ஆங்கிலம் | தமிழ் | சிங்களம்

 
 
  முகப்பு பக்கம்
  எங்களை பற்றி
  எங்கள் சேவைகள்
  தற்போதைய தேவைகள்
    ஜீவ வார்த்தைகள்
  கட்டுரைகள்
  வேதாகம வரைபடங்கள்
  ஜெப வேண்டுகோள்
  ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம்
  சிறுவர்கள் வேதாகம ஒளிநாடா
  கருத்துக்கள்
  ஒளிப்பதிவுகள்
  எங்களை தொடர்புகொள்ள

 தினசரி தியானம்
  ஆரம்ப நிலை
  இடை நிலை
    மேல்நிலை
  வேதாகம விளக்கம்

  ஜீவ வார்த்தைகள்

 பயனுள்ள இணைப்புகள்
  இணைய தளங்கள்
  www.tamilchristian.com
  www.tamilchristianworship.org
  வானொலி
  www.tamilchurchvos.org
  www.tamilchristianprayer.org
    தொலைக்காட்சி
  www.tamilchristianonline.net
    வேதாகமம்
  இணைய வேதாகமம்
    இணைய வேதாகமம் 2
    ஒலி வேதாகமம்
   


   

 à®ªà®¿à®±à®°à¯à®•à¯à®•à®¾à®©à®µà¯ˆà®•à®³à¯ˆ நாடுங்கள் 


அவனவன் தனக்கானவைகளையல்ல,பிறருக்குகானவைகளை நோக்குவானாக. பிலிப்பியர் 2:4

கி.பி 60 க்கு பின்னர் பவுல் அடிகளாரால் பிலிப்பு பட்டண சபை விசுவாசிகளுக்கு இதை எழுதுகிறார்.

இதை எழுதுவதற்கு பல நுற்றாண்டுகளுக்கு (1600) முன்னே இச் சத்தியத்திற்கேற்ப வாழ்ந்துகாட்டிய தேவதாசனை குறித்து சுருக்கமாக ஒரு சில சம்பவங்களை தியானிக்கலாம்.

மோசே

அரண்மனையில் அதிகாரத்தோடு, ஆடம்பரமாக சுகபோக வாழ்கை வாழக்கூடிய நிலையிருந்த போதும்.

தன்னுடைய சகோதரர்கள் எகிப்தியர்களால் தாக்கப்படுவதை பார்த்து சகிக்கமுடியாமல். எபிரேயனை தாக்கிய எகிப்தியனை  à®µà¯†à®Ÿà¯à®Ÿà®¿ கொலை செய்துவிட்டு, அரண்மனையைவிட்டு வெளியேறுகின்றார்.

தன்னுடைய வாழ்க்கை தனது எதிர்காலத்தைகாட்டிலும் தனது சகோதரர்களின் வாழ்கை அவர்களின் எதிர்காலத்தின் மீது கொண்ட கரிசனையாலேயே இந்த நிலை உருவாகிறது. 

யாத்திரகாமம் 3:1ல் மோசே மீதீயான் தேசத்து ஆசாரியனாயிருந்த தன் மாமனாகிய எத்திரோவின் ஆடுகளை மேய்த்து வந்தான் என்று எழுதப்பட்டுள்ளது. அறிவு ஆளுமை நிறைந்த மோசே. சிறுவயதிலிருந்து அரண்மனையில் இளவரசன் போன்று வாழ்ந்தவர். தனக்காக ஒரு ஆட்டை கூட

கொண்டிருக்கவில்லை என்பதை இது வெளிப்படுதுகிறது.

பொருளாசை அற்ற எழிமையான வாழ்க்கை வாழ்ந்து வந்தார் மோசே. 

யாத்திரகாமம் 32:7ல் அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி;

நீ இறங்கிப் போ எகிப்த்து தேசத்திலிருந்து நீ நடத்திக்கொண்டு வந்த உன் ஜனங்கள் தங்களைக் கெடுத்துக் கொண்டார்கள். என்று கூறுகிறார்.

பிரியமானவர்களே, மோசேயையும் இஸ்ரவேலரையும் அழைத்து வந்தது கர்த்தர். அற்புதம் செய்தது கர்த்தர். மேகஸ்தம்பவம், அக்கினிஸ்தம்பவத்தினூடாக வழிநடத்தியது கர்த்தர். தேவைகள் அனைத்தையும் சந்தித்து காத்தது கர்த்தர்.

இப்படி இருக்கும் போது. எப்படி நீ நடத்தி வந்த உன் ஜனம் என்று கர்த்தர் சொல்லலாம்?

இதயங்களை ஆராய்ந்து பார்ப்பவர் கர்த்தர். மோசே இது என் கடமை கர்த்தர் குடுத்த பொறுப்பு என்று நினைக்கவில்லை அதற்கப்பால் இஸ்ரவேல் மக்களை தனது சொந்த உறவாக தனது சரீர அவையங்களாக நேசித்தான் என்பது தான் உண்மை. இதனாலையே கர்த்தர் உன் ஜனம் என்று உரிமை பாராட்டி பேசினார். 

யாத்திரக்காமம் 32:10 ல் இஸ்ரவேல் ஜனங்களை நான் அழித்துப்

போடுவேன் உன்னை பெரிய ஜாதியாக்குவேன் என்கிறார். அதற்கு மோசேயோ நான் சாதாரன மனிதனாகவே இருக்கிறேன் எனக்கொரு அந்தஸ்தும், மேன்மையும் தேவையில்லை. இவர்கள் உடன்படிக்கையின் பிள்ளைகள் அழித்துப்போடாதிரும் என்று கெஞ்சி பிரார்திக்கிறான். இதனால் இஸ்ரவேலர் காக்கப்படுகிறார்கள். இங்கும் மோசே தனக்காகவல்ல மற்றவர்களுக்காகவே பரிந்து பேசுவதை பார்கலாம்.

எண்ணாகமம் 11;23-29 ல் மோசேயிடமிருந்த ஆவியை 70 பேர்மேல் வைக்க அழைக்கிறார். இஸ்ரவேலர் ஆவியை பெற்று தீர்கதரிசனம் சொல்லுகிறார்கள். இதில் இருவர் ஆசாரிப்பு கூடாரமண்டை வராது,பாளயத்திலிருந்தே தீர்கதரிசனம் சொல்லுகிறார்கள்.

இதை அறிந்த யோசுவா தடை பண்ணும் என்கிறான். பதிலாக 

மோசே எழுபது பேர் மட்டுமல்ல எல்லா ஜனங்களும் தீர்கதரிசனம் சொன்னால் எவ்வளவு நலமாயிருக்குமென்று அங்கலாய்கிறார்.

நான் மட்டும் வரம் பெற்றால் போதாது எல்லா ஜனங்களும் வரம் பெறவேண்டும் ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை அனைவருக்கும் பெற வேண்டும் என்ற ஏக சிந்தை ஏக அன்பு கொண்டவராயிருந்தார்.

 à®Žà®£à¯à®£à®¾à®•à®¾à®®à®®à¯ 27:15,16,17 ஐ வாசிக்கும் போது. மோசே நீ மரிக்க போகின்றாய் கானானுக்குள் போகப்போவதில்லை என்று கர்த்தர் சொல்லிவிட்டார். இதனால் கலங்காமல் சோர்வுறாமல் தனக்காகவோ தன் குடும்பத்துக்காவே எதையும் கேளாமல். இந்த மக்களை வழி நடத்த ஒரு தலைவரை கேட்கிறார். அழைக்கப்பட்ட தேவதாசனின் உள்ளத்தை பார்த்தீர்களா? தேவனால் அழைக்கப்பட்டவர்கள் பிறரைக் குறித்து அக்கறையாக இருப்பார்கள், அடுத்த தலைமுறை பற்றி அதிக கரிசனை கொண்டவர்களாயும் இருப்பார்கள். 

பிரியமானவர்களே.

ஐந்து ஆகமங்களையும் எழுதிய மோசே தன்னுடைய குடும்ப அங்கத்தினர் பெயரை கூட குறிப்பிடவில்லை.

இறுதிவரை பிறருக்காக வாழ்ந்து தேவ விருப்பத்தை நிறைவேற்றிய தாசன்.

நாமும் பிரியமானவர்களே உலகத்திலிருக்கும் சுய நலமிக்க தலைவர்களை பாராது, வேதத்தில் உள்ள தேவ மனிதர்கள், இயேசுகிறிஸ்துவை பார்த்து அவரிம் பாதச்சுவட்டை பின்பற்றி பிறருக்காக வாழ்வோமாக. 

நன்றி

கர்த்தாவே

 

தா.பிரபா

 

 

 

   
   
 
எங்களை தொடர்புகொள்ள
T.Pirabagaran
89 Laurel crescent
Romford
Essex
Rm7 0ru
England
  TP:-
Email:- info@thehandofjesus.com
சமூக வலைத்தளங்களில் எங்களுடன் தொடர்பு கொள்ள

        
உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது. சங்கீதம் 119:105
Copyright © 2015 The hand of jesus.com All Rights Reserved