info@thehandofjesus.com

எங்கள் சேவைகள்

கர்த்தரின் பெரிதான கிருபையால் பெலவீனமான தென் இலங்கையைச் சேர்ந்த தேவ ஊழியருக்கு  24/09/2016. அன்று புதிய வீடு கட்டிக்கொடுக்கப்பட்டது. 

22 ஆகஸ்ட் 2016 அன்று யாழ்ப்பாணத்தில் விவிலிய நூல்கள் நூலகம் மற்றும் மாணவர்களுக்கான கல்வி நிலையத்தைத் திறப்பதற்கு எல்லாம் வல்ல இறைவன் உதவினார்

கர்த்தருடைய பெரிதான கிருபையால் முல்லைத்தீவு மாவட்டத்தில் 6வது திருச்சபையை 19/08/2016 அன்று கட்டிமுடித்தோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம். பல மாதங்களாக இணையத்தளத்தில் தெரியப்படித்தியிருந்தோம். அந்த சபையினர் ஜெபித்ததினால் தேவன் எங்கள் கைகளை (இயேசுன் கரம் பணி) பெலபடுத்தி கட்ட வைத்தார். தொடர்ந்து மற்ற சபைக்களுக்காக ஜெபித்து கொள்ளவும். இதுவரை ஜெபித்த ஒவ்வொருவருக்கும் நன்றி.


 

18/08/16 அன்று கிளிநொச்சி மாவட்டப்பிள்ளைகளுக்கு கல்வி உபகரணம் வழங்கப்பட்டது.

முல்லைதீவு மாவட்ட பிள்ளைகளுக்கு 7/05/2016 அன்று கர்த்தரின் கிருபையால் பள்ளி உபகரணம் வழங்கப்பட்டது.

மலையகப் பிள்ளைகளுக்கு டிசம்பர் 2015 ல் பள்ளியுபகரணம் வழங்குதல்.

புதுவருடத்தை முன்னிட்டு டிசம்பர் 2015 ல் கிளிநொச்சி வினாயகர் குடியிருப்பு மக்களுக்கு வாழ்வாதரவு உதவியும், அக்கிராம பிள்ளைகளுக்கு பள்ளி உபகரணமும் உதவி செய்யப்பட்டது.

அத்தியாவசிய தேவை நிறைந்த மணியங்குளம் கிளிநொச்சி உறவுகளுக்கு ஜனவரி 2016 ல் உதவிகள் செய்யப்பட்டது.

ஜூலை 2015 இல் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருளால் கிளிநொச்சி மாவட்ட விசுவாசிகளுக்கு பைபிள் மற்றும் ஆன்மீக புத்தகங்கள் விநியோகம் செய்ய முடிந்தது.

2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் யாழ்ப்பாண பாடசாலை மாணவர்களுக்கு உதவ கடவுள் எங்களுக்கு உதவினார்