ஆங்கிலம் | தமிழ் | சிங்களம்

 
 
  முகப்பு பக்கம்
  எங்களை பற்றி
  எங்கள் சேவைகள்
  தற்போதைய தேவைகள்
    ஜீவ வார்த்தைகள்
  கட்டுரைகள்
  வேதாகம வரைபடங்கள்
  ஜெப வேண்டுகோள்
  ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம்
  சிறுவர்கள் வேதாகம ஒளிநாடா
  கருத்துக்கள்
  ஒளிப்பதிவுகள்
  எங்களை தொடர்புகொள்ள

 தினசரி தியானம்
  ஆரம்ப நிலை
  இடை நிலை
    மேல்நிலை
  வேதாகம விளக்கம்

  ஜீவ வார்த்தைகள்

 பயனுள்ள இணைப்புகள்
  இணைய தளங்கள்
  www.tamilchristian.com
  www.tamilchristianworship.org
  வானொலி
  www.tamilchurchvos.org
  www.tamilchristianprayer.org
    தொலைக்காட்சி
  www.tamilchristianonline.net
    வேதாகமம்
  இணைய வேதாகமம்
    இணைய வேதாகமம் 2
    ஒலி வேதாகமம்
   


   

சரீர சுகத்துக்கான விடாமுயற்சி.


சராசரி வாழ்க்கை வாழும் ஒருவரிடம் சென்று வெற்றியுள்ள வாழ்க்கை வாழ ஆசைப்படுகிறீர்களா? எனக் கேட்டுப் பாருங்கள் பதில் ஆம் என்று வரும். சரீர ஆரோக்கியம் மகிழ்ச்சியான குடும்பம் செல்வச் செழிப்பான வாழ்க்கையையே வெற்றியுள்ள வாழ்க்கையென அநேகர் கருதுகிறார்கள். உண்மையில் இது சர்வ சாதாரண இயல்பான வாழ்க்கையே ஆகும். பாடுகள் நெருக்கங்கள் உள்ள சூழலில் அவற்றைத் தவிர்த்து செழிப்பாக வாழ்வதை வெற்றியுள்ள வாழ்க்கையென எல்லோரும் நினைத்துக்கொள்கிறார்கள்.

வாழ்க்கையில் எதாவதொரு குறிக்கோள் அல்லது இலக்கை தீர்மானித்து அதை அடைய முயற்சி செய்து, அவ்விலக்கை அடையும் வாழ்க்கையையே வெற்றியுள்ள வாழ்க்கை எனச் சொல்லலாம்.

சமுதாயத்தில் சாதித்த அல்லது குறிக்கோளோடு வாழ்ந்த ஒரு மனிதனிடம், அல்லது ஒரு குழுவிடம், அல்லது ஒரு இனத்திடம் எவ்வாறு சாதித்தீர்கள் அல்லது எவ்வாறு உங்கள் குறிக்கோளை அடைந்தீர்கள் (வெற்றி பெற்றீர்கள்) எனக் கேட்டுப்பாருங்கள்.

அவர்கள் சொல்லும் பதில் தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்பு இம்மூன்றையும் கடைப்பிடித்ததால் வெற்றியடைந்ததாக சொல்லுவார்கள்.

வெற்றியின் தாரக மந்திரம் தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்பாகும்.

நம்மையறியாமலே நாமெல்லோரும் தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடினஉழைப்பை வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் தேவையின் நிமிர்த்தம் கடைப்பிடிக்கிறோம். இதை ஒரு இலட்சியமாகவோ, கோட்பாடாகவோ, தத்துவமாகவோ வழியாகவோ கடைப்பிடிப்பதில்லை. 

ஆனால் சூழ்நிலையின் நிமிர்த்தம் அதை தாண்டி வருவதற்கு தன்னம்பிக்கை விடாமுயற்சி கடின உழைப்பை அவ்வப்போது கடைப்பிடிக்கிறவர்களாயிருக்கிறோம். 

சிறுவயதில் கல்விகற்கும் போது பரீட்சையில் நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டும் என்பதற்காக, அதிக சிரத்தையெடுத்து நித்திரையை தியாகம் செய்து இரவு பகலாக கல்வி கற்கிறோம். மேல்படிப்பென வரும் பொழுது கனமான ஒரு வேலையை குறிவைத்து படித்து அவ்விலக்கை அடைகிறோம்.

வாலிப வயதில் காதலித்து திருமணம் செய்வதே அநேகருக்கு குறிக்கோளாயிருக்கிறது. அவர்கள் இரு வீட்டு பெற்றோரின் எதிர்ப்பையும் எதிர்கொண்டு திருமணம் செய்து, போராட்டமான வாழ்க்கைக்குள் பிரவேசித்து வாழ்கின்றனர்.

குடும்பத்தை வழிநடத்தும் பொறுப்புள்ள ஒரு தகப்பன் நாள்முழுதும் கடினமாக உழைக்க வேண்டிய தேவையுள்ளது. ஆயுசு நாட்களில் பெரும்பகுதியை வயிற்றுப்பிழைப்புக்காகவே உழைத்து மரித்த பெற்றோர்களை வளர்முக நாடுகளில் காணக் கூடியதாயிருக்கிறது. 

இலங்கையைச் சேர்ந்த இளைஞர் யுவதிகள் மேற்கத்திய தேசத்துக்கு புலம்பெயர்ந்து வாழ ஆசைப்பட்டு, அவ்விலக்கை அடைவதற்கு பெரியளவான பணத்தை செலவு செய்து, விடாமுயற்சியோடு பயணித்து அவ்விலக்கை அடைந்து விடுகிறார்கள்.

ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெற்றவர்களிடம் சென்று உங்கள் வெற்றியின் இரகசியம் என்னவென்று கேட்டுப்பாருங்கள். அவர்கள் சொல்லுவார்கள் தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடினபயிற்சி (உழைப்பு) என. 

வெற்றியடைந்த ஒரு போராட்டக் குழுவிடம் சென்று உங்கள் வெற்றியின் இரகசியம் என்னவென்று கேட்டுப்பாருங்கள். அக்குழுவினர் சொல்லுவார்கள் தன்னம்பிக்கை, விடமுயற்சி கடினமான உழைப்பு, நேர்த்தியான திட்டமிடலே தங்களை வெற்றியடைய வைத்ததாக. இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

உலகத்து மனிதர்களும் கடவுள் மறுப்பாளர்களும் தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்பை கடைப்பிடித்து வாழ்க்கையில் சாதிக்கிறார்கள்.

கடவுள் உண்டென நம்பும் ஒரு தேவப்பிள்ளை தேவனைத் தானே சார்ந்து ஓட வேண்டும் இவற்றையெல்லாம் கடைப்பிடித்து வாழ வேண்டுமா என நீங்கள் கேட்கலாம்.

இந்த உணர்ச்சிகள் குணாதிசயங்கள் எல்லாம் படைப்பாளரிடமிருந்தே வந்தது. தரிசனம் என வேதத்தில் அநேக இடத்தில் வாசிக்கிறோம், அதற்கு இலட்சியம் இலக்கு என்றும் அர்த்தம் கொள்ளலாம். தன்னம்பிக்கை என்பது சுய பெலனாகும். தேவ பெலத்தோடு தேவ நோக்கங்களுக்காக சுய பெலத்தை பிரயோகிப்பதை கர்த்தர் அங்கீகரிப்பார். தேவ பெலத்தை மறுத்து சுய பெலத்தில் வாழ்பவர்களுக்கு தேவதயவு (உதவி) கிருபை கிடையாது.

வேதத்தின் முதலாவது புத்தகமான ஆதியாகமத்திலேயே கர்த்தரின் உதவியோடு தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்போடு வாழ்ந்தவர்களைக் காணலாம். வேதம் முழுதும் உள்ள பரிசுத்தவான்களுக்கு ஒரு இலக்கிருந்தது. அது என்னவென்றால் தேவனுக்கு பிரியமாக வாழ்வது, தேவநேக்கம் நிறைவேற்ற வாழ்வதென்ற இலக்கேயாகும்.

இந்த இலக்கை அடைவதற்காக தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்பை மேற்கொண்டார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் பயத்தோடோ, தற்சோர்வோடோ, இலக்கற்று ஜீவிக்கவில்லை. தங்கள் இலக்கை அடைவதற்காக இரத்தசாட்சியாக மரித்தவர்கள் அநேகர் உண்டு. கிறிஸ்துவுக்காக பணிசெய்வது, பாடனுபவிப்பது கிறிஸ்துவிக்காக மரிப்பதே அவர்களின் உன்னத இலட்சியமாக இருந்தது.

சரீர சுகத்திற்காக விடாமுயற்சியோடு வாழ்ந்த ஒருவரை இன்றைக்கு தியானிக்கலாம்.

விடாமுயற்சியென்றால் என்ன?

ஒரு இலக்கை அடைவதற்காக தொடர் தோல்விகளை, தடைகளை எதிர்கொண்டு அவற்றை தாண்டி உறுதியோடு தன்னிலக்கை அடைவது தான் விடாமுயற்சி.

யோவான் 5:1-15 வரையுள்ள பகுதியில் பெதஸ்தா என்னப்பட்ட ஒரு குளம் எருசலேமில் ஆட்டு வாசலினருகே இருக்கிறது, அதற்கு ஐந்து மண்டபங்களுண்டு.

அவைகளிலே குருடர், சப்பாணிகள், சூம்பின உறுப்புடையவர்கள் முதலான வியாதிக்காரர் அநேகர் படுத்திருந்து, தண்ணீர் எப்பொழுது கலங்கும் என்று காத்துக்கொண்டிருப்பார்கள்.

ஏனெனில் சில சமயங்களில் தேவதூதன் ஒருவன் அந்தக் குளத்தில் இறங்கி, தண்ணீரைக் கலக்குவான்; தண்ணீர் கலங்கினபின்பு யார் முந்தி அதில் இறங்குவானோ அவன் எப்பேர்ப்பட்ட வியாதியஸ்தனாயிருந்தாலும் சொஸ்தமாவான். முப்பத்தெட்டுவருடம் வியாதிகொண்டிருந்த ஓரு மனுஷன் அங்கே இருந்தான்.

"பெதஸ்தா" என்ற வார்த்தைக்கு "இரக்கத்தின் வீடு" என்ற அர்த்தமாகும். இந்த இடத்தில் ஐந்து மண்டபங்களிருந்தபடியால் அநேக பிணியாளிகள் விழிப்புலன் அற்றோர் இருந்திருப்பார்கள். இவர்களின் எதிர்ப்பார்ப்பெல்லாம் சரீர சுகமாகும். பெதஸ்தா குளத்தை ஒரு தேவதூதன் கலக்கிய பின் அக்குளத்தில் இறங்கும் முதல் மனிதனுக்கே சுகம் (விடுதலை) கிடைக்கும். எப்பொழுது தேவதூதன் வருவார் என்ற கால வரையறை இல்லாதபடியால். எந்த நேரமும் தேவதூதன் வரலாம் என்ற நம்பிக்கையில் பலர் பல நாட்களாக, மாதங்களாக, வருடங்களாக காத்திருந்தார்கள். அவ்வாறு காத்திருந்தவர்களில் ஒருத்தர் முப்பத்தெட்டு வருடம் வியாதியாயிருந்தவராவார்.

வயசாகிவிட்டது முப்பத்தெட்டாண்டுகள் வியாதியாயிருந்து உடல் மிகவும் பெலவீனப்பட்டிருக்கிறது, இனிநான் பிழைத்தென்ன நடக்கப்போகிறதென்ற மனச் சோர்வில்லாமல் சரீர விடுதலைக்காக காத்திருந்தார். குளத்தில் முதல் இறங்குகிறவருக்கு தான் அற்புதம் நடக்கும், இவருக்கு முன் இருப்பவர்கள் முன்டியடியடித்து இறங்கி விடுகிறார்கள். இவரால் அவ்வாறு விரைவாக குளத்தில் இறங்க முடியாது. ஆனாலும் விடாமுயற்சியோடு காத்திருந்தார். என்றோ ஒருநாள் குளத்தில் முதலாவதாக இறங்குவேன் குணமடைவேனென.      

ஆட்டுவாசல் வழியால் இயேசுக்கிறிஸ்து தேவாலயம் போய்வருவதுண்டு.

அவ்வாறு பயணப்பட்ட ஒருநாள், மனதுருக்கம் நிறைந்த தெய்வமாகிய இயேசுக்கிறிஸ்து நீண்டகாலம் வியாதியில் இருக்கும் நபரைப்பார்த்து, நீ குணமடைய விரும்புகிறாயா எனக் கேட்டார். அதற்கு அவன் ஆம் அல்லது இல்லை என்று சொல்லியிருக்க வேண்டும். போசுபவர் யார் என்று தெரியாததாலும், அவன் நம்பிக்கை தேவதூதனிலும் குளத்தின் மீது இருந்ததாலும், பதிலுக்கு தனக்கு உதவி செய்ய ஒருத்தரும் இல்லை என்றதோடு, தன்னுடைய முயற்சியினால் குளத்தண்டை போவதற்குள் வேறொருவன் முந்தி விடுகிறான் எனச் சொன்னார்.

அந்த மனுஷனால் இயலாத போதும், பல தடைகள் இருந்த போதும் அவனின் விடாமுயற்சியை கண்ணுற்ற இயேசுக்கிறிஸ்து அவனை எழுந்து நடக்கச் சொன்னார். அவனும் அவர் சொல்லுக்கு கீழ்ப்படிந்து எழுந்து நடந்தான் விடுதலை பெற்றான்.

பிரியமானவர்களே!

எங்களில் பலர் பயப்படுகிறோம் மனச்சோர்வடைந்து விடுகிறோம். மனதளவில் ஊனமாகி விடுகிறோம். தொடர்ந்து இலக்கை அடையும் வரை விடா முயற்சி செய்வதில்லை. கடவுள் என்னைக் கைவிட்டுவிட்டார், என் ஜெபத்தைக் கேட்கவில்லை, நான் அதிஷ்ரமற்றவன், காலம் சரியாக அமையவில்லை, பணமில்லை, பிறர் உதவியில்லை எனப் பல காரணங்களைச் சொல்லுகிறோம். 

சிறுவயதில் ஆமையும் முயலும் ஓட்டப் பந்தயத்தில் ஈடுபட்ட கதை படித்திருப்பீர்கள் அல்லவா. ஆமை விடாமுயற்சியோடு பயணித்து முயலை வென்றது ஞாபகம் வருகிறதா? அந்த ஆமை முயலையோ அதன் வலிமையான பெரிய காலையோ பார்த்து பயந்து சோர்ந்து போய்விடவில்லை. தோல்வியோ வெற்றியோ இலக்கை நோக்கி விடா முயற்சியோடு பயணித்தமையே ஆமையை வெற்றியடைய வைத்தது.

உணவை சேமிக்கும் எறும்புக் கூட்டத்தை காலால் மிதித்து கலைத்துப்பாருங்கள். 

ஒரு நிமிடம் கலைந்து போனாலும், மீண்டும் ஒன்று கூடி அவ்வுணவுப்பதார்த்தத்தை தம்மிருப்பிடம் எடுத்துச் செல்ல முயற்சிக்கும்.

ஒரு தேவப்பிள்ளை தேவனுக்கு பிரியமாக அவரை நெருங்கி வாழ்வதற்கும்.

தேவ நோக்கம் நிறைவேற்றி ஜீவிப்பதற்கும். ஜெபம் வேதத்தியானம் ஆராதனை அவசியமானவை. அவற்றை இடைவிடாது அனுதினமும் அப்பியாசப்படுத்த வேண்டும். தேவனுக்கு பிரியமாக வாழாதபடி, தேவ நேக்கம் செய்ய முடியாதபடி. அநேக தடைகள் சோதனைகள் இழப்புக்கள் வியாதிகள் எம்மை தாக்கியே ஆகும்.

மரணத்தை வென்ற தேவனின் பிள்ளைகளாகிய நாங்கள் சோதனை, தோல்விகள், சூழ்நிலைகளைக் கண்டு துவண்டு போய் விடக்கூடாது. 

பல ஆண்டுகளாக ஜெபித்தேன் எனக்கு அற்புதம் நடக்கவில்லை எனச் சோர்ந்து போய்விட வேண்டாம். தொடர்ந்து விடாது ஜெபியுங்கள் உங்கள் நம்பிக்கை மனுஷர் மீதோ அல்லது பணத்தின் மீதோ அல்லது வேறு கிரியை மீதோ இருக்கக் கூடாது. நமது பாவங்களுக்காக மரித்து உயிர்த்தெழுந்த இயேசுக்கிறிஸ்துவின் மீதிருக்க வேண்டும். 

அவரே சர்வ நிவாரணி, அவரே எல்லாவற்றுக்கும் பரிகாரி. முப்பத்தெட்டாண்டுகள் வியாதியோடிருந்த மனுஷனுக்கு சுகம் கொடுத்த தெய்வம் உங்களுக்கும் சுகம், விடுதலை கொடுக்க வல்லவராயிருக்கிறார். 

அதே மனதுருக்கத்தோடு காத்திருக்கிறார் உங்களுக்கும் எனக்கும் உதவி செய்ய. 

அவரைத் தேடி அவரண்டை வருவீர்களா????????????????

 à®ªà¯Šà®¯à¯ சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல; மனம்மாற அவர் ஒரு மனுபுத்திரனும் அல்ல; அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரா? அவர் வசனித்தும் நிறைவேற்றாதிருப்பாரா? எண்ணாகமம் 23:19

நன்றி கர்த்தாவே

த. பிரபா

 

   
   
 
எங்களை தொடர்புகொள்ள
T.Pirabagaran
89 Laurel crescent
Romford
Essex
Rm7 0ru
England
  TP:-
Email:- info@thehandofjesus.com
சமூக வலைத்தளங்களில் எங்களுடன் தொடர்பு கொள்ள

        
உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது. சங்கீதம் 119:105
Copyright © 2015 The hand of jesus.com All Rights Reserved