ஆங்கிலம் | தமிழ் | சிங்களம்

 
 
  முகப்பு பக்கம்
  எங்களை பற்றி
  எங்கள் சேவைகள்
  தற்போதைய தேவைகள்
    ஜீவ வார்த்தைகள்
  கட்டுரைகள்
  வேதாகம வரைபடங்கள்
  ஜெப வேண்டுகோள்
  ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம்
  சிறுவர்கள் வேதாகம ஒளிநாடா
  கருத்துக்கள்
  ஒளிப்பதிவுகள்
  எங்களை தொடர்புகொள்ள

 தினசரி தியானம்
  ஆரம்ப நிலை
  இடை நிலை
    மேல்நிலை
  வேதாகம விளக்கம்

  ஜீவ வார்த்தைகள்

 பயனுள்ள இணைப்புகள்
  இணைய தளங்கள்
  www.tamilchristian.com
  www.tamilchristianworship.org
  வானொலி
  www.tamilchurchvos.org
  www.tamilchristianprayer.org
    தொலைக்காட்சி
  www.tamilchristianonline.net
    வேதாகமம்
  இணைய வேதாகமம்
    இணைய வேதாகமம் 2
    ஒலி வேதாகமம்
   


   

தேவனின் இரட்சிக்கும் இரக்கத்தின் விசாலம்


தேவன் தனது ஜனமாகிய இஸ்ரவேலை இரட்சிக்க மோசே மூலம் மீட்புத்திட்டத்தை முன்னெடுத்துச் சொல்கிறார். பின்பு தேவன் புறஜாதியாரையும் மீட்டு அவர்களையும் தனது தூய இரக்கத்தினால் கழுவி சுத்திகரிக்க விரும்பினார். அந்தப்படியே, யோனா எனும் தீர்க்கதரிசியை தேவன் நினிவே பட்டணத்திற்கு அனுப்பினார்.

நினிவே எனும் பட்டணம் மிகுந்த பாவம் நிறைந்ததாகவும், அக்கிரமம் நிறைந்ததாகவும் காணப்பட்டது. அவர்களுடைய அக்கிரமம் தேவ சமுகத்தை எட்டிற்று. ஆனாலும் யோனா நினிவே பட்டணத்தார் தன்னை அவமதித்து துன்புறுத்துவார் என நினைத்து விசுவாசத்தில் தளர்வுற்றவராய் தேவ சமுகத்தை விட்டு விலகியோடுகிறார். ஆயினும் தேவன் யோனாவை முன்குறித்திருந்தார். அந்தப்படியே அவர் யோனாவை மீண்டும் அழைப்பித்தார். நினிவேக்கு போக மறுத்த யோனா தர்ஷூசுக்கு போகும் கப்பலொன்றில் ஏறிப்போனார். ஆயினும் சங்கீதக்காரன் கூறியபடியே “உம்முடைய ஆவிக்கு மறைவாக எங்கே போவேன்? உம்முடைய சமுகத்தைவிட்டு எங்கே ஓடுவேன்?” சங் 139:7. என்பதற்கிணங்க மீண்டும் யோனாவை தேவன் அழைக்கிறார். 

யோனா தர்ஷூசுக்கு  à®šà¯†à®©à¯à®±à¯ கொண்டிருந்த போது திடீரென கர்த்தர் சமுத்திரத்தில் பெருங்காற்றை வரப்பண்ணினார். அதனால் கடலிலே கப்பல் உடையுமென்று நினைக்கத்தக்க பெரிய கொந்தளிப்பு உண்டாயிற்று. அதனால், கப்பல் மாலுமியும், பயணிகளும் கலங்கினர். எல்லோரும் கப்பலில் இருந்த சரக்குகளை வெளியே தூக்கியெறிந்தனர். பின்பு கப்பற்காரர் இந்த துன்பம் நமக்கு ஏற்படக் காரணம் யார் என அறிவதற்காக சீட்டுப்போட்டனர். சீட்டு யோனாவின் பேரில் விழுந்தது. ஆனால் யோனா 

கப்பலின் கீழ்த்தட்டில் படுத்து அயர்ந்த நித்திரை பண்ணிக்கொண்டிருந்தார். பின்பு யோனா தன்னை கடலிலே தூக்கியெறியுமாறு கூறுகிறார். அந்தப்படியே கப்பற்காரர் யோனாவை கடலிலே தூக்கியெறிந்தார்கள். தேவன் ஆயத்தப்படுத்திய பெரிய மீன் யோனாவை விழுங்கிற்று. யோனா மீனின் வயிற்றில் இரவும் பகலும் மூன்று நாட்கள் விண்ணப்பம் பண்ணிக்கொண்டிருந்தான். மீன் யோனாவை கடற்கரையிலே கக்கி விட்டது. யோனா நினிவேக்குப் போய் தேவன் கூறியவற்றை அவர்களுக்கு பிரசங்கம் பண்ணினான். அப்பொழுது அவர்கள் தேவனை விசுவாசித்து இரட்டுடுத்திக் கொண்டார்கள். அந்நாட்டு ராஜாவும் அப்படியே செய்தான். அந்நாட்டில் இருந்த ஆடு, மாடுகள் கூட உபவாசமிருந்தன. அத்துடன் அவர்கள் தங்கள் அக்கிரமத்தை விட்டு மனந்திரும்பினார். தேவன் அவர்களை நினைவுகூர்ந்து அவர்களுக்கு தாம் நினைத்த தீங்கை வரப்பண்ணாமல் ஏறத்தாழ லட்சத்து இருபதினாயிரம் பேரை இரட்சித்தார்.

நினிவே மக்களின் அக்கிரமம் தேவ சமூகத்திற்கு எட்டியது போலவே எங்களுடைய அநியாயமும் அக்கிரமும் தேவ சமுகத்தை எட்டுகிறது. ஆயினும் தேவன் யோனாவை அனுப்பியது போல் எம்மிடையே தேவ ஊழியக்காரர்களை அனுப்புகிறார். சில சமயங்களில் கீழ்படியாமையினால் யோனாவைப் போல நாமும் தேவ சமுகத்தை விட்டு விலகியோடுகிறோம் நாம் இவ்வாறு ஓடுவோம் என்று முன்பே அறிந்திருந்த தேவன் பெரும் காற்றை வரப்பண்ணி யோனாவுக்கும் அவருடன் சென்றவர்களுக்கும் ஆபத்தை வரப்பண்ணுகிறது போல் எங்களுடைய வாழ்விலும் துன்பங்கள், துயரங்கள், போராட்டங்கள், தோல்விகள் போன்ற பெரும் காற்றை அனுமதிக்கிறார். ஆயினும் தேவன் நம்மை ஒருபோதும் கைவிடுவதில்லை.

இவ்வாறு தேவன் சகல ஜாதியாரையும் இரட்சிக்கிறார். தேவன் இதைவிட சகல ஜாதியாரையும் இரட்சிப்பதற்காக "தமது ஒரே பேறான குமாரனை தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்" இதுவே தேவனின் இரட்சிக்கும் இரக்கத்தின் விசாலமாயிருக்கிறது.

பா. தனுசியன்

இயேசுக்கிறிஸ்துவின் சரீரமாகிய ஐக்கியம்

முல்லைத்தீவு மாவட்டம். 

 

   
   
 
எங்களை தொடர்புகொள்ள
T.Pirabagaran
89 Laurel crescent
Romford
Essex
Rm7 0ru
England
  TP:-
Email:- info@thehandofjesus.com
சமூக வலைத்தளங்களில் எங்களுடன் தொடர்பு கொள்ள

        
உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது. சங்கீதம் 119:105
Copyright © 2015 The hand of jesus.com All Rights Reserved