவில்லை, மனமேட்டிமை அடையவில்லை, அதிகாரம் பண்ணவுமில்லை. தன்னிடமிருக்கும் திறமையால், தனது சுயவல்லமையால் நடக்கவில்லை, தன்னை அழைத்து பணிகுடுத்து, பரிசுத்த ஆவியினால் அபிஷேகம் பண்ணியவரால் உண்டானதென்ற தெளிவேடு வாழ்ந்தார். அப்போஸ்தலர் 3:12 ல் சுயசக்தியினாலா, எங்களின் சுயபக்தியினாலா இதைச் செய்தோம் எனக் கேள்வி கேட்கிறார். எல்லாம் கர்த்தரால் உண்டானதென்பதே தாழ்மையான பதிலாகும் 

பேதுரு இயேசுக்கிறிஸ்த்துவின் போதனைகளை கிரமமாக பின்பற்றுபவராகவே இருந்தார். லூக்கா 22:26 ல் உங்களில் பெரியவன் சிறியவனைப்போலவும், தலைவன் பணிவிடைக்காரனைப்போலவும் இருக்கக்கடவன். இதை பேதுரு தன் வாழ்கையிலும், ஊழியத்திலும் அப்பியாசப்படுத்தினார்.
ஊழியக்காறர், ஆவிக்குரிய தலைவர்கள், இறைப்பணியாளர்கள் எவ்வாறு இருக்க கூடாது என்பதை மாற்கு 12:38-40, மத்தேயு 23 ம் அதிகாரத்திலும் இயேசுக்கிறிஸ்த்து மாயக்காரரே, மதிகேடரே என கடிந்துகொண்டு அநேக காரியங்களை கூறியுள்ளார். இக்கடிந்துகொள்ளுதல் மூலம் பேதுரு எவ்வாறு ஊழியம் செய்யக்கூடாதென்பதையும் கற்றுக்கொண்டார்.

இப்பொழுது கொர்நேலியு வீட்டாரை இரட்சிப்புக்குள் வழிநடத்தும் பணி தேவனால் வழங்கப்பட்டது. கொர்நேலியூ ஓடிவந்து போதுருவை பணிந்து கொள்ளாவிட்டால் கூட, போதுரு மனப்பூர்வமாக, உற்சாகமாக எதையொன்றையும் எதிர்பாராது கொர்நேலியுவின் குடும்பத்தை இரட்சிப்புக்குள் வழிநடத்தியிருப்பார்.

பிரியமானவர்களே! 
நமது சரீரம் மண்ணினால் உண்டானது இது மண்ணுக்கே திரும்பப்போகிறது. 
தேவ ஆவியானவர் எங்கள் இருதயத்தில் வாசம் செய்து எங்களை இயக்கிக் கொண்டிருக்கிறார். எனவே எங்களது திறமைகள், தாலந்துகள், வெற்றிகள், சாதனைகள் யாவுக்கும், நம்மை சிருஷ்டித்து பெலன்தந்து இயக்கிக்கொண்டிருக்கும் கர்த்தரையே சாரும்.
மனிதகனம், வணக்கம், முகஸ்த்துதியை எதிர்பாராது, எங்களை நாங்களே மேன்மைபடுத்த வாஞ்சைகொள்ளாது, எங்களுடைய செயல், பேச்சு, அனைத்தும் கிறிஸ்துவை மேன்மைப்படுதுவாதாக இருக்கவேண்டும். 

 

த. பிரபா