ஆங்கிலம் | தமிழ் | சிங்களம்

 
 
  முகப்பு பக்கம்
  எங்களை பற்றி
  எங்கள் சேவைகள்
  தற்போதைய தேவைகள்
    ஜீவ வார்த்தைகள்
  கட்டுரைகள்
  வேதாகம வரைபடங்கள்
  ஜெப வேண்டுகோள்
  ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம்
  சிறுவர்கள் வேதாகம ஒளிநாடா
  கருத்துக்கள்
  ஒளிப்பதிவுகள்
  எங்களை தொடர்புகொள்ள

 தினசரி தியானம்
  ஆரம்ப நிலை
  இடை நிலை
    மேல்நிலை
  வேதாகம விளக்கம்

  ஜீவ வார்த்தைகள்

 பயனுள்ள இணைப்புகள்
  இணைய தளங்கள்
  www.tamilchristian.com
  www.tamilchristianworship.org
  வானொலி
  www.tamilchurchvos.org
  www.tamilchristianprayer.org
    தொலைக்காட்சி
  www.tamilchristianonline.net
    வேதாகமம்
  இணைய வேதாகமம்
    இணைய வேதாகமம் 2
    ஒலி வேதாகமம்
   


   

நானே உங்களின் கால்களைக் கழுவினதுண்டானால்!


காட்டிக் கொடுக்கப்பட்ட அந்த இராத்திரி என்று தொடங்க்கினாலே அதிகம் பேருக்கு திருவிருந்து தான் ஞாபகம் வரும். சபைகளில் தேவாலயங்களில் அப்பமும் இரசமும் வழங்கப்பட முன்னர் இயேசுக்கிறிஸ்த்து சீஷர்களுடன் இராப்போஜனத்திலிருந்த சம்பவத்தை நினைவூட்டுவார்கள். அத்தோடு மாதந்தோறும் அல்லது வாரா வாரம்

என பலவாறு அனுஷ்டிக்கப்படுவதால் தேவப் பிள்ளைகளுக்கு இச் சம்பவம் ஆழமாக மனதில் பதிந்து விட்டது. என்னை நினைவுக்கூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார் இயேசுக்கிறிஸ்த்து (லூக்22-19). மனிதர்களாகிய நாம் பாவத்தில் வாழ்ந்து அழிந்து நரகத்துக்கு போய்விடக் கூடாது, தன்னுடன் நித்திய நித்திய காலமாக வாழ வேண்டும் என்பதற்காக, நாம் அனுபவிக்க வேண்டிய ஆக்கினையை, தண்டனையை அவர் ஏற்று மரித்தார் என்பதை மறந்துவிடக்கூடாது இதுவே என்னை நினைவு கூருங்கள் என்பதன் எளிய பொருள். 

ஒவ்வொரு திருவிருந்தின் போதுமல்ல அனுதினமும் இதை உணர்ந்து நாம் கிறிஸ்துவை போல் வாழப்பழகிக் கொள்ளவேண்டும். கிறிஸ்து எங்கள் மீது அக்கறை வைத்தது போல் நாமும் பிறர் மீது கரிசனையுள்ள பிள்ளைகளாக அவர்களின் மீட்புக்காக வாழவேண்டும். கிறிஸ்துவின் ராஜ்ஜிய விரிவாக்கத்துக்கு ஒவ்வொருவரும் தங்களை நொருக்க சித்தமாயிருக்க வேண்டும்.

இக்கட்டுரையின் நோக்கம் திருவிருந்தைக் குறித்த ஆளமான பார்வையல்ல.

காட்டிக் கொடுக்கப்பட்ட அந்த இராத்திரியில் என்றவுடன் திருவிருந்து ஞாபகத்துக்கு வருவது போல அன்றைய இரவு பல சம்பவங்கள் சம்பாஷனைகள் நடைபெற்றன அவை அவ்வளவு சுலபமாக எல்லோருக்கும் ஞாபகம் வருவதில்லை.

இரண்டு சம்பவங்களை சுருக்கமாக இதில் பார்கலாம். 1) யோவன் 17 வது அதிகராம் தன்னுடைய சீஷர்களுக்காக இயேசுக்கிறிஸ்துவின் உருக்கமான விண்ணப்பம்.

2) யோவான் 13:5-15 சீஷர்களின் கால்களை இயேசுக்கிறிஸ்த்து கழுவுதல்.

தேவப்பிள்ளையே எங்கள் ஒவ்வொருத்தரையும் இந்த உலகத்திலிருக்கும் எல்லோரைய காட்டிலும் அக்கறையோடு அன்பு செலுத்த ஒருத்தருண்டு என்பதை யோவான் 17 ம் அதிகாரத்தை வாசிப்பதிணூடக புரிந்து கொள்ளலாம்.  à®‡à®¤à¯ˆ விளக்குவதற்கு உதவி தேவையில்லை நாமாகவே வாசித்து எளிதாக புரிந்து கொள்ளலாம். பிதாவிடம் விண்ணப்பம் பண்ணும்படி இயேசுக் கிறிஸ்துவிடம் சீஷர்கள் கேட்கவில்லை.  à®®à¯‚ன்றரை ஆண்டுகளாக ஒரு குறையும் விடாது நல்ல மேய்ப்பனாக, பாசமுள்ள தகப்பனாக இருந்த இயேசுக் கிறிஸ்த்து இப்பொழுது உலகத்தை விட்டு போகப்போகிறார். 11,12,15 வசனங்களின் காத்துக் கொள்ளுங்கள் எனும் வார்த்தைப் பிரயோகத்தை பார்க்கலாம். அவர்கள் என்னுடைய சொத்து, அவர்கள் எனது பிள்ளைகள், அவர்கள் எனக்கு வேண்டும் அவர்கள் அழிந்து போகக் கூடாது என்ற மன பாரத்தோடு விண்ணப்பம் செய்வதை உணரக்கூடியதாக உள்ளது. மேலும் 22,24 ஆகிய வசனங்களில் தனது மகிமையை சீஷர்களுக்காக கொடுப்பதாகவும், தான் எங்கே இருக்கிறேனோ அங்கே அவர்களும் தன்னுடன் இருக்க வேண்டும் என்றும் வேண்டிக் கொள்ளுகிறார். 

இப்படி சொல்ல யாரால் முடியும்?

யார் தன்னுடைய மகிமையை தருவார்கள்?

யார் தன்னுடைய மகிமையான இரஜ்ஜியத்தில் பங்காளியாக வைத்திருப்பார்கள்?

எல்லையற்ற அன்புள்ளம் கொண்ட தகப்பனை கொண்ட பிள்ளைகள் நாம் அந்த பாக்கியம் நமக்குத்தான் உண்டு. விசுவாசக் குறைவுகள் தனிமையை உணரும் பொழுதேல்லாம் இந்த அதிகாரத்தை படித்து விசுவாச வைராக்கியம் கொள்ளுங்கள். அவரின் மனதுருக்கத்தை நினைத்து மகிழ்ந்து அழுது ஆர்பரித்து நன்றி சொல்லி ஜெபியுங்கள். 

யோவான் 13:5-15 ஆகிய வசனங்களில் இயேசுக்கிறிஸ்து சீஷர்களுக்கு கால் கழுவி, நானே உங்களின் கால்களைக் கழுவினதுண்டானால், நீங்களும் ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்களேன்றார். ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது யோவான் 1:1ல் இதை வாசிக்கிறோம். இந்த வார்த்தை மனிதனாக இயேசுக்கிறிஸ்துவாக பூமிக்கு வந்தார் அவரே சாமானிய பாவ மனிதனின் கால்களை கழுவி விட்டார். சாதாரன மனிதர்களாகிய நாம் பிறரை எவ்வாறு பார்க்கிறோம் என்பதே கேள்வி?

பிரியமானவர்களே! இன்றைக்கு நாம் சாரீரப்பிரகாரமாக யாருடைய கால்களையும் கழுவத் தேவையில்லை. சிந்தையில் நாம் யாரைக்காட்டிலும் உயர்ந்தவன் மேன்மையானவன் என்ற மேட்டிமையான (பெருமை) உணர்வு நமக்குள் இருக்கக் கூடாது. தாழ்மையுள்ள பிள்ளைகளாக எல்லோரும் என்னுடைய சகோதரர்கள், நாம் ஒரு தகப்பனின் பிள்ளைகள் என்ற ஒற்றுமையோடு வாழவேண்டும். நமக்குள் வித்தியாசம் வித்தியாசமான தாலந்துகள் வரங்களுண்டு. அவை தேவ மகிமைக்காக தேவ இராஜ்ஜியம் கட்டப்பட உதவுவதற்கே தரப்பட்டுள்ளது. இவ்வாறு சிந்தியுங்கள். நான் அனுபவிக்கும் இயற்கை வளங்கள் அனைத்தும் தேவனால் உண்டானது. என்னுடைய சாரீர அவையங்கள் இந்த தேகம் தேவனால் உண்டானது. அவர் தந்த ஞானத்தை வைத்தே நான் வாழ்கிறேன், அவருடைய பலத்திலேயே நிலை நிற்கிறேன். அப்போ ஏது என்னைக்குறித்து மேன்மை பாராட்ட? சகோதரர்களே தற்பரிசோதனை செய்யுங்கள்.

யோவான் 13:14 கட்டளையாகவே இயேசுக்கிறிஸ்து சொல்லியிருக்கிறார். ஆனால் சபைகளில் இதை வலியுறுத்துவது குறைவு.

தசம பாகத்தைக் குறித்து ஒவ்வொரு வாராமும் கேள்விப்படுகிறோம். தசம பாகம் பத்துக் கட்டளைகளில் ஒன்றல்ல, பத்துக்கட்டளைக்கு பின் மோசே அறுநூறுக்கு மேற்பட்ட கட்டளைகளை சொல்லியுள்ளார் அதில் ஒன்று தான் தசம பாகம். தசம பாகத்தோடு சேர்த்து மிகுதி அறுநூறு கட்டளையும் ஏன் பின்பற்றுவதில்லை என்று யாரும் கேள்வி கேட்பதில்லை. இப்படி பல கேள்விகள் உண்டு இன்றைய ஆவிக்குரிய உலகத்தில்.

இதை வாசிக்கிற ஒவ்வொருத்தரும் தாழ்மையுள்ள இயேசுக்கிறிஸ்துவின் பிள்ளைகளாய் வாழுவோமாக. அன்றாட வாழ்வில் அப்பியாசப்படுத்துவோம். 

இயேசுக்கிறிஸ்த்து எனக்காக மரித்தார், எனக்காக பாடுகள் பட்டார் என்று கூறுகிறோமல்லவா உண்மை அது போலவே அவர் சீஷர்களுக்கு கால் கழுவி விட்டமை என்னுடைய காலையும், உங்களுடை கால்களை கழுவியதற்கு நிகர்.

கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது; பிலிப்பியர் 2:5

நன்றி

கர்த்தாவே

த.பிரபா

 

   
   
 
எங்களை தொடர்புகொள்ள
T.Pirabagaran
89 Laurel crescent
Romford
Essex
Rm7 0ru
England
  TP:-
Email:- info@thehandofjesus.com
சமூக வலைத்தளங்களில் எங்களுடன் தொடர்பு கொள்ள

        
உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது. சங்கீதம் 119:105
Copyright © 2015 The hand of jesus.com All Rights Reserved