ஆங்கிலம் | தமிழ் | சிங்களம்

 
 
  முகப்பு பக்கம்
  எங்களை பற்றி
  எங்கள் சேவைகள்
  தற்போதைய தேவைகள்
    ஜீவ வார்த்தைகள்
  கட்டுரைகள்
  வேதாகம வரைபடங்கள்
  ஜெப வேண்டுகோள்
  ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம்
  சிறுவர்கள் வேதாகம ஒளிநாடா
  கருத்துக்கள்
  ஒளிப்பதிவுகள்
  எங்களை தொடர்புகொள்ள

 தினசரி தியானம்
  ஆரம்ப நிலை
  இடை நிலை
    மேல்நிலை
  வேதாகம விளக்கம்

  ஜீவ வார்த்தைகள்

 பயனுள்ள இணைப்புகள்
  இணைய தளங்கள்
  www.tamilchristian.com
  www.tamilchristianworship.org
  வானொலி
  www.tamilchurchvos.org
  www.tamilchristianprayer.org
    தொலைக்காட்சி
  www.tamilchristianonline.net
    வேதாகமம்
  இணைய வேதாகமம்
    இணைய வேதாகமம் 2
    ஒலி வேதாகமம்
   


   

பாராட்டு.


பாடசாலையில் கல்விகற்கும் மாணவனொருவனின் புத்திக் கூர்மையை கண்ட ஆசிரியர், பிறரிடம் அம்மாணவனைக்குறித்து உயர்வாக (பாராட்டி) பேசுவார்.
ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியரின் கடமையுணர்ச்சியைக் கண்ட  முகாமையாளர் அவ்வூழியரை உயர்வாக பேசுவார்.
ஒரு சில பெற்றோர் தான் பெற்ற பிள்ளைகளில் ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு, அப்பிள்ளையே பொறுப்புணர்ச்சியோடு குடும்பத்துக்காக உழைத்தானென உயர்வாக பேசுவார்கள்.
சாதித்தவர்களை, திறமையுடையோரை, வெற்றியீட்டியவரை, நேர்மையாளரை, ஒழுக்கசீலரை உலகம் வெகுவாக பாராட்டும்.

ஒருவரிடம் வேலைவாங்குவதற்காக, உதவி பெறுவதற்காக போலித்தனமாக உயர்த்திப் பேசுவோருமுண்டு.
ஒருவரை எரிச்சலூட்டுவதற்காக அல்லது வஞ்சம் தீர்த்துக் கொள்ளுவதற்காக தகுதியற்ற நபர்களை வலிந்து பாராட்டும் யுக்தியை கையாள்வோருமுண்டு.
மனிதர்கள் ஒருவரை பாராட்டி, வாழ்த்திப் பேசும் அதே வாயாலெயே, தூற்றியும், தாழ்த்தியும் பேசுவார்கள். செல்வாக்குமிக்கவர்களை, பணக்காரரை, பிரபல்யமானவர்களை உலகம் மாய்மாலமாக பாராட்டும்.

ஆகவே மனிதர்களின் பாராட்டை மேன்மையாக எண்ணாமல், அதை எதிர்பார்க்காமல்.
நம்மை உண்டாக்கியவரும், நம்மை வாழவைத்துக் கொண்டிருக்கும் படைப்பாளரால் பாராட்டப்படுவதையே விரும்ப வேண்டும்.
படைப்பாளரின் பாராட்டே நிலையானது.
மனிதர்களை பாராட்டுவதால் கர்த்தருக்கு என்னதான் நன்மை, மேன்மை?
உயர்வாக பேசப்பட வேண்டுமென்பதற்காக காரியங்களைச் செய்யாது.
அன்பின் நிமிர்த்தம் நீதியாய், மனப்பூர்வமாக, இதயசுத்தியோடு செயல்பட வேண்டும். அதைக் கண்ணோக்கிப் பார்க்கும் கர்த்தர் எங்களை உயர்வாக பேசுவார்.

கர்த்தர் மீது கொண்ட அன்பின் நிமிர்த்தம், வறுமையில் வாழ்ந்த ஒரு ஏழை விதவை தன்னிடமிருந்த கடைசிப் பணத்தை காணிக்கையாக காணிக்கைப் பெட்டியில் போட்டாள். இதைக் கவனித்துக் கொண்டிருந்த இயேசுக்கிறிஸ்து, காணிக்கைப்பெட்டியில் பணம்போட்ட மற்றெல்லாரைப்பார்க்கிலும் இந்த ஏழை விதவை அதிகமாய்ப் போட்டாளென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்;
அவர்களெல்லாரும் தங்கள் பரிபூரணத்திலிருந்து எடுத்துப்போட்டார்கள்; இவளோ தன் வறுமையிலிருந்து தன் ஜீவனத்துக்கு உண்டாயிருந்ததெல்லாம் போட்டுவிட்டாள் என்றார். (மாற்கு 12:43-44, லூக்கா 21:2-4) இவ்வாறு சொல்லி அவ்விதவையை உயர்வாக பேசினார்.

இயேசுக்கிறிஸ்து தன்னை உயர்வாக பேசுவாரென அப்பெண்மணிக்கு தெரியாது. வழக்கமாக காணிக்கை போடுவது போல் அன்றும் காணிக்கையை போட்டாள்.
பக்திமான்கள், செல்வந்தர்கள், செல்வாக்குமிக்கவர்கள் முதன்மைப்படுத்தப்பட்டு வரிசையில் முன்சென்று காணிக்கையை போட்டார்கள்.
வரிசையின் கடைசியில் யாரும் பொருட்படுத்தாத, அசட்டை பண்ணப்பட்ட போதிய வசதியற்ற, கணவனையிழந்த பெண்மணி தன்னிடமிருந்த கடைசிப் பணத்தை மனப்பூர்வமாக காணிக்கை பெட்டியில் போட்டாள்.
அப்பணமே அவளின் அன்றைய ஆகாரத்துக்குரியதாயிருந்திருக்கும். அப்பணமே அவளின் பிரயாணச் செலவுக்குரியதாயிருந்திருக்கும். ஆனாலும் தேவன் தன்னை உண்டாக்கியவர், வாழவைத்துக் கொண்டிருப்பவரென்பதால், அவரிடம் பெற்ற நன்மையின் பால் நன்றிக்கடனாக, கடைசி நம்பிக்கையாயிருந்த பணத்தையே கொடுத்துவிட்டாள். எல்லாரைக்காட்டிலும் கொஞ்சமாய்க் கொடுக்கிறேன் என்ற வெட்கம், கவலை அற்றவளாய் அதிகமாய்க் கொடுக்க பணமில்லையே என்ற மனக்கவலையேடு போட்டிருப்பாள்.
வயிற்றுப்பசியை நாளை பார்த்துக் கொள்ளலாம், வீட்டுக்கு நடந்தே போகலாமென்ற தீர்மானத்தோடே காணிக்கை போட்டிருப்பாள்.

இப்பெண்மணியின் உயர்ந்த மனப்பண்மையை மெய்ச்சி (பராட்டி) தான் ஆகணும்.
அப்பெண்மணி ஒரு விதவை, ஒரு ஏழை ஆனாலும் கர்த்தரை விசுவாசித்தாள் கனப்படுத்தினாள். தான் விதவையானதுக்கும், ஏழையானதுக்கும் கர்த்தர் தான் காரணமென்று சொல்லவில்லை, முறுமுறுக்கவில்லை.
எப்படி அப்பெண்மணியால் இப்படிச் செயல்பட முடிந்தது?
தன்னையே முழுமையாக கர்த்தருக்கு கொடுத்ததால், தன்னை எல்லாச் சூழ்நிலையிலும் கர்த்தர் போஷிப்பாரென்ற விசுவாசமிருந்தது. ஆகவே உலகப்பொருளை, பணத்தை, தேவைகளை முதன்மைப்படுத்தி வாழவில்லை.

இயேசுக்கிறிஸ்துவின் தேவாலயத்துக்கான கடைசிப்பயணத்தின் போதே இச்சம்பவம் நடந்தது. அங்கே வேதபாரகர், சதுசேயர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லி, கண்டித்து, எச்சரித்து, அதிக ஆக்கினை அடைவார்களென்று, அவர்களின் முகத்திரையை கிழித்த பின்னரே, காணிக்கை காரியத்துக்கு வந்தார். இயேசுக்கிறிஸ்து தசமபாகத்தை கொடுத்தவர்களை பாராட்டவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

இயேசுக்கிறிஸ்துவின் பார்வையே வித்தியாசமானது, இந்த இரண்டு காசை வைத்து நான் என்ன செய்வதென்று கேட்கவில்லை. அங்கிருந்த பரிசுத்தவான்கள் இரண்டு காசை வைத்து என்னசெய்வதென்று அற்பமாக நினைத்திருக்க கூடும். இயேசுக்கிறிஸ்து இருதயங்களை ஆராய்ந்து பார்க்கவல்லவர். பணத்தின் அளவைக்காட்டில் மனசே முக்கியம். காணிக்கை போட்ட பெண்மணியின் வாழ்க்கை சரித்திரத்தை யாரிடமிருந்தும் கேட்டுத் தெரிந்து கொள்ளவில்லை. அப்பெண்மணி விதவை, ஏழை, அவரிடமிருந்தது கடைசிப் பணமென்பதை முற்கூட்டியே அறிந்து வைத்திருந்தார். அவர் தேவன் என்பதற்கு இதுவும் ஒரு சாட்சியாகும்.

இயேசுக்கிறிஸ்து எப்பொழுதும் கையில் பணம் வைத்திருந்ததில்லை. மாற்கு 12:15ல் பிறரிடம் பணத்தை காண்பிக்கும்படி கேட்டுக்கொண்டார். இதன் அர்த்தம் பணமே அவர் கையாளவில்லை என்பதல்ல. அவர் பணத்தை கையாண்டார். ஆனால் அதை முதன்மைப்படுத்தவில்லை, அதற்கு அடிமையாக வாழவில்லை.

கர்த்தருக்காக கொடுக்கும் காணிக்கை பணமானது, கர்த்தருடைய பணமாகும். அப்பணத்தை அவருடைய நாம மகிமைக்காக பயன்படுத்த வேண்டும். தனிமனித சொகுசு வாழ்க்கைக்கு பயன்படுத்துவதை கர்த்தர் ஏற்றுக்கொள்ளமாட்டார். காரணம், கொடுக்கப்படும் பணமானது ஏழை, விதவையின் ஜீவனத்திலிருந்து கொடுப்பதால். அப்பணத்தை ஒரு மனிதன் அல்லது ஒரு குடும்பம் அனுபவிப்பதை தேவன் ஏற்றுக் கொள்ளவே மாட்டார்.
இக்கதையானது அதையும் மறைமுகமாக வெளிக்காட்டுகிறது.

தேவனுக்கு தொண்டாற்றுகிறவர்கள், தேவன் தம்மோடு இருக்கிறாரென உரிமை பாராட்டுபவர்கள் பணக்காரியத்திலும் முன்மாதிரியாய் வாழ்ந்து காட்ட வேண்டும்.
சாதாரண விசுவாசியான அவ்விதவையின் தியாகமுள்ள செயலைக்காட்டிலும் மேன்மையான செயலை செய்து காண்பிக்க வேண்டும்.
இன்று பலர் பண ஆசையெனும் கட்டில் வாழ்ந்து கொண்டு, பிறர் கட்டவிழ்க்க பிரயாசைப்படுவதும், பிரசங்கிப்பதும், வேடிக்கையானதும் மாய்மாலமானதாகும்.

பிரியமானவர்களே!

தேவனுடைய மகிமைக்காக, தேவராஜ்ஜியம் கட்ட, தேவையில் இருப்போரை போஷிக்க மனப்பூர்வமான கொடுப்போம். நம்மை போஷித்து வாழவைத்துக் கொண்டிருக்கும் கர்த்தருக்கு நன்றியுள்ளவர்களாய் ஜீவிப்போம். பிறருடையதொன்றையும் இச்சியாது, நம்மிடமிருக்கும் அனைத்தும் கர்த்தருக்கு சொந்தமானதென்ற நிலையில் அர்ப்பணிப்போடு வாழுவோம்.
எங்களுக்குரிய வெகுமதிகளை பரலோகத்தில் பெற்றுக் கொள்ளுவோம், கர்த்தரால் பாராட்டப்படுவோம்.

நம்மைவிட தாழ்நிலையில் இருப்போரின் நற்கிரியைகள், தியாகமான வாழ்க்கையை கண்டால், அவர்களை மனப்பூர்வமாய் பாராட்டுங்கள்.
அவ்வாறு செய்யும் பட்சத்தில், அவர்களை உற்சாகப்படுத்தி, ஊக்கிவிப்பதோடு, உங்களுக்குள்ளிருக்கும் தெய்வீக சுபாவத்தை வெளிப்படுத்தியதாகவும் அமைந்துவிடும்.
இயேசுக்கிறிஸ்து பிறரை எவ்வாறு பார்த்தார், அணுகினார் என்பவற்றை அறிந்து கொண்டு, அந்த வழியில் நாமும் வாழ பிரயாசப்பட வேண்டும்.

இரண்டு காசு போட்டு, உள்ளதனைத்தையும் கொடுத்து இயேசுவின் மனப்பரப்பிலும், பரிசுத்த வேதாகமத்திலும் இடம்பிடித்த வறிய விதவைப் பெண்ணை போல, எங்களுடைய ஜீவியமும் பண, பொருளாசையற்ற தியாகம், அர்ப்பணிப்பு நிறைந்ததாக இருக்கட்டும். இந்த ஏழை விதவை பெண்ணின் கிரியைக்கு நிகரான கிரியைகளை நாமும் செய்வோம்.
என்னையும் உங்களையும் கர்த்தர் உயர்வாக (பாராட்டி) பேசுவாராக. ஆமென்.

எபிரெயர் 13:5 நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறார்.

நன்றி கர்த்தாவே

த. பிரபா.

 

   
   
 
எங்களை தொடர்புகொள்ள
T.Pirabagaran
89 Laurel crescent
Romford
Essex
Rm7 0ru
England
  TP:-
Email:- info@thehandofjesus.com
சமூக வலைத்தளங்களில் எங்களுடன் தொடர்பு கொள்ள

        
உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது. சங்கீதம் 119:105
Copyright © 2015 The hand of jesus.com All Rights Reserved