ஆங்கிலம் | தமிழ் | சிங்களம்

 
 
  முகப்பு பக்கம்
  எங்களை பற்றி
  எங்கள் சேவைகள்
  தற்போதைய தேவைகள்
    ஜீவ வார்த்தைகள்
  கட்டுரைகள்
  வேதாகம வரைபடங்கள்
  ஜெப வேண்டுகோள்
  ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம்
  சிறுவர்கள் வேதாகம ஒளிநாடா
  கருத்துக்கள்
  ஒளிப்பதிவுகள்
  எங்களை தொடர்புகொள்ள

 தினசரி தியானம்
  ஆரம்ப நிலை
  இடை நிலை
    மேல்நிலை
  வேதாகம விளக்கம்

  ஜீவ வார்த்தைகள்

 பயனுள்ள இணைப்புகள்
  இணைய தளங்கள்
  www.tamilchristian.com
  www.tamilchristianworship.org
  வானொலி
  www.tamilchurchvos.org
  www.tamilchristianprayer.org
    தொலைக்காட்சி
  www.tamilchristianonline.net
    வேதாகமம்
  இணைய வேதாகமம்
    இணைய வேதாகமம் 2
    ஒலி வேதாகமம்
   


   

காத்திருக்கிறார்.


பரீட்சை எழுதிய மாணவன் தனது பெறுபேறுக்காக பதட்டத்தோடு காத்திருப்பான்.
நிறுவனமொன்றில் வேலைக்கு விண்ணப்பித்த ஒருவர், அன்நிறுவனத்திடமிருந்து வேலைக்கான அழைப்புவருமென எதிபார்ப்போடு காத்திருப்பார்.
புதிதாக திருமணமான தம்பதிமார் எப்போது முதலாவது குழந்தை கிடைக்குமென ஆசையோடு காத்திருப்பார்கள்.
ஒரு காதலன் தனது காதலியோடு பேசுவதற்காக பலமணி நேரம் உற்சாகமாக காத்திருப்பான்.
ஒரு தேவப்பிள்ளை, தானெடுக்க வேண்டிய சரியான முடிவுக்காக அல்லது தீர்மானத்துக்காக கர்த்தர் பேசவேண்டுமென பால மணிநேரம் ஜெபித்து பதிலுக்காக காத்திருப்பான்.
இவ்வாறு தனிப்பட்ட தேவையின் நிமிர்த்தம், தமது எதிர்கால நலனின்பால் மனிதர்கள் பல மணி நேரம், பல நாட்கள், பலமாதம், பலஆண்டுகளென காத்திருப்பு செய்கிறார்கள்.

இன்று பிறரின் தேவையின் நிமிர்த்தம், பிறரின் நலனின்பால் காத்திருப்பு செய்வோர் அரிதாகவே உள்ளனர். ஒருவேளை காத்திருப்பு செய்து உதவினாலும், அதற்கான பிரதியுபகாரத்தை எதிர்பார்ப்பவர்களாகவே மனிதர்கள் இருக்கிறார்கள். குறைந்தபட்சம் ‘’நன்றி’’ எனச் சொல்ல வேண்டுமென எதிர்பார்பார்கள். ஆனால் எந்தவிதமான எதிர்பார்ப்புமில்லாமல் காத்திருந்து உதவியவரையே இன்று சுருக்கமாக தியானிக்கப்போகிறோம்.

இயேசுக்கிறிஸ்துவானவர் யூதேயாவிலிருந்து கலிலேயா நோக்கி பிரயாணப்பட்டார். சமாரியாவில் சீகார் எனும் ஊரில் உள்ள யாக்கோபுவின் கிணற்றினருகில் இளைப்பாறினார். சீஷர்கள் அனைவரும் சாப்பாடு வாங்குவதற்காக ஊருக்குள் சென்றுவிட்டார்கள்.
மதியம் பன்னிரெண்டு மணி ஊச்சிவெயிலில் கிணற்றருகில் இளைப்பாறும் சாக்கில் ஒரு ஆத்துமாவைச் சந்திக்கும் முதன்மை நோக்கில் காத்திருந்தார் இயேசப்பா.
உண்மையில் இளைப்பாற வேண்டுமாயின் மரத்தின் கீழ் அல்லது நிழலான இடத்தை தான் தெரிவு செய்திருக்க வேண்டும். கிணற்றை யாரும் தெரிவு செய்யமாட்டார்கள்.
அவர் எதிர்பார்த்து காத்திருந்த நபர் தண்ணீர் எடுக்க கிணற்றண்டை வந்தார்.
இந்த சம்பவத்தை யோவான் 4: 6-43 வரையான வேத வசனங்களில் வாசிக்கலாம்.

கிணற்றண்டை வந்திருந்த சமாரிய ஸ்திரியிடம் தாகத்துக்கு தண்ணீர் தரும்படி இயேசுக்கிறிஸ்துவானவர் கேட்டார். அதற்கு ஸ்திரி நீர் யூதனாயிருக்க, சமாரியா ஸ்திரீயாகிய என்னிடத்தில், தாகத்துக்குத்தா என்று எப்படிக் கேட்கலாம் என்றாள். இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: நீ தேவனுடைய ஈவையும், தாகத்துக்குத்தா என்று உன்னிடத்தில் கேட்கிறவர் இன்னார் என்பதையும் அறிந்திருந்தாயானால், நீயே அவரிடத்தில் கேட்டிருப்பாய், அவர் உனக்கு ஜீவத்தண்ணீரைக் கொடுத்திருப்பார் என்றார். ஸ்திரி ஜீவத்தண்ணீரை தனக்கு தரும்படி கேட்டார். அதற்கு இயேசு உனது கணவனை கூட்டி வரும்படி கேட்டுக்கொண்டார். அதற்கு அந்த ஸ்திரீ எனக்குப்புருஷன் இல்லை என்றாள். இயேசு அவளை நோக்கி: எனக்குப் புருஷன் இல்லையென்று நீ சொன்னது சரிதான். எப்படியெனில், ஐந்து புருஷர் உனக்கிருந்தார்கள், இப்பொழுது உனக்கிருக்கிறவன் உனக்குப் புருஷனல்ல, இதை உள்ளபடி சொன்னாய் என்றார்.
அப்பொழுது அந்த ஸ்திரீ அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் தீர்க்கதரிசி என்று காண்கிறேனென்று சொன்னாள். அதன் பின்னர் இருவரும் தெழுகையைக் குறித்து பேசினார்கள். அந்த ஸ்திரீ அவரை நோக்கி: கிறிஸ்து என்னப்படுகிற மேசியா வருகிறார் என்று அறிவேன், அவர் வரும்போது எல்லாவற்றையும் நமக்கு அறிவிப்பார் என்றாள்.
அதற்கு இயேசு: உன்னுடனே பேசுகிற நானே அவர் என்றார். இவ்வாறு உரையாடிக் கொண்டிருந்த போது, சீஷர்கள் சாப்பாடு கொண்டு வந்துவிட்டார்கள்.  அப்பொழுது அந்த ஸ்திரீ, தன் குடத்தை வைத்துவிட்டு, ஊருக்குள்ளேபோய், ஜனங்களை நோக்கி: நான் செய்த எல்லாவற்றையும் ஒரு மனுஷன் எனக்குச் சொன்னார், அவரை வந்து பாருங்கள், அவர் கிறிஸ்துதானோ என்றாள்.  நான் செய்த எல்லாவற்றையும் எனக்குச் சொன்னார் என்று சாட்சி சொன்ன அந்த ஸ்திரீயினுடைய வார்த்தையினிமித்தம் அந்த ஊரிலுள்ள சமாரியரில் அநேகர் அவர்மேல் விசுவாசமுள்ளவர்களானார்கள். சமாரியர் அவரிடத்தில் வந்து, தங்களிடத்தில் தங்கவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டார்கள்; அவர் இரண்டுநாள் அங்கே தங்கினார். அப்பொழுது அவருடைய உபதேசத்தினிமித்தம் இன்னும் அநேகம்பேர் விசுவாசித்தார்கள்.

*சீர்கொட்டுப்போன பாவ வாழ்க்கை வாழ்ந்த சமாரிய ஸ்திரி, ஊர்மக்களின் கண்ணில் படாமால் மத்தியான வேளையில் தண்ணீர் அள்ள கிணற்றுக்கு வந்தாள்.
கிணற்றருகில் இருந்த இயேசுக்கிறிஸ்துவானவர் தாகத்துக்கு தண்ணீர் தரும்படி கேட்ட போது, தாங்கள் சமாரியர், புறக்கணிக்கப்பட்டவர்களிடம் எப்படி யூதர்கள் கேட்கமுடியுமென தாழ்வு மனப்பான்மையோடு பதில் கொடுத்தாள். அவள் தண்ணீர் கொடுக்க மறுக்கவில்லை. இயேசுக்கிறிஸ்து ஜீவத்தண்ணீர் பற்றி சொல்லிய போது, அதை தனக்கு தரும்படி கேட்டுக்கொண்டாள். பூமிக்கடியில் இருக்கும் தண்ணீரென நினைத்து அதை அவள் கேட்டாள். இயேசுக்கிறிஸ்து சொல்லியனவற்றை அசட்டை பண்ணாது, நிதானித்து கேட்டு பதில் கொடுத்தாள். ஆவிக்குரிய அறிவு மந்தமாயிருந்த போதும் உரையாடலை தவிர்த்துவிட்டு போக அவள் விரும்பவில்லை.
ஐந்து கணவன்மார் குறித்து சொல்லப்பட்டவுடன், அவள் இயேசுக்கிறிஸ்துவை தீர்க்கதரிசி என்று சொல்லி, தனது பாவ வாழ்க்கையை மறைமுகமாக ஆமோதித்தாள்.
இவருக்கென்ன தெரியப் போகிறதென நினைத்து, மறுத்து பொய் சொல்லவோ, அல்லது குடத்தை தூக்கிக் கொண்டு வீடு போகவோ இல்லை. ஆனால் அவள் உரையாடலின் தலைப்பை மாற்றி தொழுகை பற்றி பேசத் தொடங்கினாள்.
வேத அறிவு குறைவாயிருந்த போதும், மேசியா (அபிஷேகம் பண்ணப்பட்டவர்) வருவாரென்பதை அறிந்து வைத்திருந்தாள். அதை அவள் விசுவாசித்துமிருந்தாள்.
இப்பொழுது மேசியா தானே என இயேசுக்கிறிஸ்து சொன்னதும், அவரை பரிகாசிக்காது, அவநம்பிக்கை கொள்ளாது, அவரை மேசியா என்றே ஏற்றுக்கொண்டுவிட்டாள். வார்த்தையாகிய தேவனின் வார்த்தையே அவளை மனந்திரும்ப வைத்தது.
மேசியாவை கண்ட சிலாக்கியத்தை, மகிழ்ச்சியை மற்றவர்களும் கண்டுகளிக்க வேண்டுமென்ற பெரிய மனதுடையவளாய், ஊருக்குள் ஓடிப்போய் ஒவ்வொரு வீடாய் போய் சொல்லி, எல்லோரையும் இயேசுவண்டை கூட்டிவந்தாள்.
தன்னுடைய தண்ணீர் குடத்தை கூட மறந்தவளாயிருந்தாள். மதிய உணவையும் மறந்தவளாயிருந்தாள்.
கர்த்தருடைய நாமம் மகிமைப்படுவதாக.
தன்னை புறக்கணித்து, ஒதுக்கிய ஊர்மக்களுக்கு, தானேன் நற்செய்தியை சொல்ல வேண்டுமென்ற பகைமை உணர்வற்றவளாய், எல்லோரும் மேசியாவை கண வேண்டுமென ஆசைப்பட்டாள். அதுமட்டுமல்லாமல், தனிப்பட்ட ரீதியில் அவள் இயேசுக்கிறிஸ்துவிடம் எதையும் கேட்கவில்லை. அவளுடைய தன்னலமற்ற கிரியையால் இறுதியில் அந்த ஊரில் அநேகம்பேர் இரட்சிக்கப்பட்டார்கள்.

*இயேசுக்கிறிஸ்துவானவர் கிணற்றருகில் இருந்து காத்துக் கொண்டிருந்தது, ஒரு இளவரசிக்காகவோ, ஒரு செல்வச்சீமாட்டிக்காகவோ, ஒரு குணசாலியான ஸ்திரிக்காகவோ, ஒரு அழகுள்ள ஸ்திரிக்காகவோ, ஒரு பிரபல்யமான ஸ்திரிக்கோ இல்லவே இல்லை. (இப்படிப்பட்டவர்களையும் நேசிக்கிறார்) எல்லோராலும் புறக்கணித்து ஒதுக்கப்பட்ட, ஒழுக்கமான வாழ்க்கை வாழா, பாவ வாழ்க்கையில் மூழ்கியிருந்த பேதையான பெண்ணையே சந்திப்பதற்காக காத்திருந்தார்.
அவளோடு போச்சை ஆரம்பிக்கும் பொழுது, தண்ணீர் தரும்படி இயல்பாக பேச்சை தொடங்கினார். (சுவிஷேசம் சொல்லுபவர்கள் இந்த மாதிரியை பின்பற்றுவது நலம்)
எடுத்த எடுப்பில் தான் மேசியா என்பதை வெளிப்படுத்தவில்லை.
நீ பாவியென பட்டவர்த்தனமாக அவர் சொல்லவுமில்லை. ஜீவத்தண்ணீரென்று பரிசுத்தாவியானவரை அடையாளப்படுத்தி பேசினார். அதை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் பாவத்தை அறிக்கையிட்டு, பாவவாழ்க்கையை கைவிட்டு, பரிசுத்தமாய் வாழவேண்டும். பாவம் பரிசுத்தம் போன்றனவற்றை நேரடியாக பேசாத இயேசுக்கிறிஸ்து, அவள் புருஷனை அழைத்துவரும்படி கேட்டுக் கொண்டார். அவளுடைய பாவ வாழ்க்கையை சுட்டிக்காட்டுவதற்காக அப்படிக் கேட்டுக் கொண்டார்.
இன்றைய விசுவாசிகள், பிரசங்கிமார் குத்திக்காட்டி பேசுவதில் வல்லவர்கள். சுட்டிக்காட்டுவதற்கும், குத்திக்காட்டுவதற்கும் வித்தியாசம் உண்டு.
ஒருவர் மீது அக்கறைப்பட்டு அவரது தவறை இனம் காண்பிப்பது சுட்டிக்காட்டுவதாகும். ஒருவரை காயப்படுத்தி, அந்நபர் வேதனைப்படுவதை பார்த்து மகிழும் நோக்கில் பேசுவது குத்திக்காட்டுவதாகும்.
அவள் மறுப்பு தெரிவிக்காது உண்மையை ஒத்துக்கொண்டதே, மனந்திரும்பியதன் அடையாளமாகும். பேச்சை திசை திருப்பி தொழுகையைப் பற்றி பேசிய போதும், அதற்க்கும் இயேசுக்கிறிஸ்து பதில் கொடுத்தார். அவளை கடிந்து கொள்ளாது, தேவன் ஆவியாயிருக்கிறார், அவரை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ள வேண்டுமென அவளுக்கு கற்றுக் கொடுத்தார். சமாரிய ஸ்திரி மனந்திரும்பி, இரட்சிப்பை பெற்று நித்திய வாழ்வை சுதந்தரித்துக் கொள்ள வேண்டுமென்பதற்காகவே, தானே மேசியா என்பதை தெரியப்படுத்தினார்.
ஐந்து புருஷனை வைத்திருந்த, இந்த விபச்சாரிக்கு தான் ஏன் மேசியா என்பதை வெளிப்படுத்த வேண்டுமென நினைத்ததேயில்லை.
உலக மனிதர்கள் பார்ப்பது போல ஒருவரையும் அவர் புறக்கணிப்பதோ அற்பமாக பார்பதே இல்லை. அவரைப் பொறுத்தளவில் எல்லோரும் தேவசாயலை உடையவர்கள், எல்லோரும் தன்னை தகப்பனாக ஏற்றுக்கொண்டு தன் பிள்ளைகளாக வேண்டுமென்பதே அவரின் பேரவாவும் குறிக்கோளுமாகும்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் காத்திருந்தது போலவே அவர் இன்றும் காத்துக்கொண்டிருக்கிறார்.  இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான். (வெளி 3:20) இன்றும் அவர் வாசல்படியில் வந்து காத்திருக்கிறார்.

பிரியமானவர்களே!
சமாரிய ஸ்திரியானவள் முன்பின் கண்டிராத இயேசுக்கிறிஸ்துவை முதல் முறையாக கண்டு பேசிய பொழுதே, அவரே மெய் தேவன், அவரே மேசியா என விசுவாசித்து ஏற்றுக் கொண்டாள். அதுமட்டுமல்லாமல் பிறருடைய இரட்சிப்புக்காகவும் அவள் பிரயாசைப்பட்டாள்.
தான் பாவி, தான் ஒன்றுக்கும் பிரயோஜனமற்றவளென்ற தாழ்வு மனப்பாண்மையற்றவளாய், மனதில் கசப்பற்று பிறரை உண்மையாக நேசிக்கும் சுபாவம் கொண்டவளாயிருந்தாள்.
இந்த நல்ல சுபாவமே “சமாரிய ஸ்திரி” என்ற நாமத்தோடு வேதத்திலும் இடம்பிடிக்கவும் செய்துவிட்டது.

காத்திருப்பவரை தாமதப்படுத்தாது, எங்கள் இதயக்கதவுகளை திறந்து, அவர் (இயேசு) வாசம் செய்ய இடமளிப்போமாக,
காத்திருந்து உதவிய இயேசப்பாவைப் போல, நாமும் உள்நோக்கம் எதிர்பார்ப்பில்லாமல் எல்லோரையும் மனப்பூர்வமாய் நேசித்து, எல்லோருக்கும் இயேசுக்கிறிஸ்துவின் அன்பை எடுத்துச் சொல்லி வாழுவோமாக. ஆமென்

மத்தேயு 11:28 வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.

நன்றி கர்த்தாவே

த. பிரபா

   
   
 
எங்களை தொடர்புகொள்ள
T.Pirabagaran
89 Laurel crescent
Romford
Essex
Rm7 0ru
England
  TP:-
Email:- info@thehandofjesus.com
சமூக வலைத்தளங்களில் எங்களுடன் தொடர்பு கொள்ள

        
உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது. சங்கீதம் 119:105
Copyright © 2015 The hand of jesus.com All Rights Reserved