ஆங்கிலம் | தமிழ் | சிங்களம்

 
 
  முகப்பு பக்கம்
  எங்களை பற்றி
  எங்கள் சேவைகள்
  தற்போதைய தேவைகள்
    ஜீவ வார்த்தைகள்
  கட்டுரைகள்
  வேதாகம வரைபடங்கள்
  ஜெப வேண்டுகோள்
  ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம்
  சிறுவர்கள் வேதாகம ஒளிநாடா
  கருத்துக்கள்
  ஒளிப்பதிவுகள்
  எங்களை தொடர்புகொள்ள

 தினசரி தியானம்
  ஆரம்ப நிலை
  இடை நிலை
    மேல்நிலை
  வேதாகம விளக்கம்

  ஜீவ வார்த்தைகள்

 பயனுள்ள இணைப்புகள்
  இணைய தளங்கள்
  www.tamilchristian.com
  www.tamilchristianworship.org
  வானொலி
  www.tamilchurchvos.org
  www.tamilchristianprayer.org
    தொலைக்காட்சி
  www.tamilchristianonline.net
    வேதாகமம்
  இணைய வேதாகமம்
    இணைய வேதாகமம் 2
    ஒலி வேதாகமம்
   


   

நான் வாங்குவதில்லை.


விதை விதைப்புக்கு தயாராகும் விவசாயி, ஏர், கலப்பை, மாடு கொண்டு நிலத்தை உழுது பண்படுத்தி எருப்போட்டு விதைவிதைத்து நீர் பாய்ச்சுவான்.
நேர்மையான உழைப்பு கௌரவமான வாழ்க்கை வாழும் விவசாயிகள், உடலைவருத்தி வியர்வைசிந்தி, மழையில் நனைந்து, வெயிலில் காய்ந்து, மணலில் கால்களை புதைத்து நடந்து பணியாற்றுவார்கள். இவ்வாறு வாழ்ந்த ஒரு மனிதனை கர்த்தர் தனது பணிக்காக அழைத்தார். அவர்தான் எலிசா.
(இன்று விஞ்ஞான மின்னியல் உபகரண பாவனை உச்சக்கட்டத்தில் இருப்பதால் விவசாயிகளின் பணியும் இலகுவாக்கப்பட்டுள்ளது.)
கர்த்தர் எலியாவிடம், ஆபேல்மேகொலா ஊரானான சாப்பாத்தின் குமாரனாகிய எலிசாவை உன் ஸ்தானத்திலே தீர்க்கதரிசியாக அபிஷேகம்பண்ணும்படி கேட்டுக்கொண்டார். (1இரா 19:16). எலியாவிடம் ஊரையும், தகப்பனது பெயரையும், எலிசாவினது பெயரையும் குறிப்பிட்டு, துல்லியமான விபரங்களை கர்த்தர் சொல்லி, அவரை (எலிசா) தீர்க்கதரிசியாக அபிஷேகம்பண்ணும்படி கட்டளையிட்டார்.

விளை நிலத்தை உழுது வேலை செய்து கொண்டிருந்த எலிசாவைச் சந்தித்த எலியா, தன்னோடு வரும்படி அழைத்தார். அதற்கு சம்மதித்த எலிசா வீட்டுக்கு போய் தாய் தகப்பனிடம் விபரத்தைச் சொல்லி அவர்களை முத்தம் செய்ததோடு, ஏர்மாடுகளைப் பிடித்து அடித்து, ஏரின் மரமுட்டுகளால் அவைகளின் இறைச்சியைச் சமைத்து ஜனங்களுக்குக் கொடுத்தார். அவர்கள் சாப்பிட்டபிற்பாடு, அவன் எழுந்து, எலியாவுக்குப் பின்சென்று அவனுக்கு ஊழியஞ்செய்தான். எலிசா கண்ணியமாக ஊழியத்துக்கு புறப்பட்டதை வாசிக்கிறோம்.

எலிசா விவசாயப் பணிக்கு முழுக்குப் போட்டுவிட்டு, கர்த்தரின் உயரிய, உன்னதமான, பாடுகள் நிறைந்த பணிக்கு பயணப்பட்டார்.
எலியாவோ, மயிர் உடை தரித்து, வார்க்கச்சையை அரையில் கட்டி மிக மிக எளிமையான வாழ்க்கை வாழ்ந்தார். (2இரா 1:8). எளிமையாக வாழ்ந்த போதும், தேவ ஆவியை கொண்டவராயும், தேவனோடு பேசும் மனுஷனாயுமிருந்தார். ராஜாக்களின் மரணத்தை எதிர்வு கூறுபவராயிருந்தார். ராஜாக்களை அபிஷேகம் பண்ணுபவராயிருந்தார். ராஜாக்களுக்கு தண்டனை கொடுப்பவராயிருந்தார். மரணமடைந்தவரை உயிர்ப்பிக்க வல்லவராயிருந்தார். வானத்திலிருந்து அக்கினியை வருவிக்க வல்லவராயிருந்தார். தேவனோடு பேசி அவர் உறவில் நிலைத்திருப்பவராயிருந்தார்.

உலகப்பிரகாரமான ஐஸ்வரியமற்ற எலியாவிடம் தேவப்பிரசன்னமிருந்ததை கண்ட எலிசா, அவரின் அழைப்பை மதித்து அவருக்கு (தேவ மனுஷனுக்கு) பின் சென்றார். எலியாவை நம்பி போகாமல் எலியாவை போஷித்து வழிநடத்தும் தேவனையே நம்பி போனார் எலிசா.
ஆரம்பத்தில் எலியாவுக்கு உதவியாளராயிருந்து, அவருக்கு பணிவிடை செய்தார் எலிசா.
இதை உதாரணம்காட்டி தங்களுக்கு பணிவிடை செய்யும்படி கேட்கும் போதகர்கள் இன்று இருக்கிறார்கள். இப்படி கேட்பவர்களின் வாழ்க்கை எலியாவின் வாழ்க்கையைப் போன்று எளிமையானதா என்பதே முக்கியமான கேள்வியாக உள்ளது.
எலிசா எலியாவை சொந்த தகப்பனைப் போல நேசித்தார். 2 இராஜாக்கள் 2:12 எலியா எடுத்துக் கொள்ளப்பட்டதும், என் தகப்பனே, என் தகப்பனே என பரிதபித்து அழுவதை வாசிக்கிறோம். வயசானவரை பாசத்தோடு பராமரித்தார் எலிசா. அவரோடு பசை போல் ஒட்டியிருந்து கவனித்தார்.
எலியா தான் பரலோகத்துக்கு எடுத்துக்கொண்டு போகப்போவதை முன்னறிவித்தார்.
இதைக் கேட்ட எலிசா மனவருத்தப்பட்டார். எடுத்துக் கொள்ளப்படப்போகிறார் என்றதும், முன்னரைவிட இன்னும் நெருக்கமானார். எலியாவும், தான் எடுத்துக் கொள்ளப்படுவதை எலிசா நேரில் பார்த்தால், அதிக கவலை கொள்வார், பிரிவை தாங்கமாட்டரென நினைத்து, தான் பெத்தேல் வரை போய் வருகிறேன் என்றார்.
அதற்கு எலிசா தானும் கூட வருகிறேனெனச் சொல்லி கில்காலிலிருந்து பெத்தேல் போனார்கள். அதன் பின்னர் பெத்தேலிலிருந்து எரிகோவிற்கும், எரிகோவிலிருந்து யோர்தானுக்கும் போனார்கள். இப்பயணமானது பலநூறு மைல் கொண்டது, பல வாரங்கள் செலவழித்திருப்பார்கள்.
இவ்விடங்களில் தீர்கதரிசிகளின் வேதாகம பள்ளியிருந்ததால் இருவரும் சென்று திரும்பியிருக்கலாம். எலியாவின் பொறுப்பை எலிசா ஏற்றுக் கொள்ளப்போகிறார் என்பதற்கு முன்னேற்பாடு செய்திருக்கலாம். எலியா எலிசாவை பொய் சொல்லி ஏமாற்றிவிட்டு பரலோகம் போக விரும்பவில்லை. எலியாவை வைராக்கியமாக பின்தொடர்ந்த எலிசாவிடம், நான் உன்னைவிட்டு எடுத்துக்கொள்ளப்படும் முன்னே நான் உனக்குச் செய்யவேண்டியது என்ன, கேள் என்றான். அதற்கு எலிசா: உம்மிடத்திலுள்ள ஆவியின் வரம் எனக்கு இரட்டிப்பாய்க் கிடைக்கும்படி வேண்டுகிறேன் என்றான்.
அதற்கு அவன்: அரிதான காரியத்தைக் கேட்டாய்; உன்னைவிட்டு நான் எடுத்துக்கொள்ளப்படுகையில் என்னை நீ கண்டால் உனக்குக் கிடைக்கும், இல்லாவிட்டால் கிடையாது என்றான்.

எலியா பரலோகத்துக்கு எடுத்துக்கொள்வதை கண்ட எலிசாவுக்கு அவரின் வாஞ்சைப்படி இரட்டிப்பான ஆவியின் வரத்தைப் பெற்றார்.
இரட்டிப்பு வரம் பெற்ற எலிசா எதிர்கொண்ட ஒரு சோதனையை இன்று சுருக்கமாக தியானிக்கலாம்.
சீரிய நாட்டு படைத்தலைவனாகிய நாகமான், வல்லமையுடைய படைத் தலைவனாயிருந்தான், சீரிய நாட்டு ராஜாவைக்காட்டில் மரியாதைக்குரியவனாய் நடத்தப்பட்டார். மிகுந்த செல்வந்தனாயும் இருந்தான். இப்படிப்பட்ட நாகமான் குஷ்டரோக நோயால் தாக்கப்பட்டிருந்தார். இஸ்ரவேல் தேசத்திலிருந்து சிறைப்பிடித்துச் செல்லப்பட்ட சிறிமியொருத்தி, நாகமான் வீட்டு வேலைக்காறியாயிருந்தாள். அச்சிறு பெண் நாகமான் மனைவியிடம், இஸ்ரவேலில் இருக்கும் தீர்க்கதரிசியை நாகமான் போய்ப்பார்த்தால் சுகம் கிடைக்குமென்றாள். நாகமான் அதற்க்கு சம்மதித்து, சீரிய ராஜாவிடம் அனுமதி கேட்டான். சீரிய ராஜா இஸ்ரவேல் ராஜாவுக்கு கடிதத்தை எழுதிக் கொடுத்ததோடு, பத்துத் தாலந்து வெள்ளியையும், ஆறாயிரம் சேக்கல் நிறைபொன்னையும், பத்து மாற்றுவஸ்திரத்தையும் எடுத்துப் போகும்படி சொன்னார்.
நாகமான், கடிதத்தையும் வெள்ளியையும் பொன்னையும் மாற்று வஸ்த்திரத்தையும் கொண்டு இஸ்ரவேல் ராஜாவின் அரண்மனைக்கு வந்தார். கடிதத்தை வாங்கிப்படித்த ராஜா தன்னால் எப்படி குஷ்டரோகத்தை குணமாக்க முடியுமென கலங்கி தன்னாடைகளைக் கிழித்துக் கொண்டான். இதைக் கேள்வியுற்ற எலிசா, நாகமானை தன்னிடம் அனுப்பும்படி சொன்னார்.
இஸ்ரவேல் ராஜா (ஆகாபின் மகன் யோராம்) நாகமானை எலிசாவிடம் அனுப்பி வைத்தார்.

நாகமான் தன் குதிரைகளோடும் தன் இரதத்தோடும் வந்து எலிசாவின் வாசற்படியிலே நின்றான். (2 இரா 5:9).
சிறுபெண் இஸ்ரவேல் தீர்க்கதரிசியைத் தான் பார்க்கச் சொன்னாள். ஆனால் நாகமான் போய் நின்ற இடமோ இஸ்ரவேல் ராஜாவின் அரண்மனையாகும்.
அரச மரியாதையோடு அரண்மனையில் நாகமானை தங்க வைத்து, தீர்க்கதரிசியை அரண்மனைக்கு அழைத்து, நாகமானை காண்பிப்பதே அவர்களின் திட்டமாயிருந்திருக்கலாம். எலிசாவோ தன்னை வந்து பார்க்கும்படி சொன்னார்.
எலிசாவின் இருப்பிடத்துக்கு குதிரைகளோடும் இரதத்தோடும் படைவீரரோடும் கோலாகலமாக சென்று எலிசாவின் வாசல்படியில் காத்து நின்றான்.
இக்கதையின் உச்சக்கட்ட காட்சி (climax) இந்த இடத்தில் தான் வருகிறது.
இந்த இடத்தில் தான் எலிசா சோதனையையும் வென்றார்.

எலிசாவின் வீட்டு வாசல்படியில் நிற்பவர் சாதாரண ஆளில்லை. சீரிய நாட்டு ராஜாவைக் காட்டில் மதிப்புமிக்க படைத்தளபதி. அவர்கள் நினைத்தால் உடனடியாக இஸ்ரவேல் மீது போர் கூட தொடுக்கலாம். அவர்களால் போரில் வெல்லவும் முடியும். அதைவிட அவர்கள் பெறுமதிமிக்க காணிக்கையை கொண்டுவந்திருந்தார்கள். வெள்ளியும் பொன்னும் கொண்ட கொள்கலங்களையுடைய ரதங்களும் எலிசாவின் வரவுக்காக காத்திருந்தன.
எலிசாவோ, நாகமானிடம் ஆள் அனுப்பி, நீ போய், யோர்தானில் ஏழுதரம் ஸ்நானம்பண்ணு; அப்பொழுது உன் மாம்சம் மாறி, நீ சுத்தமாவாய் என்று சொல்லச்சொன்னான். அதற்கு நாகமான் கடுங்கோபங்கொண்டு, புறப்பட்டுப்போய்: அவன் வெளியே வந்து நின்று, தன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைத் தொழுது, தன் கையினால் அந்த இடத்தைத் தடவி, இவ்விதமாய்க் குஷ்டரோகத்தை நீக்கிவிடுவான் என்று எனக்குள் நினைத்திருந்தேன். நான் ஸ்நானம்பண்ணிச் சுத்தமாகிறதற்கு இஸ்ரவேலின் தண்ணீர்கள் எல்லாவற்றைப்பார்க்கிலும் தமஸ்குவின் நதிகளாகிய ஆப்னாவும் பர்பாரும் நல்லதல்லவோ என்று சொல்லி, உக்கிரத்தோடே திரும்பிப் போனான்.
அப்பொழுது நாகமானின் வேலைக்காறனில் ஒருவன், நாகமானை தீர்க்கதரிசி சொன்னபடி, யோர்தானில் இறங்கி ஸ்நானம் பண்ணுமென புத்தி சொன்னார். நாகமானும் அதன்படி செய்து சுகமடைந்தான்.
நாகமான் தன் கூட்டத்தோடெல்லாம் தேவனுடைய மனுஷனிடத்துக்குத் திரும்பிவந்து, எலிசாவுக்கு முன்பாக நின்று: இதோ, இஸ்ரவேலிலிருக்கிற தேவனைத்தவிர பூமியெங்கும் வேறே தேவன் இல்லை என்பதை அறிந்தேன்; இப்போதும் உமது அடியேன் கையில் ஒரு காணிக்கை வாங்கிக்கொள்ளவேண்டும் என்றான்.
அதற்கு எலிசா, நான் வாங்குகிறதில்லை என்று கர்த்தருக்கு முன்பாக அவருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான். வாங்கவேண்டும் என்று அவனை வருந்தினாலும் தட்டுதல் பண்ணிவிட்டான். (2இரா 5:15-16)
எலிசா ஏன் ஆரம்பத்தில் நாகமானை பார்க்க முன்வரவில்லை?
நாகமானின் எதிர்பார்ப்பானது, எலிசா தன்னை தேடிவந்து, தன்னை கௌரவித்து, தனக்காக ஜெபித்து, தடவி குணமாக்கிவிட வேண்டுமென்பதாகும். அவர் சுகமாக்கியதும் ரதத்தினுள் இருக்கும் வெள்ளியையும் பொன்னையும் ஆடையையும் காணிக்கையாக கொடுக்கலாமென்ற பெருமையான நிலைப்பாட்டிலிருந்தான். நாகமானோ சீரிய ராஜாவின் முதன்மை படைத்தளபதி, பராக்கிரமசாலியென்ற மேட்டிமையான மனநிலையிலிருந்தான்.
இவற்றையெல்லாம் முற்கூட்டியறிந்த எலிசா, தேவனின் அன்பை விலைபேசுவதற்கு வந்த நாகமானை பார்க்காது தவிர்த்தார்.

1. எலிசா, தன்னை முன்நிலைப்படுத்தவில்லை.
2. தேவன் கொடுத்த வரத்தை வெள்ளிக்கும் பொன்னுக்கும் விற்கவில்லை.
3. தேடிவந்த எல்லோருக்கும் அற்புதம், விடுதலை கர்த்தர் கொடுப்பாரென்பதை நிரூபித்தார்.

அற்புதம் விடுதலை நன்மைகளைச் செய்யப்போவது கர்த்தர். அவரே மகிமைப்பட வேண்டுமென்று நினைத்த எலிசா. நாகமானை பார்க்க போகவில்லை. ஒரு வேளை நாகமானை பார்க்க போயிருந்தால், நாகமான் எலிசாவைத்தான் புகழ்ந்திருப்பார்.
நாகமானைப் பார்த்து பொன்னையும் வெள்ளியையும் வாங்கியிருந்தால், அந்தக் காணிக்கைக்காகத்தான் சுகமாக்கியதாக முடிந்திருக்கும்.
ராஜாவென்றுமல்ல, படைத்தளபதியென்றுமல்ல, பணக்காரனென்றுமல்ல, அழகுள்ளவனென்றுமல்ல, ஏழையென்றுமல்ல, தரித்திரனென்றுமல்ல, பாவியென்றுமல்ல எல்லோரையும் தேவன் ஒரே மாதிரியே நேசிக்கிறார்.
அவரைத் தேடி வருவோரை புறம்பே தள்ளுபவரல்ல.
தேடி வந்த நாகமானையும் கர்த்தர் நேசித்து விடுதலை கொடுத்தார்.
நாகமான் மறுபடியும் எலிசாவிடம் சென்று, அவர் முன்னிலையில் நின்று கர்த்தரைப் புகழ்ந்தான். இஸ்ரவேல் தேவனைத் தவிர பூமியில் வேறு தேவனில்லையென்று சொன்னான். தன்னிடமிருந்து காணிக்கையை பெற்றுக்கொள்ளுமாறு வருந்திக் கேட்டு, எலிசாவிடம் கொடுக்க முனைந்த போது ‘’நான் வாங்குவதில்லை’’ எனச் சொல்லி தட்டிவிட்டார்.
ஆரம்பத்தில் எலிசாவின் வீட்டு வாசல்படியில் நின்று எலிசாவின் வரவுக்கு காத்திருந்த நாகமான், சுகமடைந்து வந்தபோது மனத்தாழ்மையோடு எலிசாவை நேரில் போய்ப் பார்த்தார். மனந்திரும்பியவராயிருந்தார்.
பணம் பொருள்வாங்கமாட்டேனெனச் சொல்லுபவர்களிடம், அந்த பணத்தை பொருளை அவர்கள் கண்முன்னால் வைத்தால், மனம் சலனப்பட்டு அப்பணத்தை பொருளை பெற்றுக்கொள்பவர்களாயிப்பார்கள். (இதை நீங்கள் முயற்சி செய்து பாருங்கள்). எலிசா தனது நிலைப்பாட்டில் உறுதியாயிருந்தார்.

பிரியமானவர்களே!

எலிசாவின் உதவியாளரான கேயாசி, எலிசா வாங்க மறுத்த காணிக்கைக்கு ஆசைப்பட்டு, நாகமானிடம் சென்று பொய் சொல்லி வெள்ளியையும் பொன்னையும் பெற்றுக்கொண்டதால், இறுதியில் நாகமனின் குஷ்டரோகத்தை அவனும் அவன் சந்ததியினரும் தண்டனையாக பெற்றுக்கொண்டதாக வேதாகமத்தில் வாசிக்கிறோம். (2இரா 5:26-27).
ஒருவேளை எலிசா அக்காணிக்கையை பெற்றிருந்தால், எலிசாவில் தங்கியிருந்த தேவ ஆவி அவரை விட்டுப் போயிருக்கலாம். மனுசகனம் புகழ் பொருளாசையற்று இருந்ததால். தேடிவந்த சோதனையை எலிசா ஜெயித்தார்.
தேவப்பிரசன்னத்தோடு வரங்களோடு தொடர்ந்து ஜீவித்தார். தேவப்பிரசன்னத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து, பொன், வெள்ளி, புகழை புறக்கணித்தார்.

எலிசா ஒன்றும் பெரிய செல்வ சீமானல்ல. 2 இராஜாக்கள் ஆறாம் அதிகாரத்தில், தீர்க்கதரிசிகளுக்கு இடப்பற்றாக்குறை வந்தபோது, அவரே நேரில் சென்று அதற்குரிய பொருட்களை சேகரித்ததை வாசிக்கிறோம்.
எலிசா தன்னையே முழுமையாக கர்த்தருக்கு ஒப்புக்கொடுத்ததால், அவருடைய நாம மகிமைக்காக மட்டுமே வாழ்ந்தார். கர்த்தருடைய உறவுக்கே முக்கியத்துவம் கொடுத்து வாழ்ந்ததால் அழிந்து போகும் உலகப் பொருட்கள் அவருக்கு பெரிதாக தெரியவில்லை. எல்லாக்காலத்திலும் கர்த்தர் போஷிப்பாரென்ற நம்பிக்கையிருந்தது. தேவன் கொடுத்த வல்லமை வரங்களை வைத்து பொருள் சம்பாதிக்க ஆசைப்படவில்லை. இலவசமாய் பெற்றதை இலவசமாய் கொடுத்தார்.
உலக ஐஸ்வரியம் மனிதகனத்தைக் காட்டில் தேவப்பணி, தேவ உறவை, தேவப்பிரசன்னைத்தை முதன்மையாக கருதி வாழ்ந்த எலிசாவைப் போல நாமும் வாழுவோம். உலக ஐஸ்வரியத்துக்காக வாழாது, ஊழியம் செய்யாது, எங்களை முன்னிலைப்படுத்தாது, எங்கள் ஊழியங்களை முன்நிலைப்படுத்தாது, கர்த்தரையே முன்நிலைப்படுத்தி, அவர் நாமமகிமைக்காக வாழுவோமாயின், என்னையும், உங்களையும் நம்பி வரங்களைத் தந்து கர்த்தர் வல்லமையாக பயன்படுத்துவார்.
லூக்கா 16:13. எந்த ஊழியக்காரனும் இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்யக்கூடாது, ஒருவனைப் பகைத்து மற்றவனைச் சிநேகிப்பான், அல்லது ஒருவனைப்பற்றிக்கொண்டு மற்றவனை, அசட்டைபண்ணுவான். தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களாலே கூடாது என்றார்.

நன்றி கர்த்தாவே.

த.பிரபா.

   
   
 
எங்களை தொடர்புகொள்ள
T.Pirabagaran
89 Laurel crescent
Romford
Essex
Rm7 0ru
England
  TP:-
Email:- info@thehandofjesus.com
சமூக வலைத்தளங்களில் எங்களுடன் தொடர்பு கொள்ள

        
உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது. சங்கீதம் 119:105
Copyright © 2015 The hand of jesus.com All Rights Reserved