ஆங்கிலம் | தமிழ் | சிங்களம்

 
 
  முகப்பு பக்கம்
  எங்களை பற்றி
  எங்கள் சேவைகள்
  தற்போதைய தேவைகள்
    ஜீவ வார்த்தைகள்
  கட்டுரைகள்
  வேதாகம வரைபடங்கள்
  ஜெப வேண்டுகோள்
  ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம்
  சிறுவர்கள் வேதாகம ஒளிநாடா
  கருத்துக்கள்
  ஒளிப்பதிவுகள்
  எங்களை தொடர்புகொள்ள

 தினசரி தியானம்
  ஆரம்ப நிலை
  இடை நிலை
    மேல்நிலை
  வேதாகம விளக்கம்

  ஜீவ வார்த்தைகள்

 பயனுள்ள இணைப்புகள்
  இணைய தளங்கள்
  www.tamilchristian.com
  www.tamilchristianworship.org
  வானொலி
  www.tamilchurchvos.org
  www.tamilchristianprayer.org
    தொலைக்காட்சி
  www.tamilchristianonline.net
    வேதாகமம்
  இணைய வேதாகமம்
    இணைய வேதாகமம் 2
    ஒலி வேதாகமம்
   


   

கர்த்தருக்கு நேராக என் கையை உயர்த்துகிறேன்.


விசுவாசத்தின் தந்தை, கோத்திரத்தலைவனாகிய ஆபிரகாமை தியாகத்தின் சிகரம் என்று கூட அழைக்கலாம். வேதத்தில் அவர் அறிமுகமாகும் ஆரம்ப பகுதியிலேயே, கர்த்தர் ஆபிரகாமிடம் தேசத்தை, இனத்தை, தகப்பன் வீட்டைவிட்டு விட்டு புறப்பட்டு தான் காண்பிக்கும் தேசத்துக்கு போகும்படி கேட்டுக்கொண்டார். ஆபிரகாம் கர்த்தர் சொன்னபடி புறப்பட்டார். எங்கு, ஏன், எதற்கு போகிறோம் என்று மறு கேள்வி கேட்கவில்லை. இன்றைய நாட்களில் இருக்கும் போக்குவரத்து வசதியோ தொழில் நுட்ப மின்னியல் உபகரண பாவனையோ அற்ற காலமது. அடிப்படை தேவைகளான நீர், உணவு, மருத்துவத்தை கூட உடனடியாக பெற்றுக்கொள்ள முடியாத சூழலது. சிலை செய்து விற்று வியாபாரம் செய்யும் வசதியான குடும்பத்தில் பிறந்து கல்வீட்டில் வளர்ந்தவர் ஆபிரகாம். இப்பொழுது தேவகட்டளைக்கு கீழ்படிந்து பரதேசியாக பயணப்பட்டு கூடாரவாசியாக மாறிவிடுகிறார். பிறந்து வளர்ந்த தேசத்தை விட்டு புறப்படுதல் என்பதானது சுலபமான காரியமல்ல. கர்த்தரை நம்பி அவர் விருப்பத்தை நிறைவேற்ற கடினமான தீர்மானத்தை எடுத்தார் ஆபிரகாம்.

தேசத்தை, வீட்டை விட்டு புறப்பட்ட நாளில் இருந்து அநேக பாடுகள் துன்பங்கள் போராட்டங்கள் அசௌகரியங்களைச் சந்தித்தார் ஆபிரகாம். சூழ்நிலைகளை கண்டு கலங்காத ஆபிரகாம் கர்த்தர் தன்னை காப்பார், வழிநடத்துவார், வாழவைப்பார் என்ற விசுவாசத்தில் உறுதியாக இருந்தார். 

ஒருதடவை லோத்துவின் மேய்ப்பருக்கும் ஆபிரகாமின் மேய்ப்பருக்குமிடையில் வாக்குவாதம் உண்டான போது, ஆபிரகாமே முன்வந்து தன்னுரிமைகளை விட்டுக்கொடுத்து, லோத்து வாழுவதற்கான இடத்தை முன் தெரிவு செய்யும்படி கேட்டுக்கொண்டார். 

அடுத்து ஒரே மகன் ஈசாக்கை பலியிடும்படி கர்த்தர் கேட்ட பொழுது, அதை மனப்பூர்வமாக செய்வதற்கு முனைப்பாக செயலாற்றினார். 

அவருடைய உச்சக்கட்ட தியாகத்து அது ஒரு எடுத்துக்காட்டாகிறது. கர்த்தருக்காக எதையும் இழக்க கூடிய மனநிலையில் வாழ்ந்த ஆபிரகாம் பிறருக்கு உதவுவதிலும் முன்மாதிரியாய் இருந்தார். அதையே இக்கட்டுரையில் சுருக்கமாக தியானிக்கப்போகிறோம். 

ஆதியாகமம் 14ம் அதிகாரத்தில் முதல் முறையாக எருசலேமைக் குறித்து சொல்லப்பட்டுள்ளது. முதல் முறையாக தசமபாகம் பற்றிச் சொல்லப்பட்டுள்ளது. முதல் முறையாக தேவனுடைய ஆசாரியராக மெல்கிசேதேக்கை அறிமுகப்படுத்துகிறது. முதல் முறையாக எபிரெயன் என்ற இன அடையள பெயர் சொல்லப்பட்டுள்ளது. இப்படி அநேக விஷேசித்த காரியங்களை உள்ளடக்கியது இந்த அதிகாரம். 

அதே அதிகாரத்தில் நான்கு ராஜாக்கள் படையெடுத்துவந்து ஐந்து ராஜாக்களோடு யுத்தம் செய்தார்கள். ஐந்து ராஜாக்களும் யுத்தத்தில் தோல்வியடைந்து ஓடி ஒழித்தார்கள். படையெடுத்துவந்த நான்கு ராஜாக்களும் சோதோம் கொமோரா ஆகிய இரண்டு தேசத்தையும் ஆக்கிரமித்து அங்கிருந்த பொருட்களை சூறையாடி, அம்மக்களை கைதியாக பிடித்துக் கொண்டு போனதையும் வாசிக்கிறோம்.

சோதோமில் வாழ்ந்து கொண்டிருந்த லோத்துவையும் அவன் உடமைகளையும் யுத்தத்தில் வென்ற ராஜாக்கள் கைதியாக பிடித்துக் கொண்டு போய்விட்டார்கள். தன்னுடைய சகோதரன் சிறைப்பிடித்து கொண்டு போகப்பட்ட செய்தியறிந்த ஆபிரகாம் அவனை மீட்பதற்காக தன்னுடைய வீட்டிலிருந்த யுத்தம் செய்யக்கூடிய வாலிபர்கள் 318 பேரை தெரிவு செய்து ஆயுதம் தரிப்பித்து தாக்குதலுக்கான திட்டத்தை தீட்டி அவர்களை மீட்கப் புறப்பட்டார்கள். (ஆதி14:14)

இரவு வேளை உசாரற்று இருந்த ஆக்கிரமிப்பு படைகளை ஆபிரகாமின் வீரர்கள் பகுதி பகுதியாக பிரிந்து சென்று மூர்க்கமாக தாக்குதல் நடத்தினார்கள். இதை சமாளிக்க முடியாத ராஜாக்களும் வீரர்களும் புறமுதுகு காட்டி ஓடினார்கள். அவர்களை ஓபாமட்டும் துரத்திச் சென்று விட்டு, மக்களையும் பொருட்களையும் மீட்டுவந்தார்கள்.

லோத்து இனி மீட்பே இல்லை எல்லாம் முடிந்து போனது, இனி அடிமைகளாக வாழ வேண்டியது தான், ஆபிரகாமோடு இருந்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது, அவரை பிரிந்து வளமான தேசத்தை பார்த்து வந்தது தவறு, இனி யார் உதவப் போகிறார்கள் என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்த வேளை தான் ஆபிரகாமால் லோத்து மீட்கப்பட்டார்.

ஆபிரகாமுக்கோ லோத்து மீது எந்த மனக்கசப்பிமில்லை. அவர் ஊர் தேசத்தைவிட்டு பிரிந்து வந்தபோது, கூட வந்த வாலிப பையன் லோத்துவை எப்படி நேசித்தாரோ அதே போலவே இப்பொழுதும் நேசிக்கிறார். பெருளாசையால் செழிப்பான தேசத்தை தெரிந்து கொண்டு லோத்து போனதைக் குறித்து ஆபிரகாமிடம் எந்த மனவருத்தமும் இல்லை. 

தனது சகோதரன் ஒரு ஆபத்தான சூழ்நிலையில் இருக்கிறான் என்ற செய்தியறிந்ததும். தாமதமின்றி உடனடியாக அந்த இக்கட்டிலிருந்து மீட்பதற்காக புறப்பட்டார் ஆபிரகாம். 

1) நான்கு ராஜாக்களால் தங்கள் உயிருக்கு ஆபத்து வரக்கூடும் என்று தயங்கவில்லை.

2) இவர்களை காப்பாற்றுவதால் தனக்கு என்ன ஆதாயம் கிடைக்கப் போகிறது என்று 

   à®•à®£à®•à¯à®•à¯à®ªà®£à¯à®£à®µà¯à®®à®¿à®²à¯à®²à¯ˆ.

இப்படிப்பட்ட உயரிய அன்பை கொண்டிருந்த ஆபிரகாமின் பண்பை கவனித்துக் கொண்டிருந்த கர்த்தரால் பொறுத்துக் கொண்டிருக்கமுடியவில்லை. 

மெல்கிசேதேக்கு எனும் ராஜா மூலம் ஆபிரகாமை கனப்படுத்த திட்டமிட்டு, அவரை அனுப்பி வைக்கிறார். ராஜாவாகிய மெல்கிசேதேக்கு அப்பமும் திராட்சரசமும் கொண்டுவந்து, அவனை ஆசீர்வதித்து: வானத்தையும் பூமியையும் உடையவராகிய உன்னதமான தேவனுடைய ஆசீர்வாதம் ஆபிராமுக்கு உண்டாவதாக என ஆசீர்வதித்தார். எருசலேமிலிருந்து தன்னை வந்து ஆசீர்வதித்த ராஜாவுக்கு ஆபிரகாம் மீட்டுவந்த உடமைகளிலிருந்து பத்தில் ஒரு பகுதியை (தசமபாகம்) தன்னுடைய விருப்பத்தின்படி கொடுத்தார். 

இன்றைய பிரசங்கிமார் பணத்தை கொடு அதன்பின் ஆசீர்வாதம் பெறுவாய் என பிரசங்கிப்பதை கேட்கிறோம். இங்கு மாறி நடக்கிறது. ஆபிரகாம் ஆசீர்வாதம் பெற்ற பின்னர் காணிக்கை கொடுப்பதை அவதானிக்கிறோம். ஆபிரகாம் தனது வாழ்க்கை முழுவதையும் கர்த்தருக்கேன அர்ப்பணித்துவிட்டார். பரமதேசத்தில் வாழ்வதே அவரின் குறிக்கோளாய் இருந்தது. அவர் பொருளாசைகொண்டு பூமிக்குரியனவற்றை இச்சித்து வாழ்ந்தவரல்ல. இதயங்களை ஆராய்ந்து பார்க்கும் கர்த்தருக்கு ஆபிரகாமின் மனநிலையையும் அறிந்தே வைத்திருந்தார். 

அநேக தேவப்பிள்ளைகள் ஊழியக்காறார் மனித கனத்தை முன்னிலைப்படுத்தி செயலாற்றுவதை இன்று காணக்கூடியதாய் இருக்கிறது. தேவனால் கனப்படுத்தப்படுவதே சிறந்தது. பெருந்தன்மை அர்ப்பணிப்பு தியாகமாய் செயலாற்றும் போதே தேவானால் உற்சாகப்படுத்தி கனப்படுத்தப்படுவோம்.

மெல்கிசேதேக்கு ராஜா திரும்பி சென்ற பின். சோதோமின் ராஜா ஆபிராமை நோக்கி: ஜனங்களை எனக்குத் தாரும், பொருள்களை நீர் எடுத்துக்கொள்ளும் என்றான்.

அதற்கு, ஆபிராம் சோதோமின் ராஜாவைப் பார்த்து: ஆபிராமை ஐசுவரியவானாக்கினேன் என்று நீர் சொல்லாதபடிக்கு நான் ஒரு சரட்டையாகிலும் பாதரட்சையின் வாரையாகிலும், உமக்கு உண்டானவைகளில் யாதொன்றையாகிலும் எடுத்துக்கொள்ளேன் என்று, வானத்தையும் பூமியையும் உடையவராகிய உன்னதமான தேவனாகிய கர்த்தருக்கு நேராக என் கையை உயர்த்துகிறேனென்று சொன்னார்.

உயிரையே பணயம் வைத்து மீட்டுவந்த ஆபிரகாமிடம் சோதோமின் ராஜா பேரம் பேசுகிறார். பொருட்களை எடுத்துக்கொள்ளும் வீரர்களை எனக்கு தாரும் என. (நியாயமாய்ப் பார்த்தால் பொருட்களேல்லாம் மீட்டுவந்த ஆபிரகாமுக்கே சொந்தம்) அதற்கு ஆபிரகாம் உடன்படாமல், உன்னுடைய சிறு துரும்புகூட தேவையில்லை. என்னுடைய தேவைகளை வானத்தையும் பூமியையும் உண்டாக்கிய தேவனை நோக்கி கையை உயர்த்துவேன் அவர் என்னை போஷிப்பார் என பதிலளித்தார்.

இந்த சம்பாஷனையில் இருந்து முதலாவது தெரியவருவது. ஆபிரகாம் மீட்டுவந்த பொருட்கள் எதையும் எடுத்துக் கொள்ளவில்லை. அவர் அவர் பொருட்களை அவர்களிடம் கொடுத்துவிட்டார். எந்த விதமான எதிர்பார்ப்பில்லாமலே அவர்களுக்கு உதவி செய்தார்.

வானத்தையும் பூமியையும் உண்டாக்கியவர் அதன் உரிமையாளர் கர்த்தரே என்ற விசுவாசம் ஆபிரகாமுக்குள் இருந்தது. வானமும் பூமியும் அதன் முழுமையானதும் படைப்பாளருக்கு (கர்த்தருக்கு) சொந்தமானது. அப்படியிருக்கும் பொழுது சோதோமின் ராஜாவின் பொருட்கள் பெறுமதியானதாக தெரியவில்லை ஆபிரகாமுக்கு. தன்னை அழைத்து ஆசீர்வதித்த தேவன் ஜீவனோடு இருக்கும் பொழுது அன்னியரிடம் கடமைப்படக்கூடாது என்ற வைராக்கியம் கொண்டவராயுமிருந்தார்.

தனது பிள்ளைகள் போல் வளர்த்த இளைஞர்களை அழிந்து போகும் பொருளுக்கு நிகராக பண்டமாற்று செய்ய ஆபிரகாம் விரும்பவுமில்லை.

தேவை ஏற்பட்டால் கர்த்தருக்கு நேராக கைகளை உயர்த்துவேன் என்பதன் பெருளானது.

1) சுய பெலன் சார்ந்து நிற்காமையை வெளிப்படுத்துகிறது.

2) செய்த நன்றிகளைச் சொல்லி துதிப்பதாகும்.

3) பரிசுத்தமான வாழ்க்கை வாழ்வதை எடுத்துக்காட்டுவதாகும்.

என்னால் இயலாது கர்த்தர் தந்த பெலத்திலேயே ஜீவிக்கிறேன், எனக்கிருக்கும் அறிவு, பணம், அதிகாரம், அந்தஸ்து எல்லாம் கர்த்தராலேயே உண்டானது, இவை நொடிப்பொழுதில் அழிந்து போகும் என்ற உணர்வுள்ளவனே சுய பெலத்தைச் சாராதவனாயிருப்பான். அப்படிப்பட்டவர்களோடே கர்த்தர் இடைப்படுவார். ஆபிரகாமும் இப்படிப்பட்ட மனநிலையோடே ஜீவித்தார்.

கர்த்தர் செய்த நன்மைகளை சொல்லி துதிக்கிம் பொழுது. வார்த்தையால் மட்டும் 

நன்றி எனச் சொல்லாமல். கரங்களை உயர்த்தி உங்களால் தான் நடந்தது, நீங்க தான் செய்தீங்கள் என்பதை அறிக்கை பண்ணி சாரீர அவையத்தின் அசைவாலும் நன்றியை வெளிப்படுத்துவதாகும். 

1 தீமோத்தேயு 2:8 ல் அன்றியும், புருஷர்கள் கோபமும் தர்க்கமுமில்லாமல் பரிசுத்தமான கைகளை உயர்த்தி, எல்லா இடங்களிலேயும் ஜெபம்பண்ணவேண்டுமென்று விரும்புகிறேன் என்று வேதத்தில் வாசிக்கிறோம். ஆபிரகாம் வாழ்ந்து, கிட்டதட்ட 2200 ஆண்டுகளுக்கு பின்பே பவுல் இதை தீமோத்தேயுவுக்கு எழுதுவதை காணலாம். ஆபிரகாமும் சகோதரர்களுடன் கோபம் மனக்கசப்பில்லாமல் வாழ்ந்ததை மேலே படித்தோம். சகோதர அன்பு கொண்ட ஆபிரகாமின் கரமானது பரிதானம் வாங்காத சுத்தமான (பரிசுத்த) கரமுமாகும். அவரின் மனைவியின் கல்லறைக்குரிய நிலத்துக்கு பணம் செலுத்தி வாங்கியதை வாசிக்கிறோம். (ஆதி 23:16)

பிரியமானவர்களே!

உலகத்தை சினேகித்து சென்ற லோத்து ஆபத்தில் இருக்கும் பொழுது சுய ஆதயம் எதையும் எதிர்பார்காமல் அவனுக்கு உதவி செய்த ஆபிரகாமின் முன்மாதியை பின்பற்றுவோமாக. ஒருவேளை ஆபிரகாம் இடத்தில் நாமிருந்திருந்தால் பரிகாசம் பண்ணியிருப்போம். செழிப்பான தேசம் வேண்டும் என்று போன சுயநலவாதிக்கு (லோத்து) இது தேவைதான். கர்த்தர் தண்டித்துவிட்டார் என்று சொல்லி, எங்களை இக்கட்டில் இருந்து காப்பாற்றிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என ஜெபித்துமுடித்து ஒதுங்கி வாழ்ந்திருப்போம். ஆபிரகாமின் வாழ்கையை வாசிப்பதோடு நின்றுவிடாமல். இனிவருங்காலங்களில் கற்றுக்கொண்டனவற்றை அப்பியாசப்படுத்துவோமாக. 

இன்நாட்களில் சக உறவுகளிடம் சிறிய உதவி கேட்டால் கூட அதை செய்ய விரும்பமாட்டார்கள். ஒருவேளை உதவி செய்ய முன்வந்தால் கூட அது பிறிதொன்றை பெறுவதற்கான முதலீடாகவே இருக்கும். சாதாரணமான ஒரு பொருளைக் கூட ஒரு நாள் பாவித்துவிட்டு மறுநாள் தருகிறேன் என்று கேட்டால் கூட அப்பொருளைக் கொடுப்பதற்கு மனமற்ற மனிதர்கள் மத்தியில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். 

இப்படி தன்னலவாதிகளாய் வாழும் சமூகத்தில் தன்னலமற்ற அன்பு செலுத்தும் ஆபிரகாங்களாய், இயேசுக்கிறிஸ்துவின் பிள்ளைகளாய் வாழுவோமாக. 

மனிதர்களை, சுயபெலத்தை நம்பாமல் வானத்தையும் பூமியையும் உடையவராகிய உன்னதமான தேவனாகிய கர்த்தருக்கு நேராக எங்கள் கைகளை உயர்த்துவோமாக. 

உதவி பெறும் பிள்ளைகயிராமல் உதவி செய்யும் பிள்ளைகளாய் வாழுவோமாக. ஆமென்.

தேவனிடத்தில் அன்புகூருகிறேனென்று ஒருவன் சொல்லியும், தன் சகோதரனைப் பகைத்தால், அவன் பொய்யன்; தான் கண்ட சகோதரனிடத்தில் அன்புகூராமலிருக்கிறவன், தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்புகூருவான்?

I யோவான் 4:20

நன்றி கர்த்தாவே

த.பிரபா

 

   
   
 
எங்களை தொடர்புகொள்ள
T.Pirabagaran
89 Laurel crescent
Romford
Essex
Rm7 0ru
England
  TP:-
Email:- info@thehandofjesus.com
சமூக வலைத்தளங்களில் எங்களுடன் தொடர்பு கொள்ள

        
உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது. சங்கீதம் 119:105
Copyright © 2015 The hand of jesus.com All Rights Reserved