ஆங்கிலம் | தமிழ் | சிங்களம்

 
 
  முகப்பு பக்கம்
  எங்களை பற்றி
  எங்கள் சேவைகள்
  தற்போதைய தேவைகள்
    ஜீவ வார்த்தைகள்
  கட்டுரைகள்
  வேதாகம வரைபடங்கள்
  ஜெப வேண்டுகோள்
  ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம்
  சிறுவர்கள் வேதாகம ஒளிநாடா
  கருத்துக்கள்
  ஒளிப்பதிவுகள்
  எங்களை தொடர்புகொள்ள

 தினசரி தியானம்
  ஆரம்ப நிலை
  இடை நிலை
    மேல்நிலை
  வேதாகம விளக்கம்

  ஜீவ வார்த்தைகள்

 பயனுள்ள இணைப்புகள்
  இணைய தளங்கள்
  www.tamilchristian.com
  www.tamilchristianworship.org
  வானொலி
  www.tamilchurchvos.org
  www.tamilchristianprayer.org
    தொலைக்காட்சி
  www.tamilchristianonline.net
    வேதாகமம்
  இணைய வேதாகமம்
    இணைய வேதாகமம் 2
    ஒலி வேதாகமம்
   


   

இரக்கம்.


சிரியாவில் நடக்கும் உள்நாட்டு யுத்தத்தமானது எல்லோரும் பேசும் விடயமாக மாறியுள்ளது. அங்கு நடக்கும் யுத்தத்தில் பலலட்சம் அப்பாவி மனித உயிர்கள் கொல்லப்படுவதை அறிந்து, இரக்கமில்லாமல் கொலை செய்கிறார்களே என ஒவ்வொருத்தரும் மனவருத்தப்படுவதை காணக்கூடியதாய் உள்ளது. வல்லரசுகள் தமது ஆதிக்க, பொருளாதார நலனுக்காக யுத்தத்தை நடத்திக் கொண்டிருக்கின்றன.
வல்லரசுகளும், அதிகாரத்தில் இருப்பவர்களும் அப்பாவி மக்கள் மீது கொஞ்சமேனும் இரக்கம் காண்பிப்பதில்லை.

இந்தியாவில் கேரள மாநிலத்தை சேர்ந்த மது எனச் சொல்லப்படும் ஒரு நபர், தனது பசிக் கொடுமையில் 200 ரூபா பெறுமதியான உணவுப் பொருட்களை கடையில் திருடியதற்காக, சில வாலிபர்கள் அவரைப் பிடித்து அடித்து கொலை செய்து விட்டார்கள். மதுவை பிரேத பரிசோதனை செய்த பொழுது அவர் வெறுவயிற்றோடு இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. பசிக்கொடுமையால் வேறுவழி தெரியாமால் திருடியதற்காக ஈவிரக்கமின்றி கும்பலாக அடித்து, அவற்றை கானொளிப்படுத்திய வக்கிர மனசுக்காரரை என்னவென்று சொல்வது.
இதே இந்தியாவிலேயே மாட்டிறைச்சி சாப்பிட்டதற்காக கொலை செய்யும் மத வைராக்கியம் கொண்ட இரக்கமற்ற, மனுதாபிமானமற்ற மனிதர்களைக் காணக்கூடியதாய் உள்ளது.
இப்படிப்பட்ட செயல்கள் இன்று நேற்றல்ல உலகம் உண்டாக்கப்பட்ட நாளிலிருந்து சாத்தான் மனித இனத்தை கொடுமைப்படுத்துவதிலும், அழிப்பதிலும் குறியாகவே இருந்துவருகிறான்.

மத்தேயு 24 ம் அதிகாரத்தில் உலகத்தின் முடிவு காலத்தில் என்னவெல்லாம் நடக்கும் என்பதை இயேசுக்கிறிஸ்து சீஷருக்கு சொல்லியிருக்கிறார். அவற்றையே இன்றைய நாட்களில் நாங்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.
மனித குலத்துக்கு எதிரான இரக்கமற்ற காரியங்கள் நடக்க கூடாது என எல்லோரும் ஜெபித்துக் கொண்டிருக்கிறோம். அதே வேளை பாதிக்கபட்ட மக்களை மீட்பதற்கும் நாங்கள் செயலாற்ற வேண்டும்.
வேதத்தில் முன்பின் அறியாத பாதிக்கப்பட்ட ஒரு நபரை காப்பாற்ற பாடுபட்ட இரக்கமுள்ள ஒரு நபரைக் குறித்தே இன்று தியானிக்கப் போகிறோம்.

எல்லா மனிதர்களுக்குள்ளிருக்கும் பொதுவான சுபாவமே இரக்கமாகும்.
துன்ப துயரத்தில் அல்லது நெருக்கத்திலிருக்கும் ஒருவர் மீது காண்பிக்கும் கரிசனையே இரக்கமாகும்.
இரத்த உறவுகள், நண்பர்கள், காதலர்கள், வேண்டப்பட்ட நபர்கள் என மாறுபட்ட அளவில் இரக்கம் காண்பிக்கும் மனநிலையுள்ளது.

பெரும்பாலானோர் பாதிப்புக்குள்ளானவர்களை கண்டு பரிதபிப்பார்கள், அனுதாபப்படுவார்கள். ஆனால் அப்பாதிப்பிலிருந்து மீழுவதற்கு எல்லோரும் உதவி செய்ய முன்வருவதில்லை. ஒரு சிலரே அப்பாதிப்பிலிருந்து மீழுவதற்கு உதவி செய்ய முன்வருகிறார்கள்.

லூக்கா 10: 30-37 வரையான வசனங்களில் நல்ல சமாரியன் கதையை வாசிக்கலாம்.
அக்கதையில்: ஒரு மனுஷன் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகையில் கள்ளர் கையில் அகப்பட்டான்; அவர்கள் அவன் வஸ்திரங்களை உரிந்துகொண்டு அவனைக் காயப்படுத்தி, குற்றுயிராக விட்டுப் போனார்கள்.
அப்பொழுது தற்செயலாய் ஒரு ஆசாரியன் அந்த வழியே வந்து, அவனைக்கண்டு, பக்கமாய் விலகிப்போனான்.
அந்தப்படியே ஒரு லேவியனும் அந்த இடத்துக்கு வந்து, அவனைக் கண்டு, பக்கமாய் விலகிப்போனான்.
பின்பு சமாரியன் ஒருவன் பிரயாணமாய் வருகையில், அவனைக் கண்டு, மனதுருகி,
கிட்ட வந்து, அவனுடைய காயங்களில் எண்ணெயும் திராட்சரசமும் வார்த்து, காயங்களைக் கட்டி, அவனைத் தன் சுயவாகனத்தின்மேல் ஏற்றி, சத்திரத்துக்குக் கொண்டுபோய், அவனைப் பராமரித்தான்.
மறுநாளிலே தான் புறப்படும்போது இரண்டு பணத்தை எடுத்து, சத்திரத்தான் கையில் கொடுத்து: நீ இவனை விசாரித்துக்கொள், அதிகமாய் ஏதாகிலும் இவனுக்காகச் செலவழித்தால், நான் திரும்பிவரும்போது அதை உனக்குத் தருவேன் என்றான்.

ஆசாரியன்.
கயாப்பட்டு குற்றுயிராய் கிடக்கும் நபரைக் காப்பாற்றுவதற்கோ அல்லது உதவி செய்வதற்கோ விரும்பாது, ஒதுங்கி ஓரமாய் விலகிப் போகிறார். காயப்பட்டிருப்பவனை தொட்டால் தீட்டாகிவிடும் எனக் கருதியிருக்கலாம். முன்பின் அறியாதவனை தான் ஏன் காப்பாற்ற வேண்டும் என நினைத்திருக்கலாம். இவருக்கு உதவி செய்வதால் தனக்கொரு லாபமும் இல்லை என்றும் நினைத்திருக்க கூடும்.
யார் இவர்? ஆலயப்பணியில் மிகவும் உயர்ந்த பொறுப்பில் இருப்பவர். தேவாலயத்தில் மனிதனுக்கும் கடவுளுக்கும் மத்தியஸ்தராய் செயல்படும் பரிசுத்தவான்.

லேவியன்.
கடந்து சென்ற ஆசாரியனைப் போலவே இவனும் பாதிக்கப்பட்டவன் மீது இரக்கம் காண்பிக்காது ஒதுங்கி ஓரமாய் விலகிப் போவதை காணக்கூடியதாய் உள்ளது.
யார் இவர்? தேவாலயத்தில் தொண்டாற்றும் மதிப்புள்ள நபராகும். பாதிக்கப்பட்டிருக்கும் நபருக்கு உதவி செய்யப் போனால், நேரம் விரையமாகிவிடும், ஆலயப்பணிகள் செய்வதில் தாமதம் ஏற்பட்டுவிடும் என்று கருதி சென்றிருக்கலாம்.

சமாரியன்.
1. மனதுருகுகிறான்.
2. கிட்டப் போகிறான்.
3. காயங்களுக்கு எண்ணெயும் திராட்சரசமும் வார்க்கிறான்.
4. தனது வாகனத்தில் ஏற்றிச் செல்லுகிறான்.
5. சத்திரத்தில் கொண்டுபோய் பராமரிக்கிறான்.
6. பணத்தை கொடுத்து, அவன் பூரணமாய் குணமாகும்வரை பராமரிக்க கேட்கிறான்.
7. மேலதிகமாக செலவானால் திரும்பிவரும்போது தருவதாக உத்தரவாதம் அளிக்கிறான்.
பாதிக்கப்பட்ட நபரை தனது சொந்த உறவு போல் சமாரியன் நேசிக்கிறான்.
தனது நேரத்தை பணத்தையெல்லாம், முன்பின் அறியாத ஒரு மனுஷனின் உயிர் காப்பாற்றப்பட செலவிடுகிறான். அந்நபர் உயிர் பிழைத்துவிட வேண்டும். அந்நபர் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்ற அபிலாசையோடு சமாரியன் பணிசெய்தான்.

பிரியமானவர்களே!
ஆசாரியன், லேவியன், சமாரியன் இம்மூவரில் நீங்கள் யார்?
ஆண்மீக காரியங்களில் ஈடுபடும் மதவாதியான ஆசாரியனிடமும் லேவியனிடமும் இரக்கமில்லை. அவ்விருவரிடமும் தெய்வீக சுபாவமான அன்பு மனதுருக்கமில்லை.
எல்லோராலும் புறக்கணிக்கப்பட்டு ஒதுக்கப்பட்ட சமாரியனிடம் இரக்கமிருந்தது. அவனையே இயேசுக்கிறிஸ்து நினைவு கூர்ந்தார்.
எந்த விதமான பிரதிபலனையும் எதிர்பார்க்காமல், உள்நோக்கம், எதிர்பார்ப்பின்றி செயலாற்றிய சமாரியனைப் போல நானும் நீங்களும் வாழ்வோமாக.
கண்முன்னால் தெரியும் தேவையுள்ளோர், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வோமாக. எங்கள் மனதுருக்கம் குறித்து இயேசுக்கிறிஸ்து மகிழ்சியடையட்டும்.

இரக்கமுடையவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள்.
மத்தேயு 5:7

நன்றி கர்த்தாவே.

த. பிரபா

   
   
 
எங்களை தொடர்புகொள்ள
T.Pirabagaran
89 Laurel crescent
Romford
Essex
Rm7 0ru
England
  TP:-
Email:- info@thehandofjesus.com
சமூக வலைத்தளங்களில் எங்களுடன் தொடர்பு கொள்ள

        
உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது. சங்கீதம் 119:105
Copyright © 2015 The hand of jesus.com All Rights Reserved