ஆங்கிலம் | தமிழ் | சிங்களம்

 
 
  முகப்பு பக்கம்
  எங்களை பற்றி
  எங்கள் சேவைகள்
  தற்போதைய தேவைகள்
    ஜீவ வார்த்தைகள்
  கட்டுரைகள்
  வேதாகம வரைபடங்கள்
  ஜெப வேண்டுகோள்
  ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம்
  சிறுவர்கள் வேதாகம ஒளிநாடா
  கருத்துக்கள்
  ஒளிப்பதிவுகள்
  எங்களை தொடர்புகொள்ள

 தினசரி தியானம்
  ஆரம்ப நிலை
  இடை நிலை
    மேல்நிலை
  வேதாகம விளக்கம்

  ஜீவ வார்த்தைகள்

 பயனுள்ள இணைப்புகள்
  இணைய தளங்கள்
  www.tamilchristian.com
  www.tamilchristianworship.org
  வானொலி
  www.tamilchurchvos.org
  www.tamilchristianprayer.org
    தொலைக்காட்சி
  www.tamilchristianonline.net
    வேதாகமம்
  இணைய வேதாகமம்
    இணைய வேதாகமம் 2
    ஒலி வேதாகமம்
   


   

பணிவிடைக்காறனாகிய யோவான் ஸ்நானகன்.


நம்மில் எல்லோருக்கும் பெரிய காரியம் சாதிக்க வேண்டும். மற்றவர்களால் புகழப்பட்டு பிரபல்யமாக வாழவேண்டும் என்ற ஆசையுண்டு. இந்த நிலையை அடைவதற்கு மற்றவர்களின் மீது அதிகாரம் செலுத்தி ஆளுகைக்கு உட்படுத்துவதன்மூலம் இலக்கை தொட்டுவிடலாம் என்று எண்ணுகிறார்கள். இப்பேற்பட்டவர்கள் தான் சொல்வதை தான் கேட்கவேண்டும் தன்னை மேன்மைப்படுத்தி தனது கட்டளைக்கு கீழ்படியவும் வேண்டுமேன விரும்பவும் செய்வார்கள். 

இதே எதிர்பார்ப்பு இன்று ஆவிக்குரிய உலகத்திலும் உள்ளது. ஆன்மீகவாதியாக கடவுளின் பிரசன்னத்தில் வாழ்கிறோம் என்று சொல்பவர்கள் அத்தோடு ஆன்மீகத்தை போதிப்பவர்கள் கூட இப்படிப்பட்ட அபிலாசைகள் அதிகார ஆளும் வாஞ்சை, உணர்வுகள் கொண்டவர்களாய் இருக்கிறார்கள் என்பது மனவேதனையாக உள்ளது.

வேதப்புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள பரிசுத்தவான்களில் எல்லோரும் தாழ்மையுள்ளவர்களாயும் பணிவிடை ஆவியுடையவர்களாய் இருந்துள்ளார்கள். அதிகாரம் செலுத்தும் எஜமானிய மனப்பான்மையற்ற சகோதர மனப்பாண்மையோடு பணிவிடை செய்யும் பிள்ளைகளாய் வாழ்ந்தார்கள். ஆதாயம் எதிர்பார்ப்பில்லாமல் தொண்டு செய்வதை பணிவிடை என்று கூறலாம். இது ஒரு தெய்வீக சுபாவமாகும்.

நோவாவை தேவன் பேழையை கட்டச்சொல்லி சொன்னவேளை. பேழையைக் கட்டும் பணியை நேவா ஆதாயாமாகவோ கடவுளிடமிருந்து எதாவது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பிலையோ செய்யவில்லை. கர்த்தரைப் பார்த்து பேழையைகட்ட பணம், பொருள், சரீர உதவி எங்கிருந்து வரும் என்று கேட்கவுமில்லை. மக்களிடமிருந்தும் காணிக்கையும் உதவிவையும் கேரவுமில்லை. மாறாக நோவா 100 வருடங்களுக்கு மேலாக தனது குடும்பத்தோடு பேழையைக் கட்டி முடித்தான். ஆண்டுகள் நீண்டு போகாவும் சரீரத்தில் பெலன் குன்றிப்போகவும் நோவா சோர்வடையவில்லை. அவன் குடும்பத்தார் கூட முறுமுறுத்து பின்வாங்கிப் போகாவண்ணம் அவர்களையும் வழிநடத்தினார். பேழையை கட்டிமுடித்ததும் மேன்மைபாராட்டவுமில்லை. இறுதியில் தேவ நோக்கத்தை, தேவன் கொடுத்த பணியை நிறைவேற்றி முடித்தார். 

புதிய ஏற்பாட்டின் முதல் இரத்தசாட்சி,

பிறப்பதற்கு முன்னே பெயர் சூட்டப்பட்டவர்,

மரியாளின் வாழ்த்தை கேட்டு தாயின்வயிற்றில் இருந்தே துள்ளியவர்,

நசரேய விரதமிருந்தவர்,

ஒட்டகமயிர் உடையைத் தரித்திருந்தவர்,

வெட்டுக்கிளியையும் காட்டுத்தேனையும் உணவாக கொண்டவர்,

வனாந்தரத்தை வாழ்க்கையாக்கிகொண்டவர்,

அவர் தான் யோவான் ஸ்நானகன். வயது சென்ற பெற்றோருக்கு தேவனின் வல்லமையால் பிறந்தவர்தான் யோவான். இவர் ஆசாரிய குடும்பத்தில் பிறந்தவரும், தேவனால் பிறக்கமுன்பே தெரிந்துகொள்ளப்பட்டவருமாகும். இப்படிப்பட்ட குடும்ப பின்னனியிருந்தும் அவர் எளிமையாகவும் ஆரவாரமற்றவராகவும் வாழ்ந்தார். அப்போஸ்தலர் 13:25 ல் யோவான் தன் பணிவிடை ஓட்டத்தை நிறைவேற்றுகிறபோது: நீங்கள் என்னை யார் என்று நினைக்கிறீர்கள், நான் அவர் அல்ல, இதோ, எனக்குப்பின் ஒருவர் வருகிறார், அவருடைய பாதரட்சையை அவிழ்க்கிறதற்கும் நான் பாத்திரன் அல்ல என்றான். இந்த வசனம் ஆதாரமாக இருக்கிறது யோவான் பணிவிடை ஊழியம் (தொண்டு) செய்தார் என்பதற்கு.

பழைய ஏற்பாட்டின் கடைசி தீர்க்கதரிசியாகிய மல்கியாவின் பின் 400 வருடங்களாக கர்த்தர் எந்த தீர்க்கதரிசியையும் எழுப்பவில்லை. இப்பெரிய கால இடைவெளியின் பின்னர் அதாவது கிறிஸ்து பிறந்த பிற்பாடு (கி.பி 29 ஆக இருக்கலாம்) எளிமையான வாழ்க்கை வாழ்ந்து தனக்கு பின் ஒருவர் வருகிறார் அவருக்கு வழியை ஆயத்தம் பண்ண வந்ததாக யோவான் சொல்லி, மக்களை மனந்திரும்பும்படி கேட்டு பாவ அறிக்கையிட வைத்து தண்ணிரினால் ஞானஸ்தானம் கொடுத்து வந்தார். பரிசேயர் வேதபாதகர்கள் யூத, இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாரும் அவரைத் தேடிப்போக அவரின் பேச்சுக்கு கட்டுப்பட என்ன காரணம்? 

முதலாவது யோவானின் எளிமையான வாழ்வும், தன்னை மேன்மைப்படுத்திக் காட்டதமையுமேயாகும். மக்களை ஆளுகை செய்ய வேண்டும் என்ற எண்ணமும் ஆசையும் அவருக்குள் ஒரு துளியளவேனும் இருந்ததில்லை.

இரண்டாவது மக்களின் பாவங்களை கண்டித்து உணர்த்தி அழிவை நோக்கி சென்ற மக்களை திருப்பி கிறிஸ்துவண்டை வழிநடத்தினார். இதற்காக அந்த மக்களிமிருந்து பணத்தையோ கனத்தையோ (ஆதாயம்) எதையும் எதிர்பார்க்கவில்லை. 

மூன்றாவது அவரது பெற்றோரான சகரியாவும் எலிசபெத்தும் கர்த்தரிட்ட சகல கற்பனைகளின்படியேயும் நியமங்களின்படியேயும் குற்றமற்றவர்களாய் நடந்து, தேவனுக்கு முன்பாக நீதியுள்ளவர்களாயிருந்தார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட பெற்றோருக்கு பிறந்து வளர்ந்த யோவானும் நீதியுள்ளவராயும், தனக்கு கொடுத்த பணியை சீராக செய்து முடித்தார்.

இந்த யோவானை குறித்து தான் இயேசுக்கிறிஸ்த்து ஸ்திரீகளிடத்திலே பிறந்தவர்களில் யோவான்ஸ்நானகனைப் பார்க்கிலும் பெரியவன் ஒருவனும் எழும்பினதில்லை என்று சொன்னார். நமது செயலை, பணியை, வாழ்வைக் குறித்து கிறிஸ்த்து மேன்மை பாராட்ட வேண்டும். மற்றவர்களை ஆள ஆசைப்படுவதைக்காட்டில் கிறிஸ்த்து என்னை ஆள வேண்டும் என்று ஆசைப்பட வேண்டும். அவர் எங்களை ஆளும் பொழுது எண்ணங்கள் சிந்தைகள் செயல்கள் மாறும். பூமிக்குரியதை தேடாமல் பரத்துக்குரியவற்றை நாடுவோம் தேடுவோம்.

பிரியமானவர்களே பிறரை ஆளுகை செய்யும் ஆவி பிசாசினுடையது. அவனுக்குள் இருந்த பெருமையும் ஆள வேண்டும் என்ற ஆசையுமே தேவ சன்னிதியிலிருந்து தள்ளிவிட காரணமாயிருந்தது. 

யோவான் இயேசுவுடைய பாதரட்சையை அவிழ்க்கிறதற்கு தகுதியில்லை என்று சொன்னார். ஆனால் அவரோ சீஷர்களின் கால்களை கழுவிவிட்டார். இயேசுக்கிறிஸ்துவினுடைய ஆவி பணிவிடை ஆவியாகும். அவர் பிள்ளைகளாகிய நாமும் எதிர்பார்ப்பு, ஆதாயம், எஜமான மனப்பான்மையற்று தாழ்மையாக கர்த்தருக்கு பணிவிடை செய்வோமாக. பிதாவுக்கு பிரியமாக வாழுவோம்.

நீதிமொழிகள் 12:9 ஆகாரமில்லாதவனாயிருந்தும், தன்னைத்தான் கனம்பண்ணிக்கொள்ளுகிறவனைப்பார்க்கிலும், கனமற்றவனாயிருந்தும் பணிவிடைக்காரனுள்ளவன் உத்தமன்.

த. பிரபா

   
   
 
எங்களை தொடர்புகொள்ள
T.Pirabagaran
89 Laurel crescent
Romford
Essex
Rm7 0ru
England
  TP:-
Email:- info@thehandofjesus.com
சமூக வலைத்தளங்களில் எங்களுடன் தொடர்பு கொள்ள

        
உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது. சங்கீதம் 119:105
Copyright © 2015 The hand of jesus.com All Rights Reserved