ஆங்கிலம் | தமிழ் | சிங்களம்

 
 
  முகப்பு பக்கம்
  எங்களை பற்றி
  எங்கள் சேவைகள்
  தற்போதைய தேவைகள்
    ஜீவ வார்த்தைகள்
  கட்டுரைகள்
  வேதாகம வரைபடங்கள்
  ஜெப வேண்டுகோள்
  ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம்
  சிறுவர்கள் வேதாகம ஒளிநாடா
  கருத்துக்கள்
  ஒளிப்பதிவுகள்
  எங்களை தொடர்புகொள்ள

 தினசரி தியானம்
  ஆரம்ப நிலை
  இடை நிலை
    மேல்நிலை
  வேதாகம விளக்கம்

  ஜீவ வார்த்தைகள்

 பயனுள்ள இணைப்புகள்
  இணைய தளங்கள்
  www.tamilchristian.com
  www.tamilchristianworship.org
  வானொலி
  www.tamilchurchvos.org
  www.tamilchristianprayer.org
    தொலைக்காட்சி
  www.tamilchristianonline.net
    வேதாகமம்
  இணைய வேதாகமம்
    இணைய வேதாகமம் 2
    ஒலி வேதாகமம்
   


   

இயற்கையின் சீற்றம்.



அண்மையில் இலங்கை இந்திய நாடுகளை கஜா புயல் (2018) தாக்கியது. இந்தியாவில் பலர் உயிரிழந்தார்கள், அகதிகள் ஆக்கப்பட்டார்கள், பல கோடி ரூபா பெறுமதியான உடமைகள் சேதமாக்கப்பட்டது. அரசாங்கத்தினால் முன்னெச்சரிக்கை கொடுக்கப்பட்டது. ஆனால் அந்த அரசாங்கங்களினால் அப்புயலை தடுக்கமுடியவில்லை. சுனாமியை, எரிமலையை, வெள்ளப்பெருக்கை, மண்சரிவை, புயலையெல்லாம் தடுக்கும் வல்லமை அரசுகளிடமோ, மனிதர்களிடமோ இல்லை. இன்றுவரை இயற்கையை கட்டுப்படுத்தவோ அல்லது தடுக்கவோ மனிதனால் இயலாத காரியமாகவே உள்ளது. இயற்கை அனர்த்தங்களை மட்டுமல்ல இறப்பையும் மனிதனால் தடுக்கவே முடியாதுள்ளது.

இயற்கையை வணங்கும் ஒரு கூட்ட மக்கள் பூமியில் வசிக்கிறார்கள். இயற்கையை வணங்குவதால் அதன் சீற்றத்திலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்ற மூடநம்பிக்கையினால் கடைப்பிடிக்கிறார்கள். இப்பாமர மக்களின் வணக்கத்தை கண்டு, அதற்கு மதிப்பளித்து அடங்கிப் போவதற்க்கு நிலம், நீர், கற்றுக்கு, மழை, இடி, மின்னல், தீக்கு என்ன உணர்வா, அல்லது உயிர்தான் இருக்கிறதா?
புலன்களால் காணப்படும், சக்கிக்கு மிஞ்சிய அனைத்தும் அவர்களுக்கு கடவுளாக தெரிகிறது. பின்னாட்களில் மதங்களை உண்டுபண்ணிய மேதாவிகள் ஒவ்வொரு இயற்கைக்கும் ஒவ்வொரு கடவுளை உண்டு பண்ணி, அவர்களை பொறுப்பாளர்களாக நியமித்துவிட்டார்கள். இப்பொழுது பக்தர் கூட்டம் இப்பொறுப்பாளர்களிடமே வேண்டுதல் செய்கிறார்கள். ஒவ்வொரு நாடுகளிலும் ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு அமைச்சர்கள் இருப்பார்கள். அதுபோலவே போலி ஆன்மீகத்திலும் ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு கடவுளை நியமித்திருக்கிறார்கள்.
சாத்தான் மனிதனின் பெலவீனங்களை அறிந்து, அதற்கு ஏற்றால் போல் இறை வணக்கத்தை உண்டுபண்ணி, உண்மையான தேவனை ஆராதிக்காதபடி வஞ்சித்து வைத்திருக்கிறான். இப்பேரழிவுகளுக்கெல்லாம் சாத்தானே மூல காரணமென்பதை அறியாத பக்தர்கள் அழிப்பவனையே வணங்கும் பரிதாபநிலையில் வசிக்கிறார்கள்.

கொலை, கொள்ளை, கற்பழிப்பு, யுத்தங்கள் கொள்ளை நோய் போன்றனவற்றுக்கு யார் காரணமென்றால்? சாத்தானென உடனடியாக பதில் சொல்லிவிடுவீர்கள்.
திருடன் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். (யோவான் 10:10). தேவ உறவில் நிலைத்திருந்த ஆதிப் பெற்றோராகிய ஆதாமையும் ஏவாளையும் பாவத்தில் விழச் செய்து, தேவனோடு இருந்த உறவை முறித்து, ஆளுகையை இழந்து, பாவத்தின் மூலம் மரணத்தை தண்டனையாக பெற்றுக் கொள்ளச் செய்தான். அப்பாவமே மனிதனுக்கு கேடு விளைவிக்கக் கூடிய அனைத்து தீமைகளையும் பிறப்பிக்கிறது.
சாத்தான் ஆதிமுதற்கொண்டு மனுஷகொலைபாதகனாயிருக்கிறான்; சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான். (யோவான் 8:44).
மனுக்குலத்தை அழிப்பதில் சாத்தான் பிரியமாயிருக்கிறான். அதற்கு பலவழிகளைக் கைக்கொள்ளுகிறான். அவ்வழிகளில் ஒன்றே இயற்கையின் சீற்றமாகும்.

ஆரம்பத்தில் காயீன் மூலம் ஆபேலைக் கொலை செய்தாதை ஆதியாகம் 4:8ல் வாசிக்கிறோம். அதே அதிகாரம் 23ம் வசனத்தில் லாமேக்கு கொலை செய்ததாக வாசிக்கிறோம். இப்படியே பாவங்களும் கொலைகளும் பெருகின. பஞ்சம், யுத்தம், கொடிய வியாதியின் மூலம் மக்கள் இறந்தார்கள். மோசே பிறந்த காலத்தில், ஆண் குழந்தைகள் கொலை செய்யப்படுவதற்காக நைல் நதியில் போடப்பட்டார்கள். இயேசுக்கிறிஸ்து பிறந்த காலத்தில் இரண்டு வயதுக்குட்பட்ட பிள்ளைகளை கொலை செய்யும்படி ஏரேது கட்டளையிட்டான். அப்போஸ்தலர்களை, தேவப்பிள்ளைகளை சித்திரவதை செய்து கொலை செய்தார்கள். பரிசுத்த வேதாகமத்தில், தேவ ஜனங்கள் கொலை செய்யப்பட்டமைக்குரிய அநேக ஆதாரங்கள் உண்டு.

ஏன் சாத்தான் கொலையை தூண்டுபவனாகவும் அதை செய்பவனாகவும் இருக்கிறான்? தேவனால் சிருஷ்டிக்கப்பட்ட தேவ தூதனே சாத்தானாகும், இவனது பெருமையின் காரணமாக ஆண்டவர் அவனைத் தண்டித்தார். பரலோகத்தில் இருந்த உரிமைகளைப் பிடுங்கி, பூமிக்கு தள்ளினார்.  இதன் பிற்பாடே தேவன் மனுசனை உண்டாக்கினார். அந்த மனுசன் தேவனுக்கு கீழ்ப்படிந்து, அவரோடு ஐக்கியமாக வாழக்கூடாதென்பதில் சாத்தான் குறியாயிருக்கிறான். கர்த்தர் மீது கோபம் கொண்ட சாத்தான், தன்னைக் காட்டிலும் மனிதன் மேன்மையற்றவன், நேர்மையற்றவன், நன்றி விசுவாசமற்றவன் என்பதை நிரூபிக்க காலா காலமாக பிரயாசைப்படுகிறான். இதை யோபுவின் சரித்திரத்தில் கண்டுகொள்ளக் கூடியதாயிருக்கிறது. அதே யோபுவின் புத்தகத்திலேயே யோபு கர்த்தரை தூசிக்க (திட்ட) தூண்டுகிறதற்காக, இயற்க்கை சீற்றத்தை உருவாக்குகிறான். இக்கட்டுரையில் அதையே சுருக்கமாக தியானிக்கப் போகிறோம்.

அ) சாத்தானால் இயற்கை அழிவுகளை நேரடியாக உருவாக்க முடியும். அதற்கு கர்த்தர் அனுமதிக்க வேண்டும். யோபுவின் கதை அதற்கு ஆதாரமாக உள்ளது.

1. சபேயர் (உயரமான மனிதர்கள்) யோபுவினுடைய வேலைக்காறரை கொலை செய்து, 500 எருதுகளையும், 500 கழுதைகளையும் திருடிக்கொண்டு சென்றார்கள். யோபு1:14-15
2. வானத்திலிருந்து அக்கினி விழுந்து யோபுவினுடைய 7000 ஆடுகளையும், வேலைக்காறரையும் சுட்டெரித்துப் போட்டது. யோபு1:15.
3. கல்தேயர் மூன்று குழுக்களாகச் சென்று, யோபுவினுடைய வேலையாட்களை கொலை செய்துவிட்டு 3000 ஒட்டகங்களை திருடிக் கொண்டு போனார்கள். யோபு 1:17
4. யோபுவினுடைய ஏழு குமாரரும், மூன்று குமாரத்திகளும் சாப்பிட்டுக் கொண்டிருந்த வேளை, பெருங்காற்று வீசி, வீட்டின் சுவர்கள் இடிந்து விழுந்ததால் அவர்கள் மரித்துப் போனார்கள்.
5. யோபுவின் உள்ளங்கால் தொடங்கி அவர் உச்சந்தலைமட்டும் கொடிய பருக்களால் சாத்தான் அவரை வாதித்தான். யோபு2:7

மேலே குறிப்பிட்ட ஐந்து சம்பவங்களிலிலுமிருந்து, சாத்தானால் கொலை செய்ய, கொள்ளையிட, வியாதியை கொண்டுவர அவனால் முடியுமென்ற முடிவுக்கு வரலாம். அதற்கு மனிதர்களையும் இயற்கையையும் பயன்படுத்த முடியுமென்பதை நிரூபிக்கிறது. எப்படி வானத்திலிருந்து அக்கினியை, பெருங்காற்றை அவனால் கொண்டுவரமுடியுமோ அப்படியே மனிதர்களையும் பெருவாரியாய்க் கொல்வதற்கு இயற்கை சீற்றத்தை அவனால் உருவாக்க முடியும். (கர்த்தர் அனுமதித்தால் மட்டும்).
இவையெல்லாம் கர்த்தருக்கு தெரியாமல் நடக்கவில்லை.
அவர் சர்வஞானி, அவருக்கு தெரியாமல், அவரது அனுமதியில்லாமல் எதுவும் நடக்காது.
யோபுவின் விடயத்தில் சாத்தான் யோபுவின் உத்தமத்தை உடைப்பதற்காக, தேவனிடமிருந்து அனுமதி கேட்டான். அவரும் சம்மதித்தார். ஆனால் கர்த்தர் கொலை, கொள்ளை, வியாதியை உண்டுபண்ணும்படி சொல்லவில்லை. அவற்றை தீர்மானித்தது சாத்தானே. சாத்தானுடைய ஒரே இலக்கு மனிதனை பாவத்தில் விழ வைக்க வேண்டும். அதற்க்காக மோசமான வழிகளைக் கையாளுவான்.
மனிதர்களையோ அல்லது இயற்கையையோ அவன் உண்டாக்கியிருந்தால் தானே அதில் அவன் கரிசனைப்பட்டு பாதுக்காக்க ஆவலாயிருந்திருப்பான்.

ஆ) சாத்தானது ஆவியை உடையோரைக் கொண்டு அல்லது அவனது பிரதிநிதிகளுக்கூடாக இயற்கை அழிவை, சீற்றத்தை உருவாக்குகிறான்.

சாத்தானிடம் அன்பு இரக்கம் சமாதானம், பிறரைக்குறித்த கரிசனை போன்ற தெய்வீக சுபாவத்தை காணமுடியாது. அவனிடம் பெருமை, பொய், எரிச்சல், கோபம், பணாஆசை, சுயநலம் போன்ற தீய சுபாவத்தையே காணமுடியும்.
இயற்கை அழிவுகளை எல்லா நேரமும் நேரடியாக சாத்தான் உருவாக்காத போதும்,
தேவபயமற்ற, சகமனிதர்களை, இயற்கையை நேசிக்காத, பண ஆசை கொண்ட சுயநலமுள்ள முதலாளிகளின்  தொழிற்சாலைக் கழிவுகள், புகை வெளியேற்றம், காடுகள் அழிப்பு, மண் அகழ்வு போன்றனவற்றால் இயற்கை சமநிலை இயல்பாகவே குழம்பி, இயற்கை சீற்றங்கள் உருவாகின்றது. ஓசோன் படலத்தில் ஏற்படும் ஓட்டை காரணமாக, பூமிக்கு வேண்டப்படாத சூரியக்கதிர்கள் வருவதால், மனிதர்களுக்கு தோல்வியாதி, புற்றுநோய் போன்றன வருவதோடு, அந்தாட்டிக்கா, ஆட்டிக் பகுதியில் இருக்கும் பனிக்கட்டிகள் உருகி, கடல் நீர்மட்டம் உயர்வாகுவதனாலும், பல நாடுகள் நீரில் மூளும் அபாயத்தில் இருக்கின்றன.
வல்லரசுகளின் இரசாயன, அணு ஆயுத பரிசோதனைகளினால் பூமியின் அடித்தட்டு அசைவினால் சுனாமி போன்ற பேரழிவுகள் உருவாகின்றன.
இந்தியாவில் நிலத்தடியிலிருந்து எடுக்கும் வாயுக்களால் அப்பிரதேசத்து மக்களின் குடிநீர் கெட்டுப்போய், அங்கு மக்கள் வாழ முடியாத சூழல் உருவாகுவறதெனச் சொல்லி போராடுவதை சமீபகாலத்தில் அறிகிறோம்.
உலகம் முழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடப்பதாலும் (1யோவான்5:19), தேவபயமற்று, பாவம் பெருகுவதாலும், அக்கிரமம் மிகுதியாவதாலும் உலகம் அழிவை நோக்கி நகருகிறது, இயற்கையும் திணறுகிறது.

இ) கர்த்தர் இயற்கை அழிவை உண்டாக்குகிறாரா?

இதற்கான சரியான பதிலை சோதோம் கொமோராவின் அழிவிலிரிந்து தெரிந்து கொள்ளுகிறோம். சோதோம் கொமோரா மக்களின் பாவம் மிகவும் கொடிதாயிருப்பதால் அவர்களை அழிக்கப் போகிறேனென ஆபிரகாமுக்கு அறிவித்துவிட்டே அவர்களுக்குரிய தண்டனையை ஆண்டவர் கொடுத்தார்.
பாவம் மிகவும் கொடிதாயிருக்கும் பொழுது ஆண்டவர் இயற்கையை கொண்டும் அழிப்பார். ஆனால் அதை தனது பிள்ளைகளிடம், பரிசுத்தவான்களிடம், தீர்க்கதரிசிகளிடம் அறிவித்துவிட்டே அதை நடைமுறைப்படுத்துவார். ஆபிரகாம் மனப்பாரத்தோடு லோத்துவை நினைத்து, ஆண்டவரிடம் விண்ணப்பம் செய்தார். நீதிமானான லோத்துவை, மனைவியை, பிள்ளைகளை அவ்வழிவிலிருந்து தூதர்கள் காப்பாற்றிய போதும், தேவ தூதர்களின் நிபந்தனைக்கு மாறாக லோத்துவின் மனைவி சோதோம் கொமோராவின் அழிவை திரும்பிப் பார்த்ததால் உப்புத்தூண் ஆனாள். அன்று ஆபிரகாம் ஜெபித்தது போல நாங்கள் இன்று ஜெபிக்க வேண்டும். நீதிமான்கள் காப்பாற்றப்படுவார்கள், அதே வேளை நீதிமான்களின் உறவினர்கள் பூரணமாக மனந்திரும்பாத பட்சத்தில் லோத்துவின் மனைவியின் முடிவையே சந்திப்பார்கள். இந்த அழிவானது கொடூர பாவத்தில் இருப்பவர்களுக்கு நால்ல பாடமாக இருக்கிறது. இன்றுகூட மனிதர்கள் வாழமுடியாத நிலமாக, வரலாற்று ஆதாரமாக சோதோம் கொமோரா காட்சியளிக்கிறது.

ஈ) நிகழ்கால அழிவுகள், இயற்கை சீற்றங்களிலிருந்து எப்படி தப்பிப்பது?

சீஷர்கள் இயேசுக்கிறிஸ்துவிடம் உலகத்தின் முடிவுக்குரிய அடையாளம் என்வென்று கேட்ட வேளை அதற்கு பதிலாக அநேக காரியங்களை அவர் எடுத்துரைத்தார். அதில் ஒன்று, ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகுமென சென்னதை மத்தேயு 24:7ல் வாசிக்கிறோம். ஆகவே இப்போது நடப்பனவற்றை பார்த்து ஆச்சரியப்படத்தேவையில்லை.
இவை முடிவுக்குரிய ஆரம்பநிகழ்வாகும். ஆகவே முடிவு காலம் இப்போதிருப்பதை காட்டிலும் மிகவும் கொடிதானதாய் இருப்பதோடு, இயற்கை அனர்த்தங்களும் அடிக்கடி உருவாகும்.

இவற்றை தேவனே முன்னறிவிக்கிறார். அவை சம்பவிக்க அனுமதியுமளிக்கிறார். ஆனால் அவர் இவ்வாறு நடக்கும்படி எதையும் தூண்டிவிடவுமில்லை, இச்சம்பவங்களைக்குறித்து சந்தோசப்படவுமில்லை. மக்கள் துன்பப்படுவது, மரிப்பது, பாதாளம் போவது தேவனுக்கு சித்தமில்லை, பிரியமில்லை.
அவர் பார்த்து பார்த்து உண்டாக்கிய மனுஷன், பூமியிது. இயற்கையனைத்தையும் மனுஷன் மகிழ்ச்சியாக வாழுவதற்காகவே உண்டாக்கினார். அவர் உண்டாக்கிய எதையும் எளிதில் அழிக்க விரும்பமாட்டார். அவர் அன்பாகவே இருக்கிறார் (1யோவான்4:8). அவரில் கொஞ்சமேனும் அக்கிரமமில்லை.

தேவன் மனிதர்களை எவ்வளவு ஆழமாய் நேசித்தார் என்பதை யோவான் 3:16, 17 வேதவாசனங்களை வாசிக்கும் பொழுது அறிந்து கொள்ளலாம்.
தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். யோவான் 3: 17ல் உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே இச்சம்பவம் நடந்தாகிவிட்டது.
உலகத்தை மீட்பதற்காக இயேசுக்கிறிஸ்துவே பலியானார், அவர் மனிதர்களை பலியெடுப்பவரல்ல. அவரை விசுவாசித்து ஏற்றுக்கொள்வதால் இவ்வழிவிலிருந்து தப்பித்து நித்திய ஜீவனை சுதந்தரித்துக் கொள்ளலாம். எல்லோரும் மனந்திரும்ப வேண்டுமென்பதற்காகவே, எல்லோரும் நித்திய ஜீவனை பெற்றுக்கொள்ள வேண்டுமென்பதற்காகவே இரண்டாயிரமாண்டாக தேவன் பொறுமையோடு காத்திருக்கிறார்.

பிரியமானவர்களே!
நோவாவின் காலத்தில் அக்கிரமம் மிகுதியானதால் தேவனே பூமியை வெள்ளத்தால் அழித்தார். நோவா அழிவு வரப்போகிறது என்பதை 100 ஆண்டுகளுக்கு மேலாக எச்சரித்து, விமோசனத்தையும் சொன்னார். அம்மக்கள் அதற்கு செவி சாய்க்காததால் முடிவில் அழிந்து போனார்கள். இன்றைக்கு நோவா காலத்து அழிவை நாங்கள் வேதாகமத்திலிருந்து வாசித்தறியக்கூடியதாய் இருக்கிறது.
அச்சம்பவம் நமக்கு சிறந்த முன்னுதாரணமாயிருக்கிறது.
இயற்கை அழிவுகளைக் கேள்விப்படும் பொழுது. நாங்கள் முடிவு காலத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறோம் என்ற எச்சரிப்பைத் தருகின்றது.
ஆபிரகாம் போன்று ஜெபித்து, நோவா போன்று சுவிஷேசம் சொல்லி அழிந்து போகும் மக்களை அழிவிலிருந்து தப்புவிக்க வேகமாக தேவப்பணியாற்றுவோம், சாத்தானின் தந்திரங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லி, அவர்கள் மனந்திரும்ப பிரயாசைப்படுவோம்.
இறைவனை விசுவாசித்து, இயற்கையை பாதுகாத்து, அயலானை நேசித்து இன்பமாக வாழுவோமாக. ஆமென்.

ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும். மத்தேயு 24:14.

நன்றி கர்த்தாவே

த. பிரபா

   
   
 
எங்களை தொடர்புகொள்ள
T.Pirabagaran
89 Laurel crescent
Romford
Essex
Rm7 0ru
England
  TP:-
Email:- info@thehandofjesus.com
சமூக வலைத்தளங்களில் எங்களுடன் தொடர்பு கொள்ள

        
உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது. சங்கீதம் 119:105
Copyright © 2015 The hand of jesus.com All Rights Reserved