ஆங்கிலம் | தமிழ் | சிங்களம்

 
 
  முகப்பு பக்கம்
  எங்களை பற்றி
  எங்கள் சேவைகள்
  தற்போதைய தேவைகள்
    ஜீவ வார்த்தைகள்
  கட்டுரைகள்
  வேதாகம வரைபடங்கள்
  ஜெப வேண்டுகோள்
  ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம்
  சிறுவர்கள் வேதாகம ஒளிநாடா
  கருத்துக்கள்
  ஒளிப்பதிவுகள்
  எங்களை தொடர்புகொள்ள

 தினசரி தியானம்
  ஆரம்ப நிலை
  இடை நிலை
    மேல்நிலை
  வேதாகம விளக்கம்

  ஜீவ வார்த்தைகள்

 பயனுள்ள இணைப்புகள்
  இணைய தளங்கள்
  www.tamilchristian.com
  www.tamilchristianworship.org
  வானொலி
  www.tamilchurchvos.org
  www.tamilchristianprayer.org
    தொலைக்காட்சி
  www.tamilchristianonline.net
    வேதாகமம்
  இணைய வேதாகமம்
    இணைய வேதாகமம் 2
    ஒலி வேதாகமம்
   


   

கிரயத்துக்கு கொள்ளப்பட்டோம்.


கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே; ஆகையால் தேவனுக்கு உடையவைகளாகிய உங்கள் சரீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள்.
1 கொரிந்தியர் 6:20

தேவ ஆவியானவர் பவுலடிகளாருக்கூடாக 1 கொரிந்தியர் 6ம் அதிகாரத்தில் சரீரத்தை தீட்டுப்படுத்தக் கூடாதென்பதை அதிகமாக வலியுறுத்தி, முடிவில் நீங்கள் கிரயத்துக்கு கொள்ளப்பட்டீர்கள், ஆகவே அந்த சரீரத்தினாலும், ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்களெனச் சொல்லியுள்ளார். 

ஒன்றுமில்லாததிலிருந்து அனைத்தையும் உண்டாக்கிய தேவன்.
நான் உண்டாக்கியவர்கள் நீங்களென்று அடையாளப்படுத்தாமல், கிரயம் செலுத்தினேன் என்று சொல்வதற்கான காரணம் என்ன?
ஆதிப்பெற்றோராகிய ஆதாமும் ஏவாளும் தேவகட்டளைக்கு கீழ்படியாது பாவம் செய்து, தேவ உறவை முறித்துக்கொண்டானர். தேவ ஆளுகையின் கீழ்விட்டு பிரிந்து உலகத்தின் அதிபதியின் ஆளுகையின்கீழ் சென்றார்கள். இதன் பின் ஆதாம் வழிவந்த அத்தனை பேரும் பாவமனிதர்களானார்கள். இப்பேற்பட்ட மனிதனை பாவவாழ்க்கையிலிருந்து மீட்டு மீண்டும் தன்னோடு உறவாட வைப்பதற்காகவே கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்து கிரயம் செலுத்தினார்.

எப்படிப்பட்ட கிரயம் (விலை அல்லது பெறுமானத் தொகை) செலுத்தினார்?
விலைகொடுத்து வாங்குவதையே கிரயம் என்று செல்லப்படுகிறது. ஆங்கில வேதாகமத்தில் விலைகொடுத்து வாங்கப்பட்டதாக நேரடியாகவே எழுதப்பட்டுள்ளது. தமிழில் மிகவும் ஆழமான வார்த்தை ‘’கிரயம்’’ என்பதை பயன்படுத்தியுள்ளார்கள். அதிகவிலை என்றும் பொருள் கொள்ளலாம்.
நாம் செய்த ஒட்டுமொத்த பாவங்களுக்கும் தண்டனை தரவேண்டுமாயின் மரணதண்டனையே தரப்பட வேண்டும்.
என்னை மீட்டுக் கொள்வதற்காக இயேசுக்கிறிஸ்து என்னுடைய தண்டனையை அவரே ஏற்று எனக்காக பலியானார். குற்றமில்லாத அவரது பரிசுத்த இரத்தத்தை சிந்தினார்.
உயிர் இரத்தத்தில் இருப்பதால் இரத்தம் சிந்துவது அவசியமாகப்பட்டது.
ஆகவேதான் குற்றமில்லாத இரத்தத்தையே இயேசுக்கிறிஸ்து விலைக்கிரயமாக செலுத்தினார். நீதியுள்ள தேவன் பொன்னையோ வொள்ளியையோ கொண்டு மீட்க்காது தன்னுயிரையே கொண்டு மீட்டார்.
ஒருமனிதனின் கீழ்படியாமையால் வந்த பாவத்தை முழு மனிதர்களும் பெற்றுக் கொண்டது போல, ஒருமனிதன் (இயேசுக்கிறிஸ்து) கீழ்படிந்து பரிசுத்தமாய் வாழ்ந்து பாவி மனுஷனது தண்டனையை ஏற்று மரித்ததால், முழு மனுக் குலத்திற்கும் இரட்சிப்பு கிடைத்தது.
இரத்தத்தை சிந்தினாரென்று சொல்லுவது, எழுதுவது, பாடுவது சுலபமானது.
ஆனால் அதை அனுபவ ரீதியாக கடப்பதென்பது கடினமான காரியமாகும்.
மனிதர்களால் முடியாத காரியமாகும். ஒரு நபர் நல்லவருக்காக எதையாவது கொடுக்க இழக்க முன்வருவார். ஆனால் இயேசுக்கிறிஸ்துவோ பாவிகளான எங்களுக்காக தன்னையே கொடுத்தார்.

ஒருவர் கஸ்ரப்பட்டு சம்பாதித்து கட்டிய வீட்டை விற்க வேண்டிய அல்லது இழக்க வேண்டியதொரு நிலைவந்தால் மிகவும் மனம் வருந்தி அழுது விற்க முன்வருவார். ஆனால் அந்நபரால் அதுபோல, பிறிதொரு வீட்டை இன்னொரு நாளில் கட்ட முடியும்.
நாம் அன்றாடம் பாவிக்குமொரு பொருளை ஒருவர் கடனாக வாங்கிச் சென்று பாவித்துவிட்டு திருப்பித்தரும் போது, அப்பொருளை பலதடவை புரட்டிப் புரட்டிப் பார்ப்போம். ஏதாவது கீறல் நெழிவு பழுது இருந்தால் போதும், நான் எவ்வளவு பத்திரமாய் பக்குவமாய் இத்தனையாண்டுகளாக பாவித்தேன் தெரியுமா எனச் சொல்லி ஓலம்பாடுவோம். ஆனால் அது போல பிறிதொரு பொருளை மீண்டும் அவர்களால் வாங்க முடியும். மீண்டும் வாங்கக் கூடிய உருவாக்கக் கூடிய பொருட்களையே இழப்பதற்கும் கொடுப்பதற்கும் தயங்கும் மனிதர்கள், எப்படி மீளப் பெறமுடியாத உயிரை பிறருக்கு கொடுக்க முன்வருவார்கள்?
ஆனால் இயேசுக்கிறிஸ்து தன்னார்வமாய் முன்வந்து தன்னுயிரைக் கொடுத்தார். அவர் சிந்திய பரிசுத்த இரத்தத்திற்கு ஈடாக எதையும் எங்களால் கொடுக்கவே முடியாது. பிரதியுபகாரம் செய்யவே முடியாது.

ஒருவேளை நீங்கள் சொல்லக் கூடும் நாட்டுக்காக பலர் மனித வெடிகுண்டுகளாக மரிக்கிறார்களே, உயிர்த்தியாகம் செய்கிறார்களேயென்று.
1. அவர்கள் பிறக்கும் போதே தற்கொலை தாரிகளாவதற்கு பிறக்கவில்லை. சந்தர்ப்பம் சூழ்நிலை அவர்களை அப்படி ஆக்கிவிடுகிறது.
2. அவர்கள் பாவமே செய்யாத பரிசுத்தவான்களல்ல.
3. அவர்கள் எதிரியால் பாதிக்கப்பட்டவர்களாயும், மூளைச்சலவை செய்யப்பட்டு, சமூகத்திலிருந்து பிரித்து தனிமையாக வைத்திருந்து, தீர்மானிக்கப்பட்ட இலக்கிற்கு அனுப்பப்படுகிறார்கள்.
இவர்களை இயேசுக்கிறிஸ்துவோடு ஒப்பிடுவது பொருத்தமற்றது.

இயேசுக்கிறிஸ்து நமது பாவங்களுக்காக மரிப்பதற்காகவே பிறந்தவர். அவர் பாவமே செய்யாத பரிசுத்தர். அடித்தவன் துப்பினவன் நிந்தித்தவன் கொலைசெய்யப் போகிறவனையும் மன்னித்து, அவர்களை மன்னிக்கும்படி பிதாவிடம் மனப்பூர்வமாய் வேண்டிக் கொண்டவர்.
ஒட்டுமெத்த உலகத்தின் பாவங்களுக்காக மரித்தவர். தான் மரிக்கப்போகும் இடம், நாள், நேரம் என்பனவற்றை அறிந்து வைத்திருந்து முன்னறிவித்தவர்.
பரலோக மகிமையை விட்டு இறங்கி வந்தவர். பூமியில் தலைசாய்க்க இடமில்லாது பணியாற்றியவர். அவருடைய சீஷர்களின் கால்களையே கழுவிவிட்டவர். எவரும் செய்யமுடியாத உச்சக்கட்ட தியாகத்தையே இயேசுக்கிறிஸ்து நமக்காக செய்தார்.
கிறிஸ்துவின் மரணத்தின் விளைவு அடிமைத்தனத்தில், சிறையிருப்பிலிருந்து மீட்கப்பட்டதுமன்றி, நாங்கள் அவருடைய உடமையாகி, அவருடைய சொந்த பிள்ளையாகிவிட்டோம்.
அவரின் சொத்தாக நாமிருப்பதோடு, அவர் நமக்கு எஜமானாக இருக்கிறார்.
ஆகவே நாம் நம்மைச் சொந்தம் கொண்டாடமுடியாது.
தேவப்பிள்ளைகளை சொத்து, உடமை, எஜமான் என்றழத்தவுடன், தேவன் நம்மீது அதிகாரம் செலுத்துபவராகவும் சுயாதீனத்தில் தலையிடுபவராக கருதிவிடக்கூடாது.
அவர் நமக்கு பூரண சுதந்திரம் தந்துள்ளார்.
நம்மை கிரயம் செலுத்தி மீட்டுக் கொண்டார் என்ற புரிதலோடு, நம்முடைய சரீரத்தை பரிசுத்தமாக வைத்துக்கொண்டிருப்பதோடு, நமக்கு தரப்பட்டுள்ள சுயாதீனத்தை இயேசுக்கிறிஸ்துவின் விருப்பு வெறுப்புக்களுக்கேற்ப அப்பியாசப்படுத்தி வாழுவதே முக்கியமானது.

பிரியமானவர்களே!
இன்று இயேசுக்கிறிஸ்து எங்களை பிறருக்காக கிரயம் செலுத்தும்படி (மரிக்கும்படி) கேட்கப்போவதில்லை. அப்படி அவர் கேட்டாலும் நாங்கள் செய்வோமா என்பது மிகப்பெரிய கேள்வியே. நாங்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டுமென்பதே அவரின் பேரவா. அதற்காகவே அவர் இவ்வளவாக பிரயாசப்பட்டார். அவருக்கு பிரியமாக வாழ்வதோடு. அவரை அப்பா பிதாவே என அழைக்கும் அவர் பிள்ளைகளாகிய நாமும் பிறரை மகிழ்ச்சியாக வாழ வைக்க பிரயாசப்படுவோம்.
எப்படி நாம் கேட்காதிருக்க இயேசுக்கிறிஸ்து தேடிவந்து உதவினாரோ அதுபோலவே நாமும் செயலாற்றுவது சிறந்தது.
சுகபோக, சுயநல கிறிஸ்தவர்களாயில்லாமல், பிதாவின் சித்தம் செய்வோம். கிரயத்துக்கு கொள்ளப்பட்டதை மறவாது, முடிந்தளவு தியாகமாக ஜீவிப்போம்.
பாவம் செய்யாது நமது ஆவி ஆத்துமா சரீரத்தின் மூலம் தேவ நாமத்தை கனப்படுத்துவோமாக.
எஞ்சியுள்ள நாட்களெல்லம் கிரயம் செலுத்தி மீட்டுக்கொண்டவருக்காகவே மனப்பூர்வமாக வாழுவோமாக. ஆமென்.

நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள். ரோமர் 12:2.

நன்றி கர்த்தாவே

த. பிரபா.

   
   
 
எங்களை தொடர்புகொள்ள
T.Pirabagaran
89 Laurel crescent
Romford
Essex
Rm7 0ru
England
  TP:-
Email:- info@thehandofjesus.com
சமூக வலைத்தளங்களில் எங்களுடன் தொடர்பு கொள்ள

        
உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது. சங்கீதம் 119:105
Copyright © 2015 The hand of jesus.com All Rights Reserved