ஆங்கிலம் | தமிழ் | சிங்களம்

 
 
  முகப்பு பக்கம்
  எங்களை பற்றி
  எங்கள் சேவைகள்
  தற்போதைய தேவைகள்
    ஜீவ வார்த்தைகள்
  கட்டுரைகள்
  வேதாகம வரைபடங்கள்
  ஜெப வேண்டுகோள்
  ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம்
  சிறுவர்கள் வேதாகம ஒளிநாடா
  கருத்துக்கள்
  ஒளிப்பதிவுகள்
  எங்களை தொடர்புகொள்ள

 தினசரி தியானம்
  ஆரம்ப நிலை
  இடை நிலை
    மேல்நிலை
  வேதாகம விளக்கம்

  ஜீவ வார்த்தைகள்

 பயனுள்ள இணைப்புகள்
  இணைய தளங்கள்
  www.tamilchristian.com
  www.tamilchristianworship.org
  வானொலி
  www.tamilchurchvos.org
  www.tamilchristianprayer.org
    தொலைக்காட்சி
  www.tamilchristianonline.net
    வேதாகமம்
  இணைய வேதாகமம்
    இணைய வேதாகமம் 2
    ஒலி வேதாகமம்
   


   

கர்த்தரின் நாமத்தில் வருகிறேன்


ஆண்டுகள் முடிவடைவதும் புதிய ஆண்டுகள் பிறப்பதும் ஜதார்த்தமானதொன்று.

ஒவ்வொரு ஆண்டிலும் நன்மையான தீமையான காரியங்கள். மகிழ்ச்சியான துக்ககரமான சம்பவங்கள், செய்திகள். குறைவு நிறைவான வாழ்க்கை. ஆசீர்வாதமான ஆசீர்வாதமற்ற வாழ்க்கை என்று அநேக காரியங்களை ஒவ்வொரு ஆண்டும் சந்திக்கிறோம். இந்த 2016 ம் ஆண்டு சந்தித்த அநேக காரியங்கள் சம்பவங்களை நிச்சயமாக 2017 லிலும் சந்திக்கப்போகிறோம்.

கடந்து சொல்லும் ஆண்டில் எங்களுடைய வாழ்க்கை எப்படிப்பட்டதாயிருந்தது  

என ஆரய்ந்து பார்ப்பது சிறந்தது. கடந்த வாழ்க்கையில் கிடைத்த வாழ்வனுபவத்தை வைத்து எதிர்கால ஆண்டை சீரமைப்பது மேம்படுத்துவது சிறந்தது. அந்த வகையில் இயேசுக்கிறிஸ்துவின் பிள்ளைகளாகிய நமக்கு அவரோடு உள்ள உறவு எப்படியிருந்தது என்பதே பிரதானமானது. கடந்த ஆண்டில் ஒரளவு வேதம்படித்தேன், ஜெபித்தேன், சபைக்கு சென்றேன் என்று கூறுபவர்கள் இந்த ஆண்டில் கடந்த ஆண்டை காட்டில் அதிக நேரம் சத்தியத்தை கற்று ஜெபித்து அவருடைய பிரசன்னத்தில் வாழ தீர்மானம் எடுக்க வேண்டும். அவருடைய வெளிச்சத்தில் வாழ வேண்டும் என்ற தாகம் இருக்க வேண்டும். வழக்கத்தின்படி ஆன்மீக பக்தி வைராக்கியமான காரியங்களில் ஈடுபடுவதோடு. தேவராஜ்ஜியம் விரைவாக கட்டப்பட தேவ நோக்கம் நிறைவேற உபயோகமாயிருக்க வேண்டும். 

அநேக சகோதர சகோதரிகள் மனச்சோர்வும் நம்பிக்கையற்ற பிள்ளைகளாயும் இருக்கிறீர்கள். வேதம் வாசித்தென்ன ஜெபித்து துதித்து ஆலயம் போய் என்ன தான் நடக்கப்போகிறது. இந்த ஆண்டில் நிறைவேறாதது அடுத்த ஆண்டில் எப்படித்தான் நிறைவேறும். எனக்கு யார் உதவி செய்வார்கள் என்னுடைய பணக்கஸ்ரம், வியாதி, குடும்பத்தில் சமாதானமீன்மை, கீழ்படிவற்ற பிள்ளைகள், ஆறுதல் சொல்ல யாருமில்லை என்று வேறுமையான வாழ்வையே மீண்டும் மீண்டும் சிந்திக்கிறீர்கள். நம்பிக்கையை தளர விடுவதும் சோர்வைக் கொண்டுவருவதும் பிசாசின் தந்திரம். அவன் தேவனைவிட்டு தூரம் போகவைத்து கர்த்தருக்கும் உங்களுக்குமான உறவை விரிசலாக்கி துண்டித்து விடுவான். 

தேவன் நம்மை உண்டாக்கும் போது நமது தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யும் வண்ணமாக பூமியை உண்டாக்கி விட்டுதான் நம்மை உண்டாக்கினார். எங்களையும் தன்னுடைய சாயலில் தத்துருபமாக உன்னதமாக உண்டாக்கினார். அவருடைய கருசனைக்கு அன்புக்கு அளவேயில்லை. நாங்கள் அவருடைய (பரலோகத்தில்) சமூகத்தில் அவரோடு நித்தியகாலமாக ஜீவிக்க வேண்டும் என்று. அவரே இந்த பூமிக்கு வந்து நமது பாவங்களுக்காக மரணித்தார். நாங்கள் கிரையம் (இரத்தம்சிந்தி) கொடுத்து மீட்கப்பட்டுள்ளோம். ஜீவனையே தந்த இயேசப்பா உங்கள் மனவேதனைகளை, அழுகுரலை, இயாலாமையை, தேவைகளை பாராமல் கேளாமல் இருப்பாரோ? 

வேதத்தில் யோசேப்பு என்ற வாலிபன் தனது அண்ணன்களால் பொறாமையின் நிமிர்த்தம் புறக்கணிக்கப்பட்டு இஸ்மாவேல் புத்திரர்களிடம் விற்க்கப்படுகிறான்.

குடும்பத்தை விட்டு தனியொரு மனுசனாய் அடிமையாக எகிப்த்து கொண்டு போகப்படுகிறான். தகப்பனை உறவுகளைவிட்டு பிரிந்து தனிமையாக புதிய தேசத்தில் இனி மீட்பே இல்லை என்ற உணர்வேடு வாழ்ந்திருந்தபோது. பிறிதொரு சந்தர்ப்பத்தில் பொய்க் குற்றம் சாட்டப்பட்டு சிறைக்கு போகிறார். இப்பொழுது முன்பிருந்த நிலையைக்காட்டிலும் மோசமானதாக மாறியது. ஆனால் அவர் மனச்சோர்வுற்றதாகவே கர்த்தர் மீது அவநம்பிக்கை கொண்டவராக வாழ்ந்ததாக வேதத்தில் இல்லை. இப்படி சிறையிலிருந்த காலத்தில் எகிப்தின் பார்வோனின் கனவுக்கு அர்த்தம் சொல்லுவதற்காக யோசேப்பை கூட்டிக்கொண்டு போகிறார்கள். யோசேப்பு கனவுக்கு சரியான அர்த்தத்தை சொன்னபடியால் அவனை தனக்கு அடுத்தபடியாக ராஜ்ஜியத்தில் பொறுப்பு வழங்குகிறார். பதின்மூன்று ஆண்டுகளாக தனிமையும் துன்பங்களையும் அனுபவித்த யோசேப்பை கர்த்தர் கைவிடவில்லை. அதே தேவன் உங்களையும் கைவிடமாட்டார். காலதாமதமானாலும் அவர் உங்களை கைவிட மாட்டார் நம்பிக்கையை தளரவிடாதிருங்கள். 

பாடுகள் துன்பங்கள் துரோகங்கள் எதிர்ப்புகளை சந்திக்கும் போது துணிகரமாக வைராக்கியத்தோடு கர்த்தர் மீது விசுவாசம் வைத்து எதிர்கொள்ள வேண்டும். சத்துரு என்னை மேற்கொள்ள முடியாது என்னோடு இருப்பவர் மிகப்பெரியவர் என்ற உணர்வோடு ஜீவிக்க வேண்டும்.

சிறுவனாயிருந்த தாவீது யுத்தக்களத்தில் நின்ற தனது தமையன்மாருக்கு உணவு கொண்டு வருகிறான். அங்கே கோலியாத் எனும் இரட்சதன் நாற்பது நாட்களுக்கு மேலாக இஸ்ரவேலரை யுத்தத்துக்கு அழைக்கிறான். அவனை எதிர்கொள்ள அரசன் சவுலிலிருந்து யாருக்கும் துணிவில்லை. அப்பொழுது தாவீது தன்னண்டையிலே நிற்கிறவர்களைப் பார்த்து, இந்தப் பெலிஸ்தனைக் கொன்று இஸ்ரவேலுக்கு நேரிட்ட நிந்தையை நீக்குகிறவனுக்கு என்ன செய்யப்படும்; ஜீவனுள்ள தேவனுடைய சேனைகளை நிந்திக்கிறதற்கு விருத்தசேதனம் இல்லாத இந்த பெலிஸ்தன் எம்மாத்திரம் என்றான். (1 சாமுவேல் 17:26) தாவீது யுத்தத்தை ஜீவனுள்ள தேவனுக்கும் ஜீவனற்ற தேவனுக்குமிடையிலான யுத்தமாக பார்த்தார். அரசன் சவுலிடம் சென்று நீங்கள் ஒன்றுக்கும் கவலைப்படத்தேவையில்லை நான் போய் பெலிஸ்தனை வெற்றி கொள்ளுகிறேன் என்றார். சவுல் உன்னால் ஆகாது என்று சொன்ன போது. தாவீது பதிலுக்கு அப்பாவின் ஆட்டை நான் மேய்த்துக் கொண்டிருந்த போது ஒருதடவை ஒரு சிங்கமும் இன்னொரு தடவை ஒரு கரடியும் வந்து, மந்தையிலிருந்த ஆட்டை பிடித்துப்போனது. நான் அதை தொடந்து போய் அதை அடித்துக் கொன்றுவிட்டு ஆட்டை மீட்டு வந்தேன் என்று சொன்னார். சிறுவயதிலேயே தாவீதிடமிருந்த தெய்வீக குணத்தை பாருங்கள். ஒரு ஆடுதானே, அதுவும் அப்பாவினுடையது தானே, ஆடு என்ன மிருக ஜீவன்தானே போனால் போகுது என்றுவிடவில்லை போராடி மீட்டார். (இன்றைய போதகருக்கு தாவீது சிறந்த எடுத்துக்காட்டு) (இந்த மனநிலையை பார்த்த கர்த்தர் பின்னாளில் தாவீதை இஸ்ரவேல் ராஜாவாக்கினார்). சிங்கத்தின் கைக்கும் கரடியின் கைக்கும் தப்புவித்த கர்த்தர் இந்தப் பெலிஸ்தனுடைய கைக்கும் தப்புவிப்பார் என்றான். சுயபலத்தில் நம்பிக்கை கொள்ளாமல் கர்த்தரே வெற்றி தந்தார் என்று அறிக்கையிட்டார். இப்பொழுது சவுல் ராணுவத்துக்குரிய சீருடைகளை ஆயுதங்களை தாவீதுக்கு தரிப்பிக்கிறார். அவற்றை போட்டு நடந்து பார்க்கிறார். இல்லை இவை வேண்டாம் இவை எனக்கு பழக்கமற்றவை என்று கழற்றிக்குடுத்துவிடுகிறார். தாவீது நான் நானாகவே போகின்றேனென்றார். தாவீது கற்களோடு கோலியாத் முன்பாக சண்டைக்கு போய் நிற்கிறார். 

பெலிஸ்தனை நோக்கி: நீ பட்டயத்தோடும், ஈட்டியோடும், கேடகத்தோடும் என்னிடத்தில் வருகிறாய்; நானோ நீ நிந்தித்த இஸ்ரவேலுடைய இராணுவங்களின் தேவனாகிய சேனைகளுடைய கர்த்தரின் நாமத்திலே உன்னிடத்தில் வருகிறேன். 1சாமு 17:45. கர்த்தர் பட்டயத்தினாலும் ஈட்டியினாலும் ரட்சிக்கிறவர் அல்ல என்று இந்த ஜனக்கூட்டமெல்லாம் அறிந்துகொள்ளும்; யுத்தம் கர்த்தருடையது; அவர் உங்களை எங்கள் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றான். பிரியமான பிள்ளைகளே அன்றைக்கு தாவீது சொன்னதை இன்றைக்கும் நாங்கள் பேசக்கூடியதாய் உள்ளது. இவ்வாறு சொல்லி ஒரேகல்லால் அடித்து கோலியாத்தை விழுத்துகிறான் தாவீது. கோலியாத் முகம்குப்பற விழுந்தான். வேகமாக கல் போய் அடிபட்டிருந்தால் அவன் பிடரி அடிபடவே விழுந்திருப்பான். கர்த்தரே பிடரியில் அடித்து முகம்குப்பிற விழச்செய்தார். 

2017 புதிய ஆண்டில் யோசேப்புக்கு தாவீதுக்கு ஜெயம் குடுத்த ஆண்டவர் உங்களுக்கும் வெற்றி குடுப்பாராக. கோலியாத்துக்கள் போல மலை போல் பாடுகள் வேதனைகள், நோய்கள், பணத்தேவைகள், சமாதானமீன்மைகள், பெலவீனங்கள் வந்தாலும் கர்த்தரின் நாமத்தில் வைராக்கியமாக எதிர்கொள்ளுங்கள் வெற்றி சிறப்பீர்கள். சிறுவன் தாவீதும் யோசேப்பும் சூழ்நிலைகளை பார்க்கவில்லை கர்த்தரையே பார்தார்கள்.

ஆம் பிரியமான சகோதர சகோதரிகளே. நீங்கள் ஜெயிக்கப்பிறந்தவர்கள். நீங்கள் அசாத்தியமான மனிதர்கள். நீங்கள் பராக்கிரமசாலிகள். மரணத்தை ஜெயித்த ஜீவனுள்ள தேவனின் பிள்ளைகள். கர்த்தரின் நாமத்தில் 2017 ஆண்டை எதிர்கொண்டு ஜெயஜீவியம் செய்யக்கடவீர்கள். ஆமென்

த. பிரபா

   
   
 
எங்களை தொடர்புகொள்ள
T.Pirabagaran
89 Laurel crescent
Romford
Essex
Rm7 0ru
England
  TP:-
Email:- info@thehandofjesus.com
சமூக வலைத்தளங்களில் எங்களுடன் தொடர்பு கொள்ள

        
உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது. சங்கீதம் 119:105
Copyright © 2015 The hand of jesus.com All Rights Reserved