ஆங்கிலம் | தமிழ் | சிங்களம்

 
 
  முகப்பு பக்கம்
  எங்களை பற்றி
  எங்கள் சேவைகள்
  தற்போதைய தேவைகள்
    ஜீவ வார்த்தைகள்
  கட்டுரைகள்
  வேதாகம வரைபடங்கள்
  ஜெப வேண்டுகோள்
  ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம்
  சிறுவர்கள் வேதாகம ஒளிநாடா
  கருத்துக்கள்
  ஒளிப்பதிவுகள்
  எங்களை தொடர்புகொள்ள

 தினசரி தியானம்
  ஆரம்ப நிலை
  இடை நிலை
    மேல்நிலை
  வேதாகம விளக்கம்

  ஜீவ வார்த்தைகள்

 பயனுள்ள இணைப்புகள்
  இணைய தளங்கள்
  www.tamilchristian.com
  www.tamilchristianworship.org
  வானொலி
  www.tamilchurchvos.org
  www.tamilchristianprayer.org
    தொலைக்காட்சி
  www.tamilchristianonline.net
    வேதாகமம்
  இணைய வேதாகமம்
    இணைய வேதாகமம் 2
    ஒலி வேதாகமம்
   


   

ஜெபிப்பதன் அவசியம்


ஏன் ஆலயத்துக்கு போகிறோம்?

ஆலயத்துக்கு ஏன் போகிறீர்கள் என்று இந்து மதத்தைச் சார்ந்தவரைக் கேட்டால். தேவனைத் தரிசிக்க போவதையே முதன்மையான நோக்கமாகச் சொல்லுவார்கள். ஒரு முஸ்லீமிடம் கேட்டால் தொழுகைக்கு போவதையே முதன்மை நோக்கமாகச் சொல்லுவார். 

கிறிஸ்தவர்களைப் பார்த்துக் கேட்டால். அவர்கள் தேவனை ஆராதிக்கப் போவதாகச் சொல்லுவார்கள். இங்கே ஆராதனை என்று குறிப்பிடப்படுவது, ஞாயிற்றுக் கிழமைகளிம் 2 அல்லது அதற்கு மேற்பட்ட மணித்தியாலத்தினுள் ஜெபம், வேத வாசிப்பு, பாடல், செய்தி போன்ற அனைத்தையும் உள்ளடக்கிய சபைக் கூடுகையையே குறிப்பிடுவார்கள். மேலோட்டமாகப் பார்த்தால் இந்த அனைத்துக் கரியத்தையும் செய்யும் வாஞ்சையில் ஒருத்தர் போவதாக கருதினாலும். உண்மைநிலை என்னவாக உள்ளது? 

சபிக்கப்பட்ட பூமியில் உலகத்தின் அதிபதியின் (பிசாசின்) ஆளுகை இருப்பதாலும், இந்த பூமிப் பந்தில் வாழுகிற ஒவ்வொரு மனுஷனுக்கும் பாடுகள் குறைகள் தேவைகள் இருப்பதை காணலாம். பாடுகளிலிருந்து மீளுவதற்காகவும், குறைகளை நிறைவாக்குவதற்காகவும், தேவைகளைப் பெற்றுக் கொள்வதின் நோக்கத்தின் அடிப்படையிலேயே பெரும்பாலோர் ஆலயம் போகின்றார்கள். தனிப்பட்ட தேவையின் நிமிர்த்தமே ஒவ்வொருவரும் ஆலயம் போக விரும்புகிறார்கள், ஆசைப்படுகிறார்கள். போகிற ஆலயத்தில் ஜெபம், வேதவாசிப்பு, துதித்தல், வசனத்தை பிரசங்கித்தல் போன்றன கடைப்பிடிப்பதல், அவற்றை இவர்களும் கடைப்பிடிக்கிறார்கள். ஐரோப்பாவில் இருக்கும் ஒரு பிரசங்கியார் இவ்வாறு சொன்னார் “சபைக்கு புதிய ஆத்துமாக்கள் இப்பொழுது வருவது குறைந்துவிட்டது ஏனென்றால் இப்பொழுது அகதி அந்தஸ்து கேட்பவர்களின் எண்ணிக்கை குறைவு, விசாவின் தேவையும் குறைந்ததால் தேவனைத் தேடுபவர்களின் எண்ணிக்கையும் குறைந்து விட்டதேன”. அவர் சொன்ன உண்மைக்குள் புதைந்திருப்பது. ஒரு தனிமனிதனின் தேவையே ஆலயம் போவதை நிர்ணயிக்கிறது. 

சபையின் நிர்வாக ஒழுங்கின்படி பாத்தால் துதித்தலுக்கும், தேவ செய்திக்குமே அதிக நேரம் எடுத்துக் கொள்ளுவார்கள். ஆண்டவரை புகழ்ந்து நன்றி சொல்லி பாடல்கள் பாடும் பொழுது கட்டுக்கள் அறுக்கப்படுவதும், சரீர, ஆத்துமாவுக்கு விடுதலை கிடைப்பதோடு தேவனையும் பிரியப்படுத்துகிறோம். தேவ செய்தியின் மூலம் பக்திவிருத்தியடைவதும், சத்தியத்தினுள் வளர்ந்து தேவனை நெருங்குவதும் உண்மையே.  à®‡à®µà¯ˆà®¯à®¿à®°à®£à¯à®Ÿà¯à®®à¯ ஒரு கிறிஸ்தவனுக்கு அத்தியாவாசியமானது. அதே நேரம் ஜெபத்துக்கும் போதியளவு நேரம் ஒதுக்கப்பட வேண்டும். எதிர்பார்ப்புக்கள் தேவைகள் பாரத்தோடு வடும் ஆத்துமாவின் அபிலாசைகளும் பூர்த்தி செய்யப்படவேண்டும். தேவப்பிள்ளைகள் வீடு திரும்பும் பொழுது, இன்று ஆலயத்தில் ஜெபித்து விட்டேம், தேவன் கேட்டார் பதில் கிடைத்துவிட்டது என்ற மகிழ்ச்சியோடு திரும்ப வேண்டும். இந்தக் கட்டுரையின் நோக்கமே சபைக்கு போய் ஜெபிப்பதன் பலனை மேலொட்டமாய் ஆராய்வதே நோக்கம்.

எல்லோருக்கும் ஜெபம் அவசியம்

இப்பொழுது பலர் சொல்லலாம் நாங்கள் தேவையோடு எதிர்பார்ப்போடு ஆரதிக்கப் போகவில்லை, சபை இயங்கு நிலைக்கு உதவிதான் செய்யப் போகிறோம் என. அல்லது கர்த்தருக்கு தொண்டாற்றப் போகிறோம் என்று. உதாரணத்துக்கு ஆராதனை வழிநடத்தும் (worship leader) ஒருவர் சபைக்கு போவதன் முக்கிய நோக்கம் தேவனைக்குறித்த பாடல்களைப்பாடி மக்களை தேவப் பிரசன்னத்துக்குள் வழிநடத்துவதற்க்காகவே போகிறார். ஆராதனைக்கு முன் தன்னை ஆயத்தப்படுத்துவதே முழங்காலில் (ஜெபத்தில்) நின்றுதான். தேவனே பாடல்களைத்தர வேண்டும். பாடல்களை பாட ஆவியில் சரீரத்தில் பெலன் தரவேண்டும். பாடல்கள் மூலம் தேவப்பிரசன்னம் இறங்கி கிரியைகள் நடைபெற வேண்டும். நானல்ல நீங்களே மகிமைப்பட வேண்டும் என மனதுரிகி, வருந்தி ஜெபிக்கவேண்டும். ஆலயத்தில் ஆரம்ப ஜெபத்தில் இவர்களுக்காகவும் ஜெபிக்கப்படும் வழக்கம். 

சபையை வழிநடத்தும் மேய்பன் ஆராதனைக்கு முதல் நாளே ஜெபிக்கத்தொடங்கிவிடுவார். சபைக்கு வரும் தேவப் பிள்ளைகளுக்கு ஆவிக்குரிய பூமிக்குரிய ஆசீர்வாதங்கள் கிடைக்கப்பெறனும், ஆராதனையின் போது பிள்ளைகள் அபிஷேகம் பெற வேண்டும் அன்னிய பாசை பேச வேண்டும், தேவப்பிரசன்னம் சபையில் இருக்க வேண்டும், சத்தியத்தை கேட்கும் போது மனந்திரும்பி தேவனோடு உறவாட வேண்டும், புதிய ஆத்துமாக்கள் வரவேண்டும், சபை வளரவேண்டும் என பலவிண்ணப்பங்களைச் செய்வார்கள். இது மேய்பனின் தேவையாக உள்ளது. 

எசேக்கியா ராஜாவின் ஜெபம்

நெருக்கடி வந்தபோது ஆலயத்துக்கு ஓடிப்போய் ஜெபித்த அந்நெருக்கடியில் இருந்து மீண்ட சம்பவத்தை வேதத்திலிருந்து பார்க்கலாம். 

வேதத்தில் 2 இராஜாக்கள் 18, 19 அதிகாரங்களில் எசேக்கியா ராஜாப்பற்றி வாசிக்கிறோம்.  à®‡à®¨à¯à®¤ எசேக்கியா யூத தேசத்தை ஆளுகை செய்த போது முன்னைய ராஜாக்கள் கட்டிவைத்திருந்த மேடைகள், சிலைகள், விக்கிரகத் தோப்புக்களை உடைத்து தகர்த்து அகற்றிய நல்ல ராஜா. கர்த்தரே ஜீவனுள்ள தேவன் என்ற விசுவாசம் இருந்தபடியாலேயே அவர் அவ்வாறு செய்தார். அத்தோடு அன்னிய ராஜாக்களின் அதிகார மேலாதிக்கத்தை வெறுத்தவராக இருந்தார். ஒரு நாடு இன்னொரு நாட்டைப்பிடித்து தமது ஆதிக்கத்தின் கீழ் வைத்திருக்கும் பேரரசுப் போட்டியிருந்த காலமது. அசீரியா பேரரசாக இருந்த காலத்தில் ராஜாவாகிய சல்மனாசர் சமாரியாவை முற்றுகைக்குள் வைத்திருந்து மூன்று வருடத்தால் அதைப் பிடித்தார். பிடிபட்ட மக்களை தமக்கு சாதகமான பிரதேசங்களில் குடியேற்றினான். இதனால் மக்கள் கர்த்தரை தேடாமல் கட்டளைகளைக் கடைப்பிடிக்காமல் தேவனை விட்டுத் தூரப் போனார்கள்.

அசீரியர் சமாரியாவுக்கு அடுத்து யூத தேசத்தை பிடிப்பதற்காக நகர்ந்து சில பட்டணங்களைப் பிடித்தனர். இந்த நேரத்தில் எசேக்கியேல் ராஜா அசீரிய ராஜாவிடம் ஆளனுப்பி அசீரிய ராஜாவுக்கு தேவையானவற்றை தருகிறேன், அவற்றைப் பெற்றுக்கொண்டு திரும்பிப் போகும்படி கேட்டுக் கொண்டார். அதற்கு அசீரிய ராஜா சம்மதித்து பெற்றுக்கொண்ட பொழுதும், அவர்கள் தொடர்ந்து எருசலேமைப் பிடிப்பதிலேயே குறியாக இருந்தனர். அசீரிய ராஜா தர்தான், ரப்சாரீஸ், ரப்சாக்கே என்ற படைத்தளபதியோடு பெரிய சேனையை எருசலேமைப் பிடிப்பதற்காக அனுப்பினார். இவர்கள் எருசலேமுக்குள் நுழைந்து ராஜாவை வரும்படி அழைத்தார்கள். எசேக்கியா ராஜா தான் போகாமல் தனது பிரதிநிதியாக நான்கு பேரை அனுப்பி வைத்தான். எசேக்கியாவின் பிரதிநிதிகளைக் கண்ட ரப்சாக்கே அவர்களை நோக்கி உங்கள் ராஜா யாரை நம்பியிருக்கிறார்? எகிப்த்திய ராஜாவையா? அவனால் கூட உங்களை காப்பாற்ற முடியாது. ஒருவேளை உங்கள் நம்பிக்கை கர்த்தர் மீதிருக்கா? இவ்வளவு தூரம் படையெடுத்துவர கர்த்தரே காரணம். அவர் இந்த பட்டணத்தை அழித்துப் போடும்படி சொன்னார் என்று பொய் சொன்னதோடு. கர்த்தரை ஏளனமாகவும் தூஷிக்கவும் செய்தான். கர்த்தர் நிச்சயம் தப்புவிப்பார் என்று எசேக்கியா சொல்வது பொய். நாங்கள் ஆமாத், அர்பாத், செப்பர்வாயிம், ஏனா, ஈவாப், சமாரியா போன்ற பட்டணங்களை கைப்பற்றி எங்கள் ஆளுகைக்கு கீழ் வைத்திருக்கிறோம். அந்த ஆறு பட்டணத்தாரின் தேவனும் அவர்களை காப்பாற்றவில்லை. எங்களுடைய தேவனே அவர்களை வெற்றி கொள்ளவைத்தது. அங்கு நடந்தது போலவே இங்கும் (எரிசலேமிலும்) நடக்கப்போகிறது, கர்த்தரால் உங்களைக் காப்பாற்ற முடியாதென ஏழனமாகப் பேசினான். 

எசேக்கியா ராஜாவின் பிரதிநிதிகள் இதைக்கேட்டு துக்கப்பட்டு தங்களுடைய வஸ்திரங்களை கிழித்துக்கொண்டு, எசேக்கியாவிடம் வந்து ரப்சாக்கே சொன்னவற்றை ஒப்புவித்தார்கள். 

இதைக் கேட்ட எசேக்கியா துயரத்தில் தனது ஆடையை கிழித்து இரட்டுடுத்து ஆலயத்துக்குள் பிரவேசித்து, அங்கிருந்த தேவமனுசர், ஆசாரியர், மூப்பர்களை எசாயா தீர்க்கதரிசியிடம், இங்கிருக்கும் நிலமையை எடுத்துச் சொல்லி தமது மீட்புக்காக ஜெபிக்கும்படி கேட்டுக் கொண்டார். எசாயாவிடம் வந்தவர்களிடம் ஏசாயா அவர்கள் திரும்பிப் போவார்கள், அந்த ராஜாவை அவன் தேசத்தைலேயே அழிப்பேன் என்று கர்த்தர் சொல்லுவதாக சொல்லியனுப்பினார். 

ரப்சாக்கே தலமையில் வந்த படைகள் திரும்பி லிப்னாவுக்கு போக, அசீரிய ராஜாவாகிய சனகெரிப் ராஜா மீண்டும் எருசலேமுக்கு வந்து முற்றுகை போட்டு, எசேக்கியாவுக்கு ஒரு கடிதத்தை எழுதியனுப்பினான்.

சனகெரிப்பிடமிருந்து வந்த கடிதத்தை பெற்றுக் கொண்ட எசேக்கியா, அக்கடிதத்தைக் கொண்டு ஆலயத்துக்குள் போய் கடிதத்தை விரித்துவைத்து விட்டு ஜெபிக்கத் தொடங்கினார். கர்த்தரை நோக்கி: கேருபீன்களின் மத்தியில் வாசம்பண்ணுகிற இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, நீர் ஒருவரே பூமியின் ராஜ்யங்களுக்கெல்லாம் தேவனானவர்; நீர் வானத்தையும் பூமியையும் உண்டாக்கினீர். கர்த்தாவே, உமது செவியைச் சாய்த்துக் கேளும்; கர்த்தாவே, நீர் உமது கண்களைத் திறந்துபாரும்; சனகெரிப் ஜீவனுள்ள தேவனை நிந்திக்கும்படிக்குச் சொல்லியனுப்பின வார்த்தைகளைக் கேளும். கர்த்தாவே, அசீரியா ராஜாக்கள் அந்த ஜாதிகளையும் அவர்கள் தேசத்தையும் நாசமாக்கி,

அவர்களுடைய தேவர்களை நெருப்பிலே போட்டுவிட்டது மெய்தான்; அவைகள் தேவர்கள் அல்லவே, மனுஷர் கைவேலையான மரமும் கல்லும்தானே; ஆகையால் அவைகளை நிர்த்தூளியாக்கினார்கள். இப்போதும் எங்கள் தேவனாகிய கர்த்தாவே, நீர் ஒருவரே தேவனாகிய கர்த்தர் என்று பூமியின் ராஜ்யங்கள் எல்லாம் அறியும்படிக்கு, எங்களை அவன் கைக்கு நீங்கலாக்கி இரட்சியும் என்று விண்ணப்பம்பண்ணினார். 

எசேக்கியாவின் ஜெபத்தை மீண்டும் மீண்டும் படித்துப் பார்த்தால் அவர் கர்த்தர் மீது வைத்த விசுவாசம் தெரியும். சனகெரிப்பிடமிருந்து வந்த ஆபத்தை எதிர்கொள்ள எசேக்கியா எடுத்த முதல் தீர்மானமே ஆலயம் போகவேண்டும் என்பதே. எருசலேம் தேவாலயத்தில் உடன்படிக்கைப் பெட்டியிருந்தது. அந்த உடன்படிக்கை பெட்டியின் மேல் இருந்த கேரூபீன்களின் மத்தியிலேயே தேவனுடைய பிரசன்னம் இருந்தது. ஆதலால் ஆலயம் போய் ஜெபிப்பதே அன்று வழக்கமாயிருந்தது. 

இரண்டாவது ஆலயத்துக்குள் போன உடனே கடிதத்தை விரித்து வைத்தார். கர்த்தர் ஜீவனுள்ளவர் அவருக்கு பார்ப்பதற்கு கண்ணிருக்கு கேட்பதற்கு செவி இருக்கு என்ற நம்பிக்கையிலேயே அவ்வாறு செய்தார். ஜெபத்திலும் வார்தையை கேளும், கண்களைத் திறந்து பாரும் என்று வருகிறது. 

மூன்றாவது பூமியில் உள்ள ஜனங்கள் எல்லாரும் கர்த்தர் ஜீவனுள்ள தேவன் என்று அறிந்து இரட்சிப்படைய எங்களை மீட்டுக்கொள்ளும் என்ற பிறர் மீது கொண்ட அன்பின் பெருக்கை பார்க்கிறோம். 

நான்காவது வேதத்தில் ஆலயத்திலிருந்த அனைவரும் ஜெபித்ததாக சொல்லப்படவில்லை. ஆனால் நான் (இக்கட்டுரையை எழுதுகிற) விசுவாசிக்கிறேன் ஆலயத்தில் நின்றிருந்த ஆசாரியன் மூப்பர் ஜனங்கள் ராஜாவின் சேவகர்கள் என பலர் கூடி எசேக்கியாவோடு ஜெபித்திருப்பார்கள்.  

ஐந்தாவது எசேக்கியா சுத்த இருதயமுள்ள மனிதனாக இருந்தார். இப்படிப்பட்ட காரணத்தினால் அந்த ஜெபம் கர்த்தரால் கேட்கப்பட்டது. 

அன்று இராத்திரி கர்த்தருடைய தூதன் புறப்பட்டு, அசீரியரின் பாளயத்தில் லட்சத்தெண்பத்தையாயிரம்பேரைச் சங்கரித்தான், அதிகாலமே எழுந்திருக்கும் போது, இதோ, அவர்கள் எல்லாரும் செத்த பிரேதங்களாய்க் கிடந்தார்கள். 

2 இராஜாக்கள் 19:35. ஒரு தூதன் ஓரே இரவில் இவ்வளவு பெரிய தொகை படையை கொன்றதால். அதிர்சியுற்ற சனகெரிப் நினிவேக்கு திரும்பி போனான். அங்கே அவன் தனது தேவனைத் தொழுது கொள்ள கோவிலுக்கு போனான். கோவிலில் வைத்து சனகெரிப்பை அவருடைய பிள்ளைகளே கொலை செய்தார்கள். ஜீவனுள்ள தேவனை நிந்தித்த சனகெரிப்பிடம் பல கேள்வி கேட்கவுண்டு அதில் முதலாவது. ஆறு பட்டணத்தைப் பிடித்தேன் என் தேவன் உதவினார் என்று சொன்னவனே. ஆறு பட்டணத்தில் ஏற்படாத இழப்பு இந்த யூத மண்ணில் ஏற்பட்டதே அது யாரால்? கோவிலிலேயே நீ கொலைசெய்யப்படும் போது உன்னுடைய தேவன் ஏன் உன்னைக் காப்பாற்றவில்லை? 

யுத்தமின்றி, இரத்தம் சிந்தாமல், திட்டம் தீட்டாமல் எசேக்கியா ராஜாவும் யூத தேசத்து மக்களை அன்று தேவன் காப்பாற்றினார். எசேக்கியா ராஜாவின் ஜெபத்துக்கு பதில் கொடுத்த தேவன் நமது ஜெபத்துக்கும் பதில் கொடுப்பாராக. எசேக்கியா எடுத்த தீர்மானங்களைப் போல் நாங்களும் எடுப்பது சிறந்தது. 

புதிய உடன் படிக்கையின் பிள்ளைகள் ஒவ்வொருத்தரும் ஆலயமாக இருக்கிறோம். தேவன் ஒவ்வொருவருடைய ஆவியிலும் வாசம் பண்ணுகிறார். ஆலயக்கட்டிடத்தில் அவர் வாசம் செய்வதில்லை. எருசலேம் தேவாலயமே இரண்டு தடவை அழிக்கப்பட்டது. 

யூதர்களுக்கு பட்டணங்கள் தோறும் ஜெப ஆலயங்கள் இருந்தன. இயேசுக்கிறிஸ்துவும் அங்கே பிரசங்கித்தார். கர்த்தர் தனி ஒருமனிதனின் ஜெபத்தை எந்த சூழ்நிலையிலும் கேட்பார். அதே போல் குழுவாக நின்று ஜெபித்தாலும் எந்தச் சூழ்நிலையிலும் கர்த்தர் கேட்பார். அதே வேளை மத்தேயு 18:20 ல் சொல்லப்பட்டபடி. ஏனெனில், இரண்டு பேராவது மூன்று பேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்றார். இயேசுக்கிறிஸ்து இருவர் மூவர் இருக்கும் இடத்தில் தானிருப்பதாக வாக்குக் கொடுத்திருக்கிறார். மனதுருக்கம் நிறைந்த தெய்வம் நம்மத்தியில் இருந்தால், அது மிகப்பெரிய பாக்கியமல்லவா. 

சபையில் இருவர் மூவரல்ல குறைந்தது ஒரு பத்துப் பேராவது இருக்கமாட்டார்களா? 

ஒவ்வொரு மனிதனின் தேவைக்காக ஒருமனப்பட்டு ஐக்கியமாக ஜெபிக்கும் பொழுது, அந்த ஜெபத்துக்கு வல்லமை, ஆற்றல், பதில் உண்டு. அத்தோடு சபையிலேயே பிறரின் தேவையை அறிந்து அவர்களுக்காக ஜெபிக்கும் வாய்ப்பும் கிடைக்கும். எப்படி ஜெபிக்க வேண்டும் என்பதை கற்றும் கொள்ளலாம். விசுவாசிகளின் ஐக்கியமே சபையாக இருப்பதாலும், அவர் அவர் ஆவிக்குரிய வளர்ச்சிக்கு சபைகூடி வருதல் அவசியமானது. எபிரெயர் 10:25 சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்; நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்லவேண்டும். 

பிரியமனவர்களே

மாம்சத்தை உலகத்தை எதிர்த்து வாழ ஜெபம் அவசியமானது. நாம் ஒவ்வொருத்தரும் சுய பெலத்தில் வாழமுடியாது. தேவ தயவில்தான் சமாதானமான நிறைவான வாழ்க்கை வாழ முடியும். சனகெரிப் சுயபெலத்தையும் பாகாலையும் தெய்வமாய் கொண்டதால் அழிந்து போனான். எசேக்கியாவோ ஆலயத்துக்கு ஓடிப்போய் கூடி ஜெபித்ததால் காக்கப்பட்டார். பலர் சிறு சிறு பிரச்சனைகளுக்கு தேவனைத் தேடமாட்டார்கள். ஆனால் சக்திக்கு மீறிய பிரச்சனைகள் வரும் பொழுதே தேவனைத் தேடுவார்கள். எங்களால் தீர்க்கக் கூடிய பிரச்சனையாயினும் கர்த்தரிடம் ஜெபித்து தீர்க்க முயற்சிக்க வேண்டும். அவ்வாறு செய்வோமானல் பெரிய சிக்கலே வராது தவிர்க்கலாம். 

பிறருக்காக உண்மையாக மனதுருக்கத்தோடு ஜெபித்து நமது தெய்வீக சுபாவத்தை வெளிப்படுத்துவேண்டும்.

தேவனைச் சார்ந்து தொடர்ந்து ஜெபித்து ஜெய ஜீவியத்தை சுதந்தரித்துக் கொள்வோமாக. 

கர்த்தர் எங்கள் ஜெபங்களை காது சாய்த்து கேட்பாராக. கர்த்தர் தனது கண்களைத்திறந்து எங்களைப் பார்ப்பாராக. எங்களுக்காக ஒரு தூதனை அனுப்புவாராக. ஆமென்

த.பிரபா

   
   
 
எங்களை தொடர்புகொள்ள
T.Pirabagaran
89 Laurel crescent
Romford
Essex
Rm7 0ru
England
  TP:-
Email:- info@thehandofjesus.com
சமூக வலைத்தளங்களில் எங்களுடன் தொடர்பு கொள்ள

        
உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது. சங்கீதம் 119:105
Copyright © 2015 The hand of jesus.com All Rights Reserved