ஆங்கிலம் | தமிழ் | சிங்களம்

 
 
  முகப்பு பக்கம்
  எங்களை பற்றி
  எங்கள் சேவைகள்
  தற்போதைய தேவைகள்
    ஜீவ வார்த்தைகள்
  கட்டுரைகள்
  வேதாகம வரைபடங்கள்
  ஜெப வேண்டுகோள்
  ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம்
  சிறுவர்கள் வேதாகம ஒளிநாடா
  கருத்துக்கள்
  ஒளிப்பதிவுகள்
  எங்களை தொடர்புகொள்ள

 தினசரி தியானம்
  ஆரம்ப நிலை
  இடை நிலை
    மேல்நிலை
  வேதாகம விளக்கம்

  ஜீவ வார்த்தைகள்

 பயனுள்ள இணைப்புகள்
  இணைய தளங்கள்
  www.tamilchristian.com
  www.tamilchristianworship.org
  வானொலி
  www.tamilchurchvos.org
  www.tamilchristianprayer.org
    தொலைக்காட்சி
  www.tamilchristianonline.net
    வேதாகமம்
  இணைய வேதாகமம்
    இணைய வேதாகமம் 2
    ஒலி வேதாகமம்
   


   

இராஜாக்களின் அதிகார மேட்டிமை


இராஜாக்கள் என்றாலே உச்ச அதிகாரம் உடையவர்களாயும், தாழ்மையற்ற பெருமையுள்ளவர்களாயே அதிகமானோர் இருப்பார்கள். குறைகள் தேவைகள் என்பன அவர்களுக்கிருப்பதில்லை. அதிகாரத்தில் இருக்கும் ராஜாக்களுக்கு யார் எது சொன்னாலும் கேட்க மறுக்கும் அகந்தையுள்ளவர்களாயிருப்பார்கள். இதையே அதிகார மேட்டிமை என்பார்கள். 

சாலொமோன்

இஸ்ரவேல் தேசத்தின் ராஜாவாக அதிகார மேட்டிமையில் உச்சத்திலிருந்தவர்தான் சாலொமோன்.

தாவீது மரணிக்கப் போகும் தறுவாயில் சாலொமோனுக்கு பல அறிவுரைகளைச் சொல்லுகிறார். அதில் நீ என்ன செய்தாலும், நீ எங்கே போனாலும், எல்லாவற்றிலும் புத்திமானாயிருக்கிறதற்கும், கர்த்தர் என்னைக் குறித்து: உன் பிள்ளைகள் தங்கள் முழு இருதயத்தோடும் தங்கள் முழு ஆத்துமாவோடும் எனக்கு முன்பாக உண்மையாய் நடக்கும்படிக்குத் தங்கள் வழியைக் காத்துக்கொண்டால், இஸ்ரவேலின் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கத்தக்க புருஷன் உனக்கு இல்லாமற்போவதில்லை என்று சொன்னார். மோசேயின் நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடி, நீ உன் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளையும், கற்பனைகளையும், நியாயங்களையும், சாட்சிகளையும் கைக்கொள்ள, அவர் வழிகளில் நடக்கும்படிக்கு அவருடைய காவலைக் காப்பாயாக. (1 இரா 2:3-4) இவ்வாறு கர்த்தருக்கு முன்னுருரிமை கொடுத்து அவருக்கு கீழ்படிந்து வாழ வேண்டும் என அறிவுரை சொல்வதை வாசிக்கிறோம்.

சாலொமோன் இவற்றை ஆரம்பத்தில் கடைப்பிடித்தே வந்தார். அவர் கர்த்தரிடத்தில் அன்புகூர்ந்து, தன் தகப்பனாகிய தாவீதின் கட்டளைகளில்படி நடந்தார். ஆலயமீன்மையால் அவர் கிரமமாக மேடைகளிலே பலியிட்டுத் தூபங்காட்டி வந்தார். கர்த்தர் சொப்பனத்தில் தரிசனமாகி நீ விரும்பியதை கேள் என்ற பொழுது. அவர் கர்த்தர் தாவீதுக்கு செய்த நன்மைகளை சொல்லி, தான் எதுவும் அறியாத சிறுபிள்ளையாயிருக்கிறேன். இந்த ஜனங்களை ஆளுவதற்கு ஞானமுள்ள இருதயத்தை தந்தருளும் என்று கேட்டார். கர்த்தரும் இந்த உலகத்தில் ஒருதருக்கும் இல்லாதளவு ஞானத்தை கொடுத்தார். தொடர்ந்து ஆலயம் கட்ட வேண்டும் என்ற தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு திவீரமாயும் மனப்பூர்வமாயும் செயல்பட்டு, ஆலயத்தை கட்டிமுடித்தார். ஆலயப் பிரதிஷ்டையின் போது, எண்ணிக்கையும் கணக்குமில்லாத திரளான ஆடுகளையும் மாடுகளையும் பலியிட்டனர். சாலொமோனுக்கு இரத்தத்தின் மகிமை புரிந்ததால் இவ்வாறு செய்திருக்கலாம். இரத்ததுக்கு ஈடானதொன்றுமில்லை என அறிந்தவராக இருந்திருப்பார். இவ்வாறு பலி செலுத்தியதன் பிற்பாடு ஆலயத்தை கர்த்தரின் மகிமை மூடிற்று. அந்த வேளையில் சாலொமோன் ஜெபிக்க தொடங்கினார். அவருடைய ஜெபத்தில் ஆலயத்தை கர்த்தரின் கரமே கட்டிமுடித்ததாக சொன்னதோடு ஆலயத்தில் ஏறேடுக்கும் விண்ணப்பங்களுக்கு பதில் தரும்படியும் இஸ்ரவேல் மக்களின் நலனில் அக்கறைப்பட்டு அவர்களின் தேவைகளை முதன்மைப்படுத்தி ஜெபித்ததை பார்க்கிறோம். மக்களின் பாவங்களுக்கு மன்னிப்பு கேட்டு முழங்கால் படியிட்டு பரிந்து பேசி ஜெபிக்கும் ஜெபத்தையும் செய்தார்.

சாலொமோன் ஆலயத்தையும் தனக்கு அரண்மனையையும் கட்டி முடித்தபின்பு, கர்த்தர் இரண்டாம் தடவை தரிசனமாகி சாலொமோனின் விண்ணப்பத்தைக் கேட்டதாகவும் தாவீது செய்தது போல மன உத்தமமும் செம்மையாயும் நடந்தால், நிலையான ராஜ்ஜிய அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ளுவீர்கள். மாறாக அந்நிய தெய்வங்களை சேவித்து கர்த்தரைப் பின்பற்றாது பின் வாங்கினால். கர்த்தர் இஸ்ரவேலுக்கு கொடுத்த தேசத்தில் வாழவிடாது அழிப்பதோடு, ஆலயத்தையும் தள்ளுவேன் என முன்னெச்சரிக்கை செய்தார்.   

காலம் போக போக சாலொமோனின் புகழ் உலகம்பூராய் அறியப்பட்டது. அவரது ஞானத்தை தெரிந்துகொள்வதற்காகவும், செழுமையான இஸ்ரவேல் தேசத்தை சுற்றிப்பார்பதற்காகவும் அந்நிய தேசத்து ராஜாக்கள் வெகுமதிகளோடு சாலொமோனை நாட ஆரம்பித்தனர். சாலொமோனும் உலக ஐஸ்வரியத்தை சேர்ப்பதிலும் அதிக ஆர்வம் காட்டினார். சாலொமோனின் நாட்களில் வெள்ளி ஒரு பொருளாய் எண்ணப்படவில்லை என்று செல்லுமளவுக்கு மிகுதியாயாய் கிடந்தது.

இப்படி பொன்னும் வெள்ளியும் கேதுருமரங்களும் குதிரைகளும் மிதமிஞ்சி பெருகியதோடு, அவரின் மணவாட்டிகளின் எண்ணிக்கைகளும் பெருகியது. எழுநூறு மனையாட்டிகளையும், முன்னூறு மறுமனையாட்டிகளை உடையவராயிருந்தார். ஆயிரம் பேரை குறிப்பிட்ட சில காலத்தினுள் திருமணம் செய்திருக்க முடியாது. சாலொமோன் முதிர்வயது வரை திருமணம் செய்திருப்பார். 

உலகப் பொருட்களிலும் திருமணக்காரியங்களிலும் சாலொமோனின் நிலை உயர்வடைய உயர்வடைய, அவரது தேவனுடைய உறவும் அவருக்கு கீழ்படிந்து பிரியமாக வாழும் ஆவிக்குரிய நிலை வீழ்ச்சியடைந்து கொண்டே போனது.

எகிப்த்திலிருந்து இஸ்ரவேல் ஜனங்களைக் கூட்டிவந்த போது கானானில் இருந்த அந்நிய ஜாதியினரை துரத்திவிட்டு அவர்களை திருமணம் செய்யக் கூடாது என கர்த்தர் சொல்லியிருந்தார். அவர்களை திருமணம் செய்வீர்களானால் அவர்களின் தெய்வத்தையும் வணங்க வேண்டி வரும் என எச்சரித்திருந்தார். சாலொமோனோ எகிப்த்திய பார்வோனின் குமாரத்தியை மட்டுமல்லாது, அந்நிய ஜாதிப் பெண்களை திருமணம் செய்தார். திருமணம் செய்ததோடே நிறுத்திக் கொள்ளாது, அவர்கள் தெய்வங்களுக்கு விக்கிரகங்களை உண்டுபண்ணி மேடைகளைக்கட்டி பலியிட்டு தூபங்காட்டுவித்தான். பார்வோனின் குமாரத்தியை திருமணம் செய்த போது தாவீது வாழ்ந்த அரண்மனையில் குடித்தனம் நடத்துவது தவறு, அங்கே உடன்படிக்கைப் பெட்டியிருந்தது என்று சொல்லி, அவளுக்கு பிறிதொரு இடத்தில் அரண்மனை கட்டி வசித்தார். (2 நாளாகமம் 8:11) தவறு என்றும் தெரிந்திருந்தும் மெல்ல மெல்ல அதை செய்து அவை பழக்கத்தில் வந்ததோடு இறுதியில் மீளமுடியாத அளவு பாவ வாழ்க்கையுக்குள் மூழ்கி விட்டார்.

விக்கிரக ஆராதனை தேவனுக்கு பிரியமில்லை என்பதை சாலொமோன் மோசே எழுதிய ஆகமங்களைக் கற்று அறிந்திருப்பார். அதுதவிர அன்றைய நாட்களில் இருந்த ஆசாரியர்களும் விக்கிரக ஆராதனை தவறு என்று சொல்லியிருப்பார்கள். சாலொமோன் கட்டிய ஆலயத்திலும் அந்த ஆகமங்கள் இருந்தன. தொடர்ந்து கர்த்தரும் எச்சரித்து வந்தார்.

கர்த்தர் சாலொமோன் தன் தகப்பனாகிய தாவீதைப்போல கர்த்தரைப் பூரணமாய்ப் பின்பற்றாமல், கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான். என்று சொல்லிக் கோபப்படுமளவுக்கு சாலொமோனின் பாவம் பெருகியது. கர்த்தர் மனதுருகி இரண்டு தடவை தரிசனமாகி எச்சரித்தும் சாலொமோன் மனந்திரும்பி மன்னிப்பு கேட்டு தேவனோடு ஒப்புரவாகவில்லை. தாவீதுக்கு கர்த்தர் மன்னித்ததை அறிந்திருந்தும் அவரால் மன்னிப்பு கேட்டு மனந்திரும்ப அவரது இருதயம் இடம்கொடுக்கவில்லை.  à®µà®¿à®³à¯ˆà®µà¯ அவருக்கு விரோதிகள் எழும்புவதை அனுமதித்து, அவருக்கு பின் ராஜ்ஜியபாரம் பிடுங்கப்பட்டது. 

மிகத் தாழ்மையாக தேவ உறவோடு மகிமையாக தொடங்கிய சாலொமோனின் ஆரம்பம். இராஜ்ஜிய அதிகாரமும் அதன் மூலம் கிடைத்த செல்வமும் புகழும்  à®‡à®°à¯à®¤à®¯ மேட்டிமை கொண்டவனாக மாற்றியதோடு, பெண்களின் உறவும் சரீர இச்சைகளும் தேவ உறவை இரண்டாம் பட்சமாக தள்ளி, அவரது வாழ்கையின் முடிவு பரிதாபமான முடிவாக மாறியது. 

சாலொமோனின் மகன் ரெகொபெயாம். 

தாவீது மரிக்கும் பொழுது சாலொமோனுக்கு கர்த்தருக்கு பயந்து அவரின் கற்பனைகள் கட்டளைகளை பின்பற்றும்படி ஆலோசனை சொல்லி மரித்தார்.

சாலொமோன் மரிக்கும் பொழுது ரெகொபெயாமுக்கு அவைகுறித்து சென்னதாக வேதத்தில் எழுதப்படவில்லை. மனைவிமாரின் விருப்பங்களுக்கு கீழ்படிந்த மனிதனாக சாலொமோன் இருந்தபடியால், கர்த்தருக்கு பயந்து வாழவேண்டும் எனச் சொல்லியிருக்க வாய்ப்பில்லை. தனக்கு பின் தன்னுடைய அதிகாரத்துக்கு ரெகொபெயாம் ஆட்சிக்கு வந்தால் போதும் என்ற நிலைப்பாட்டில் இருந்தபடியாலே யெரொபேயாமை கொலை செய்வதற்கு தேடினார். இந்த ரெகொபெயாமின் தாயார் அம்மோன் ஜாதியைச் சார்ந்தவர்.

சாலொமோனின் தொடக்க காலமாவது கர்த்தருக்கு பிரியமாய் இருந்தது. ரெகொபெயாமின் ஆட்சியின் ஆரம்பமோ சிறுபிள்ளைத்தனமான முடிவுகளோடு தேவனுக்கு பிரியமற்ற தீர்மானங்களோடு தொடங்கியது.

அவர் ஆட்சிக்கு வந்ததும் இஸ்ரவேல் மக்கள் தங்களுக்கு தரப்பட்டிருக்கும் வேலைப் பழுவை குறைக்கும்படி கேட்டுக் கொண்டனர். அதற்கு ரெகொபெயாம் மூன்று நாட்களால் திரும்பி வாருங்கள் பதில் சொல்வதாக சொல்லியனுப்புகிறார். சுயமாக தன்னறிவைக் கொண்டு முடிவு தீர்மானிக்க தெரியாத ராஜா (ரெகொபெயாம்) இரண்டு பிரிவினரிடம் ஆலோசனை கேட்கிறார். முதலாவது முதியவர்களிடம் ஆலோசனை கேட்கிறார். அவர்கள் மக்களின் விருப்பப்படி செய்யும் என்று சரியான ஆலோசனையைச் சொன்னார்கள். அதற்கு பின் தனது வயதை ஒத்த வாலிபரிடம் ஆலோசனை கேட்கும் போது, அவர்கள் மக்களிடம் அப்பாவைக் காட்டில் கடினமாய் நடத்துவேன் என அகங்காரமாக பேசி மிரட்டி அனுப்பும்படி ஆலோசனை சொன்னார்கள். மூன்றாம் நாள் ராஜாவிடம் இருந்து நல்ல பதில் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்போடு வந்த மக்களை ரெகொபேயாம் பார்த்து வாலிபர் சொல்லிக் கொடுத்த பதிலை சொன்னார். 

மக்கள் கொதிப்போடு ராஜாவைப் பார்த்து இனிமேல் தாவீதின் வம்சத்து ராஜாக்களுக்கு கட்டுப்பட்டு வாழமாட்டோம், நாங்கள் எங்கள் வாழ்வைப் பார்த்துக் கொள்ளுகிறோம் எனச் சொல்லி கூடாரத்துக்கு திரும்பிப்போனார்கள். 

ரெகொபெயாமின் பிரதிநிதியான அதோராம் இஸ்ரவேல் மக்களிடம் போன போது அவனை பிடித்து கல்லொறிந்து கொலைசெய்தார்கள். இதையறிந்த ரெகொபெயாம் உயிரச்சத்தால் யூதா தேசம் ஓடிப்போனான். அங்கே பென்யமீன் யூத கேத்திரங்களை உள்ளடக்கி அரசாட்சி செய்தார். தேவனுடைய மனுஷனாகிய சேமாயா அங்கிருந்த மக்களிடம் இந்த நிலையை கர்த்தரே உண்டாக்கினார், நீங்கள் எவரும் மீதி பத்துக் கோத்திரத்தோடும் யுத்தம் செய்ய வேண்டாம் என்று கர்த்தர் உரைப்பதாக சொன்னார். இரண்டு கோத்திரத்தை ஆளுவதற்கு தாவீதின் நிமித்தமே (உடன்படிக்கை) ரெகொபெயாமை அனுமதித்தார்.

ரெகொபெயாமின் அதிகாரத்துக்கு உட்பட்ட காலத்திலே, யூதஜனங்கள் மரத்தின் கீழும் மேட்டின்மேலும் மேடைகளையும் சிலைகளையும் தோப்பு விக்கிரகங்களையும் உண்டாக்கி வணங்கினார்கள். அத்தோடு கர்த்தர் விரும்பாத இயற்கைக்கு மாறான தகாத புணர்ச்சிக்காரரும் அந்த நாட்களில் இருந்தார்கள். இப்படியான அருவருப்பான காரியங்களால் கர்த்தர் எரிச்சலடைந்தார். 

ரெகொபெயாம் ராஜ்யத்தைத் திடப்படுத்தித் தன்னைப் பலப்படுத்திக்கொண்டபின், அவனும் அவனோடே இஸ்ரவேலரனைவரும் கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தை விட்டுவிட்டார்கள். அவர்கள் கர்த்தருக்கு விரோதமாய் யுத்தம்பண்ணினபடியினால், ராஜாவாகிய ரெகொபெயாமின் ஐந்தாம் வருஷத்தில் எகிப்தின் ராஜாவாகிய சீஷாக் ஆயிரத்து இருநூறு இரதங்களோடும், அறுபதினாயிரம் குதிரைவீரரோடும் எருசலேமுக்கு விரோதமாய் வந்தான். அவன் ஆலயத்திலும் ரெகொபெயாமின் அரண்மனையிலும் இருந்த பொக்கிஷங்களை எடுத்துக்கொண்டு போனான்.

ரெகொபெயாம் தனது அதிகார பெலத்தால் அரண்மனையைக்கூட காத்துக் கொள்ள முடியாதளவு கையாலாகதவராக இருந்தார். தேவைக்கு மட்டும் கர்த்தரைத் தேடுவது, தேவைகள் பூர்த்தியானதும் உதவியவரை மறக்கும் மட்டமான அரசராக இருந்து மரித்தார் ரெகொபெயாம். எருசலேமில் தேவாலயம் இருக்கும் பொழுதும் விக்கிர ஆராதனையை யூத தேசத்தில் அனுமதித்த பெருமை ரெகொபெயாமையே சாரும்.

யெரொபெயாம்.

பலசாலியும் சிறந்த செயற்பாட்டாளராயுமிருந்த யெரொபெயாமை சாலொமோன் தனது நிர்வாகத்தில் யோசேப்பு வம்சத்தாரை விசாரிக்கும் பணியில் அமர்த்தியிருந்தார். அந்த நாட்களில் அகியா தீர்க்கதரிசி ரெகொபெயாமைக் கண்டு தான் போர்த்துக் கொண்டிருந்த புதுச் சால்வையைப் பிடித்து பன்னிரண்டு துண்டுகளாக கிழித்து அதில் பத்து துண்டுகளை அவனிடம் கொடுத்தார். கர்த்தர் பத்துக் கேத்திரங்களை கொடுப்பார் என்று சொன்னதோடு, தாவீது செய்தது போல என் கட்டளைகளையும் என் கற்பனைகளையும் கைக்கொள்ளும்படிக்கு என் பார்வைக்குச் செம்மையானதைச் செய்கிறதுண்டானால், நான் உன்னோடிருந்து, நான் தாவீதுக்குக் கட்டினதுபோல உனக்கும் நிலையான வீட்டைக் கட்டி இஸ்ரவேலை உனக்குத் தருவேன் என்று சொன்னார்.

தேவனால் அழைப்பையும் ஆலோசனையையும் பெற்ற யெரொபயாம் ஆட்சிக்கு வந்ததும், எருசலேம் தேவாலயத்துக்கு மக்கள் போவதை தடுப்பதற்காக தாணிலும் பெத்தேலிலும் கன்றுக் குட்டியையும், பலிபீடத்தையும் உண்டுபண்ணி தூபங்காட்டினார். லேவியர் அல்லாதவர்களை ஆசாரியராக அமர்த்தினார். தேவனுடைய நித்திய பிரமாணங்களை மீறினான்.

கர்த்தர் அழைத்து ஆலோசனை தந்து ராஜாவாக்கிய போதும். யெரொபெயாமால் தனது சுய அறிவை வைத்து அரசாளலாம் என்று நம்பினான். பிறப்பாலேயே பலசாலியும் சிறந்த செயற்பாட்டாளனாயிருந்ததால் அவனுக்குள் தற்பெருமை குடிகொண்டிருந்தது அதுவே துணிகரமாக விக்கிராதனை செய்ய வழிவகுத்தது.

கர்த்தர் தீர்க்கதரிசியை அனுப்பி, அவர் பலிபீடத்துக்கு முன் நின்று யோசியா ராஜாவால் இப்பலி பீடத்தில் மனுசர்களை பலியிடுவான் என்றுரைத்து, அதற்கு அடையாளமாக பலிபீடம் வெடித்து சாம்பலாகும் என்று சென்னார். அவர் சொன்னபடியே உண்டாயிற்று. ரெகொபெயாம் கோபப்பட்டு கையை நீட்டி அவனைப் பிடியுங்கள் என்று சொன்னான். நீட்டிய கை மரத்துப் போனதால், தனது கை பழைய நிலைக்கு கொண்டுவர ஜெபிக்கும்படி கேட்டுக்கொண்டான். தீர்க்கதரிசியும் ஜெபித்து குணமாக்கினார். அதே தீர்க்கதரிசியிடம் நான் பலிபீடம் விக்கிரகங்களை அகற்றுகிறேன் என்று சொல்லவில்லை. மனந்திரும்புவதற்கு போதிய காலமும் வாய்புகளும் கிடைக்கும் போது அவற்றை அசட்டை செய்தான்.

யெரொபெயாமின் மகன் அபியா வியாதிப்பட்ட போது, தனது மனைவியை வேஷம் போட்டு தீர்க்கதரியாகிய அகியாவை போய் பார்த்துவிட்டு வரும்படி அனுப்புகிறார்.

அவளைக்கண்டதும் அகியா யெரொபெயாமின் மனைவியே வா என்றழைத்து பிள்ளை மரித்துப் போவான் அவன் ஒருவனே கல்லறையில் அடக்கம்பண்ணப்படுவான் என்று சொன்னதோடு, தாவீது இருந்தது போல் யெரொபெயாம் இருக்கவில்லை. முன்பிருந்த எல்லோரைக்காட்டிலும் பொல்லாப்பானதை செய்தான். ஆகவே அவன் சந்ததியில் பட்டணத்திலே சாகிறவர்களை நாய் திண்ணும் வெளியே சாகிறவர்களை பறவைகள் உண்ணும் என்றுரைத்தார். 

இவ்வளவு பெரிய சாபம் இழப்பு நேரிடப் போகுது என்றறிந்ததோடாவது யெரொபெயாம் மனந்திரும்பியிருக்கலாம். மனைவியை வேஷம் போட்டு அனுப்பியதற்கு பதில் இவரே போய் தீர்கதசியிடம் பாவ வாழ்க்கையில் இருந்து விடுபடுகிறேன் என்று சொல்லியிருக்கலாம். அவரது இருதய கடினம் கர்த்தரை வணங்க பின்பற்ற முயற்சிக்கவேயில்லை விளைவு அவருடைய சந்ததிக்கும் சாபம் கடத்திவிடப்பட்டது. பெரிய பத்துக் கோத்திரங்களை ஆண்ட யெரொபெயாமின் சந்ததியில் மரிப்பவர்களை அடக்கம் பண்ண ஒருமனிதன் கூட முன்வரத நிலையில். அநாதைப் பிணங்களாக நாய்க்கும் பறவைக்கும் இரையாகிப் போனார்கள்.

பிரியமானவர்களே!

மூன்று ராஜாக்களையே சுருக்கமாக பார்தோம். இதுபோலவே அனேகமான ராஜாக்கள் இருதய மேட்டிமையால் அதிகார வெறியால் தேவனுக்கு கீழ்படிந்து வாழமல் அவரின் உறவை, பிரசன்னத்தை, பரலோக ராஜ்ஜியத்தின் வாழ்வை தேடாது நாடாது வாழ்ந்ததை வேதத்தில் படிக்கிறோம். தேவனுக்கு பிரியமான ராஜாவாக தாவீது இருந்தார்.

இங்கே தாவீதை தேவன் முன்னுதாரணமாக அடிக்கடி காண்பிப்பதை வாசிக்கிறோம்.

அதற்கான காரணமென்ன?

1. தாவீது தான் புழுதியில் இருந்து தூக்கியெடுக்கப்பட்டதை கடைசிவரை   

   à®®à®±à®•à¯à®•à®µà®¿à®²à¯à®²à¯ˆ.

2. தனது எதிரியாக சவுல் இருந்த பொழுதும், அவனை கொலை செய்ய 

   à®µà®¿à®°à¯à®®à¯à®ªà®µà®¿à®²à¯à®²à¯ˆ. கர்த்தர் நீதி நிலைநாட்டுவார் என்ற விசுவாசமிருந்தது.

3. அரண்மனையில் இருந்து கொண்டு தேவனுடைய பெட்டி திரைச் சீலையின்

   à®®à®±à¯ˆà®µà®¿à®²à¯ இருக்கிறது, அவருக்கு ஆலயம் கட்ட வேண்டும் என வாஞ்சித்தார்.

4. ராஜாவாக இருந்த போதும் தேவனை துதித்து பாடி ஆடி தேவ உறவில் 

    நிலைத்திருந்தார்.

5. தப்பு பண்ணியதை கர்த்தர் சொன்ன வேளை அவர் மனந்திரும்பி மன்னிப்பு 

   à®•à¯‡à®Ÿà¯à®Ÿà®¾à®°à¯.

6. அவருடைய வாழ்வின் அனைத்துக் காரியத்தையும் கர்த்தரே செய்தார் என்ற 

   à®¨à®®à¯à®ªà®¿à®•à¯à®•à¯ˆ உடையவர்களாயிருந்தார். 

மேற் சொல்லப்பட்ட நற்குணங்கள் எவையும் சாலொமோனுக்கோ, ரெகோபெயாமுக்கோ, யெரொபெயாமுக்கோ இருக்கவில்லை. 

தாவீது அனுபவித்த பாடுகள் துன்பங்கள் நிந்தைகள் போன்றனவற்றையும் இந்த ராஜாக்கள் அனுபவிக்கவில்லை.

தாவீதுக்கோ அதிகாரம் தந்த கர்த்தரரே தேவனாயிருந்தார். எனையவர்களுக்கு அந்த அதிகாரமே தேவனாய் மாறியது. தங்களுடைய இருப்பை நிலைநாட்டுவதிலேயே குறியாக இருந்தார்கள். தாவீதோ கர்த்தரை நிலைநாட்டுவதை குறியாக இருந்தார்.

ஒரு எஜமான் தனது கம்பனிக்கு ஒரு மனேஜரை அமர்த்தி, இந்த கம்பனியை சிறந்த முறையில் நிர்வாகம் பண்ணும்படிக்கு அதிகாரம் கொடுத்து, அவருக்கு தேவையான சம்பளைத்தையும், வசதியான வீட்டை, போக்குவரத்துக்கு தேவையான காரையும், உதவிக்கு வேலைக்காரரையும் கொடுத்தால். அந்த கம்பனியின் வளர்ச்சிக்கு எஜமானின் விருப்புக்கு வேண்டுகோளுக்கு ஏற்பவே உண்மையாக பணிசெய்ய வேண்டும். மாறாக கிடைக்கப்பெற்ற வசதிகளை அனுபவித்துக் கொண்டு அதிகார துஷ்பிரயோகம் செய்தால் எந்த எஜமான் தான் பணியில் வைத்திருப்பார்?

தேவ பிள்ளைகளே கர்த்தரால் தரப்படும் எந்த பொறுப்பாக இருந்தாலும் அவற்றை மனத்தாழ்மையோடு அதிகார வெறியற்று நிதானமாக செயற்படவேண்டும்.

எனக்கு பின் என்பிள்ளை உறவினர் அந்த அதிகாரத்துக்கு வரவேண்டும் என்ற உள்நேக்கம் இருக்க கூடாது.

சகோதர அன்போடு எல்லோரையும் அரவணைத்து பயணிக்க வேண்டும். 

அனைத்துக் காரியங்களிலும் தேவனே மகிமைப்பட வேண்டும்.

எங்களின் அடுத்த தலைமுறைப் பிள்ளைகள் சாலொமோன் ரெகொபெயாம் யெரொபெயாம் போன்று வராமலிருப்பதற்கு எச்சரிக்கையாக இருப்போம்.

உலகம் பாதி ஆவி பாதி என்ற வாழ்க்கை வாழ்வோமாயின், இறுதியில் உலகமே எங்களை மேற்கொள்ளும்.

தேவனுடைய கட்டளைகளையும் அவருடைய கற்பனைகளையும் கைக்கொண்டு அவர் பார்வைக்குச் செம்மையானதைச் செய்து, அவர் நம்மோடிருந்து, அவர் தாவீதுக்குக் கட்டினதுபோல நமக்கும் நிலையான வீட்டைக் கட்டுவாராக. ஆமென்

த.பிரபா

   
   
 
எங்களை தொடர்புகொள்ள
T.Pirabagaran
89 Laurel crescent
Romford
Essex
Rm7 0ru
England
  TP:-
Email:- info@thehandofjesus.com
சமூக வலைத்தளங்களில் எங்களுடன் தொடர்பு கொள்ள

        
உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது. சங்கீதம் 119:105
Copyright © 2015 The hand of jesus.com All Rights Reserved