ஆங்கிலம் | தமிழ் | சிங்களம்

 
 
  முகப்பு பக்கம்
  எங்களை பற்றி
  எங்கள் சேவைகள்
  தற்போதைய தேவைகள்
    ஜீவ வார்த்தைகள்
  கட்டுரைகள்
  வேதாகம வரைபடங்கள்
  ஜெப வேண்டுகோள்
  ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம்
  சிறுவர்கள் வேதாகம ஒளிநாடா
  கருத்துக்கள்
  ஒளிப்பதிவுகள்
  எங்களை தொடர்புகொள்ள

 தினசரி தியானம்
  ஆரம்ப நிலை
  இடை நிலை
    மேல்நிலை
  வேதாகம விளக்கம்

  ஜீவ வார்த்தைகள்

 பயனுள்ள இணைப்புகள்
  இணைய தளங்கள்
  www.tamilchristian.com
  www.tamilchristianworship.org
  வானொலி
  www.tamilchurchvos.org
  www.tamilchristianprayer.org
    தொலைக்காட்சி
  www.tamilchristianonline.net
    வேதாகமம்
  இணைய வேதாகமம்
    இணைய வேதாகமம் 2
    ஒலி வேதாகமம்
   


   

நினிவே மக்களின் மனம் திரும்புதலும் தற்கால மக்களும்


ஆண்டவருடைய படைப்பினிலே அற்புதமான ஜீவராசிகள் மனுஷர்கள். அவர் மனித குலத்தில் கொண்ட மட்டற்ற அன்பினால் மதிப்பிட முடியாத அவருடைய மாசற்ற திருவுயிரை எங்களுக்காகச் சிலுவை மரத்திலே பலியாகினார். அன்றோருநாள் ஆதாமும், ஏவாளும் செய்த தவறினால் பாவக் கிடங்கினுள் பாவிகளாய் அவதரித்தோம். பாடுகளினுடைய பலனை அறியாது பாவத்தில் விழுகின்றார்களே என்று கருதி நற்கருணையை ஏற்படுத்தினார்.

அன்றைய காலத்து மக்கள் அறியாமையிருளில் மூழ்கி கிடந்தாலும் தேவனுடைய வார்த்தைகளை அறிந்த பண்பு பாவத்திலிருந்து விடுபடுகின்ற வகையிலே செயற்பட்டார்கள். அதன் மூலம் வாழ்க்கையிலே வெற்றியும் கண்டிருக்கிறார்கள். ஆனால் தற்கால ஜனங்களோ பாவத்திலிருந்து விடுபட ஆர்வமற்றிருக்கிறார்கள்.

நினிவே நகரம் அக்கிரமங்கள் நிறைந்ததாகக் காணப்பட்டது. இதனால் கர்த்தர் அமித்தாயின் குமாரனாகிய யோனாவிடம் "நினிவே நகருக்குச் சென்று பிரசங்கம் செய்யுமாறு" கட்டளையிட்டார். ஆனால் யோனா கர்த்தருடைய சமூகத்திலே நின்று விடுபட்டு தர்ஷீசுக்கு சென்றான். அவன் சென்று கொண்டிருந்த கப்பல் புயலில் அகப்பட்டது. அதற்குக் காரணமானவன் யோனாவே என்பதை அறிந்து கொண்ட கப்பற்காரர்கள் கடலிலே போட்டார்கள். இவர்கள் யோனாவைக் கடலில் போட்டது ஏன்? 

கர்த்தர் மீதுள்ள பய பக்தியினால் கடலிலே போடப்பட்ட யோனாவை விழுங்கும்படி கர்த்தர் தயார் செய்த பெரிய மீன் அவனை விழுங்கியதால். அவன் மீனின் வயிற்றினுள் எழுபத்திரண்டு மணித்தியாலங்கள் இருந்தான். அங்கிருந்து அவன் தன்னுடைய தவறுகளையும் கூறி கர்த்தரை நோக்கிக் கூக்குரலிட்டான். கர்த்தருடைய இரட்சிப்பினால் அவன் மீனின் வயிற்றில் இருந்து கரையிலே கக்கப்பட்டான். இது எவ்வாறு நடந்தது? ஒருவன் அறியாமையால் ஒரு தவறை இழைத்து விட்டாலும். அது தவறு என்று தெரிந்த உடனே அதை எண்ணி கர்த்தரிடம் விண்ணப்பம் பண்ணி மன்னிப்பு வேண்டினால் கர்த்தர் இரட்சிப்பார்.

கர்த்தரால் மன்னிக்கப்பட்ட யோனாவை நினிவேக்குப் போய்ப் பிரசங்கம் செய்யும்படி கர்த்தர் மீண்டும் கட்டளையிட பெரிய நகரமாகிய நினிவேக்கு சென்று பிரசங்கம் பண்ணினான் யோனா! அப்பொழுது அங்கிருந்த மனுஷர்கள் யோனாவுடைய வார்த்தைகளை விசுவாசித்து உபவாசம் இருந்தார்கள். இச் செய்தியை அறிந்த அந்நகர ராஜாவும் தனது பிரதானிகளுடன் சேர்ந்து சிங்காசனத்தை விட்டு இறங்கி இரட்டை உடுத்திக் கொண்டு சாம்பலிலே உட்கார்ந்தான். இதனால் மனஸ்தாபப் பட்ட கர்த்தர் மன்னித்தருளி தீங்கை விளைவிக்காதிருந்தார்.

இந்தச் சம்பவம் அன்றொரு நாள் நடந்திருந்தது. இத்தனையையும் அறிந்திருக்கின்ற தற்கால மக்களோ பாவச் செயல்களில் தொடர்ந்தும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். நினிவே மக்களும் பாவச் செயல்களில் ஈடுபட்டவர்கள் தான். ஆனால் அவர்கள் உடன் மனம்திரும்பினார்கள். தற்கால மக்கள் அவ்வாறில்லை.

கொலை, கொள்ளை, காமம்,யுத்தம், பொறாமை, விக்கிராதனை என்பனவற்றை கடைப்பிடிப்பவர்களாக இருக்கிறாய்கள். இவர்களின் இருதயங்களை சத்துரு வஞ்சித்து வைத்திருக்கிறான்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பதாக மக்கள் செய்த பாவங்களைப் போக்குவதற்காக பூலோகம் அனுப்பப்பட்ட இயேசு கிறிஸ்து சிலுவையிலே  à®®à®°à®¿à®¤à¯à®¤à®¾à®°à¯.

தனது இரத்தத்தால் ஜனங்களின் பாவங்களைப் போக்கியருளினார். யோனாவின் வார்த்தைகளைக் கேட்ட நினிவே மக்கள் மனம் திரும்பினார்கள். ஆனால் இயேசுகிறிஸ்துவின் பாடுகளையும் அதற்கான காரணங்களையும் அறிந்திருந்த தற்கால மக்களோ மனம் திரும்பிடவே இல்லை. ஆராய்ந்து நோக்கினால் பலர்/சிலர் கிறிஸ்துவைப் பற்றி புரிந்திடாதவர்களாகவும், அறிந்திராமலும் இருக்கின்றார்கள். இதனால் தான் தற்கால ஜனங்கள் பாவங்களில் ஈடுபடுகின்றார்கள்.

நினிவே மக்கள் மனம் திரும்பியமையால் கர்த்தரால் இரட்சிக்கப்பட்டு விட்டார்கள்.

தற்கால ஜனங்கள் எப்போது மனம் திரும்பி எப்போது கர்த்தரை நோக்கி கூப்பிட்டு, தங்களுடைய பாவங்களக் கூறி அதிலிருந்து விடுபட நினைக்கிறார்களோ அப்போது கர்த்தர் நிச்சயம் எங்களையும் மன்னித்தருளி இரட்சித்தருளுவார்.

"பொய்யான மாயையைப் பற்றிக் கொள்ளுகின்ரவர்கள் தங்களுக்கு வரும் கிருபையைப் போக்கடிக்கின்றார்க>" யோனா 2:8

எழுத்துருவாக்கம்:- க. லிதியாள்

சபை:- கல்வாரி தேவ அன்பின் சபை

முகவரி:- மூங்கிலாறு

   
   
 
எங்களை தொடர்புகொள்ள
T.Pirabagaran
89 Laurel crescent
Romford
Essex
Rm7 0ru
England
  TP:-
Email:- info@thehandofjesus.com
சமூக வலைத்தளங்களில் எங்களுடன் தொடர்பு கொள்ள

        
உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது. சங்கீதம் 119:105
Copyright © 2015 The hand of jesus.com All Rights Reserved