ஆங்கிலம் | தமிழ் | சிங்களம்

 
 
  முகப்பு பக்கம்
  எங்களை பற்றி
  எங்கள் சேவைகள்
  தற்போதைய தேவைகள்
    ஜீவ வார்த்தைகள்
  கட்டுரைகள்
  வேதாகம வரைபடங்கள்
  ஜெப வேண்டுகோள்
  ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம்
  சிறுவர்கள் வேதாகம ஒளிநாடா
  கருத்துக்கள்
  ஒளிப்பதிவுகள்
  எங்களை தொடர்புகொள்ள

 தினசரி தியானம்
  ஆரம்ப நிலை
  இடை நிலை
    மேல்நிலை
  வேதாகம விளக்கம்

  ஜீவ வார்த்தைகள்

 பயனுள்ள இணைப்புகள்
  இணைய தளங்கள்
  www.tamilchristian.com
  www.tamilchristianworship.org
  வானொலி
  www.tamilchurchvos.org
  www.tamilchristianprayer.org
    தொலைக்காட்சி
  www.tamilchristianonline.net
    வேதாகமம்
  இணைய வேதாகமம்
    இணைய வேதாகமம் 2
    ஒலி வேதாகமம்
   


   

2016 வது நினைவாண்டா?


இயேசுக்கிறிஸ்த்துவை சிலுவையில் அறைந்து கொலை செய்யப்பட்ட நாளை பெரிய வெள்ளி என்று அழைத்து கிறிஸ்தவர்கள் நினைவு கூருகிறார்கள். மாற்கு 15:42, லூக்கா 23:54 வேத வாக்கியங்கள் ஓய்வுநாளுக்கு முந்தைய நாளில் கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதாக கூறுகிறது. ஆகவே யூதருக்கு ஓய்வு நாள் சனிக்கிழமை, சனிக்கிழமைக்கு முந்தைய நாள் வெள்ளிக் கிழமையாயிருப்பதால் இப்படி நம்பப்படுகிறது. ஆதித்திருச்சபையினர் கிறிஸ்துவின் மரணநாளை விஷேச நினைவுநாளாக கைக்கொள்ளவில்லை, அதுதவிர வெள்ளிக்கிழமையில்லை என்று சொல்வோருமுண்டு. எப்படியோ கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டது உண்மை அவர் உயிரோடு எழுந்ததும் உண்மை. இன்றைக்கு நாம் இந்த நாளை எவ்வாறு கடைப்பிடிக்கிறோம் என்பதே கேள்வி.

ஒரு மனிதன் மரித்துவிட்டால் அவனின் மரண நாளை நினைவுநாளாக ஒவ்வொரு ஆண்டும் கடைப்பிடிப்பார்கள். அன்றைய நாளில் உறவினர் எல்லோரையும் கூட்டி அவரவர் மார்க்க முறைப்படி சடங்குகள் செய்து அம்மணிதரைப் பற்றி உரையாடி முடிவில் விருந்தோம்பலுடன் கவலை கண்ணீரோடு நிறைவடையும். மறு நாள் வழமையான நாளாக அவர்களுக்கு திரும்பிவிடும்.

மேற்கத்தேய முதலாளித்துவ நாடுகளில் வசிக்கும் பெரும்பாலான கிறிஸ்தவர்கள் பெரியவெள்ளி ஆராதனைக்கு ஆயத்தப்படுதலே விமர்சையாக இருக்கும் சரீர, உடை அலங்காரங்களோடு கவலையோடு காட்சி தருவார்கள். சபைகளிலும் கடைசியாக சிலுவையில் இயேசுக்கிறிஸ்து கூறிய 7 வார்த்தைகளையும் பிரசங்கித்து அனுப்பிவைப்பார்கள். 

சடங்காச்சாராமாக ஒரு நாளை விசேஷித்த நாளாக கடைப்பிடிப்பதையே காணக்கூடியதாக உள்ளது.

பிரியமானவர்களே!

ஆதியாகமம் 3:15 உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையுண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார். கர்த்தராகிய தேவன் சாத்தானாகிய பாம்பை பார்த்து தீர்க்கதரிசனமாக இவ்வார்தைகளை கூறுகிறார். ஆதாமும் ஏவாளும் தேவகட்டளைக்கு கீழ்படியாமல், சாத்தானின் வார்த்தைக்கு கீழ்படிந்து பாவம் செய்து தேவனோடிருந்த நேரடி உறவை இழந்து போனார்கள்.  à®®à¯€à®£à¯à®Ÿà¯à®®à¯ உறவை உண்டாக்கிக் கொள்ளவும், அவர் கூடவே இருந்து முக முகமாய் பேசவேண்டும் என்ற வாஞ்சையாலும். 

நமது பாவத்துக்கு பலியாக உன்னதங்களிலிருந்து இயேசு கிறிஸ்துவை மண்ணுலகிற்கு அனுப்புகிறார். எனது பாவத்திற்கு தண்டனையாக நானே பலியாக வேண்டும். ஆனால் என்மீதிருந்த அன்பு அதீத அக்கறையினால் அவரே மனித ரூபமெடுத்து எனக்காக மரித்தார். அந்த நாளே இந்த நாள்.

ஆதியாகமம் 3:15 தீர்க்கதரிசனம் 2016ம் ஆண்டுகளின் முன் நிறைவேறிய நாள்.

ஆதிப் பெற்றோரிடமிருந்து சாத்தான் வஞ்சகமாக பறித்த ஆளுகையை மீண்டும் பெற்றுத்தந்த வெற்றியின் நாள்.

பிரிக்கப்பட்ட உறவு இணைக்கப்பட்ட நாள். 

இயேசுக்கிறிஸ்து மரித்து மூன்றாம் நாள் உயிரோடு எழுந்து விட்டதால். 

நாம் கவலை கண்ணீரோடு இந்த நாளை நினைவு நாளாக அனுஷ்டிக்க வேண்டிய தேவையுமில்லை.

யாருக்காக மரித்தார்? எப்படி மரித்தார்? எப்படிப்பட்டவராயிருந்தார்? என்னத்தை என்னிடமிருந்து எதிர்பார்க்கிறார் என்ற கேள்விகளை இந்த நாட்களில் நாம்மை நாமே கேட்போமாக. 

என்னை மரணவாழ்விலிருந்து மீட்டுக்கொண்டதற்காக நான் அவருக்கு பிரதியுபகாரமாக என்ன செய்யப்போகிறேன்.

1) தேவனுக்கு பிரியமான வழியில் நடந்து அவரை பிரியப்படுத்துவேம்.

2) அவர் எங்களுக்கு மனமிரங்கியது போல் நாமும் பிறருக்கு மனமிரங்குவோம்.

3) கிரயம் செலுத்தி மீட்கப்பட்ட பிள்ளைகள் என்பதால் நான் என்னுடைய என்ற சுய இச்சைகளுக்கு மரிப்போம்.

கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்தார்கள். கலாத்தியர் 6:24

நன்றி

கர்த்தாவே

 

த.பிரபா

   
   
 
எங்களை தொடர்புகொள்ள
T.Pirabagaran
89 Laurel crescent
Romford
Essex
Rm7 0ru
England
  TP:-
Email:- info@thehandofjesus.com
சமூக வலைத்தளங்களில் எங்களுடன் தொடர்பு கொள்ள

        
உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது. சங்கீதம் 119:105
Copyright © 2015 The hand of jesus.com All Rights Reserved