ஆங்கிலம் | தமிழ் | சிங்களம்

 
 
  முகப்பு பக்கம்
  எங்களை பற்றி
  எங்கள் சேவைகள்
  தற்போதைய தேவைகள்
    ஜீவ வார்த்தைகள்
  கட்டுரைகள்
  வேதாகம வரைபடங்கள்
  ஜெப வேண்டுகோள்
  ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம்
  சிறுவர்கள் வேதாகம ஒளிநாடா
  கருத்துக்கள்
  ஒளிப்பதிவுகள்
  எங்களை தொடர்புகொள்ள

 தினசரி தியானம்
  ஆரம்ப நிலை
  இடை நிலை
    மேல்நிலை
  வேதாகம விளக்கம்

  ஜீவ வார்த்தைகள்

 பயனுள்ள இணைப்புகள்
  இணைய தளங்கள்
  www.tamilchristian.com
  www.tamilchristianworship.org
  வானொலி
  www.tamilchurchvos.org
  www.tamilchristianprayer.org
    தொலைக்காட்சி
  www.tamilchristianonline.net
    வேதாகமம்
  இணைய வேதாகமம்
    இணைய வேதாகமம் 2
    ஒலி வேதாகமம்
   


   

மகிழ்ச்சிகரமான வாழ்க்கையை அனுபவிக்கும் வாலிபப் பருவம்


                  "எப்படியும் வாழலாம் என்பது உலக நீதி

                   à®‡à®ªà¯à®ªà®Ÿà®¿à®¤à¯à®¤à®¾à®©à¯ வாழ வேண்டும் என்பது தேவநீதி"

அதோ அந்த வாலிபப் பருவம் வாழ்க்கையில் எல்லா இன்பங்களையும் அனுபவிக்கத் துடிக்கும் இன்பகரமான பருவம் அந்தப் பருவம் கடந்து சென்றால் அதை மறுபடியும் ஒரு போதும் எட்டிக்கூட பிடிக்க முடியாது.

வாலிபப் பருவம் என்பது புதியவைகளை கண்டுபிடிக்க புதியவைகளை அனுபவிக்க முற்படும் பருவம் மட்டுமல்லாமல் மனித வாழ்வில் மத்திய நிலையம் முக்கியமான நிலையம் இது. குழந்தை நிலை -> மத்திய நிலை -> முதிர்ந்தநிலை -> வயோதிபம் இப்படி முறைகளில் இது பிரதான நிலையாகும். பெலம் மிக்கப்பருவம் (hormones) உடல் உட் சுரப்புக்கள் பல சுரக்கும் காலம் பல மாற்றங்களுக்குள் உடலும் உள்ளமும் கடந்து போகும் காலம் எனவே இக் காலத்தில் எதைப் பிடித்துக் கொள்வார்களோ அதையே அதிகம் விரும்புகிறவர்களாக இருப்பார்கள்.

வாலிபர்களை நாம் அவதானிக்கின்ற பொழுது வேதம்  à®Žà®®à®•à¯à®•à¯ ஒரு வாலிபப் பருவத்தில் இப்பூமியில் வாழும் நாட்களில் எப்படியாக வாழ வேண்டும் எப்படியாக மரிக்க வேண்டும் . மரித்த பிறகு ஒரு வாழ்கை இருக்கின்றது என்பதை எமக்கு தெளிவாக காண்பிக்கின்றது.

சிருஷ்டிப்பில் தேவன் ஆதாமை ஒரு வாலிபனாகவே படைத்தார். அவனுக்கு மகிழ்ச்சிகரமான வாழ்க்கையை ஏற்படுத்தினார் அதாவது இப்பூமியில் அனுபவிக்கும் படியான அழகான தோட்டத்தை செழிப்பானதும், எழில் நிறைந்ததுமான தோட்டத்தை ஏற்படுத்தி, அதைப் பண்படுத்தவும் காக்கவும் அதிகாரம் கொடுத்தார். ஆதியாகமம் 2:15

ஆனால் அதை சந்தோஷமாக அனுபவிக்க அவனால் முடியவில்லை.

இப்படியாக சிருஷ்டிப்பிலே வாலிபன் சந்தோஷமாக காணப்பட்டாலும். கீழ்படியாமல் பாவம் செய்து அதையிழந்த போதும். இயேசுக்கிறிஸ்துவால் உதவி செய்து ஒவ்வொருவரையும் சந்தோசஷமாக வாழ வைக்க முடியும்.

யோசேப்பை எடுத்துக் கொண்டோமானால் மிகவும் மகிழ்ச்சிகரமான வாழ்க்கையை அனுபவித்தான். யோசேப்பைப் பொறுத்தவரையில் தாயில்லாமல் தகப்பனுடைய போதனையின்படியே  à®µà®³à®°à¯à®•à¯à®•à®ªà¯à®ªà®Ÿà¯à®Ÿà®¾à®©à¯. ஆனால் யோசேப்பினுடைய நாட்களில் நியாயப்பிரமாணம் வேதாகமக் கட்டளைகள் கொடுக்கப்படவில்லை ஆனாலும் அவனை தேவன் மகிழ்ச்சிகரமாக வழிநடத்தினார்.

யோசேப்பு சகோதரர்களால் புறக்கணிக்கப்பட்ட போதும் கர்த்தர் யோசேப்பை புறக்கணிக்கவில்லை. வேதத்தில் மகிழ்ச்சியற்ற அதாவது வாலிப நாட்களில் துன்பத்தை அனுபவித்த வாலிபனையும் வேதம் எமக்கு காண்பிக்க தவறவில்லை. அழகைக் கண்டு, ஆபத்தை சந்தித்த வாலிபனாக சிம்சோன் காண்பிக்கப்பட்டிருக்கின்றது. பெண் மீது ஆசை கொண்டு பாவத்தில் விழுந்து வாலிபப் பருவத்தை சின்னாபின்னமாக சீர்குலைத்துக் கொண்டான். அவனது மகிழ்ச்சிகரமான  à®ªà®°à¯à®µà®®à¯ சிதறடிக்கப்பட்டது.

இப்படியாக வேதம் ஆதியாகமத்திலிருந்து வெளிப்படுத்தல் வரை மகிழ்ச்சிகரமாக வாழ்ந்த வாலிபர்களையும், வேதனைகளை அனுபவித்து மரித்த வாலிபர்களையும் à®Žà®®à®•à¯à®•à¯ காண்பிக்கிறது. 

இன்றைய தற்காலத்தில் ஏற்பட்டிருக்கின்ற உலக/சரீரப் பிரகாரமான சந்தோஷங்கள். à®’ரு போதும் வாலிபப் பருவத்தில் மகிழ்ச்சிகரமாக அமையப்போவதில்லை என்பதை வாலிபர்களாகிய ஒவ்வொருவரும் புரிந்து கொண்டு செயற்பட வேண்டும். வேதமானது இப்படியான கொடிய காலங்கள் வரும் என்பனதை பவுல் அடிகளார் 2தீமோத்தேயு மூன்றாம் அதிகாரத்தில் வாலிபருக்கு ஆலோசனை கொடுப்பதைப் பார்க்கலாம்.

எனவே வாலிபர்களாகிய நாம் ஒவ்வொருவரும் வேதத்தை இறுகப் பற்றிக் கொண்டு வேதம் எமக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கின்றவரை வேதத்தில் மகிழ்ச்சிகரமான வழிகளை கண்டு கொண்டு தேவனுக்கு என்று எழும்பி பிரகாசிக்கின்ற இந்த இன்பகரமான வாலிபப் பருவத்தை மகிழ்ச்சிகரமாக அனுபவிக்க முடியும்.அதை ஒருவராலும் தடை செய்ய முடியாது.

எழுத்துருவாக்கம்:- m. சுஜனி

சபை:- எபிரோன் அப்போஸ்தல சபை

இடம்:- கிளிநொச்சி

   
   
 
எங்களை தொடர்புகொள்ள
T.Pirabagaran
89 Laurel crescent
Romford
Essex
Rm7 0ru
England
  TP:-
Email:- info@thehandofjesus.com
சமூக வலைத்தளங்களில் எங்களுடன் தொடர்பு கொள்ள

        
உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது. சங்கீதம் 119:105
Copyright © 2015 The hand of jesus.com All Rights Reserved