ஆங்கிலம் | தமிழ் | சிங்களம்

 
 
  முகப்பு பக்கம்
  எங்களை பற்றி
  எங்கள் சேவைகள்
  தற்போதைய தேவைகள்
    ஜீவ வார்த்தைகள்
  கட்டுரைகள்
  வேதாகம வரைபடங்கள்
  ஜெப வேண்டுகோள்
  ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம்
  சிறுவர்கள் வேதாகம ஒளிநாடா
  கருத்துக்கள்
  ஒளிப்பதிவுகள்
  எங்களை தொடர்புகொள்ள

 தினசரி தியானம்
  ஆரம்ப நிலை
  இடை நிலை
    மேல்நிலை
  வேதாகம விளக்கம்

  ஜீவ வார்த்தைகள்

 பயனுள்ள இணைப்புகள்
  இணைய தளங்கள்
  www.tamilchristian.com
  www.tamilchristianworship.org
  வானொலி
  www.tamilchurchvos.org
  www.tamilchristianprayer.org
    தொலைக்காட்சி
  www.tamilchristianonline.net
    வேதாகமம்
  இணைய வேதாகமம்
    இணைய வேதாகமம் 2
    ஒலி வேதாகமம்
   


   

தந்தையர் தினம்.


வருடந்தோறும் ஜூன் மாதம் மூன்றாம் வாரத்து ஞாயிற்றுக்கிழமையன்று தந்தையர் தினம் உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுகிறது.
இதன் தோற்றத்துக்கு, அமெரிக்காவின் வாஷிங்டன் அருகேயுள்ள ஸ்போகேனே என்ற நகரத்தில் வாழ்ந்த வில்லியம் ஜாக்சனின் மகள் சோனோராவே காரணமாகும். சோனோராவுக்கு 16 வயதிருக்கும் பொழுது தாயையிழந்தார்கள்.
சோனோராவுக்கு ஐந்து சகோதரர்கள் இருந்தார்கள். தந்தையாகிய வில்லியம், மறுமணம் செய்யாது, ஆறு பிள்ளைகளையும் பாசத்தோடு பராமரித்து வந்தார்.
1909ம் ஆண்டு அமெரிக்காவில் அன்னையர் தினம் ஏற்றுக்கொள்ளப்பட்டதை அறிந்த சோனோரா, தியாகமாக வாழும் தனது தந்தையை கௌரவிப்பதற்கு, தந்தையர் தினம் கொண்டாடப்பட வேண்டுமென ஆசைப்பட்டாள்.
அவர் போகும் தேவாலயத்தினூடாக தந்தையர் தினத்தை அங்கீகரிக்க முயற்சி செய்தாள். இதன் பலனாய் 1910ம் ஆண்டு ஜூன் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமை அன்று தேவாலயத்தில் தந்தையர் தினம் கொண்டாடப்பட்டது. அமெரிக்க அரசு உடனடியாக அங்கீகரிக்காத பட்சத்திலும், ஐம்பத்தைந்தாண்டுகள் கழித்து 1966ம் ஆண்டு அமெரிக்க அதிபர் ஜான்சனால் ஜூன் மாதம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை அனுஷ்டிக்கலாமென்று சட்ட ரீதியாய் அங்கீகாரம் கொடுத்து, 1972ம் ஆண்டே தேசிய அளவில் நாடுபூராய் தந்தையர் தினம் கொண்டாடப்பட்டது.
இன்று உலகளாவிய ரீதியல் கொண்டாடப்படுகிறது. நாமும் அனுஷ்டிக்கிறோம். தகப்பனின் தியாகமான வாழ்க்கையை கௌரவிக்க முயற்சியெடுத்த சோனோரா பாராட்டப்பட வேண்டியவள். அமெரிக்காவில் நாடளாவிய ரீதியில் தந்தையர் தினம் கொண்டாடப்பட்ட வேளை சோனோரா உயிரோடு இருந்தார்களோ தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் புரிகிறது நல்ல நோக்கத்துக்காக எடுக்கப்படும் முயற்சிகள் காலதாமதமாகி, பல ஆண்டுகள் அல்லது பல தசாப்தங்கள் கடந்தும் நிறைவேறுகின்றன.

மேற்கத்தியேய நாடுகளில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்படுகிறதா? என்றால் இல்லையென்றே சொல்ல வேண்டியுள்ளது. சடங்காக அனுஷ்டிக்கப்படுகிறது. வாழ்த்து அட்டையும் பரிசுப்பொருளும் கொடுக்குமொரு சடங்காக மாறிவிட்டது. முதலாளித்துவ தேசத்தில் குடும்ப சுமையை சமூகம் பங்கிட்டுக் கொள்வதால், தாய் தந்தையருக்கு அதிக முக்கியத்துவம் தருவதில்லை. பதினெட்டுவயதானால் வீட்டைவிட்டு சென்று சுயமாக வாழும் கலாச்சாரத்தை உடையதால், அங்கே தாய் தந்தையர்களின் தியாகம் அர்ப்பணிப்புக்கு வாய்ப்பு குறைவு.
இன்னொரு பக்கம் வியாபார நிறுவனங்கள் இந்நாளில் பொருட்களை விற்பனை செய்து லாபமீட்டுவதில் குறியாயிருக்கின்றன.
மேற்குலகில் பண்டிகைகள், விஷேசித்த தினங்களை வர்த்தக மயமாக்கியுள்ளார்கள்.

இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் வாழும் குடும்பங்களுக்கு தகப்பனே குடும்பத்தலைவனாயிருக்கிறார். விவசாயம் மற்றும் கூலித் தொழில் செய்யும் ஒரு தகப்பன் தனது பிள்ளைகளின் தேவைகள், விருப்புக்களை பூர்த்திசெய்ய கடினமாக உழைக்கிறார். தாயானவள் தனது தேவையனைத்தையும் கணவனிடமே சொல்லுபவளாயிருக்கின்றாள். வாழ்க்கை தரம் குறைந்த வறுமையில் வாழும் குடும்பத்தினரின் அன்றாட ஜீவியமே போராட்டமானதாகும்.
ஒரு தாயானவள் பிள்ளைகளோடு மென்மையான போக்கை கடைப்பிடித்து, கனிவாக பேசி பாசத்தை வெளிக்காட்டுவது போல அப்பாக்கள் பேசிப் பழகுவதில்லை. பல குடும்பங்களில் அப்பாக்களை வில்லனாக பார்க்கும் பிள்ளைகளுண்டு. காலை வேலை சென்று மாலை வீடுவரும் தகப்பனின் உழைப்பை அவர்கள் பொருட்படுத்துவதில்லை. சரீர உழைப்பே வாழ்க்கையாகி போன தகப்பன்மார் இருக்கிறார்கள். அவர்களுக்கென்று தனிப்பட்ட அபிலாஷைகள் எதுவும் இருக்காது. காலம்பூராய் வேலையும் வீடுமாக வாழ்வார்கள். பெற்றோரும் பிள்ளைகளுக்கு கஷ்டத்தை உணர்த்தி, புரியவைத்து வளர்க்க வேண்டும்.
அவ்வாறு செய்யாதவிடத்து முதுமையில் அநேக பெற்றோர் பிள்ளைகளால் கைவிடப்பட வாய்ப்புண்டு.

ஒரு தகப்பன் பொறுப்புள்ள நல்ல குடும்ப தலைவனாயிருந்து, பிள்ளைகளின் எல்ல பகுதிகளிலும் சிறப்பாக வழிநடத்துபவனாக இருக்க வேண்டும்.
குறிப்பாய் தேவ பயத்தில் வளர்க்கும் தகப்பனாயிருக்க வேண்டும்.
நானும் இரண்டு பிள்ளைகளுக்கு தகப்பனாயிருப்பதால், தந்தையர் தினத்தன்று என் பிள்ளைகள் என்னை கனப்படுத்த, வாழ்த்த வேண்டும், பரிசுப்பொருட்கள் வேண்டித்தரவேண்டுமென்று எதிர்பார்க்கவில்லை. மாறாக நான் நல்ல தகப்பனாய் செயல்பட்டிருக்கிறேனாவென என்னை நானே தற்பரிசோதனை செய்து கொள்ளுகிறேன்.
திருமணத்துக்கு பின்னர் பிள்ளைகளின் நலனை மையப்படுத்தியே, முதன்மைப்படுத்தியே வாழ்க்கையை திட்டமிட்டதுண்டு. ஆனாலும் அவர்களின் எதிர்காலத்தை சிறப்பாய் அமைக்க எங்களின் சுய பெலத்தால் முடியாதென்ற உண்மையை அனுப ரீதியாய் கண்டுள்ளேன்.
நம்மிடமிருக்கும் அறிவு, ஆற்றலை வைத்து ஒரு எல்லைக்கு மேல் உதவவோ, வழிநடத்தவோ முடியாது. உதாரணமாக வீதியில் ஏற்படும் விபத்தை வீட்டிலிருக்கும் தகப்பனால் தடுக்கமுடியாது.
மனிதரின் ஆயூள் குறிப்பிட்ட காலத்துக்குள் வரையறுக்கப்பட்டுள்ளதால், அக்காலத்துக்குள்ளேயே பிள்ளைகளை வழிநடத்த, அறிவுரைசொல்ல, உதவிட முடியும். ஆனால் எல்லாக் காலத்திலும் எல்லாச்சூழ்நிலையிலும் எனக்கும் என் பிள்ளைகளுக்கும், சந்ததி சந்ததியாய் அறிவுரை சொல்லி, பாதுகாத்து, வழிநடத்தி, உதவிட நம்மை படைத்த தேவனால் மட்டுமே ஆகும்.
அதுமட்டுமல்லாமல் அவர் நமக்கு தந்தையாகவும் இருக்கிறார். எந்த மதத்திலும் மார்க்கத்திலும் இல்லாத மிகப்பெரிய சிலாக்கியம் கிறிஸ்தவத்திலேயே உண்டு.

அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார். (யோவான் 1: 12).
இயேசுக்கிறிஸ்துவை விசுவாசித்து, அவரே என்னை உண்டாக்கியவர், அவரே என்னை வாழவைக்க முடியும், அவரே மெய்தேவன் என விசுவாசிக்கும் பட்சத்தில் நாங்கள் அவர் பிள்ளையாகிவிடுகிறோம். நான் இயேசுக்கிறிஸ்துவின் பிள்ளையெனச் சொல்ல எனக்கு அதிகாரம் கொடுத்துள்ளார்.
நான் அவர் பிள்ளையென்றால் அவர் எனக்கு தகப்பனாகிவிட்டார்.
நான் அப்பா என்ற உரிமையோடு அவரிடம் எதையும் கேட்கலாம், சொல்லலாம், எப்படியும் (அன்பாக, கோபமாக) பழகலாம்.
இந்த அதிகாரத்தை, ஸ்தானத்தை நான் வாஞ்சிக்கவுமில்லை, கேட்கவுமில்லை. அப்படி வாஞ்சித்து, கேட்பதற்கு எனக்கு தகுதியும், அருகதையுமில்லை.
நாங்கள் பாவிகளாயும், அநீதியுள்ளவர்களாய் வாழ்ந்த போதும், அவர் எங்களை உண்மையாக நேசித்து, உண்மையாக அக்கறைப்படுவதால், தன்பிள்ளையாய் ஏற்றுக் கொண்டார். மனுஷனை உண்டாக்கியதன் நோக்கமே அவர் உறவாடவே, அந்த உறவானது தகப்பன் பிள்ளை அந்தஸ்தையுடையது.
அவர் மாம்சமும் இரத்தமுமுடைய சாதாரண தகப்பனல்ல.

அவர் மகத்துவம் நிறைந்த தேவனும், தகப்பனுமாயிருக்கிறார்.
அவர் சர்வவல்லமையுள்ள, சாதாகாலங்களும் ஜீவிக்கிற தேவன்.
ஆதியும் அந்தமுமற்ற தேவன். அவர் எல்லாவற்றுக்கும் மேலானவர், எல்லாவற்றையும் பார்த்துக் கொள்பவர். அவர் எல்லாவற்றையும் சிருஷ்டித்தவர். அவர் பரிசுத்தர், ஒருபோதும் பொய் உரையாதவர் வாக்குமாறாதவர். அவர் ஒருவரும் சேரா ஒளிதனில் வாசம் செய்பவர். அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர். அவர் நல்ல மேய்ப்பன், நல்ல பரிகாரி. அவர் சமாதானம், சந்தோசம் தருபவர்.
கர்த்தருடைய நாமம் மகிமைப்படுவதாக.

கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள் அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படுமென்று சொன்னவர். உங்களில் எந்த மனுஷனானாலும் தன்னிடத்தில் அப்பத்தைக்கேட்கிற தன் மகனுக்குக் கல்லைக் கொடுப்பானா?
மீனைக்கேட்டால் அவனுக்குப் பாம்பைக்கொடுப்பானா?
ஆகையால், பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா? எனச் சொன்னவர்.

தனது பிள்ளைகள் கஸ்ரப்படக்கூடாது, அழிந்து போய்விடக்கூடாது. தனது பிள்ளைகள் நரக வேதனையை அனுபவித்திடக்கூடாது என்பதற்காகவே, அவர் மனுஷனாக பூமிக்கு வந்து எங்களுடைய பாவத்துக்கான தண்டனையை ஏற்று, நரக வேதனையை அனுபவித்து, நமக்காக மரித்து உயித்தெழுந்தார்.
இப்படிப்பட்ட உன்னதமான தகப்பனுக்கே நாம் பிள்ளைகளாயிருக்கிறோம். இப்படிப்பட்ட தியாகத்தை எந்த மனுசனும் நமக்கு செய்திட முடியாது. இயேசுக்கிறிஸ்துவே தனது பிள்ளைகள் மீதிருந்த அளவற்ற அன்பை வெளிப்படுத்தி தன்னோடு கூட வாழுவதற்கும் வழிவகுத்துள்ளார்.

பிரியமானவர்களே!
தந்தையர் தினமாக, வருடத்தில் ஒருநாள், உலகத்தார் அனுபவிக்கும் சம்பிர்தாய சடங்கு போலல்லாமல். என்னை அளவற்று நேசித்து, எனக்காக மரித்து என்னை மீட்டுக்கொண்டதை நினைத்து அனுதினமும் இயேசப்பாவுக்கு நன்றி சொல்லி, அவருக்கு நன்றியுள்ள பிள்ளைகளாய் ஜீவிப்பதோடு, அவரிடமிருந்தே எப்படி ஒரு நல்ல தகப்பனாய் வாழவேண்டுமென்பதை கற்றுக்கொள்ளுவோம்.
தனது பிள்ளைகளின் மீட்புக்காய் உயிரையே கொடுத்த தகப்பனின் வாரிசுகளாய் நாமிருந்து, நமது பிள்ளைகளுக்கும் அந்த தகப்பனின் அன்பை புரியவைத்து அவரின் அன்பின் செட்டைக்குள் அடைக்கலமாகி வாழ பழக்குவிப்போம்.
அதுவே ஒவ்வொரு மாம்சமான தகப்பனின் தலையாய கடமையாகும்.

தந்தையர் அனைவருக்கும், மனமார்ந்த தந்தையர் தின நல்வாழ்த்துக்காள்.
வாழ்த்துக்கள் உதடுகளிலிருந்து சொல்லாமல், உள்ளத்தின் ஆழத்திலிருந்து உணர்ந்து சொல்லிப்பழகுவோமாக.

ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்துவைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார்; அவைகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா? மத்தேயு 6:26

நன்றி கர்த்தாவே
த.பிரபா.

   
   
 
எங்களை தொடர்புகொள்ள
T.Pirabagaran
89 Laurel crescent
Romford
Essex
Rm7 0ru
England
  TP:-
Email:- info@thehandofjesus.com
சமூக வலைத்தளங்களில் எங்களுடன் தொடர்பு கொள்ள

        
உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது. சங்கீதம் 119:105
Copyright © 2015 The hand of jesus.com All Rights Reserved