ஆங்கிலம் | தமிழ் | சிங்களம்

 
 
  முகப்பு பக்கம்
  எங்களை பற்றி
  எங்கள் சேவைகள்
  தற்போதைய தேவைகள்
    ஜீவ வார்த்தைகள்
  கட்டுரைகள்
  வேதாகம வரைபடங்கள்
  ஜெப வேண்டுகோள்
  ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம்
  சிறுவர்கள் வேதாகம ஒளிநாடா
  கருத்துக்கள்
  ஒளிப்பதிவுகள்
  எங்களை தொடர்புகொள்ள

 தினசரி தியானம்
  ஆரம்ப நிலை
  இடை நிலை
    மேல்நிலை
  வேதாகம விளக்கம்

  ஜீவ வார்த்தைகள்

 பயனுள்ள இணைப்புகள்
  இணைய தளங்கள்
  www.tamilchristian.com
  www.tamilchristianworship.org
  வானொலி
  www.tamilchurchvos.org
  www.tamilchristianprayer.org
    தொலைக்காட்சி
  www.tamilchristianonline.net
    வேதாகமம்
  இணைய வேதாகமம்
    இணைய வேதாகமம் 2
    ஒலி வேதாகமம்
   


   

தேவ கிருபையோடு வாழ்ந்த யோபுவின் வாழ்க்கை


முன்னுரை- யோபுவின் அறிமுகம்

உள்ளடக்கம்- 1) யோபுவின் பரிசுத்த வாழ்க்கை

                     2) யோபுவுக்கு பிசாசினால் ஏற்பட்ட சோதனைகள்

                     3) அச்சோதனைகளை யோபு மேற்கொண்ட விதம்

                     4) யோபுவின் விசுவாசம்

                     5) யோபுவின் முடிவு

முடிவுரை- தொகுப்பு

பரிசுத்த வேதாகமத்திலே தேவனுக்கு பிரியமாக வாழ்ந்த அநேக மனிதர்களை காணலாம். அதிலே உத்ஸ் எனப்படும் தேசத்திலே யோபு எனப்படும் மனிதன் இருந்தான். இவரைக்குறித்து வேதத்தில் அநேக விடையங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனுசன் உத்தமனும், சன்மார்க்கனும், தேவனுக்கு பயந்து பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாயிருந்தான். தேவனால் இவன் அதிக ஆஸ்தியுடையவனாகவும் இருந்தான். பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்திரம் எனப்பட்ட தேவ வார்த்தைக்கமைவாக தேவன் யோபுவுக்கும் 10 பிள்ளைகளை கொடுத்ததோடு நல்ல மனைவியையும் கொடுத்தார். இவ்வாறு அநேக விடயங்களைக் கூறலாம். யோபுவின் பரிசுத்த வாழ்க்கை, யோபுவுக்கு பிசாசினால் ஏற்பட்ட சோதனைகள், அச் சோதனைகளை யோபு மேற்கொண்ட விதம், யோபுவின் விசுவாசம், யோபுவின் முடிவு என்பவற்றைக் குறித்து  à®¨à®¾à®®à¯ பார்க்கலாம். அத்தோடு யோபுவோடு ஒத்து நம் வாழ்க்கையை சற்று சிந்திப்போம். 

யோபுவின் பரிசுத்த வாழ்கையை சற்று நோக்குவோமாயின் கடவுளுடைய பார்வையில் அவனுடைய பரிசுத்தம் விலைமதிக்க முடியாததாயிருந்தது. யோபு தேவனுக்குப் பயப்பட்டதால் அவன் தேவ கிருபையோடு தேவனுக்குள் பரிசுத்தமாய் காணப்பட்டதோடு தன்னுடைய பிள்ளைகளையும் கூட பரிசுத்தமாக இருப்பதற்கு வழிநடத்தினான். எப்படியெனில் அவனுடைய பிள்ளைகள் ஒரு வேளை அவர்களுடைய இருதயத்தின் மூலம் தேவனுக்கு விரோதமாகப் பாவங்களைச் செய்திருப்பார்கள் என்று சொல்லி அவர்களை அழைத்துப் பரிசுத்தப்படுத்தி அவர்களுக்காக அதிகாலையிலே எழுந்து பாவநிவாரணப்பலியாகச் சர்வாங்க தகன பலிகளை செலுத்துவான். இதன் மூலம் நாம்  à®¨à®©à¯à®•à¯ விளங்கிக் கொள்வது என்னவென்றால் தான் எப்படி தேவனுக்கு பயந்து பரிசுத்தமாயிருந்தானோ அதே போலவே தன்னுடைய பிள்ளைகளும் தேவனுக்குள்ளாகப் பரிசுத்த வாழ்க்கையைத் தொடர வேண்டும் என்று விரும்பினான்.

இப்படியாகத் தேவனுக்குப் பயந்து வாழ்ந்த மனுசனுடைய வாழ்வைக் கண்டு பொறாமையடைந்த பிசாசானவன் யோபுவுக்கு சோதனைகளை ஏற்படுத்தினான். கர்த்தருடைய அனுமதியின்றி யோபுவுக்கு சோதனைகள் ஏற்படவில்லை. யோபுவினுடைய வாழ்க்கையில் கொடுக்கப்பட்ட சகல ஆஸ்திகள், பிள்ளைகள், சொத்துக்கள் யோபுவினுடைய சரீரம் எல்லாவற்றிலேயும் சோதிக்கும்படி தேவன் அனுமதி கொடுத்தார். ஆனால் அவனுடைய ஜீவன் மேல் மாத்திரம் கை வைக்க பிசாசுக்கு அனுமதி கொடுக்கவில்லை. பிசாசு எப்படியாவது உத்தமனாய் வாழ்ந்த யோபுவை அவனுடைய உத்தமத்திலிருந்து விலகும்படியாக அவனுக்கு அநேக கஸ்ரங்களையும் சோதனைகளையும் கொடுத்தான். முதலாவது அவனுடைய மிருகங்கள் மேல் கைவைத்தான். பின்பு அவனுடைய ஆஸ்திகள் மேல் கைவைத்தான். பின்பு தேவன் யோபுவுக்குக் கொடுத்த பிள்ளைகள் மீது கைவைத்தான். இவ்வளவு சோதனைகளையும் குடுத்துக் கூட (அழித்து கூட) யோபு தன்னுடைய உத்தமத்தை விட்டு விலகவில்லை. இறுதியாக யோபுவினுடைய சரீரம் முழுவதும் கொப்பளங்களை வரப்பண்ணி சரீர உபாதைகளை ஏற்படுத்தினான். யோபுவின் சரித்திரம் சொல்லுகிறது அவன் பல நாட்களாக இந்த வியாதியோடே காணப்பட்டான் என்று இவ்வளவு ஏற்பட்டும் யோபு தேவனுடைய உத்தமத்தையும் தேவனுக்குள் காணப்பட்ட பயத்தையும் விட்டு விலகவில்லை. தேவனுக்குள் காணப்பட்ட பயத்தையும் விட்டு விலகவில்லை. தேவனைத் தூசிக்கவுமில்லை. யோபுவின் நிமித்தம் பிசாசானவன் வெட்க்கப்பட்டுப் போனான் என்று செல்லப்படுகிறது.

அச்சோதனைகளை யோபு மேற்கொண்ட விதத்தை எடுத்துரைப்போமாயின் இவ்வளவு ஆஸ்த்திகள் மிருகஜீவன்கள் அவனுடைய பிள்ளைகள் எல்லாம் தன்னை விட்டு இழந்த போதும் அவன் சொன்ன பெறுமதிவாய்ந்த அழகான வசனம் நிர்வாணியாய் என் தாயின் கர்ப்பத்திலிருந்து வந்தேன் நிர்வாணியாய் அவ்விடத்துக்கு திரும்புவேன். கர்த்தர் கொடுத்தார் கர்த்தர் எடுத்தார் கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம் என்றான்(யோபு 01:21) இவை எல்லாவற்றிலேயும் யோபு பாவம் செய்யவும் இல்லை தேவனைப் பற்றிக் குறை சொல்லவுமில்லை என்று வேதம் சொல்கிறது.

இவ்வளவு சம்பவங்கள் அவனுடைய வாழ்க்கையில் நடைபெற்றும் அவனுடைய விசுவாசத்தை கவனிப்போமாயின் அதற்கு நிகரே இல்லை. காரணம் அவன் பல நாட்கள் அளவும் தேவன் என்னைக் குறித்து வைத்துள்ள சித்தம் நிறைவேற  à®µà¯‡à®£à¯à®Ÿà¯à®®à¯ என்ற அந்த உணர்வு அவனுக்குள் ஆழமாக காணப்பட்டது. அத்தோடு எந்தத் தீமையான காரியத்தையும் தன்னுடைய தகப்பன் தனக்குத் தர மாட்டார் என்பதையும் அறிந்திருந்தான்.  à®…வனுடைய மனைவி, நண்பர்கள், உறவினர், அயலார்கள் அவனை ஒதுக்கி வைத்த போதிலும் கர்த்தர் ஒரு போதும் தன்னை வெறுப்பதில்லை என்ற எண்ணங்கொண்டிருந்தான். ஒரு சமயத்தில் யோபுவை பார்த்து அவனுடைய மனைவி சொல்லுகிறாள் நீர் இன்னும் உம்முடைய உத்தமத்தில் உறுதியாய்  à®¨à®¿à®±à¯à®•à®¿à®±à¯€à®°à¯‹? தேவனை தூசித்து ஜீவனை விடும் என்றான். அதற்கு யோபு கூறிய ஆழமான பதில் நீ பயித்தியக்காரி போசுகிறது போல் பேசுகிறாய் தேவன் கையிலே நன்மையைப் பெற்ற நாம் தீமையையும் பெற வேண்டாமோ என்றான்.(யோபு 2:9-10) இதிலே பிசாசானவனுடைய தந்திரத்தைப் பார்ப்போமாகில் தன்னாலே யோபுவை உத்தமத்திலிருந்து விலகச்செய்ய முடியாமல்  à®¤à®¨à¯à®¤à®¿à®°à®®à®¾à®• அவனுடைய மனைவி மூலமாயும் யோபுவை தேவனைத் தூசிக்கச் சொன்னதோடு ஜீவனையும் விடும் என்றும் சொல்ல வைத்தான். இவ்வாறு செய்தும் யோபு தனது உத்தமத்தை விட்டு விலகவில்லை. இதற்குக் காரணம் யோபு தேவன் மீது அதிக விசுவாசம் கொண்டவனாகக் காணப்பட்டான்.

இவ்வாறு தேவனுக்குள் விசுவாசமாக இருந்த யோபுவுக்கு இறுதியாகக் கிடைத்த பரிசு அதாவது அவனுடைய முடிவு எப்படியாக அமைந்தது என்பதனை நோக்குவோமாயின்.

பிசாசோடு எதிர்த்து வெற்றி கொண்ட யோபுவுக்குத் தேவன் அவனுடைய முன்னிலையை பார்க்கிலும் பின்னிலமை இரட்டத்தனையாகக் ஆசீர்வதித்துக் கொடுத்தார். (யோபு 42:10) எல்லாவற்றையும் இரட்டத்தனையாகக் கொடுத்த தேவன். பிள்ளைகளை மாத்திரம் முன்பு இருந்தது போல 10 பிள்ளைகளைக் கொடுத்தார். இது சிந்திக்க வேண்டிய விடயம். இதற்கு ஒரு காரணத்தைக் கூறலாம் யோபு முன்பு தன்னுடைய பிள்ளைகளை பரிசுத்தமாக வளர்த்தான் ஆகவே அவர்கள் மரித்த பின்பு அவர்களுடைய மாம்சம் தான் இந்த பூமியிலே அழிவடைந்திருக்கும். அவர்களுடைய ஆவி தேவனிடத்திருக்கும் எனவே 10 பிள்ளைகளை மாத்திரம் கர்த்தர் திரும்பவும் யோபுவுக்குக் கொடுத்தார். நமக்கு எழும்பிய இந்தக் கேள்வி யோபுவுக்குள் வரவில்லை. காரணம் யோபு கர்த்தர் கொடுத்ததைத் திருப்தியாக ஏற்றுக் கொண்டான். அத்தோடு யோபு விசுவாசித்திருப்பான் மரித்த 10 பிள்ளைகளும் பரலோகத்திலிலே இருப்பார்கள் என்பதாக. கர்த்தரால் யோபுவுக்குக் கொடுக்கப்பட்ட பிள்ளைகளை விட அத்தேசத்திலே சௌந்தரியமான பெண்கள் காணப்படவில்லை என சொல்லப்படுகிறது.

(யோபு 42:15). இப்படியாக யோபு 140 வருடம்  à®‰à®¯à®¿à®°à¯‹à®Ÿà¯ இருந்து 4 தலைமுறையாகத் தன் பிள்ளைகளையும் தன் பிள்ளைகளின் பிள்ளைகளையும் கண்டான். யோபு நெடு நாளாய் இருந்து பூரணவயதுள்ளவனாய் மரித்தான். (யோபு42:16-17)

யோபுவைப்பற்றி மேலே குறிப்பிட்ட விடயங்களை வைத்து நம்முடைய வாழ்க்கையை சற்று சிந்தித்துப் பார்ப்போமானால். நாம் எவ்வளவு பரிசுத்தமாய் இருக்கிறோம், தேவனுக்கு எவ்வளவு பயப்படுகிறோம், எவ்வளவு விசுவாசம் காணப்படுகிறது. இவ்வாறு நம்முடைய வாழ்வை யோபுவைப் போல தேவனுக்குள் அர்ப்பணித்து வாழ்வோமாக.

"தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர் நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன்" யோபு 42:02

எழுத்துருவாக்கம்:- பே.டிலானி

சபை:- சீயோன் சுவிசேஷ ஜெப வீடு

முகவரி:- கைவேலி முல்லைத்தீவு

   
   
 
எங்களை தொடர்புகொள்ள
T.Pirabagaran
89 Laurel crescent
Romford
Essex
Rm7 0ru
England
  TP:-
Email:- info@thehandofjesus.com
சமூக வலைத்தளங்களில் எங்களுடன் தொடர்பு கொள்ள

        
உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது. சங்கீதம் 119:105
Copyright © 2015 The hand of jesus.com All Rights Reserved