ஆங்கிலம் | தமிழ் | சிங்களம்

 
 
  முகப்பு பக்கம்
  எங்களை பற்றி
  எங்கள் சேவைகள்
  தற்போதைய தேவைகள்
    ஜீவ வார்த்தைகள்
  கட்டுரைகள்
  வேதாகம வரைபடங்கள்
  ஜெப வேண்டுகோள்
  ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம்
  சிறுவர்கள் வேதாகம ஒளிநாடா
  கருத்துக்கள்
  ஒளிப்பதிவுகள்
  எங்களை தொடர்புகொள்ள

 தினசரி தியானம்
  ஆரம்ப நிலை
  இடை நிலை
    மேல்நிலை
  வேதாகம விளக்கம்

  ஜீவ வார்த்தைகள்

 பயனுள்ள இணைப்புகள்
  இணைய தளங்கள்
  www.tamilchristian.com
  www.tamilchristianworship.org
  வானொலி
  www.tamilchurchvos.org
  www.tamilchristianprayer.org
    தொலைக்காட்சி
  www.tamilchristianonline.net
    வேதாகமம்
  இணைய வேதாகமம்
    இணைய வேதாகமம் 2
    ஒலி வேதாகமம்
   


   

மலரும் ஆண்டு மகிழ்வின் ஆண்டு. (2018)


மலரும் ஆண்டு மகிழ்வின் ஆண்டு என்ற தலையங்கத்தை வாசித்ததும். புதிய ஆண்டில் ஏதோ நல்ல வாக்குத்தத்த செய்தியை சகோதரன் எழுதப் போகிறார் என நீங்கள் நினைத்திருக்க கூடும். அநேக போதகர்மார், தீர்க்கதரிசிகள் பல நாட்கள் உபவாசமிருந்து, ஆண்டவரின் பாதத்திலமர்ந்து, ஜெபித்து, காத்திருந்து, புத்தாண்டு வாக்குத்தத்த செய்தியை பெற்று புத்தாண்டன்று பிரசங்கிப்பார்கள். அதைக் கேட்பதற்காக சபைமக்களும் ஆவலாக வாஞ்சையோடு புதியாண்டு ஆராதனைக்கு உற்சாகமாக போவார்கள். பெரும்பாலான வாக்குத்தத்த செய்திகள் பழைய ஏற்பாட்டு புத்தகத்திலிருந்து எடுத்துப் பிரசங்கம் பண்ணுவதை காணக்கூடியதாய் இருக்கிறது. சபையில் பலதரப்பட்ட மக்கள் கூட்டத்தினர் இருப்பார்கள். ஆவிக்குரிய அறிவில் முதிர்ச்சி பெற்றவர்கள், வளர்ந்து கொண்டிருப்பவர்கள், குழந்தைகள், இன்னும் இரட்சிப்புக்குள் வராதவர்கள் என பலநிலையில் இருப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட வாக்குத்தத்த வசனமானது எப்படி அந்த ஆண்டு எல்லோருக்கும் பொருத்தமானதாகவும் எல்லோரும் அதை பெற்றுக்கொள்ள தகுதியாயுமிருப்பார்கள் என எனக்குத் தெரியவில்லை. 

மக்கள் பெலவீனமானவர்கள், பாடுகள், வியாதிகள், வியாகுலத்தோடு இருப்பவர்களின் எதிர்பார்ப்பானது ஒரு ஆசீர்வாதமான பிரசங்கமாகும் அல்லது நம்பிக்கையூட்டும் செய்தியேயாகும்.

பிறக்கப்போகும் புதிய ஆண்டில் நம்பிக்கையூட்டும் செய்தியை பிரசங்கிப்பது நல்லதே. சோர்வுகள், கவலைகள், அதைரியங்களைக் களைந்து நம்பிக்கையூட்டும் செய்தியை கொடுப்பதன் மூலம், வருடத்தின் தொடக்க நாளே உற்சாகமானதாகவும், ஆவியில் புத்துணர்ச்சியைடையக் கூடியதாயிருக்கும். தங்களைத் தாங்களே திடப்படுத்திக் கொண்டு, பாடுகள் நிறைந்த சூழ்நிலையை எதிர்கொண்டு ஜெய ஜீவியம் செய்ய உதவியாகவிருக்கும்.

வாக்குத்தத்த செய்தி எழுதுமளவுக்கு எனக்கு தகுதியில்லை. இது வாக்குத்தத்த செய்தியோ அல்லது புதுவருட செய்தியோ அல்ல. நாம் யார் என்பது பலருக்கு தெரிவதில்லை. அதை இனங்காண்பதே இக்கட்டுரையின் நோக்கம். புதிய ஆண்டில் அதை இனம் கண்டு செயல்படுத்துவோமாயின், மலரும் ஆண்டை மகிழ்வின் ஆண்டாய் மாற்றியமைக்கலாம் என நம்புகிறேன். 

ஆண்டுகளின் தொடக்க நாளுக்கு மட்டும் கர்த்தர் தேவனல்ல. அவர் எல்லா ஆண்டுகளுக்கும், எல்லா நாட்களுக்கும், எல்லாக் காலங்களும் தேவனாயிருக்கிறார். 

இந்த ஆண்டில் மட்டுமல்ல எல்லா காலங்களிலும் தனது பிள்ளைகள் மகிழ்வாயிருக்க வேண்டும் என்பதே கர்த்தரின் பேரவா. அப்பா பிள்ளையென்ற உறவே கிறிஸ்தவமாகும். 

இயேசுக்கிறிஸ்துவின் பிள்ளையாகும் பட்சத்தில் ஒரு வாக்குத்தத்தையால்ல முழு வாக்குத்தத்தையும் சுதத்தரித்து, நன்மைகளனைத்தையும் அனுபவிக்க உரிமையுடையவர்களாக மாறிவிடுவோம்.

அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார். யோவான் 1:12

1. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் விசுவாசம்.

2. இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

3. இயேசு கிறிஸ்துவின் பிள்ளையாக மாறிவிடுவீர்கள்.

இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் விசுவாசம்,

யாருடைய நாமத்தில்? இயேசு எனும் நாமத்தில்.

மத்தேயு 1:21ல் இயேசு எனும் நாமத்துக்குரிய விளக்கமுண்டு. 

இயேசு என்றால் அவர் தமது ஜனத்தின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்பதாக எழுதப்பட்டுள்ளது. 

மனுஷனுடைய பாவங்களே பரிசுத்தமான தேவனோடு உறவாட ஐக்கியம் கொள்ள தடையாக உள்ளது. 

மனிதன் செய்யும் பாவங்களை எந்த மனுஷனாலும், எந்த கடவுளாலும் நீக்க முடியாது. இயேசு கிறிஸ்து ஒருவராலேயே மட்டும் முடியும். அவரே மனுஷனின் பாவத்துக்கான தண்டனையை ஏற்று மரித்து அவருடைய பரிசுத்த இரத்தத்தை சிந்தியவர். 

நமது பாவத்துக்காக மரித்து உயிர்த்தெழுந்தபடியால். சத்துருவை, மரணத்தை ஜெயித்தார். அவராலேயே சத்துருவின் பிடியிலிருந்தும், பாவத்திலிருந்தும், மரணத்திலிருந்தும் எங்களை மீட்டு, விடுதலை தர முடியும். 

இவ்வாறு மீட்க்கப்படுதலேயே இரட்சிப்பு என அழைக்கப்படுகிறது. 

ஆகவே ஒருவர் சத்துருவிடமிருந்து, பாவத்திலிருந்து, மரணத்திலிருந்து, தேவகோபாக்கினையிலிருந்து விடுதலை பெற வேண்டுமாயின் இயேசுக்கிறிஸ்துவை மட்டுமே விசுவாசிக்க வேண்டும். 

அவரே மெய்யான தெய்வம், அந்த நாமத்தினால் மட்டுமே விடுதலை கிடைக்கும் என்ற விசுவாசம் வேண்டும்.

விசுவாசம் என்றால் என்ன?

விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது. எபிரெயர் 11:1

நிச்சயமாக நடக்கும் என்ற நம்பிக்கையே விசுவாசமாகும். இது ஒரு உணர்ச்சியாகும். 

கடவுள் உண்டென்று விசுவாசிப்பதும், இயேசுக்கிறிஸ்வே எனது பாவங்களுக்காக மரித்து என்னை மீட்டுக் கொண்டவரேன விசுவாசிப்பதே அதி முக்கியமானது. 

இயேசுக்கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள வேண்டும். 

ஏற்றுக் கொள்ளல் என்பது சொந்தமாக்கி கொள்வது என்றும் பொருள்படும். 

ஒருவர் இயேசுக்கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாமலே விசுவாசிக்கலாம், சபைக்கு போய் ஆராதனையில் கலந்து கொள்ளலாம், இயேசுகிறிஸ்துவே மெய்யான தேவன் என்றும் சொல்லலாம். 

மேலோட்டமான அறிவின்படி விசுவாசிப்பதை தவிர்த்து, முழுமனதோடு இயேசுக்கிறிஸ்துவே மெய்யான தேவன் என விசுவாசித்து, இதுவரை கடைப்பிடித்து வந்த தவறான மார்க்கத்தை, போதனையை, வழிபாட்டை, பாவ வாழ்க்கையை முழுமையாக கைவிட்டு, மனந்திரும்பி பாவமன்னிப்பை பெற்று ஞானஸ்தானமும் பொற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறான நடை முறைகளுடாக பயணிப்பதாலேயே இயேசுக்கிறிஸ்துவை ஏற்றுக் கொள்வதானது பூரணப்படுகிறது. அப்பொழுது பழைய மனுஷனுக்கு மரித்து புதிய மனுஷனாய் பிறந்து கர்த்தருக்கு பிள்ளையாக மாறிவிடுவோம். பிள்ளையாக மாறியவர்கள் உலகத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்டவர்களாக கருதப்படுவீர்கள். 

யோவான் 1:11 ல் அவர் தமக்கு சொந்தமானதிலே வந்தார். அவருக்குச் சொந்தமானவர்களே அவரை ஏற்றுக்கொள்ளவில்லை என எழுதப்பட்டுள்ளது. மேற் சொன்ன வசனமானது யூத மக்கள் இயேசுக்கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளாததையே எடுத்துச் சொல்லுகிறது. அன்றைய யூத மக்களைப் போலவும், இயேசுக்கிறிஸ்துவே மெய்யான தேவன் என அறிந்தும் மனந்திரும்பி ஏற்றுக்கொள்ள மனசில்லாமல் கடின இருதயத்தோடு இருப்போமானால். நம்மை உண்டாக்கியவரின் உறவை, ஆசீர்வாதத்தை புறக்கணித்தவர்களாகி விடுவோம். நம்மை உண்டாக்கியவரை விசுவாசித்து ஏற்றுக்கொள்வதால், பிறப்பின் நோக்கத்தை (பிறவிப்பயன்) அவசியமானதொன்றை அடைந்தவர்களாகிவிடுவோம். 

தேவனுடைய பிள்ளையாகுதல்.

மனப்பூர்வமாய் இயேசுக் கிறிஸ்துவை விசுவாசித்து ஏற்றுக் கொண்டோமானால் அவர் பிள்ளையாகிவிடுவோம். இது மிகப்பெரிய சிலாக்கியம். 

தகப்பன் பிள்ளையெனும் உறவுநிலையை பிற மத கடவுள்கள் கடைப்பிடிப்பதில்லை. பிறமதத்து கடவுளுக்கு பக்தர்கள் தான் உண்டு. அக்கடவுள்கள் எஜமானியாகவும், பக்தர்கள் அடிமையாகவும் இருப்பார்கள். அவர்கள் பக்தியை வெளிப்படுத்தி கிரியை, தொண்டு செய்வதன் மூலமே அக்கடவுளிடமிருந்து அருள் கிடைக்கும்?. அக்கடவுள்கள் மனிதனை அடிமைப்படுத்தி கட்டுக்குள் வைத்திருக்கும். கடவுள் என்று சொல்லப்படும் சக்தியற்ற விக்கிரகங்களை தரிசிப்பதே கடினமான காரியம். 

ஆனால் இயேசுக்கிறிஸ்துவானவர் தன்னைத் தகப்பனாகவும், நம்மை பிள்ளையாகவும் ஏற்றுக்கொண்டார். 

அவருடைய சாயலைத் தந்தது மட்டுமல்லாமல். தன்னை அறிந்து கொள்வதற்காக பரிசுத்த வேதாகமத்தை எழுதித்தந்துள்ளார். அத்தோடு இப்பூமியில் வசிப்பதற்கு தேவையான பெலனைப் பெற்றுக் கொள்ள பரிசுத்த ஆவியானவரையும் தந்துள்ளார். எல்லாவற்றுக்கும் மேலாக அவரோடு நித்திய நித்திய காலம் வாழுவதற்கானஏற்பாட்டையும் செய்துள்ளார்.

வேதத்தில் அடிக்கடி என் மகனே, என் மகனே என உரிமையோடு அழைக்கிறார்.

எங்களுடைய தேவையனைத்தையும் சந்திக்கிறார். மகா அன்பும் இரக்கமும் கிருபையும் கொண்டவராயிருக்கிறார். 

மோசமான பாவவாழ்க்கையெனும் குப்பையில் கிடந்தவர்களையும், சொந்தப் பெற்றோர்களால், உறவினர்களால், நண்பர்களால், சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டு கழிக்கப்பட்டவர்களையும் தனது சொந்தப் பிள்ளையாக ஏற்றுக் கொண்டார். 

அவரோ சுத்த பரிசுத்தர். அவரை யாருக்கும் ஒப்பிட முடியாது. அவரை யாருக்கும் நிகராக்க முடியாது. அவர் சர்வவல்லவர், சர்வஞானி, சர்வசிருஷ்டி, சர்வவியாபி. இப்பேற்பட்ட உன்னதமான தேவன் எங்கள் மீது கொண்ட அதீத அன்பு, பாசம், அக்கறையாலேயே, மனிதனாக உலகுக்கு வந்து நமது பாவங்களுக்கு அவர் பலியாகி எங்களை மீட்டுக் கொண்டார். 

இதைக்காட்டில் உயர்வான அன்பை கண்டது கேட்டதுண்டே?

இதைவிட மிஞ்சிய விலைக்கிரயம் செலுத்தியவரை கண்டது கேட்டதுண்டோ?

இப்படிப்பட்ட தகப்பனைக் காட்டில், மேலான தகப்பன் இவ்வுலகில் உண்டோ?

உலகத்தோற்றத்துக்கு முன்பே எங்களைத் தெரிந்து கொண்டார். எபேசியர் 1:4.

பிரியமானவர்களே!

உலகத்தோற்றத்துக்கு முன்னே, தாயின் வயிற்றில் உருவாக முன்னே தன் பிள்ளைகளை அறிந்து கொண்ட தேவன், இப்பூமியில் அப்பிள்ளைகளது அற்ப தேவைகளையோ, மனப்பாரத்தையோ, பாடுகளையோ கானாதிருப்பாரோ? அநாதையாய் விடுவாரோ?

நானும் நீங்களும் செய்ய வேண்டியதொன்றே. அவரை மனப்பூர்வமாக தகப்பனாய் ஏற்று விசுவாசித்து அவருக்கு பிரியமாய், அவருடைய பிரசன்னத்தில் ஜீவிப்பதேயாகும்.

ஏதோ ஒரு வாக்குத்தத்தத்துக்கு அலையாமல், உலகத் தேவைகளுக்காக அவரை நாடமல்.

உண்மையான அன்பின் நிமிர்த்தம் அப்பாவை தேடி, அவர் உறவில் நிலைத்திருப்போம்.

பிள்ளைகளாகிய எங்களை தாங்கி சுமந்து சொல்ல அவர் தயாராகவே உள்ளார். எங்களோடு பேசி கட்டியரவணைத்து முத்தம் செய்ய காத்திருக்கிறார்.

அப்பாவின் எதிர்ப்பார்ப்புக்கேற்ப வாழ்ந்து, அவர் தரும் பெலத்தோடு, அவரின் உண்மையான வாரிசுகளாய் உலகத்தை எதிர்த்து ஓடுவோம்.

இப்புதிய ஆண்டில் (2018) என்னவந்தாலும் நான் இயேசப்பாவின் பிள்ளை என்ற அதிகாரத்தோடு, என்னை பெயர் சொல்லி அழைத்தவர், என்னை உள்ளங்கையில் வரைந்து வைத்துள்ளார் என்ற வைராக்கியத்தோடு கலக்கமின்றி மகிழ்வோடு பயணிப்போமாக. ஆமென்

காலங்கள் மாறும், வாழ்க்கை கோலங்கள் மாறும், நான்மட்டும் மாறேன். 

இயேசுக்கிறிஸ்துவின் பிள்ளையாகவே என்றும் ஜீவிப்பேன்.

எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராய் இருக்கிறார்கள். ரோமர் 8:14

நன்றி கர்த்தாவே

த.பிரபா. (01/01/2018)

   
   
 
எங்களை தொடர்புகொள்ள
T.Pirabagaran
89 Laurel crescent
Romford
Essex
Rm7 0ru
England
  TP:-
Email:- info@thehandofjesus.com
சமூக வலைத்தளங்களில் எங்களுடன் தொடர்பு கொள்ள

        
உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது. சங்கீதம் 119:105
Copyright © 2015 The hand of jesus.com All Rights Reserved