ஆங்கிலம் | தமிழ் | சிங்களம்

 
 
  முகப்பு பக்கம்
  எங்களை பற்றி
  எங்கள் சேவைகள்
  தற்போதைய தேவைகள்
    ஜீவ வார்த்தைகள்
  கட்டுரைகள்
  வேதாகம வரைபடங்கள்
  ஜெப வேண்டுகோள்
  ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம்
  சிறுவர்கள் வேதாகம ஒளிநாடா
  கருத்துக்கள்
  ஒளிப்பதிவுகள்
  எங்களை தொடர்புகொள்ள

 தினசரி தியானம்
  ஆரம்ப நிலை
  இடை நிலை
    மேல்நிலை
  வேதாகம விளக்கம்

  ஜீவ வார்த்தைகள்

 பயனுள்ள இணைப்புகள்
  இணைய தளங்கள்
  www.tamilchristian.com
  www.tamilchristianworship.org
  வானொலி
  www.tamilchurchvos.org
  www.tamilchristianprayer.org
    தொலைக்காட்சி
  www.tamilchristianonline.net
    வேதாகமம்
  இணைய வேதாகமம்
    இணைய வேதாகமம் 2
    ஒலி வேதாகமம்
   


   

மன்னித்தல்


தேவப்பிள்ளைகள் பலரும் தங்கள் சுபாவத்தில் கிறிஸ்துவைப் போலாக வேண்டும் என்ற à®µà®¾à®žà¯à®šà¯ˆà®¯à¯à®³à¯à®³à®µà®°à¯à®•à®³à®¾à®¯à¯ இருக்கின்றனர். ஆனாலும் அவர்களால் சிலர் சிலகாலம் அதற்காகப் போராடிப் பிரயாசப்பட்ட பின்பு இவ்வுயரிய வாஞ்சையை விட்டு விடுகின்றனர். கிறிஸ்துவைப் போல மாறுவதற்கு எளிதான ஒரு வழி இருக்கிறது. என்பதை நாம் உணருவோமாயின், நாம் அவரைப் போலாக வேண்டும் என்கிற போராவலை ஒரு போதும் விட்டுவிடவே மாட்டோம். மாறாக இன்னும் அதிகமான வைராக்கியத்துடனும் அதிக ஆர்வத்துடனும் நாம் அதை நாடி, அதை அடைந்து கொள்ளும்படி ஆசையாய்த் தொடர்வோம்.

மன்னித்தல் என நாம் பார்க்கும்போது அவற்றிற்கு பல பண்புகள் உள்ளது என்பதை நாம் காணலாம். முதலாவதாக கிறிஸ்துவைப் போன்று மன்னித்தல் எனப்பார்த்தோம். மன்னிக்கின்ற அன்பின் வல்லமை, நான் மெய்யாகவே மன்னித்திருக்கிறேனா? மன்னியாதிருந்தால் விளைவிக்கும் பாதிப்பு, மன்னிக்கத் திராணியுள்ளவர்களாகும் படி, பாவ அறிக்கை போன்ற முக்கிய அம்சங்கள் மன்னித்தலுக்கு கட்டாயமாக இருக்க வேண்டிய ஒன்றாக கருதமுடியும்.

முதலாவது கிறிஸ்துவைப் போல மன்னிக்கக் கற்றுக் கொள்ளாமல் ஒருவன் தன் சுபாவத்தில் முற்றிலும் கிறிஸ்துவைப் போலாகும்படி வளர முடியாது. இது ஆரம்பக்கல்வியைக் கற்றுக் கொள்ளாமலேயே  à®’ருவன் கல்லுரியில் பட்டப்படிப்புக்கென்று ஆயத்தப்படுவதைப் போன்றதாகும்.

ஆகவே ஒருவன் கிறிஸ்துவைப் போலாவதற்கு எளிதான வழி யாதெனில் எவன் ஆவிக்குரிய  à®µà®¾à®´à¯à®µà®¿à®©à¯ மிகவும் அடிப்படையான பாடத்தை கிறிஸ்துவைப் போன்று மன்னித்தலை முதலாவது கற்றுக் கொள்வது அவசியமாகும்.

கிறிஸ்து மன்னித்தது போல நாமும் மன்னிக்கக் கற்றுக் கொள்ளாவிட்டால் நாம் ஒருபோதும் கிற்ஸ்துவைப் போலாவதைக் கற்றுக் கொள்ள முடியாது.

கிறிஸ்து மன்னித்தது போல நாமும் மன்னிப்பது எப்படி என நோக்குவோமாயின். போர்ச்சேவகரில் ஒருவன் ஈட்டியினாலே அவருடைய விலாவில் குத்தினான் உடனே இரத்தமும் தண்ணீரும் புறப்பட்டது என நாம் பார்க்கிறோம். 

வேதாகமத்தில் மன்னித்தல் என்ற பாடம் மிக ஆழமான ஆவிக்குரிய சத்தியங்கள் நிறைந்த ஒன்றாகும். போர்ச்சேவகன் கர்த்தருடைய விலாவில் உருவக்குத்தின போது உண்மையில் அது அவருடைய இருதயத்தில் ஊடுருவிப் பாய்ந்தது. பாய்ந்த வேளையில் இரத்தமும் தண்ணீரும் பெருக்கெடுத்துப் பாய்ந்தது இதே போன்று தான் சிலர் நம்முடைய  à®‡à®°à¯à®¤à®¯à®¤à¯à®¤à¯ˆ உருவக்குத்தக் கூடும். ஈட்டியினால் அல்ல தங்கள்  à®¨à®¾à®µà®¿à®©à®¾à®²à¯‡. அவர்கள் நம்மைப் புறக்கணித்து, அசட்டைபண்ணி, பரியாசம் செய்து, அல்லது நம்மைக் குறித்து எல்லாவிதமான தீமையான மொழிகளையும் பொய்யாகப் பேசக்கூடும்.

இவ்வாறாகப் பேசுகின்ற போது நம்முடைய பிரதிபலிப்பு எவ்வாறிருக்கிறது என்பதே பிரதானம். இயேசுக்கிறிஸ்துவின் விலாவில் குத்தியபோது இரத்தமும் தண்ணீரும் புறப்பட்டு வந்தது. கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்துவின் மன்னிப்பை குறிக்கிறது. அவருடைய இரத்தத்தினலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவரால் நமக்கு உண்டாகியுள்ளது. அதே போன்று நம்மைச் சுற்றியுள்ளவர்கள் நமக்கு தம் நாவினாலே அல்லது மேலே கூறியதன்படி செய்தாலோ நம்முடைய இருதயத்திலிருந்து அவர்களுக்கு"மன்னிப்பு" புறப்பட்டு வரவேண்டும். தண்ணீர் அநேக காரியங்களைக் குறிக்கிறது. அவைகளில் ஒன்று "தெய்வீக அன்பு" ஆகும். பரிசுத்த ஆவியினாலே நம்முடைய இருதயங்களில் ஊற்றப்படும் தேவ அன்பை "ஜீவத் தண்ணீர்" என்று கர்த்தராகிய இயேசு குறிப்பிடுகிறார்.

நாம் நம்முடைய வாழ்கையில் அநேக ஆவிக்குரிய வரங்களைக் குறித்து அறிந்திருக்கிறோம். ஆனாலும் அநேகர் இந்த தனித்தன்மை வாய்ந்த வரத்தை அதாவது மன்னித்தல் எனும் வரத்தைக் குறித்து அறியாதவர்களாய் இருக்கிறார்கள்.

இந்த ஆசீர்வதிக்கப்பட்ட வரத்தைப் பெற்றுக் கொள்ளுகிறவர்கள் கோடிக்கணக்கான ஜனங்களுக்கு இம்மையில், இந்தச் சந்ததியில் மாத்திரமல்ல, இனிவரப் போகிற சந்ததியினரும் மறுமையில் முழு நித்தியத்திலும் கூட ஆசீர்வாதமாகத் திகழ முடியும்.

கிறிஸ்துவைப் போல மன்னித்தல் நம்மில் அநேக சிறந்த இயல்புகளைக் கொண்டிருக்க வேண்டும். அன்புள்ள ஒருவரிடம் உருக்கமான இரக்கத்தையும் தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் காணக் கூடியதாக இருக்கும்.

அடுத்ததாக மன்னிக்கிற அன்பின் வல்லமையினை எடுத்து நோக்குவோமாயின் "மன்னிப்பு" என்பதற்கான கிரேக்க பதத்திற்கு “விடுதலையாக்குதல் என்ற ஒரு அர்த்தமும் உண்டு. நமக்கு விரோதமாகத் தவறிழைத்தவர்களை மன்னிப்பதன் மூலமாக நாம் அவர்களை விடுதலையாக்குவதோடல்லாமல் நம்மையும் விடுதலையாக்கிக் கொள்கிறோம்.

நாம் மற்றவர்களை முழு இருதயத்தோடும் மன்னிக்க முடியாதவர்களாய் மெய்யான விடுதலையை ஒருபோதும் பெற்றனுபவிக்க முடியாது. மெய்யான விடுதலை என்றால் என்ன? செய்ய வேண்டிய சரியான காரியம் இன்னதென்பதை அறிந்து கொண்டு அதைச் செய்யக்கூடிய சக்தியை உடையவர்களாயிருப்பதே மெய்யான விடுதலையாகும். செய்ய வேண்டிய சரியான காரியம் “மன்னித்தல்” என்பதை அநேகர் அறிந்திருந்தாலும் அவர்கள் அதைச் செய்யக் கூடிய உள்ளான பெலனோ வல்லமையோ அற்றவர்களாயிருக்கின்றனர். மதுபானத்திற்கு அடிமையாயிருக்கும் ஒருவன் அதை விட்டு விட வேண்டும் என்பதே தான் செய்ய வேண்டிய சரியான காரியம் என்பதை அறிந்திருக்கலாம். புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாயிருப்பவன் நுரையீரல் புற்று நோய்க்கு இரையாகி மரிப்பதாயிருப்பான். 

புகைப்பிடிப்பதை விட்டுவிடுவதே தான் செய்ய வேண்டிய சரியான காரியம் என்று அறிந்திருக்கலாம். ஆனாலும் அவற்றை விட்டு விடக்கூடிய பெலன் அவர்களுக்கு இல்லாமலிருக்கலாம். கிறிஸ்துவால் மட்டுமே ஒருவனுக்கு மெய்யான விடுதலையை அளிக்க முடியும் “குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்” என நாம் வேதத்தில் வாசிக்கிறோம். நாம் எந்தவொரு சத்துருவைக் கூட மன்னித்து அன்புகூரக் கூடிய உள்ளான பெலனை நாம் கொண்டிருப்பது அவசியமாகும்.

நான் மெய்யாகவே மன்னித்திருக்கிறேனா? என்பதனை எடுத்து நோக்குவோமாயின். ஒரு நபரை நாம் மெய்யாகவே மன்னித்துவிட்டால். அவர் நமக்குச் செய்த தீமைகளை நாம் ஒருவரிடமும் ஒருபோதும், நம்முடைய நெருங்கிய நண்பர்களிடமும் கூட சொல்லவே மாட்டோம். அதனைப் போன்றே ஒரு நபரை உண்மையாக மன்னித்து விட்டால் அவர் குற்றமுள்ள மனச்சாட்சியினால் வாதிக்கப்படுவதை நாம் விரும்பமாட்டோம். அவர் தன்னைத்தானே மன்னித்துக் கொள்ளத்தக்கதாக நம்மால் இயன்ற அனைத்து உதவிகளையும் நாம் அவருக்குச் செய்ய முற்படுவோம். உண்மையான மன்னிப்பு புதிய ஜீவனை அளிக்கிறது மன்னிக்க முடியாத ஆவியோ மரணத்தை வருவிக்கிறது.

மன்னியாதிருந்தால் விளைவிக்கும் பேரிழப்பை ஏற்படுத்தும். உதாரணமாக கர்த்தராகிய இயேசு பேதுருவினிடத்தில் அவன் தன் சகோதரனை ஏழெழுபது தரம் மன்னிக்க வேண்டுமென்று சொன்ன போது குற்றம் புரிந்தவனை 490 முறை மட்டும் மன்னித்தால் போதும் என்று சொல்லவில்லை. எழுபது என்பது நம்முடைய ஜீவிய காலம் முழுவதையும் குறிக்கிறது. எங்கள் ஆயுசுநாட்கள் எழுபது வருஷம் என நாம் வேதாகமத்தில் வாசிக்கிறோம். ஏழு என்ற எண் பூரணத்தைக் குறிக்கும் ஒரு இலக்கமாகும் ஆகவே “ஏழெழுபது” தரம் மன்னித்தல் என்பது நாம் நம்முடைய ஜீவிய காலம் முழுவதும் மற்றவர்களைப் பூரணமாக மன்னித்துக் கொண்டேயிருக்க வேண்டும் என்றே பொருள்படும். நம்மை மன்னிக்கும்படியாக கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கல்வாரிச் சிலுவையில் செலுத்திய கிரயம் இதைப்பார்கிலும் மிகவும் அதிகமாகும்.

எழுத்துருவாக்கம்:- வி. கில்டா

சபை:- எபிரோன் அப்போஸ்தலர் சபை 

முகவரி:- முல்லைத்தீவு மாவட்டம்.

   
   
 
எங்களை தொடர்புகொள்ள
T.Pirabagaran
89 Laurel crescent
Romford
Essex
Rm7 0ru
England
  TP:-
Email:- info@thehandofjesus.com
சமூக வலைத்தளங்களில் எங்களுடன் தொடர்பு கொள்ள

        
உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது. சங்கீதம் 119:105
Copyright © 2015 The hand of jesus.com All Rights Reserved