ஆங்கிலம் | தமிழ் | சிங்களம்

 
 
  முகப்பு பக்கம்
  எங்களை பற்றி
  எங்கள் சேவைகள்
  தற்போதைய தேவைகள்
    ஜீவ வார்த்தைகள்
  கட்டுரைகள்
  வேதாகம வரைபடங்கள்
  ஜெப வேண்டுகோள்
  ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம்
  சிறுவர்கள் வேதாகம ஒளிநாடா
  கருத்துக்கள்
  ஒளிப்பதிவுகள்
  எங்களை தொடர்புகொள்ள

 தினசரி தியானம்
  ஆரம்ப நிலை
  இடை நிலை
    மேல்நிலை
  வேதாகம விளக்கம்

  ஜீவ வார்த்தைகள்

 பயனுள்ள இணைப்புகள்
  இணைய தளங்கள்
  www.tamilchristian.com
  www.tamilchristianworship.org
  வானொலி
  www.tamilchurchvos.org
  www.tamilchristianprayer.org
    தொலைக்காட்சி
  www.tamilchristianonline.net
    வேதாகமம்
  இணைய வேதாகமம்
    இணைய வேதாகமம் 2
    ஒலி வேதாகமம்
   


   


இதோ, வந்துவிட்டான்.


இருபத்தியோராம் நூற்றாண்டில் மின்னியல் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக தபாற்காரனின் முக்கியத்துவம் குறைந்துவிட்டது.
இவை வளர்ச்சியடையாத நாட்களில் இந்தியா, இலங்கையிலிருக்கும் பெற்றோர் உறவினரிடமிருந்து கடிதங்களை எதிர்பார்த்து மேற்குலகில் இருக்கும் உறவுகள் காத்திருப்பார்கள். யன்னல் வழியாய் பார்த்துக் கொண்டிருந்து தபாற்காரனைக் கண்டதும், இதோ, வந்துவிட்டான் எனச் சொல்லிக்கொண்டு வாசலுக்கே போய் விடுவார்கள். இன்றுவரை எல்லோரும் தபாற்காரனின் வரவை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களாயிருக்கிறார்கள்.
பாடசாலை சென்ற பிள்ளைகள் வீடு திரும்பிவரும்வரை பெற்றோர்கள் காத்திருப்பார்கள். அவர்கள் வரும் நேரத்தை மனசில் வைத்து, வீட்டு வாசலையே பார்த்துக் கொண்டிருப்பார்கள். பிள்ளையை கண்டதும் அப்பிள்ளையிடம் சென்று, புத்தக பையை வாங்கி, சாப்பிட்டியா? நன்றாக படித்தியா? என விசாரிப்பார்கள்.
ஒருவரை எதிர்பார்த்துக் காத்திருந்து, காத்திருந்தவரை கண்டதும் அவரை எதிர் கொள்ள முன் செல்லுகிறோம்.

தேவையின் நிமிர்த்தம் காத்திருப்பது, கட்டாயத்தின் நிமிர்த்தம் காத்திருப்பது, மகிழ்ச்சியின் நிமிர்த்தம் காத்திருப்பதெல்லம் சகஜமானதே.
ஆனால் யாராவது மரணத்துக்காக காத்திருந்ததை கேள்விப்பட்டதுண்டா?
திட்டமிட்டு, காட்டிக்கொடுக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு கொலை செய்யப்படப் போகிறேன் என முன்கூட்டியே அறிந்து அதற்காக காத்திருந்த நபரைப் பற்றித் தெரியுமா?
அவர்தான் இயேசுக்கிறிஸ்து. இவ் உண்மைச் சம்பவமானது கெத்சமேனே தோட்டத்தில் 2017 ஆண்டுகளுக்கு முன் நடந்ததாகும்.
(இக்கட்டுரை 2018ல் எழுதப்பட்டது)
வாழ்வதற்காக மனிதர்கள் பிறப்பார்கள், இவர் மரிப்பதற்காகவே பிறந்தார். ஒட்டுமொத்த உலகத்தின் பாவத்துக்கும் பரிகாரியாக மரித்த பரிசுத்தவானாகும்.
அவரின் மரணத்துக்கு முன் அவரை கைது செய்ய போர்ச் சேவகர்களும், காட்டிக் கொடுப்பவனும் நெருங்கிய போது அவர்களைக் கண்டு என்னைக் காட்டிக் கொடுக்கிறவன் இதோ, வந்துவிட்டான் எனச் சொல்லி பயப்படாமல் அவர்களை எதிர்கொண்டு போனார்.

மரணத்தை கண்டால் எல்லோருக்கும் பயம். மரணம் இயற்கையாய், வியாதியால், யுத்த சூழ்நிலையால், தப்பு பண்ணியதால் கிடைக்கும் தண்டனையால், குடும்ப சண்டையால், சதியால், விபத்தாலென பல்வேறு வடிவத்தில் நம்மை சந்திக்கும். மனிதர்கள் மரணத்தின் பிடியிலிருந்து தப்பிப்பதற்கான வழிகளையே மிக திவீரமாய் ஆராய்ந்து, அதிலிருந்து விடுபடவே முனைவார்கள். ஓடி ஒழித்துக் கொள்வார்கள், மீளமுடியாவிட்டால் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுவார்கள்.
காவல்துறை விசாரணைக்கோ, நீதிமன்றத்துக்கோ போவதற்கே பயப்படுவார்கள். ஏன் இரத்தப் பரிசோதனை செய்துவிட்டு, அதன் முடிவு எப்படி இருக்கப்போகிறதோ எனக் கலங்குவோருமுண்டு.
இரத்தமும் சதையும் உள்ள அனைவருக்கும், தான் பாதிக்கப்பட்டுவிடுவேன் என்ற அச்சம் இருக்கவே செய்யும். அதுவே பயமாகும்.

இயேசுக்கிறிஸ்து வியாழக்கிழமை காட்டிக்கொடுக்கப்படுகிறார்.
அச் சம்பவங்களை மத்தேயு 26:17-75, மாற்கு 14:12-72, லூக்கா 22:7-62, யோவான் 13:1-38, 18 ஆகிய பகுதிகளில் வாசிக்கலாம். அன்றைய நாள் சீஷர்களின் கால்களைக் கழுவிவிட்டார். சீஷர்களோடு பஸ்காவை அனுசரித்தார். அப்பத்தை தனது சரீரமென்றும், திராட்சை ரசத்தை தனது இரத்தத்திற்கு அடையாளமென்றும் சொல்லி, அப்பத்தையும் திரட்சை ரசத்தையும் பங்கிட்டு கொடுத்தார். கெத்சமனே சென்று இரத்தம் வியர்வையாக போகுமளவுக்கு ஜெபித்தார். கைது செய்யப்பட்டு பிரதான ஆசாரியனாகிய அன்னா, காய்பாவின் முன்னிலையில் விசாரிக்கப்பட்டார்.
மத்தேயு, மாற்கு, லுக்கா நூல்களில் இயேசுக்கிறிஸ்து மனுஷீகத்தில் எவ்வாறு அந்த சூழ்நிலையை கையாண்டாரென எழுதப்பட்டுள்ளது.
யோவான் நூலில் அவரின் தெய்வீகமான செயல்பாட்டை வாசிக்கலாம்.

மனுஷீகத்தில் கூட அவர் பயந்தோ, ஒழிந்தோ செயல்பட்டதாக கருத இடமில்லை. இயேசுக்கிறிஸ்து கடைசியாக நடக்கப் போகும் அனைத்தையும் முன்னறிவித்தார். அவை அநேகம் காரியங்களுண்டு, அவற்றில் இயேசுக்கிறிஸ்து கைது செய்யப்பட்ட பின்னர் பேதுரு மூன்று தடவை மறுதலிப்பான் என்பதும், மந்தையின் ஆடுகள் சிதறடிக்கப்படுமென எழுதியிருக்கிறபடி, இந்த இராத்திரியிலே நீங்கள் எல்லாரும் என்னிமித்தம் இடறலடைவீர்களெனச் சொன்னதானது, உறுதியாக அவர் கைது செய்யப்படப் போவதை நம்பியிருந்ததை எடுத்துக் காட்டுகிறது.
அவர் எருசலேமிலிருந்து 5 கி.மீ தூரத்தில் உள்ள, வழமையாக ஜெபிக்கும் மலைக்கே போயிருந்தார்.
ஆகவே அவர் மரணத்துக்கு பயந்து ஓடி ஒழித்துக் கொள்ளவில்லை.
யோவான் நூலைத் தவிர்த்த மூன்று நூலிலும் பிதாவே, உமக்குச் சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படிசெய்யும்; ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணியதும், வியாகுலப்பட்டதும், மரணத்துக்கேதுவான துக்கங் கொண்டியிருந்ததாக சொல்லப்பட்டதானதும், இரத்தம் வியர்வையாக போகுமளவுக்கு ஜெபித்ததற்கான காரணம்.
சிலுவைப்பாடுகளின் போதும், மரணத்தின் நிமிர்த்தமும் பிதாவுக்கும் தனக்குமான உறவற்ற நிலை உருவாகிவிடுமென கலக்கத்தின் நிமிர்த்தமே.
மரணத்தைக் கண்டு அவர் பயப்படவில்லை. மாறாக அவர் மரணசூழல் நெருங்கும் பொழுது அதற்க்கு ஒத்துழைத்தார். அதையே வியாழக்கிழமையான இன்று கெத்சமனேயில் நடந்தவற்றை சுருக்கமாக தியானிக்கப்போகிறோம்.

பேதுரு யோவான் யாக்கோபை விழித்திருந்து ஜெபிக்கும்படி கேட்டுக்கொண்டார்.  அவர்கள் சந்திக்கப் போகும் பாடுகளுக்காக ஜெபிக்கும்படி கேட்டுக்கொண்டார். அவர்கள் நித்திரை பண்ணிக்கொண்டிருந்தார்கள். இயேசுக்கிறிஸ்து முதல் தடவையாக ஜெபித்துவிட்டுவந்து ஒருமணி நேரமாவது விழித்திருக்ககூடாதவென மூவரையும் கேட்டார். மீண்டும் ஜெபிக்கச் சென்றார். இரண்டாம் தடவை திரும்பி வந்து பார்க்கும் போதும் அவர்கள் நித்திரை பண்ணிக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது எழும்பி ஜெபிக்கும்படி கேட்டுக்கொண்டார். மூன்றாம் தடவை திரும்பி வந்து என்னைக் காட்டிக்கொடுக்கிறவன், இதோ, வந்துவிட்டான், எழுந்திருங்கள் போவோம் என்றார். இரத்தம் வியர்வையாக போய், வியாகுலப்பட்டு ஜெபிக்கும் பொழுதும் அவருடைய நினைப்பெல்லாம் பேதுரு யோவான் யாக்கோபின் மீதும் இருந்தது. அதனாலேயே தூக்கத்திலிருந்தவர்களை தட்டியெழுப்பி அவர்களுக்காக ஜெபிக்கும்படி கேட்டுக் கொண்டார்.
எப்பொழுதும் பிறரைக்குறித்த நினைப்பே அவரை ஆளுகை செய்தது.

தீப்பந்தம், பட்டையம், தடிகள், பேர்ச்சேவகர்கள் என பெரிய பட்டாளமாக வந்தவர்களை, இயேசுவும் அவருடைய சீஷர்களும் எதிர்கொண்டு போனார்கள்.
யோவான் 18:4-12 வரையுள்ள வேத வசனங்களில், தன்னைத் தேடி வந்தவர்களிடம் யாரைத் தேடுகிறீர்களென இயேசுக்கிறிஸ்து கேட்டார். நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறோம் என்ற பொழுது, அதற்கு இயேசு நான்தான் என்றார்.
நான்தான் என்றவுடனே, அவர்கள் பின்னிட்டு தரையில் விழுந்தார்கள்.
அவர் மறுபடியும் அவர்களை நோக்கி: யாரைத் தேடுகிறீர்கள் என்று கேட்டார். அவர்கள்: நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறோம் என்றார்கள்.
இயேசு பிரதியுத்தரமாக: நான்தானென்று உங்களுக்குச் சொன்னேனே; என்னைத் தேடுகிறதுண்டானால், இவர்களைப் போகவிடுங்கள் என்றார்.
தன்னுடைய சீஷர்கள் பாதிக்கப்படக்கூடாது, அவர்களை போர்ச்சேவகர்கள் கைது செய்யக்கூடாதென்பதில் இயேசுக்கிறிஸ்து கருத்தாயிருந்தார்.
பின்னிட்டு விழுமளவுக்கு இயேசுக்கிறிஸ்துவின் வல்லமை வார்த்தையில் இருந்தது. சற்று நேரத்துக்கு முன்னர் தான் ஜெபத்திலிருந்து பிதாவோடு பேசியிருந்தார். மகத்துவமான தேவனின் வார்த்தைக்கு முன்னால் மனிதர்கள் எப்படி நிற்க்கமுடியும்?

விழுந்தவர்கள் கிலியோடு எழும்பி நிற்க, யூதாஸ்கரியோத்து முத்தத்தால் காட்டிக்கொடுத்து அவரே இயேசு என்பதை உறுதிப்படுத்துகிறார்.
அப்பொழுது கூட இயேசுக்கிறிஸ்து யூதாஸ்காரியத்தைப் பார்த்து சினேகிதனே முத்தத்திலா காட்டிக்கொடுக்கிறாயென கேட்டார். யூதாசைப் பார்த்து துரோகியே நன்றி கெட்டவனே எனத் திட்டாமல். நானே வந்துவிட்டேனேயப்பா, ஒத்துக்கொண்டுவிட்டேனெ, எதற்கு அன்பு செலுத்துவது போல மாய்மாலமாக நடிக்கிறாய் என்ற நிலைப்பாட்டிலேயே கேட்டிருப்பார்.
யூதாசின் பரிதாபநிலைகண்டு கலங்கியிருப்பார்.

இப்பொழுது பேதுரு கத்தியெடுத்து பிரதான ஆசாரியனின் வேலைக்காறனாகிய மல்கூஸின் காதை வெட்டிவிடுகிறார். பேதுருவைக்கடிந்து கொண்ட இயேசுக்கிறிஸ்து மல்கூஸின் காதை அற்புதமாக குணப்படுத்தினார். ஒருவேளை இந்த அற்புதத்தை இயேசுக்கிறிஸ்து செய்யாதிருந்தால், கைது தண்டனை என்பன பேதுருபக்கம் திரும்பியிருக்கும். இக்கட்டான வேளையிலும் இயேசுக்கிறிஸ்து பேதுருவை காப்பாற்றினார், மல்கூஸுக்கு சுகமளித்தார்.
இயேசுக்கிறிஸ்து தீமைசெய்யவரவில்லை, அவர் நன்மை செய்யவே வந்தார். அவர் அழிக்கவல்ல அழிந்து போபவர்களை மீட்கவே வந்தார். எதிரிகள் துரோகிகள் கூட மனந்திரும்பி வாழ்வடைய வேண்டுமென மனமார விரும்பினார், செயல்பட்டார்.
அடிக்கக் கொண்டு போகும் ஆட்டைப் போல அவரைக் கூட்டிச் சென்றார்கள்.

பிரியமானவர்களே!
காட்டிக் கொடுக்கப்பட்ட நாளைத் தியானிக்கும் ஒவ்வொருத்தரும்.
ஐயோ எங்களை மீட்க வந்தவரை அநியாயமாய் காட்டிக்கொடுத்து விட்டார்களே எனக் கவலைப்பட்டு அழத்தேவையில்லை. காரணம் இன்று இயேசுக்கிறிஸ்து உயிர்தெழுந்து ஜீவனோடு ஜீவிக்கிறார். நமக்குள் வாசம் செய்கிறார்.
நாம் ஒன்றை மட்டும் புரிந்து கொள்ள வேண்டும். இந்த உலகத்தில் இருக்கும் பொழுது அநேக உபத்திரங்கள், பாடுகள் நிச்சயம் உண்டு.
எங்கள் ஒவ்வொருவருக்கும் எதிராக பலநூறு யூதாஸ்கரியோத்துக்கள் எழும்புவார்கள். அப்பொழுதெல்லாம் அவர்களுக்கு அஞ்சி, நடுங்கி, ஓடி, ஒழிந்து கொள்ளாமல். அவர்களை இயேசுக்கிறிஸ்துவின் வல்ல நாமத்தில் எதிர் கொள்ளுவோம். அவர்களும் மனந்திரும்பி நித்திய வாழ்வை சுதந்தரிக்க ஜெபிப்போம். தேவ ராஜ்ஜியம் கட்டப்படுவதற்கும், நன்மை செய்வதற்கும் ஒரு பொழுதும் பின்நிற்காது பணியாற்றுவோம்.
உலகத்தை, மாம்ச இச்சையை, பிசாசை எதிர்த்து நின்று பிதாவின் சித்தம் செய்வோமாக.
ஒருவேளை இயேசுக்கிறிஸ்துவின் நிமிர்த்தம் சரீர மரணத்தை சந்திக்க நேர்ந்தாலும், சத்துருவோடு சமரசம் செய்யாமல், சத்தியத்துக்காய் வாழ்ந்து மடிந்து, உயிரோடு எழுந்திருப்போம். ஆமென்.

ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள். மத்தேயு 10:28

நன்றி கர்த்தாவே

த. பிரபா.

   
   
 
எங்களை தொடர்புகொள்ள
T.Pirabagaran
89 Laurel crescent
Romford
Essex
Rm7 0ru
England
  TP:-
Email:- info@thehandofjesus.com
சமூக வலைத்தளங்களில் எங்களுடன் தொடர்பு கொள்ள

        
உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது. சங்கீதம் 119:105
Copyright © 2015 The hand of jesus.com All Rights Reserved