ஆங்கிலம் | தமிழ் | சிங்களம்

 
 
  முகப்பு பக்கம்
  எங்களை பற்றி
  எங்கள் சேவைகள்
  தற்போதைய தேவைகள்
    ஜீவ வார்த்தைகள்
  கட்டுரைகள்
  வேதாகம வரைபடங்கள்
  ஜெப வேண்டுகோள்
  ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம்
  சிறுவர்கள் வேதாகம ஒளிநாடா
  கருத்துக்கள்
  ஒளிப்பதிவுகள்
  எங்களை தொடர்புகொள்ள

 தினசரி தியானம்
  ஆரம்ப நிலை
  இடை நிலை
    மேல்நிலை
  வேதாகம விளக்கம்

  ஜீவ வார்த்தைகள்

 பயனுள்ள இணைப்புகள்
  இணைய தளங்கள்
  www.tamilchristian.com
  www.tamilchristianworship.org
  வானொலி
  www.tamilchurchvos.org
  www.tamilchristianprayer.org
    தொலைக்காட்சி
  www.tamilchristianonline.net
    வேதாகமம்
  இணைய வேதாகமம்
    இணைய வேதாகமம் 2
    ஒலி வேதாகமம்
   


   

தூக்கிவிட்டார், தூக்கிவிடுவோம்.


சிறு குழந்தைகள் நடக்கும் பொழுது தடக்கி விழுந்துவிட்டால், அப்பிள்ளையின் தாயார் ஐயோ பிள்ளை விழுந்துவிட்டதென சொல்லி பதறியடித்து ஓடிச் சென்று தூக்கிவிடுவார்கள்.
விளையாட்டு வீரர்கள், விளையாட்டில் ஈடுபட்டு களைத்து விழப் போகும் தறுவாயில், சக வீரர் ஓடிச் சென்று அவரைத் தூக்கி தோள் கொடுத்து, கட்டியணைத்து தூக்கி வருவார்.
பணத்தை கடனாக பெற்று அவற்றை மீளக்கொடுக்கமுடியாது போனவேளை அல்லது பணத்தேவையால் தவிக்கும் ஒருவருக்கு பணம் கொடுத்து உதவினால், உதவிபெற்றோர் சரியான நேரத்தில் கைகொடுத்து தூக்கிவிட்டீர்களென சொல்வதை கேள்விப்பட்டிருப்பீர்கள்.
வயசான வயோதிபர் ஒருவரின் உடல் வலிமையற்று, பெலவீனமாகி அவரால் எழும்பி நடக்க முடியாத போது, பிறிதொருவர் கைகொடுத்து தூக்கிவிட முன்வருவார்.
நடைமுறை வாழ்க்கையில் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் விழுந்து போன ஒருவரை தூக்கிவிடுவதற்கு ஒருவரின் உதவி அவசியமாகப்படுகிறது.

பரிசுத்த வேதாகமத்தில் மாற்கு 1:29-31 வரையான வேதப்பகுதியில் பேதுருவின் மாமியார் காய்ச்சல் வியாதியால் படுத்திருந்த வேளை, இயேசுக்கிறிஸ்து கிட்டப்போய், அவள் கையைப் பிடித்து, அவளைத் தூக்கிவிட்டார்; உடனே காய்ச்சல் அவளை விட்டு நீங்கிற்று; அப்பொழுது அவள் அவர்களுக்குப் பணிவிடைசெய்தாள் என்ற உண்மைச் சம்பவத்தை வாசிக்கிறோம்.

வயது முதிர்ந்த பேதுருவின் மாமியார் பல நாள் காய்ச்சல் வியாதியால் பாதிக்கப்பட்டு படுத்திருந்திருப்பாரென நினைக்கிறேன். இன்றைய நாட்களில் இருக்கும் வைத்தியசாலை, மருத்துவ வசதிகளற்ற காலத்தில், அவர்களின் வெப்பநிலையை அறிந்து கொள்வதற்கு  வெப்பமானி கூட இருக்கவில்லை.
அவரது உடல் உயர் வெப்பநிலை (high temperature) கொண்டதாயிருந்திருக்கும். இப்பொழுது நாங்கள் காய்ச்சலுக்கு பாவிக்கும் மாத்திரைகள் அன்றிருக்கவில்லை. நாட்டு வைத்தியமே செய்திருப்பார்கள்.
மாறாத காய்சலை பரம வைத்தியராகிய இயேசுக்கிறிஸ்து சுகப்படுத்தினார்.
எப்படி சுகப்படுத்தினார்? ஜெபித்துமல்ல, அசுத்த ஆவியே வெளியேறு என்று அதட்டியுமல்ல, விசுவாசிக்கிறியாவென கேட்டுமல்ல, அப்பெண்மணியின் கைகளை தொட்டு தூக்கிவிட்டார்.

வயோதிப பெண்மணி, வியாதியால் வேறு பாதிக்கப்பட்டிருந்தவரை தொட்டு தூக்கிவிட்டதால், அவரது உடல் வெப்பம் தணிந்ததையும், உடல் புதுப்பெலன் அடைந்ததையும் உணர்ந்து கொண்டார்.
ஒருவேளை நாமாக இருந்திருந்தால் இயேசுவுக்கு நன்றி சொல்லிவிட்டு மறுபடியும் நான்கு நாட்களுக்கு அக்கட்டிலில் படுத்துறங்கியிருப்போம்.

பேதுருவின் மாமியார் வியாதி குணமானதை உணர்ந்து கொண்டதும்.
நன்றி உள்ளவராய் அவர்களுக்கு பணிவிடை செய்தார்கள். சமையலறை சென்று மகளுக்கு சமைக்க உதவியிருக்கலாம் அல்லது துப்பரவு பணி செய்திருக்கலாம் அல்லது உணவு பரிமாறுவதிலென எதோ ஒரு வேலை செய்தார்கள்.
இயேசுக்கிறிஸ்து அற்புதகரமாய் சுகமாக்கியது பிரதானமில்லை. அவரால் ஆகாத காரியம் ஒன்றுமில்லை. ஆனால் வயேதிப்பப் பெண்மணி வியாதிமாறியதும் நன்றியுணர்வோடு பணிவிடை செய்தளே அதுதான் முக்கியமானது. அப்பெண்மணியை கனப்படுத்தவே தேவ ஆவியானவர் பரிசுத்த வேதாகமத்தின் இரண்டு சுவிஷேச புத்தகத்தில் இச்சம்பவத்தை எழுதி வைத்துள்ளார். மனுக்குலத்துக்கு பணுவிடை செய்ய வந்தவருக்கு பணிவிடை செய்வதே உன்னதமானது. (மாற்கு 10:45)

இயேசுக்கிறிஸ்து நமது வீட்டுக்குள் வந்தால், இயேசுக்கிறிஸ்து நமது உள்ளத்துக்குள் வந்தால் எப்படிப்பட்ட கட்டுக்களின் பிடியில் இருந்தாலும் விடுதலை கிடைக்கும், அந்த வீட்டிற்கு, அந்த ஆத்துமாவுக்கு சந்தோசமும் சமாதானமும் உண்டாகும்.

எங்களுடைய வாழ்விலும் ஆரோக்கியம், சந்தோசம், சமாதானத்தை தந்த இயேசுக் கிறிஸ்துவுக்கு நன்றியுள்ளவர்களாய் நாம் என்ன செய்தோம்?
தினமும் எங்களுடைய தேவைகளைச் சொல்லி, தாரும், தாரும் என கேட்டு ஜெபிக்கிறேம். ஆராதனைகளுக்கும், சபைகளுக்கும் தேவைகளை பெற்றுக்கொள்ளும் முதன்மை நோக்கத்தோடே கலந்து கொள்ளுகிறோம். இதில் ஒன்றும் தப்பே இல்லை. நாம் நமது அப்பாவிடம் கேட்பது தவறேயில்லை. மனிதர்களிடம் தேவைகளைச் சொல்லாமல், உதவியை கேட்காமல், பரம பிதாவிடம் கேட்பது நலமானதே.
ஆனால் உதவி பெற்றதும், அடுத்த தேவையை கேட்கிறவர்களாகவே நாமிருக்கிறோம்.
மனித மனம் அவ்வாறே செயல்படும். பெற்ற உதவிகளுக்கு, பெற்ற நன்மைகளுக்கு என்ன பிரதியுபகாரம் செய்தோம்? நன்றியுள்ளவர்களாய் ஜீவித்தோமாவென எங்களை நாங்களே ஆராய்ந்து பார்க்க தவறிவிடுகிறோம்.

நமது உதடுகளால் நன்றி சொல்லுகிறதோடு, நமது கிரியைகளால், நமது கையின் பிரையாசைகளால், சரீரப்பிரகாரமான உதவிகளால் தேவையுள்ளோருக்கு உதவிட வேண்டும். மத்தேயு 25: 35-40ல் யார் யாருக்கெல்லாம் உதவி செய்தால் அவற்றை தனக்காக செய்ததாக இயேசுகிறிஸ்துவானவர் பட்டியலிட்டுள்ளார்.
பாவத்தில் வீழ்ந்து கிடப்போருக்கு சத்தியத்தை சொல்லி அவர்களது இரட்சிப்புக்காக ஜெபிப்பதோடு, பசியாயிருப்போருக்கு போஜனம்கொடுத்து, தாகமாயிருந்தோருக்கு தாகத்தை தீர்த்து, அந்நியனை சேர்த்துக்கொண்டு, வஸ்திரமில்லாதவனுக்கு வஸ்த்திரம் கொடுத்து, வியாதியில் இருந்தோரை விசாரித்து, காவலில் இருந்தோரை சென்று பார்த்து, நமது நன்றியுணர்வை உண்மையாக வெளிக்காட்டுவோமாக.

பிரியமானவர்களே!
நாங்கள் ஒவ்வொருவரும் பேதுருவின் மாமியாரின் வாழ்நிலையைக் காட்டில் உயர்நிலையில் வசிக்கிறோம். சரீர, பொருளாதார வலிமை கொண்டவர்களாயிருக்கிறோம்.
கர்த்தரிடமிருந்து எண்ணற்ற நன்மைகளை பெற்றவர்களாயிருக்கிறோம்.
கர்த்தர் நமக்கு சூம்பின கரங்களையும், குறண்டிய விரல்களையும் தரவில்லை.
திடமான கரங்களையும் பெலனுள்ள விரல்களையும் தந்துள்ளார்.
இவற்றை கொண்டு விழுந்தோரை தூக்கி, அவர்களை தாங்கி வாள வைப்போம்.
இயேசுக்கிறிஸ்து நேரடியாக இந்த பூமிக்கு வந்து பிறரை போஷிக்கப்போவதில்லை.
அவர் பிள்ளைகளான எங்களை கொண்டே அதை சாதிக்கப்போகிறார்.
அவர் ஆவியை கொண்ட இயேசப்பாவின் பிள்ளைகள், கைநீட்டி வாங்காதவர்களாய், கைகொடுத்துதவும் இயேசுவின் கரங்களாய் ஜீவிப்பார்களாக. ஆமென்.

அப்பொழுது அவர் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவர்களாகிய இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்யாதிருந்தீர்களோ, அதை எனக்கே செய்யாதிருந்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார். (மத்தேயு 25:45)

நன்றி கர்த்தாவே.

த. பிரபா

   
   
 
எங்களை தொடர்புகொள்ள
T.Pirabagaran
89 Laurel crescent
Romford
Essex
Rm7 0ru
England
  TP:-
Email:- info@thehandofjesus.com
சமூக வலைத்தளங்களில் எங்களுடன் தொடர்பு கொள்ள

        
உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது. சங்கீதம் 119:105
Copyright © 2015 The hand of jesus.com All Rights Reserved