ஆங்கிலம் | தமிழ் | சிங்களம்

 
 
  முகப்பு பக்கம்
  எங்களை பற்றி
  எங்கள் சேவைகள்
  தற்போதைய தேவைகள்
    ஜீவ வார்த்தைகள்
  கட்டுரைகள்
  வேதாகம வரைபடங்கள்
  ஜெப வேண்டுகோள்
  ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம்
  சிறுவர்கள் வேதாகம ஒளிநாடா
  கருத்துக்கள்
  ஒளிப்பதிவுகள்
  எங்களை தொடர்புகொள்ள

 தினசரி தியானம்
  ஆரம்ப நிலை
  இடை நிலை
    மேல்நிலை
  வேதாகம விளக்கம்

  ஜீவ வார்த்தைகள்

 பயனுள்ள இணைப்புகள்
  இணைய தளங்கள்
  www.tamilchristian.com
  www.tamilchristianworship.org
  வானொலி
  www.tamilchurchvos.org
  www.tamilchristianprayer.org
    தொலைக்காட்சி
  www.tamilchristianonline.net
    வேதாகமம்
  இணைய வேதாகமம்
    இணைய வேதாகமம் 2
    ஒலி வேதாகமம்
   


   

பாவம்


                                          எல்லா விதமான அநீதியும் மற்றும் சட்டத்தை மீறுவதும் நன்மை செய்ய அறிந்திருந்தும் அதைச் செய்யாமலிப்பதும் விசுவாசத்தினால் வராத யாவும், தீய நோக்கமும் பிறரை அவமதிப்பதும், பாரபட்சம் காட்டுதலும் பாவங்களாகும். மிகுதியாகப் பேசினால் சொற்களில் பாவம் காணப்படும். தனித்தனியாகவும் பட்டியல்களாகவும் வேதத்தின் பல பகுதிகளில் பாவங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் மாற்கு 7:21-23, 1கொரிந்தியர் 6:9-10, கலாத்தியர் 5:19-21, வெளிப்படுத்தல் 21:8 போன்ற பகுதிகளில் பாவத்தப் பற்றி எடுத்துக் கூறப்பட்டுள்ளது.

1யோவான் 3:4 வசனத்தின் பிற்பகுதியில் "நியாயப்பிரமாணத்தை மீறுவதே பாவம்" என்று கூறப்பட்டுள்ளது. இதில் நியாயப்பிரமாணம் என்பது யூதருக்கு மோசேயின் மூலம் தேவன் அளித்த நியாயப்பிரமாணத்தை குறிப்பிடப்படவில்லை. சட்டம் என்ற பொருளிலில்தான் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது "சட்டத்தை மீறுவதே பாவம்" என்று இருந்தால் பொருத்தமாக இருக்கும். நியாயப்பிரமாணம் என குறிப்பிடப்படுவது அதற்கு கீழ்பட்டவர்களுக்கே பொருந்தும். பிறருக்குப் பொருந்தாது என ரோமர் 3:19 இல் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏனெனில் மோசேயின் நியாயப்பிரமாணமில்லாதவர்கள் மனசாட்சியின்படியும் அவர்களின் சிந்தனைகளின் படியும் தங்களுக்குத் தாங்களே சட்டம் அதாவது நியாயப் பிரமாணத்தை உருவாக்குகின்றனர். என்பதை ரோமர் 2:14 என்ற பகுதியினூடாக விளங்கிக் கொள்ள முடிகிறது. மேலும் கர்த்தருடைய பிள்ளைகள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் விசுவாசப் பிரமாணத்திற்குட்பட்டவர்களாய் இருக்கிறோம். என்பதனை ரோமர் 6:14-15 என்ற வேதப்பகுதியினூடாக அறியலாம்.

பாவத்தின் தொடக்கம் என்று பார்க்கப்போனால் தேவதூதர்கள் பாவமில்லாதவர்களாக உருவாக்கப்பட்ட போதிலும், பாவம் செய்ய ஆற்றலுள்ளவர்களாயிருந்தனர். லூசிபர் என்ற கேரூப் எனும் சிறப்பான தூதன் தனது அழகினால் பெருமையடைந்து வானத்திற்கு ஏறவும் தேவனுடைய நட்சத்திரங்களுக்கு மேலாக தனது சிங்காசனத்தை உயர்த்தவும் ஆராதனைக் கூடத்தின் பர்வதத்திலே வீற்றிருக்கவும் உன்னதங்களில் ஏறவும் உன்னதருக்கு ஒப்பாகவும் இருதயத்தில் நினைத்த போது பாவம் உருவாயிற்று என்பதனை ஏசாயா 14:12-14 என்ற வேதப்பகுதியினூடாக அறிய முடிகின்றது.

மனிதன் பாவம் செய்தால் அப்பாவத்திற்கு அவனே பொறுப்பு என்ற கருத்தினை பலர் ஏற்றுக் கொள்வதில்லை ஆனாலும் உண்மை அதுவே எப்படியெனிலில் பாவம் செய்த மனிதனின் ஒத்துளைப்பு இன்றி, மற்றவர்களின் தூண்டுதலால் மட்டும் அவன் பாவம் செய்வது இல்லை. அவனுக்கு இருக்கும் சுய அறிவைக் கொண்டு அவன் தவித்துக்கொள்ளலாம். மற்றவர்களின் தூண்டுதலால் மட்டும் அவன் பாவம் செய்வது இல்லை. எனவே சூழ்நிலைகளையும் பாவம் செய்யத்தூண்டியவர்களையும் சாத்தானையும் காரணம் காட்டி யாரும் தப்பித்துக்கொள்ள முடியாது. நடந்த பாவத்திற்கு, அதைச் செய்த மனிதன் பொறுப்பு ஏற்றே ஆக வேண்டும். அதற்கேற்ற தண்டனையை அடைய வேண்டும். பாம்பினால் ஏமாற்றப்பட்ட போதிலும் ஆதாமின் மனைவியும் ஆதாமும் தங்கள் தவறுகளுக்கு தண்டனை பெற்றனர் என்பது இதனை வெளிப்படுத்துகின்றது. இதனை ஆதியாகமம் 3ம் அதிகாரத்தை வாசிப்பதன் மூலம் அறியலாம்.

உலகத்தில் மன்னிக்கப்படாத மிகவும் கொடிய பாவம் ஒன்று உண்டு. அது என்னவென்றால் ஆவியானவருக்கு விரோதமாகப் பேசும் பாவம் இம்மையிலும் மறுமையிலும் மன்னிக்கப்படுவதில்லை. என்பதனையும் அவ்வாறு பேசுகிறவன் “நித்திய ஆக்கினையை அடைவான்” என்பதனையும் இயேசு கூறியுள்ளார். இக்கருத்தினை மத்தேயு 12:31-32, மாற்கு 3:28-29 போன்ற வேதப்பகுதிகளினூடாக உறுதியாக கூறப்பட்டிருப்பதனை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. எனவே ஆவியானவரைப்பற்றிப் பேசும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 

பரிசுத்த ஆவியானவரைப்பற்றி சரியாகத் தெரியாதவர்கள் அவரைப்பற்றிப் பேசாமலிருப்பது நலமாயிருக்கும்.

ஒரு மனிதன் தனது பாவங்களுக்காக பரிகாரம் செய்ய முடியாது. இயேசு அளிக்கும் பாவமன்னிப்பைப் பெற்றுக் கொள்ள வேண்டும். புதிய ஏற்பாட்டுக் காலமாகிய இக்காலத்தில் பாவமன்னிப்பு மட்டும் தனியாக வழங்கப்படுவதில்லை. பாவத்தில் இருப்பவர்கள் இரட்சிக்கப்படும் பொழுது பாவமன்னிப்படைகின்றனர். இரட்சிக்கப்பட்டவர்கள் பாவத்தில் தவறி விழுந்தால் அவர்கள் தங்கள் பாவங்களை கர்த்தரிடம் மனதிற்குள் கூறி மன்னிப்பு பெற்றுக்கொள்ள வேண்டும். செய்த பாவங்கள் ஒவ்வொன்றும் நம் நினைவில் இருப்பதில்லை எனவே, நினைவிற்கு வரும் யாவற்றையும் கூறி மன்னிப்புப் பெறுதல் போதுமானது. நாம் பாவமன்னிப்பு அடையும் போது பாவங்கள் நம்மை விட்டு விலக்கப்படுகின்றன. தேவனுடைய முதுகுக்குப் பின்னாக எறிந்து விடப்படுகின்றன, சமுத்திரத்தின் ஆழத்தில் போடப்படுகின்றன, மன்னிக்கப்படுகின்றன, தேவனால் மறக்கப்படுகின்றன. 

பாவத்தை அறிக்கையிட்டு மனந்திரும்பி மன்னிப்பை பெற்று வாழ்வடைவோமாக.

இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட்டு நாம் சுத்தம் பண்ணப்படுகின்றோம்.

எழுத்துருவாக்கம்:- நடராஜா ஆபிரகாம்

சபை:- இலங்கை அப்போஸ்தல திருச்சபை

முகவரி:- மூன்றுமுறிப்பு வவுனியா

 

   
   
 
எங்களை தொடர்புகொள்ள
T.Pirabagaran
89 Laurel crescent
Romford
Essex
Rm7 0ru
England
  TP:-
Email:- info@thehandofjesus.com
சமூக வலைத்தளங்களில் எங்களுடன் தொடர்பு கொள்ள

        
உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது. சங்கீதம் 119:105
Copyright © 2015 The hand of jesus.com All Rights Reserved