ஆங்கிலம் | தமிழ் | சிங்களம்

 
 
  முகப்பு பக்கம்
  எங்களை பற்றி
  எங்கள் சேவைகள்
  தற்போதைய தேவைகள்
    ஜீவ வார்த்தைகள்
  கட்டுரைகள்
  வேதாகம வரைபடங்கள்
  ஜெப வேண்டுகோள்
  ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம்
  சிறுவர்கள் வேதாகம ஒளிநாடா
  கருத்துக்கள்
  ஒளிப்பதிவுகள்
  எங்களை தொடர்புகொள்ள

 தினசரி தியானம்
  ஆரம்ப நிலை
  இடை நிலை
    மேல்நிலை
  வேதாகம விளக்கம்

  ஜீவ வார்த்தைகள்

 பயனுள்ள இணைப்புகள்
  இணைய தளங்கள்
  www.tamilchristian.com
  www.tamilchristianworship.org
  வானொலி
  www.tamilchurchvos.org
  www.tamilchristianprayer.org
    தொலைக்காட்சி
  www.tamilchristianonline.net
    வேதாகமம்
  இணைய வேதாகமம்
    இணைய வேதாகமம் 2
    ஒலி வேதாகமம்
   


   

எழுந்திரும் நானும் ஒரு மனுசன் தான்


கொர்நேலியுவின் வீட்டுக்குள்ளே பேதுரு போகும் பொழுது கொர்நேலியு போதுருவின் பாதத்தில் விழுந்து பணிகிறான், கொர்நேலியூவை பேதுரு துக்கியேடுத்து எழுந்திரும் நானும் ஒரு மனிதன் என்று சொல்லுவதை அப்போஸ்தலர் நடபடிக்கை புத்தகத்தில் 20: 24,25 வசனங்களில் வாசிக்கலாம். போதுரு தாழ்மையாக நான் ஒன்றும் விஷேசித்தவனல்ல உம்மைப் போல சராசரி மனிதன் தான் என்ற பொருள்பட உண்மையாக கூறுகிறார். 

இவ்வாறு கூறுமளவுக்கு போதுருவின் மனப்பக்குவம் இருந்தமைக்கான காரணத்தை அறிந்துகொள்ள வேண்டுமாயின் அவரின் கடந்தகால வாழ்க்கையை ஆராயவேண்டும்.

இயேசுக்கிறிஸ்துவை பேதுரு சந்திக்கமுன் சாதாரண மீன்பிடித் தொழில் செய்த சாதாரண குடும்பஸ்த்தன். இயேசுக்கிறிஸ்த்து ஊழியத்துக்கு அழைத்து அவர்கூட இருந்த நாட்களில் பேதுருவே முன்னிலை சீஷனாகவிருந்தார். இயேசுக்கிறிஸ்துவோடு பேதுருவுக்கு அநேக சம்பாஷனைகள் நடந்திருப்பதை நான்கு சுவிஷேச புத்தகத்திலும் பார்க்கலாம். அவர்களுக்கிடையில் நெருக்கமான உறவிருந்ததை காணலாம். எல்லாவற்றையும் பார்க்காவிட்டலும் இயேசுக்கிறிஸ்துவின் இறுதி நாட்களில் நடந்த சம்பவங்களை, சம்பாஷனைகளை பார்ப்போமானால். 

லூக்கா 22:31-34 வேதப்பகுதியில் பேதுரு சோதனைக்குட்படுத்தப்படப் போவதையும் விசுவாசத்தில் உறுதியாக இருந்து மற்றவர்களையும் திடப்படுத்து என இயேசுக்கிறிஸ்த்து கேட்டுக் கொள்ளுகிறார். இதற்கு மறுமொழியாக ஆண்டவரே காவலிலும் சாவிலும் உம்மை பின்பற்றி வருவேன் என்று தன் விசுவாசத்தை வெளிப்படுத்தி கூறுகிறார்.

யோவான் 13:6-9 வேதப்பகுதியில் சீஷர்களின் கால்களை கழுவிக் கொண்டு போதுருவினிடம் வரும் பொழுது பேதுரு ஆண்டவரே நீர் என் கால்களை கழுவலாமா என மன வருத்தத்தோடு கேட்டதோடு நீர் ஒருக்காலும் என்கால்களை கழுவக்கூடாது என தடைபண்ணுகிறார். இதற்கு இயேசுக்கிறிஸ்த்து நான் உன்னைக் கழுவாவிட்டால் என்னிடத்தில் உனக்குப்பங்கில்லை என்று சொல்லுகிறார். உடனே பேதுரு கால் மாத்திரமல்ல கைகளையும் தலையையும் கழுவும், உம்மிடத்தில் எனக்கு அதிக பங்கு (உரிமை) வேண்டும் என்ற வாஞ்சையுடன் கேட்டுக் கொள்ளுகிறார்.

மத்தேயு 26:37 ல் கெத்செமனே தோட்டத்திற்கு ஜெபிப்பதற்காக இயேசுக்கிறிஸ்த்து போகும் பொழுது பேதுருவையும் கூட்டிப் போகிறார்.

மாற்கு 14:54 ல் இயேசுக்கிறிஸ்த்துவை காவலாளிகள் பிடித்துக் கொண்டு போகும் பொழுது பேதுருவுக்கு அவரை விட்டுப்பிரிய மனமில்லாமல் அவரை பின் தொடர்ந்து அரண்மனைக்கு போகின்றார்.

யோவான் 21: 15-17 வேதப்பகுதிகளில் இயேசுக்கிறிஸ்த்து மரித்து உயித்தெழுந்த பின்பு பேதுருவைப் பார்த்து நீ என்னில் அன்பாயிருகிறாயா? என் ஆடுகளை மேய்ப்பாயா? எனக் கேட்கிறார். மறுமொழியாக பேதுரு நான் அன்பாயிருப்பேன் என்பதோடு உமக்கு பணிசெய்வேன் என்பதையும் கூறுகிறார். 

இவ்வளவு நெருக்கமாக தேவனோடு நெருங்கி உறவாடிய பேதுருவுக்கு பெருமையோ தலைக்கனமோ இல்லை. தாழ்மைதான் அதிகமாயிருந்தது.

இன்றைய நாட்களில் நாங்கள் பார்க்கும் போதகர்மார் அல்லது அவருக்கு உதவியாக இருப்பவர்கள் அல்லது ஒரு தலைவர் அவருக்கு உதவியாக இருப்பவர்களின் மன மேட்டிமையோடு பேதுரு இயேசு உறவை ஒப்பிட்டுப்பாருங்கள் மனந்திரும்புங்கள்.

பெந்தெகொஸ்தே நாளிலிருந்து கொர்நேலியு வீடு வரும்வரையான காலப்பகுதியில் போதுருவின் ஊழியங்களைப் பார்ப்போமானால்.

1) அப்போஸ்தலர் 2ம் அதிகராத்தில் போதுருவின் பிரசங்கத்தைக் கேட்டு 3000 பேர் மனந்திரும்பினார்கள்.

2) அப்போஸ்தலர் 3ம் அதிகாரத்தில் பிறவிச் சப்பாணி எழுந்து நடக்கிறான்.

3) அப்போஸ்தலர் 4ம் அதிகாரத்தில் பேதுருவின் பிசங்கம் கேட்டு 5000 பேர் விசுவாசிகளாகிறார்கள்.

4) அப்போஸ்தலர் 5ம் அதிகாரத்தில் பேதுருவின் நிழல்பட்டால் சுகமாவார்கள் என நம்புமளவுக்கு அற்புதங்கள் நடைபெறுகின்றன.

இவை எல்லாம் நடைபெற்றதால் பேதுரு பெருமைகொள்ளவில்லை, மனமேட்டிமை அடையவில்லை, அதிகாரம் பண்ணவுமில்லை. தன்னிடமிருக்கும் திறமையால், தனது சுய வல்லமையால் நடக்கவில்லை, தன்னை அழைத்து பணிகுடுத்து பரிசுத்த ஆவியினால் அபிஷேகம் பண்ணியவரால் உண்டானது. இதை அப்போஸ்தலர் 3:12 ல் வாசிக்கலாம் சுயசக்தியினாலா, எங்களின் சுயபக்தியினாலா இதைச் செய்தோம் எனக் கேள்வி கேட்கிறார். கர்த்தராலேயே எல்லாம் உண்டானது என்பதே பதில். 

 

அத்தோடு இயேசுக்கிறிஸ்த்துவின் போதனைகளை பின்பற்றுபவராகவே பேதுரு இருந்தார். லூக்கா 22:26 ல் உங்களில் பெரியவன் சிறியவனைப்போலவும், தலைவன் பணிவிடைக்காரனைப்போலவும் இருக்கக்கடவன். இதை பேதுரு தன் வாழ்கையில், ஊழியத்தில் அப்பியாசப்படுத்தினார்.

ஊழியக்காறர், ஆவிக்குரிய தலைவர்கள், இறைப்பணியாளர்கள் எவ்வாறு இருக்க கூடாது என்பதை மாற்கு 12:38-40, மத்தேயு 23 ம் அதிகாரத்திலும் இயேசுக்கிறிஸ்த்து மாயக்காரரே, மதிகேடரே என கடிந்துகொண்டார். இக்கடிந்து கொள்ளுதல் மூலம் பேதுரு எவ்வாறு ஊழியம் செய்யகூடாது என்பதையும் கற்றுக்கொண்டார்.

இப்பொழுது கொர்நேலியு வீட்டாரை இரட்சிப்புக்குள் வழிநடத்தும் பணி தேவனால் வழங்கப்பட்டது. கொர்நேலியூ ஓடிவந்து போதுருவை பணிந்து கொள்ளாவிட்டால் கூட, போதுரு மனப்பூர்வமாக எதையும் எதிர்பாராது கொர்நேலியுவின் குடும்பத்தை இரட்சிப்புக்குள் வழிநடத்தியிருப்பார்.

பிரியமானவர்களே! நமது சரீரம் மண்ணினால் உண்டானது இது மண்ணுக்கே திரும்பப்போகிறது. தேவ ஆவியானவர் எங்கள் சரீரத்தினுள் வாசம் செய்து எங்களை இயக்கிக் கொண்டிருக்கிறார். எனவே எங்களது திறமைகள், தாலந்துகள், வெற்றிகள், சாதனைகள் எல்லாம் நம்மை உண்டாகியவருக்கும் எங்களை இயக்கிக்கொண்டிருப்பவரையே சாரும்.

மனிதகனம், வணக்கம், முகஸ்த்துதியை எதிர்பாராது, எங்களை நாங்களே மேன்மைபடுத்த வாஞ்சைகொள்ளாது எங்களுடைய செயல், பேச்சு, அனைத்தும் கிறிஸ்துவை மேன்மைப்படுதுவாதாக இருக்கவேண்டும். 

எழுத்துருவாக்கம் த.பிரபா

 

   
   
 
எங்களை தொடர்புகொள்ள
T.Pirabagaran
89 Laurel crescent
Romford
Essex
Rm7 0ru
England
  TP:-
Email:- info@thehandofjesus.com
சமூக வலைத்தளங்களில் எங்களுடன் தொடர்பு கொள்ள

        
உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது. சங்கீதம் 119:105
Copyright © 2015 The hand of jesus.com All Rights Reserved